Add1
logo
ஆர்.கே. நகரில் மா. சுப்பிரமணியம் பிரச்சாரம்! (படங்கள்) || இந்தியருக்காக குண்டடி பட்டவரை கவுரவித்த டைம்ஸ் இதழ்! || ஆர்.கே.நகரை சுற்றி வரும் வெளியூர் அதிமுகவினர் || செல்போனில் பேச்சு: பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம்: போனில் சமாதானம் செய்த அமைச்சர் || மோடிக்கு முதிர்ச்சியும் பொறுப்புணர்வும் அவசியம்! - மன்மோகன் சிங் தாக்கு || இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ் மண்ணில் ஏற்படுத்த முயன்றால்! -சீமான் எச்சரிக்கை || எடப்பாடி பழனிசாமி மாநிலத்தை ஆளும் தகுதியையும் - தார்மீக உரிமையையும் அறவே இழந்துவிட்டார்: ஸ்டாலின் || ஆர்.கே. நகரில் வாக்களர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் : பொதுமக்கள் முற்றுகைபோராட்டம் (படங்கள்) || தஷ்வந்த்தை 13ஆம் தேதி ஆஜர்படுத்த செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! || ஆளுங்கட்சியே தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதா? ஸ்டாலின் பதில் || எத்தனை குட்டிக் கரணம் போட்டாலும், உருண்டு - பிறண்டாலும் அதிமுகவால் டெபாசிட் வாங்க முடியாது: ஸ்டாலின் || வணிக நோக்கத்திற்காக மட்டும் பேனர் வைக்க அனுமதிக்க முடியாது! - ஐகோர்ட் ||
தமிழகம்
ஆர்.கே. நகரில் மா. சுப்பிரமணியம் பிரச்சாரம்! (படங்கள்)
 ................................................................
ஆர்.கே.நகரை சுற்றி வரும் வெளியூர் அதிமுகவினர்
 ................................................................
செல்போனில் பேச்சு: பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம்: போனில் சமாதானம் செய்த அமைச்சர்
 ................................................................
இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ் மண்ணில் ஏற்படுத்த முயன்றால்! -சீமான் எச்சரிக்கை
 ................................................................
எடப்பாடி பழனிசாமி மாநிலத்தை ஆளும் தகுதியையும் - தார்மீக உரிமையையும் அறவே இழந்துவிட்டார்: ஸ்டாலின்
 ................................................................
ஆர்.கே. நகரில் வாக்களர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் : பொதுமக்கள் முற்றுகைபோராட்டம் (படங்கள்)
 ................................................................
தஷ்வந்த்தை 13ஆம் தேதி ஆஜர்படுத்த செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு
 ................................................................
சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!
 ................................................................
ஆளுங்கட்சியே தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதா? ஸ்டாலின் பதில்
 ................................................................
எத்தனை குட்டிக் கரணம் போட்டாலும், உருண்டு - பிறண்டாலும் அதிமுகவால் டெபாசிட் வாங்க முடியாது: ஸ்டாலின்
 ................................................................
வணிக நோக்கத்திற்காக மட்டும் பேனர் வைக்க அனுமதிக்க முடியாது! - ஐகோர்ட்
 ................................................................
திருமாவளவனை கண்டித்து தமிழிசை ஆர்ப்பாட்டம்
 ................................................................
பாரதியார் பெயரில் விருதுகள்
 ................................................................
குமரி மீனவர்களுக்கு ஆதரவாக பழவேற்காட்டில் ஆர்ப்பாட்டம்
 ................................................................
விறகு, சமையல் பாத்திரத்துடன் ஆட்சியர் அலுவலகம் வந்த மக்கள் (படம்)
 ................................................................
தா.பாண்டியன் நலம் : விரைவில் வீடு திரும்புகிறார்
 ................................................................
ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். முன்னிலையில் அதிமுகவில் இணைந்த கல்லூரி மாணவர்கள்!
 ................................................................
கோவை: செக் மோசடி செய்ததாக கூறி மலேசியாவை சேர்ந்தவர் கைது
 ................................................................
மலைகள் தினம் - பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அகற்றிய மாணவர்கள்
 ................................................................
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - பாஜகவினர் மோதல்: 6 பேர் காயம்
 ................................................................
ஒக்கிப் புயல் : இழப்பீடுகளை உயர்த்திக் கொடுப்பதும் அவசியம் - கி.வீரமணி
 ................................................................
ஒய்வு பெற்றவர்களை மறு நியமனம் செய்ய முயல்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
 ................................................................
காலி குடங்களுடன் கலெக்டரிடம் மனு அளித்த பெண்கள்
 ................................................................
தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்த திருநாவுக்கரசர்
 ................................................................
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, அக்டோபர் 2017 (18:32 IST)
மாற்றம் செய்த நாள் :12, அக்டோபர் 2017 (18:32 IST)

வாக்கி டாக்கி, குட்கா ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் -அன்புமணி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடியிலுள்ள மருத்துவர் ச.இராமதாசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி தாளாளர் மருத்துவர் இரா.கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினார். விழாவில் 2011 முதல் 2016 ஆகிய நான்கு கல்வியாண்டுகளை சேர்ந்த 1429 மாணவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் பட்டங்களை வழங்கினார். 

அப்போது அவர் பேசும்போது, “ இன்றைக்கு தண்ணீர் பற்றாக்குறை அதிகாமாக உள்ளது. ஆனால் மழை நீரை சேமிக்க தவறி விட்டோம். மழை நீர் வீணாக கடலுக்கு சென்று கலக்கிறது. தி.மு.க, அதிமுக இந்த இரண்டு திராவிட கட்சிகளும் நீர் மேலாணமை திட்டங்களை செயல்படுத்தவில்லை. மாறாக மதுக்கடைகளை திறந்துவிட்டு சாராயத்தைதான் ஆறாக ஓடவிட்டுள்ளனர்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 

“ டெங்கு காய்ச்சல் தொடர்பாக தமிழக அரசு தவறான தகவல்களை தெரிவிக்கிறது. மூடி மறைப்பதை விட்டு விட்டு தடுப்பு நடவடிக்கைகளைகளையும், சிகிச்சைகளையும் முறையாக செய்ய வேண்டும். என்.எல்.சி நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடைபெறுகிறது. இந்த மாவட்ட மக்களின் நீரை, நிலத்தை வாழ்வாதாரத்தை உறிஞ்சி எடுத்துக்கொண்டு இம்மக்களை வஞ்சிக்கிறது. இங்கு கிடைக்கும் வருவாயை வட மாநிலங்களில் முதலீடு செய்கிறது. தமிழ்நாட்டில் முதலீடு செய்து மண்ணின் மைந்தர்களுக்கு வேலை தர வேண்டும்.

தமிழ்நாட்டில் மது விற்பனை மட்டுமே நடக்கிறது. ஆட்சியாளர்கள் அதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். மத்திய பா.ஜ.கவும் இவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது.
வாக்கி டாக்கி ஊழல் மற்றும் குட்கா ஊழல்கள் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தினால்தான்  உண்மைகள் வெளிவரும். அதற்காக பா.ம.க சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.

-சுந்தரபாண்டியன் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Maatram Munnetram Country : India Date :10/13/2017 1:24:51 PM
சண்டை இடும் இரண்டு பேர்கள் என்பது திமுக அதிமுக என்று தமிழர் என்ற அன்பார் கூறுவதை எடுத்துக்கொள்ளலாமா ? பாமக அண்ணா ,பெரியாரின் கருத்துக்கு எதிரானது என்பது குழந்தை தனம்.சமூக நீதி வேண்டும் என்று இடவொதிக்கீடு போராட்டம் செய்து மரம் வெட்டி என்று திராவிட கட்சிகளால் ஏளனம் செய்யப்பட்டு 108 சாதிக்கும் சேர்த்து போராடி மிகவும் பிற்படுத்த வகுப்பு பெற்றது தங்கள் சமூகத்தின் 22 நபர்களின் இன்னுயிரை தந்து பெற்றதும்.திராவிட கட்சிகளின் சாதி மறுப்பு கொள்கை தேர்தல் நேரத்தில் சமூக தலைவர்களின் பாதங்களில் சரணாகதி அடைவதும் தமிழக மக்கள் நன்கு அறிவர் திராவிட கட்சிகளின் போலி சாதி மறுப்பு இன்னும் மக்கள் நம்புவார்கள் என்பது திராவிட கட்சிகளின் பகல் கனவுகளில் ஒன்றாகும். .
Name : Paatali Country : India Date :10/13/2017 12:21:19 PM
அன்பு தமிழனே ! சங்க பரிவார் அமைப்பை அதிகம் விமர்சிப்பது பாமக என்பதனை தாங்கள் உணரவேண்டும் .நீட் போன்ற தேர்வை எதிர்க்க தெம்பில்லாத இங்கே தமிழகத்தில் கையாலாகாத திமுக அதிமுக காட்சிகள் பொதுமக்களின் ஏகோபித்த எதிர்ப்பை பெற்றுவருகிறது.பாமக பொது சுகாதாரம் ,இலவச கல்வி கட்டணமில்லாத கல்வி,விவசாயத்திற்கான முன்னுரிமை ,சுற்றுப்புற சூழல் ,இளைஞ்சர்களின் வேலைவாய்ப்பு ,மது ஒழிப்பு என எங்கள் பயணம் மக்கள் மத்தியில் தொடர்கின்றது.நாங்கள் அறிவிக்கப்படாத எதிர்க்காட்சியாய் தமிழகத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கின்றோம் .சீமானை பற்றி நீங்கள் கூறுவதற்கு அக்கட்சினர் உங்களுக்கு பதில் தருவார்கள்.பாமகவின் செயல் பாடுகளில் தீவிரம் காட்டும் சாதாரண பாமகவின் தொண்டனான என்னிடம் உள்ள பதில் உங்களுக்கு .
Name : தமிழர்கள் Country : Australia Date :10/12/2017 7:51:02 PM
சங் பரிவார் அமைப்புகளின் உத்தரவுகளுக்குப் பணிந்து, அவர்களின் பரமவிரோதிகளான பெரியார், அண்ணா, திராவிட இயக்கத்தவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நபர்களைக் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்களை மீண்டும் அடிமைத்தனத்திற்கும் ஏழ்மை நிலைக்குத் தள்ளுவதும்தான் சங்பரிவார் அமைப்புகளின் நீண்டகால நோக்கம். சண்டையிடும் இரண்டு பேரில் ஒருவனை மட்டும் பிடித்து வைத்தால், மற்றவன் அவனை உதைத்து பலவீனப்படுத்தி வீழ்த்த மறைமுகமாக உதவுவது ஆகும். அந்த உதவிகளைத்தான் பாமக வினரும் சீமானும் சங்பரிவார்சக்திகளுக்கு மறைமுகமாக முழுவீச்சில் செய்து வருகிறார்கள். இவர்களைக்குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்