Add1
logo
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம் || 10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை... || ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்) || ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை! || ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்) || பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்! || சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா ||
சிறப்பு செய்திகள்
எலெக்ட்ரானிக் வடிவில் எமன்
 ................................................................
கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு பெயர் சூட்டிச்
 ................................................................
இறுதிச் சடங்கு உரிமைக்காக நீதிமன்றம் ஏறிய பார்சி பெண்!
 ................................................................
கல்வாரியின் அர்ப்பணிப்பும், சிறப்புகளும்
 ................................................................
பொடாவில் போட்டவரின் கையில் சுற்றிய பம்பரம்!
 ................................................................
பாட்டிலை திறப்பவர்கள் அனைவருமே எங்கள் உறுப்பினர்கள் தான்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது யார் குண்டு?
 ................................................................
அறிவிக்கும் இழப்பீடுகள் முறையாக சேர்கிறதா?
 ................................................................
ஐ.டி. ஊழியர்களைத் தாக்கும் திடீர் ஈட்டிகள்!
 ................................................................
மூக்கறுபட்ட முன்னோர்கள்!
 ................................................................
தமிழ் திரையுலகம் கொண்டாடும் அருவி!
 ................................................................
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 ................................................................
சோழர்கள் ஆட்சியில் உள்ளூர் நிர்வாகத்திடம் வரி வசூலிக்கும் - கல்வெட்டு கண்டுபிடிப்பு
 ................................................................
பெற்றோரை விட சங்கர் ஏன் முக்கியம்?
 ................................................................
ரஜினிக்கு மட்டுமே கிடைத்தவை...
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, அக்டோபர் 2017 (18:4 IST)
மாற்றம் செய்த நாள் :12, அக்டோபர் 2017 (18:13 IST)

தினகரனை சசிகலா சந்திக்காதது ஏன்?

சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை கவனிப்பதற்காக, பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் இருந்து கடந்த 6ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு 5 நாள் பரோலில் வெளியே வந்தார் சசிகலா. முன்னதாக உரிய அனுமதி பெற்று உறவினர்கள் ஷகிலா, கீர்த்தனா, ராஜராஜன் மற்றும் வழக்கறிஞர் அசோகன் ஆகியோருடன் சிறைக்குள் தினகரன் சென்றார். சுமார் 3 மணி நேரம் தினகரனுடன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து சசிகலா ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஷகிலா, சசிகலாவுக்காக கொண்டு வந்திருந்த பச்சை நிற பட்டுப்புடவை, அணிகலன்களை அவரிடம் வழங்கினார். பின்னர் தினகரனுடன் அவரது காரின் பின்புறம் அமர்ந்து சென்னை வந்த சசிகலா, தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியிருந்தார். அன்று இரவு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், சசிகலாவுக்குக் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பரோல் கிடைக்க தாமதமானதற்கு பழனிசாமி அரசுதான் காரணம். அவரை முதல்வராக்கிவிட்டு சிறைக்குச் சென்ற சசிகலா எந்த பாவமும் அறியாதவர். பழனிசாமியை ஆட்சியில் அமரவைத்த ஒரே பாவத்துக்காக இன்றைக்கு சசிகலா ஒரு சிறைக்கைதி போல இருக்கிறார் என குற்றம் சாட்டினார். 

மறுநாள் 7ஆம் தேதியில் இருந்து பரோல் காலம் முடியும் வரை சசிகலாவை தினகரன் சந்திக்கவில்லை, 12ஆம் தேதி காலை பெங்களுரு சிறைக்கு புறப்பட்டபோதும் தினகரன் வரவில்லை. 

சசிகலாவிடம் சில நிர்வாகிகள் தொடர்பு கொண்டு, தினகரன்தான் கட்சியை அழிக்கிறார். அவர் மூத்த நிர்வாகிகளை மதிப்பதில்லை. எடுத்தெறிந்து பேசுகிறார. நான் சொல்வதுதான் இறுதியானது. நான் நினைப்பதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். சர்வாதிகாரிபோல் நடக்கிறார். மூத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நமக்கு ஆதரவாக இருந்தார்கள். அவர்களின் கட்சிப் பதவியை பறித்தார். இதனால் அவர்கள் தினகரனுக்கு எதிராக திரும்பிவிட்டனர். உடனடியாக ஒருவரை அவருக்கு பதிலாக பொறுப்பாளராக போடுங்க என்று வலியுறுத்தியதாக செய்திகள் வெளியானது. இதனால்தான் தினகரனை சசிகலா சந்திக்கவில்லை  என்று கூறப்படுகிறது. 

இது தொடர்பாக தினகரன் அணியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

சசிகலா தனது குடும்பத்தினரை பார்ப்பதையே அதிகமாக குறைத்துக்கொண்டார். பெங்களுருவில் இருந்து தினகரன் தனது காரில் சசிகலாவை அழைத்து வந்தார். பெங்களுருவில் இருந்து வந்த சசிகலவை, தொண்டர்கள் நிறைய பேர் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்கள் பார்க்கட்டும் என்பதற்காக தினகரன் வரவில்லை. மேலும், பரோலில் வந்துள்ள சசிகலாவுக்கு அரசியல் ரீதியாக எவ்வித செயல்பாடுகளிலும் ஆர்வம் காட்டக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நிறைய இருந்தன. அதன் காரணமாகவும் பெங்களுரு புறப்படும்வரை 5 நாட்களாக தினகரன் வரவில்லை. துணைப்பொதுச்செயலாளராக அவர் தனது பணியை மேற்கொண்டு வருகிறார்.

தினகரன் மீது நிர்வாகிகள் சிலர் குற்றச்சாட்டு கூறியதால் அவரை சசிகலா சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறதே?

அதுபோல் எதுவும் இல்லை. பரோல் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி, மீறப்படவில்லை என்பதால் இதுபோன்று செய்திகள் வெளியாகின்றன.

-வே.ராஜவேல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Srinivasan Date :10/12/2017 7:32:59 PM
சசி ஒன்றும் குழந்தை இல்லை. வெளியே வரும்போதே கணவரை நலம் விவரிப்பதுடன் இழந்த அந்தஸ்த்தை மீண்டும் எப்பாடு பட்டேனும் பெற தனி ஒரு திட்டத்தை உறவுகள் மூலம் நடத்த பிரயத்தணப்பட்டு வெற்றி கிட்டாமல் மீண்டும் சிறை செல்ல விதி வழி காட்டுகின்றது .அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் . .