Add1
logo
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம் || 10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை... || ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்) || ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை! || ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்) || பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்! || சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, அக்டோபர் 2017 (14:10 IST)
மாற்றம் செய்த நாள் :13, அக்டோபர் 2017 (14:10 IST)


உலக பட்டினி குறியீட்டுப் பட்டியல் அறிவிப்பு: மோசமான நிலையில் இந்தியா!

சமீபத்ததில் வெளியிடப்பட்ட உலகளாவிய பட்டினி குறியீட்டுப் பட்டியிலில் இந்தியா மோசமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஒவ்வொரு ஆண்டு உலகளாவிய நாடுகளில் உள்ள பட்டினி குறியீடு தொடர்பான தரவரிசைப் பட்டியலை, சர்வதேச உணவுக்கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடுகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான பட்டியலை அது வெளியிட்டுள்ளது.

119 நாடுகள் அடங்கிய இந்தப் பட்டியலில், இந்தியா 100-வது இடத்தை வகிப்பதாகவும், தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் நிலை மோசமாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிய நாடுகளான சீனா, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளை விடவும் இந்தியா பின்தங்கி இருப்பது கவனத்தில் கொள்ளவேண்டியது. இந்தப் பட்டியலானது ஒவ்வொரு நாட்டிலும் உள்ள குழந்தைகளுக்கு கிடைக்கும் முறையான ஊட்டச்சத்து, குழந்தைகள் மரணம் உள்ளிட்ட காரணிகளை மையமாக வைத்து தயார் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு 97ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு மூன்று இடங்கள் இறங்கி 100ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் பாதிக்கும் மேல் மிகப்பெரிய அச்சுறுத்தல் அல்லது அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், இந்தப் பட்டியலை தயார்செய்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Paatali Country : India Date :10/13/2017 3:52:40 PM
பட்டினிகள் இருக்கும் இதே நாட்டில் தான் அரசியல் தலைவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை குளிரூட்டி மகிழுந்தில் பயணிக்கிறார்கள்.இந்தியாவில் ஏற்ற தாழ்வு என்பது நினைத்து பார்த்துகூட பார்க்காத அளவுக்கு இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்வது நாட்டின் ஸ்திர தன்மையை பாதிக்கின்ற காரணிகள் இது எம் கருத்தல்ல உலக பொருளாதார கோட்பாடு.வறுமையும் பட்டினியும் ஒரு நாட்டில் பெருகுமாயின் கொலைகளும் ,கொள்ளைகளும் ,கைகலப்பும் பெருகும் என்பது பொருளாதார கணிப்பாளர்களின் கணிப்பு .
Name : தமிழர்கள் Country : Australia Date :10/13/2017 2:24:07 PM
மோடியின் அடுத்த மகத்தான சாதனை":. உலகளாவிய பட்டினி குறியீட்டுப் பட்டியிலில் இந்தியாவை, வங்காளதேசத்தைவிட மோசமான நிலைக்கு கொண்டுவந்து விட்டார்..பிஜேபி யின் நோக்கங்கள் சரியாக நிறைவேறி வருகிறது.