Add1
logo
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம் || 10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை... || ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்) || ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை! || ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்) || பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்! || சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா ||
முக்கிய செய்திகள்
ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை
 ................................................................
எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு
 ................................................................
அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை
 ................................................................
சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா
 ................................................................
அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுகிறாரா சோனியா! - உண்மை என்ன?
 ................................................................
மக்களை பற்றி கவலைப்படாத அரசு அதிமுக: திருநாவுக்கரசர் பேட்டி
 ................................................................
ஆர்.கே.நகரில் வைத்திலிங்கத்துக்கு நேர்ந்த அவமானம்!
 ................................................................
பவுத்த சமண சமயங்களை அழித்தது யார்?
 ................................................................
பாமக ஊழல்புகாரில் எடப்பாடி மீது ஆளுநர் நடவடிக்கையா?
 ................................................................
எங்க கட்சியில கருத்து கூற யாரும் இல்ல... : ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு
 ................................................................
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார்
 ................................................................
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு!
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள்
 ................................................................
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்!
 ................................................................
கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, அக்டோபர் 2017 (16:32 IST)
மாற்றம் செய்த நாள் :12, அக்டோபர் 2017 (16:32 IST)


பிரதமரை சந்தித்தது ஏன்? ஓபிஎஸ்சிடம் சராமாரிக் கேள்விகள்..!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 11.30 மணி அளவில் டெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வத்துடன் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ்பாண்டியன் உடன் சென்றனர்.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், செய்தியாளர்கள் அடுத்தடுத்து சரமாரியாக கேள்விகளை அடுக்கி தள்ளினர், அதற்கு அவர் பதிலளித்ததாவது,

தமிழ்நாட்டின் வளர்ச்சி பணிகள் தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். தமிழ்நாட்டினுடைய உள்நாட்டு மின்சார உற்பத்திக்கு தேவைப்படுகின்ற நிலக்கரி தரப்பட வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கைக்காக சந்தித்தோம். தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறையிருப்பதால் சற்று குறைவாக நிலக்கரி வருகிறது. தேவைப்படுகிற நிலக்கரியை தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

கேள்வி: இதற்காக மத்திய மின்சாரத்துறை அமைச்சர் தனியாக இருக்கையில் நீங்கள் எதற்காக பிரதமரை தனியாக சந்தித்தீர்கள், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இருக்கையில் நீங்கள் எதற்காக மைத்ரேயனுடன் சென்றீர்கள்?

பதில்: மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மத்திய மின்சாரத்துறை அமைச்சரை தனியாக இன்று மதியம் சந்திக்கவுள்ளார் நானும் அவருடன் செல்ல உள்ளேன்.

கேள்வி: துணைமுதலமைச்சர் ஆன பிறகு உங்களுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறதே?

பதில்: நீங்கள் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை சரியாக புரிந்துகொள்ளவில்லை என தெரிகிறது. எங்கள் இரண்டு பேரின் நோக்கமும் ஒன்று தான்.

கேள்வி: மத்திய அரசிடம் தமிழக அரசு பணிந்துள்ளது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளதே?

இந்தியாவை ஆண்டுக்கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தந்து கொண்டிருப்பதை நீங்கள் குற்றமாக கருத முடியாது.

கேள்வி: தமிழகத்தில் அனைத்தும் காவியாக மாறுகிறதே? ஜெ.க்கு பிடித்த பச்சை நிறம் மாறி தற்போது ஒரு பேனர் கூட காவி நிறத்தில் உள்ளதே?

உங்கள் பார்வையில் உள்ள குறைப்பாடு அது. நீங்கள் தடம் புரண்டு சென்று கொண்டிருக்கிறீர்கள், என்ன கேள்வி கேட்க வேண்டுமோ அந்த கேள்வியை மட்டும் கேளுங்கள்.  

கேள்வி: எடப்பாடியுடன் இணையும் போது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தான் இணைந்தீர்கள் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டதா? தர்மயுத்தம் முடிந்ததா? இல்லை தொடர்கிறதா?

பதில்: தர்மயுத்தம் முடிந்ததால் தான் இணைந்தோம். நிபந்தனை இல்லாமல் தான் இணைந்தோம்.

கேள்வி: இரு தலைவர்களுக்கு இடையேயான உறவு எப்படி உள்ளது?

பதில்: நன்றாக உள்ளது. சிறப்பாக உள்ளது. எடப்பாடிக்கும் எனக்கும் எந்த கருந்து வேறுபாடும் இல்லை.

கேள்வி: கட்சியிலும் ஆட்சியிலும் உங்கள் அணியினரை ஒதுக்குவதாக புகார் பரவலாக வருகிறதே? அது உண்மையா?

பதில்: அதில் சிறிதும் உண்மையில்லை.

கேள்வி: எடப்பாடி உங்களுடன் கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுக்கிறாரா? இல்லை அவர் தனிச்சையாக முடிவெடுக்கிறாரா?

பதில்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நான் உட்பட அனைத்து அமைச்சர்களையும் கலந்து ஆலோசித்து தான் முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்.

கேள்வி: சசிகலா 5 நாட்கள் பரோலில் வந்திருந்தார், அப்போது பலர் அவரை சந்தித்ததாக கூறப்படுகிறதே?

கூறப்படுகிறது, அறியப்படுகிறது என்பதெற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்றார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : rajan Date :10/13/2017 9:37:58 PM
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களே நீட்டிற்காகவோ டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காகவோ விவசாய நிலங்களை பாழ்படுத்தும் கெயில் நிர்வாகத்தை முன்னிட்டோ மோடியை பார்க்க போகவேயில்லையே ஏன்.
Name : தமிழன் Country : Australia Date :10/13/2017 2:57:18 PM
OPS தமிழ் நாட்டிற்கு நிலக்கரி கேட்டார். அதற்கு "தமிழ் நாட்டையே கரியாக்கித்தருகிறோம், தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பை அளித்துவாருங்கள் என்று மோடி OPS இடம் பதிலளித்துள்ளார்..
Name : Paatali Country : India Date :10/13/2017 11:14:32 AM
மிச்சர் ops எடப்பாடி மோதலில் மோடி கடுப்பாகி ஆட்சியை கலைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ள பாஜகவின் ஆட்சி காலம் தமிழகத்தில் எண்ணெய் வளத்தினை சுரண்டும் வரை இந்த கோமாளிகளை காபந்து செய்யும் பிறகு கழட்டி விட்டு ஆட்சியை கலைக்க திட்டம் வகுக்கப்பட்டு இருப்பது இந்த நாடே அறியும்.அம்மையார் பொங்கல் சாப்பிட்டார்கள் புளியோதரை சாப்பிட்டார்கள் என்று சொன்ன வாயில் இருந்து பிரதமரை சந்தித்த உண்மையான காரணத்தினை நாட்டு மக்கள் மிச்சர் மாமாவிடம் எதிர்ப்பார்ப்பது சிறுபிள்ளை தனம்.