Add1
logo
டெங்கு பாதிப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் - திருமா வலியுறுத்தல் || அரசின் மெத்தனப்போக்கே பொறையாறு விபத்திற்கு காரணம்! - வேல்முருகன் குற்றச்சாட்டு || டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் || காந்தி வன்முறையை ஆதரித்தாரா? புதிய புத்தகத்தில் சர்ச்சை! || தவறான கருத்துகளைப் பரப்பினால் தேசபக்தர்கள் மெர்சலாகி விடுவார்கள்! - இல.கணேசன் || தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு || 8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம் || நாடாளுமன்றத்தில் யாரும் பேச முன்வருவதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு || பொறையார் பணிமனை மேற்கூரை இடிந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பலி! || மான் வேட்டைக்கு சென்ற எட்டுபேர் கைது; நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்! || திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது! || சேலம், நாமக்கல்லில் டெங்கு மரணங்கள்; தடுப்பு நடவடிக்கைக்கு சென்ற மருத்துவர்கள் சிறைபிடிப்பு! || திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி: சிஐடி காலனி வருத்தம்! ||
தமிழகம்
டெங்கு பாதிப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் - திருமா வலியுறுத்தல்
 ................................................................
அரசின் மெத்தனப்போக்கே பொறையாறு விபத்திற்கு காரணம்! - வேல்முருகன் குற்றச்சாட்டு
 ................................................................
தவறான கருத்துகளைப் பரப்பினால் தேசபக்தர்கள் மெர்சலாகி விடுவார்கள்! - இல.கணேசன்
 ................................................................
நாடாளுமன்றத்தில் யாரும் பேச முன்வருவதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
 ................................................................
பொறையார் பணிமனை மேற்கூரை இடிந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பலி!
 ................................................................
மான் வேட்டைக்கு சென்ற எட்டுபேர் கைது; நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்!
 ................................................................
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது!
 ................................................................
சேலம், நாமக்கல்லில் டெங்கு மரணங்கள்; தடுப்பு நடவடிக்கைக்கு சென்ற மருத்துவர்கள் சிறைபிடிப்பு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
விஜய் ரசிகர்கள் இருவர் கைது..!
 ................................................................
அரசு பேருந்து பணிமனை மேற்கூரை இடிந்து விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
 ................................................................
இந்த ஆண்டு பட்டாசு விற்பனை 60 சதவீதம் குறைவு: ஏ.எம்.விக்ரமராஜா
 ................................................................
நிலவேம்பு கசாயம் குடிக்கும் அளவை தெளிவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்
 ................................................................
மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுத்த ராசிபுரம் பள்ளிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
 ................................................................
ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை
 ................................................................
அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: தீபா
 ................................................................
கள்ளச்சாராயம் குடித்த இளைஞர் பலி
 ................................................................
காலி மனைகளில் குப்பைகள் கொட்டினால் அபராதம்: திருவள்ளூர் கலெக்டர்
 ................................................................
கொருக்குப்பேட்டையில் கஞ்சா கொடுக்க மறுத்த வாலிபர் குத்திக்கொலை
 ................................................................
இடையூறாக உள்ள காவல் நிலையத்தை அகற்ற உயர் நீதி மன்றம் உத்தரவு
 ................................................................
முரசொலி பவளவிழா கண்காட்சியை காணவந்தார் கலைஞர்(படங்கள்)
 ................................................................
சாதியற்றோருக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு- கேரள முதல்வருக்கு ஸ்டாலின் பாராட்டு
 ................................................................
கமல் மருத்துவர் அல்ல: கடம்பூர் ராஜூ
 ................................................................
ஓராண்டு படிப்பை இழந்த மாணவனுக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, அக்டோபர் 2017 (22:34 IST)
மாற்றம் செய்த நாள் :12, அக்டோபர் 2017 (22:34 IST)

பாசனத்து தண்ணீர் திறக்க கோரி கூலி தொழிலாளி மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் முதியவர் ஒருவர் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க கோரி மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனையொடுத்து போலீசார் அவரிடம் பேசி மரத்தில் இருந்து இறக்கினர்.

காட்டுமன்னார்கோவில் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையில் நடுவர் நீதிமன்றம் எதிரே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் மரத்தில் 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் பெட்ரோல் பாட்டிலுடன் ஏறி பாசனத்திற்கு கல்லணை, கீழணை ஆகியவற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி மிரட்டல் விடுத்தார். மரத்தில் யாரவது ஏறி வந்தால் கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டினார். இதனை அறிந்து அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று அந்த முதியவரிடம் விரைவில் தண்ணீர் திறக்க அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கிறோம் இறங்கி வாருங்கள் என்று கூறினர். அதற்கு அந்த முதியவர் ஆட்சியே சரியில்லை ஆட்சியாளர்கள், மக்களை கண்டுகொள்ளவில்லை எப்படி தண்ணீர் திறக்க அதிகாரிகள் முன்வருவார்கள் என கூறி இறங்கி வர மறுத்துவிட்டார். போலீசார் மற்றும் பொதுமக்களுடன் நின்றுகொண்டிருந்த விவசாய சங்க தலைவர் இளங்கீரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட முதியவரிடம் தொடர்ந்து பேசி இன்னும் மூன்று தினங்களில் தண்ணீர் திறக்கப்படும் என்று கூறி உறுதி அளித்தனர். 

இதனையொடத்து பெட்ரோல் பாட்டிலுடன் முதியவர் மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த முதியவர் பெயர் இந்திரஜித் (61) என்றும் அவர் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வேளம்பூண்டி கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி என்றும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்காததால் கூலிவேலை கிடைக்கவில்லை, இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. குடும்பத்தை நடத்த கூட முடியவில்லை. இதன் காரணமாகவே போராட்டம் செய்யவேண்டும் என்ற நோக்கத்திலேயே வந்ததாக தெரிவித்தார். பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறி முதியவர் ஒருவர் மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லணையில் கடந்த 5ம் தேதி கொள்ளிடத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் தண்ணீர் இன்னும் கீழணைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

-காளிதாஸ்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :