Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
இந்தியா
பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
 ................................................................
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்: முதல்வர் உத்தரவு
 ................................................................
ரயில் முன் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம்
 ................................................................
கேரளாவில், பா.ஜ.க.வால் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது: முதல்வர் பேச்சு
 ................................................................
புதுச்சேரி: கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை
 ................................................................
அதிகாரிகள் தீபாவளி பரிசு வாங்க கூடாது - கிரண்பேடி
 ................................................................
சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டம்: 6 பேர் பலி!
 ................................................................
துரோகிகளால் கட்டப்பட்டதா தாஜ்மகால்? பாஜக எம்.எல்.ஏ.வின் சர்ச்சைக்குரிய கருத்து!
 ................................................................
அடுத்த தீபாவளிக்குள் அயோத்தியில் ராமர் கோவில்! - சுப்பிரமணியன் சுவாமி
 ................................................................
பெங்களூரில் தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, அக்டோபர் 2017 (15:19 IST)
மாற்றம் செய்த நாள் :13, அக்டோபர் 2017 (15:19 IST)

போலீஸ் தடியடி - எம்.எல்.ஏ. சட்டை கிழிந்தது

புதுவை கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கபட்டு இருந்தது. போராட்டத்திற்கு காவல்துறையின் அனுமதியும் பெறப்பட்டிருந்தது. 

ஆனால் திடீரென நேற்று இரவு போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். போலீசாரின் தடையை மீறி திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. அறிவித்தார். அதன்படி போராட்டம் நடத்த புதுவை மற்றும் தமிழக பகுதி கரும்பு விவசாயிகள், ஆலை தொழிலாளர்கள் மற்றும் டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் இன்று காலை லிங்கா ரெட்டி பாளையம் பெட்ரோல் பங்க் எதிரே ஒன்று திரண்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் சர்க்கரை ஆலையை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அப்போது போலீசார் பேரிக்காடு அமைத்து ஊர்வலத்தினரை தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ.வின் சட்டை கிழிந்தது. தொடர்ந்து அவர்கள் போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்த ஆலையை நோக்கி சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :