Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
முக்கிய செய்திகள்
வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து!
 ................................................................
இன்றைய(16.10.2017)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தீபாவளி கிப்ட் கேட்கும் அமைச்சர் - தவிக்கும் அதிகாரிகள்!
 ................................................................
கர்நாடகத்திலும் அனைத்து சாதியினரை அர்ச்சகராக்க முடிவு - திருமாவளவன் வாழ்த்து
 ................................................................
அமைச்சர் சீனிவாசன் பதவி விலகவேண்டும்! முன்னாள் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு!!
 ................................................................
பாஜக ஆணையை ஏற்று தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் எடப்பாடி அரசு: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
கொள்ளையடிக்க நிதி கேட்கும் தமிழக அரசு: விஜயகாந்த் குற்றச்சாட்டு!
 ................................................................
ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகராக தமிழக காவல்துறையினர் செயல்படுகின்றனர்: எடப்பாடி
 ................................................................
கர்நாடகத்திலும் தலித்துகளை அர்ச்சகர்களாக்க நடவடிக்கை! - சித்தராமைய்யா உறுதி
 ................................................................
‘பழனிசாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? குழந்தைகள் கூட சிரிக்கும்!’ - ராமதாஸ் அறிக்கை
 ................................................................
இரட்டை இலை' சின்னம் யாருக்கு? இன்று இறுதி விசாரணை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, அக்டோபர் 2017 (12:47 IST)
மாற்றம் செய்த நாள் :13, அக்டோபர் 2017 (12:50 IST)

அகற்றப்பட்ட பேனரை 200 பேர் ஊர்வலமாக வந்து மீண்டும் வைத்ததால் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக இருந்த போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்டச்செயலாளர் வைரமுத்து ஆகியோர் தலைமையில் இபிஎஸ் அணியும், புதுக்கோட்டை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்தொண்டைமான், முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் புதுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர் ராஜசேகர் தலைமையில் ஓபிஎஸ் அணியிலும் தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். 

இருஅணிகளும் இனைந்தபின்பும் புதுக்கோட்டை அதிமுகவில் இரு அணிகளாகவே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகின்ற 14ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்று புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் அமைச்சர் விஜயபாஸ்கர் படம் இல்லாமல் பேனர் வைக்கபட்டடிருந்தது. இந்த பேனரை விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் அகற்றியதாக கூறப்படுகின்றது. 

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்த பேனர் அகற்றபட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்தொண்டைமான் இல்லத்திலிருந்து முன்னாள் ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் வழியாக அண்ணாசிலை வரை ஊர்வலமாக சென்று அகற்றிய பேனர் இருந்த இடத்தில் மீண்டும் புதிய பேனரை வைத்தனர். 

மேலும் புதிதாக வைக்கபட்ட பேனரிலும் அமைச்சர் விஜயபாஸ்கரின் படம் இல்லை என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த பேனரை பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர். திடீரென்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேனர் அகற்றபட்டதை கண்டித்து ஊர்வலம் நடத்தியது புதுக்கோட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  
இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :