Add1
logo
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம் || 10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை... || ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்) || ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை! || ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்) || பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்! || சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா ||
சிறப்பு செய்திகள்
எலெக்ட்ரானிக் வடிவில் எமன்
 ................................................................
கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு பெயர் சூட்டிச்
 ................................................................
இறுதிச் சடங்கு உரிமைக்காக நீதிமன்றம் ஏறிய பார்சி பெண்!
 ................................................................
கல்வாரியின் அர்ப்பணிப்பும், சிறப்புகளும்
 ................................................................
பொடாவில் போட்டவரின் கையில் சுற்றிய பம்பரம்!
 ................................................................
பாட்டிலை திறப்பவர்கள் அனைவருமே எங்கள் உறுப்பினர்கள் தான்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது யார் குண்டு?
 ................................................................
அறிவிக்கும் இழப்பீடுகள் முறையாக சேர்கிறதா?
 ................................................................
ஐ.டி. ஊழியர்களைத் தாக்கும் திடீர் ஈட்டிகள்!
 ................................................................
மூக்கறுபட்ட முன்னோர்கள்!
 ................................................................
தமிழ் திரையுலகம் கொண்டாடும் அருவி!
 ................................................................
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 ................................................................
சோழர்கள் ஆட்சியில் உள்ளூர் நிர்வாகத்திடம் வரி வசூலிக்கும் - கல்வெட்டு கண்டுபிடிப்பு
 ................................................................
பெற்றோரை விட சங்கர் ஏன் முக்கியம்?
 ................................................................
ரஜினிக்கு மட்டுமே கிடைத்தவை...
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 9, அக்டோபர் 2017 (12:31 IST)
மாற்றம் செய்த நாள் :9, அக்டோபர் 2017 (12:31 IST)
குளோபல் மருத்துவமனை நிர்வாகம் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று 2 அறிக்கைகள் வெளியிட்ட நிலையில், "விரைவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்ளது' என்று நம்பிக்கையுடன் சொன்னார் தினகரன்.  இந்நிலையில்தான் அக்டோபர்  3-ந் தேதி இரவு, 20 வயதே ஆன கார்த்திக் என்ற இளைஞனின் உறுப்புகள் எடுக்கப்பட்டு நடராஜனுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரை ஒட்டி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள கிராமம் கூத்தாடிவயல். இங்கே தினக்கூலி வேலை பார்க்கும் குடும்பத்தில் பிறந்த கார்த்திக்கின் குடிசை வீட்டில் மின்வசதிகூட கிடையாது. பள்ளி படிப்பை முடித்தபின், மேலே படிக்க வசதியற்ற நிலையில் பிளக்ஸ் பேனர் ஒட்டும் வேலை செய்து வந்த கார்த்திக்கின் அன்பான நடவடிக்கையால் அறந்தாங்கி வரை நல்ல நட்பு.

செப்டம்பர் 30-ந் தேதி மதியம்  பைக்கில் சென்ற கார்த்திக், அறந்தாங்கியில் இருந்து கீரமங்கலம் நோக்கிச் சென்ற காரின் வேகம் கண்டு தடுமாறி, மோதியதில்... 10 அடி உயரத்திற்கு மேலே சென்று கீழே விழுந்ததில் ரத்த சகதியானார். அருகிலிருந்த மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றும் பயனில்லாததால், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரவு 7 மணிக்கு  அங்கு வந்த ஒருவர் தன்னை  வழக்கறிஞர் என்று அறிமுகம் செய்து கொண்டு கார்த்திக் உறவினர்கள் கூடவே மருத்துவமனைக்குள் போனார். "தலையில் பலத்த காயம் இருக்கு. உடனே ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கணும்' என்று மருத்துவர்கள் சொல்ல அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஊழியர்களிடம் ரூ. 2 ஆயிரத்தை  வழக்கறிஞர் கொடுத்துவிட்டு, கார்த்திக்கின் உறவினர்களிடமும் பணத்தை நீட்ட அவர்கள் மறுத்துவிட்டனர்.

வக்கீல் என்று சொல்லிக்கொண்டவரோ, "உங்களுக்கு மணமேல்குடி கார்த்திகேயன் அண்ணனை தெரியும்ல.… அவருக்கு வேண்டிய நான்தான் இந்த விபத்து வழக்கை நடத்தப்போறேன்' என்று சொல்லிக் கொண்டு, சில வெளி மருத்துவர்களையும் அழைத்து வந்து காட்டினார்.  "பையனுக்கு நினைவு திரும்பி கண் விழித்த பிறகுதான் ஆபரேசன் செய்ய முடியும். அதுவரை இருக்கட்டும்' என்று சொல்லிச் சென்றனர்.

இளைஞர் கார்த்திக் கண் விழிக்காத நிலையில்,  2-ந் தேதி காலை கார்த்திக்கின் அக்கா புவனாவிடம் "உங்க வீட்டில் உள்ளவர்களின் ஆதார் அட்டைகளை கொண்டு வாங்க' எனக் கேட்டு வாங்கினார் அந்த வக்கீல். அதன்பின், இரவு 8 மணிக்கு திடீரென ஒருவர் வந்து பரிசோதனைக்கென கார்த்திக்கிடமிருந்து ரத்தம் எடுத்தார்.

இரவு 10 மணிக்குப் பிறகு வந்த வழக்கறிஞர்... கூட இருந்த நண்பர்களிடம் "இந்த விபத்துக்கு  ரூ.8 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும். அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.  இப்பவே சென்னை அப்பல்லோ கொண்டு போய் சிகிச்சை எடுத்து பிழைக்க வைக்கலாம். பணம் நீங்க தர வேண்டாம். இன்சூரன்ஸ் வந்ததும் தரலாம்' என்று சொல்ல. "அனைவரும் சரி போகலாம்' என்று சொன்னார்கள். இரவு 11 மணிக்கு சில கார்கள் வர... அதில் கார்த்திக்கின் நண்பர்களை ஏற்றிவிட்டார்."கார்த்திக்கின் அம்மா, அப்பா, அக்கா எல்லாரும் ஆம்புலன்ஸ்ல வரட்டும்' என்று சொன்ன வழக்கறிஞர்... காரில் நண்பர்களை ஏற்றி சென்னைக்கு அனுப்பிவிட்டு ஆம்புலன்சை திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லும்படி உத்தரவிட, அங்கிருந்து சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கார்த்திக்கைக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், அப்பல்லோவுக்குப் பதில் குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காரில் வந்தவர்களையும் அங்கேயே அழைத்துச் சென்றுள்ளனர்.

அவசர சிகிச்சைப் பிரிவில் கார்த்திக் சேர்க்கப்பட்ட நிலையில், அவரது  அம்மா, அப்பா, அண்ணன், அக்கா ஆகியோரை மட்டும் தனியாக ஒரு அறையில் தங்க வைத்தனர்.  வழக்கறிஞர் கூடவே வேறு அறையில் கார்த்திக்கின் நண்பர்கள் தங்க வைக்கப்பட்டனர். செல்போன் பேச்சுகளுக்குத் தடை போடப்பட்டது. இந்த நிலையில்தான், எம்.நடராஜனுக்கு வெற்றிகரமாக உறுப்பு மாற்று சிகிச்சை நடந்ததாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.

நாம் கூத்தாடிவயல் கிராமத்தில் கார்த்திக் வீட்டுக்குச் சென்றோம். குளத்தின் கரையில்,  கீற்றுக்கொட்டகையில், சேலைகளே கதவுகளாக உள்ள வீட்டில் கார்த்திக்கின் பெரியம்மாக்கள், அத்தை போன்ற உறவினர் நின்றனர். அவர்கள் நம்மிடம்... ""ஒரு வேளை கஞ்சி குடிக்கக்கூட கூலி வேலைக்கு போனாத்தான் முடியும். இந்தக் கொட்டகைக்கு கரண்ட் இழுக்கக் கூட குளத்துக்கரைன்னு சொல்லி வி.ஏ.ஓ. ரசீது கொடுக்கல. அப்படிப்பட்டவன் அடிபட்டு தஞ்சாவூர் போனதுமே ஒரு வக்கீல் வந்தார்'' என்றவர்கள், மணமேல்குடி கார்த்திகேயன் பெயரை வக்கீல் சொன்னதையும் நினைவூட்டினார்கள்.

அவர்களே தொடர்ந்து, ""சென்னைக்குப் போயும் கார்த்திக் கண் முழிக்கலையாம். அதனால அவன் உறுப்புகளை சசிகலா புருசனுக்கு வைக்க போறாகலாம். என்ன நடக்குதோ தெரியல. நாங்க போன் செஞ்சாலும் யாரும் எடுக்கல'' என்றனர் பரிதவிப்புடன்.

சென்னை சென்ற நண்பர்களில் சிலர்... ""அப்பல்லோவுல வச்சு வைத்தியம் செய்யலாம், செலவை இன்சூரன்ஸ்ல இருந்து கட்டலாம்னு வக்கீல் சொன்னார். ஆனால் குளோபலுக்கு கூட்டி வந்துட்டாங்க. அவங்க அம்மா, அப்பாவை உள்ளே கூட்டிப்போனதோட சரி வெளிய வரல. அதனால் உள்ள வச்சே அவங்களோட சம்மதத்தை வாங்கியிருக்கலாம்'' என்றனர்.

இந்த முயற்சிகளை எடுத்தது யார்? என்ற நமது கேள்விக்கு அறந்தாங்கி வட்டாரத்தில் இருந்து வந்த பதில்... ""மன்னார்குடிக்கு ரொம்பவே வேண்டப்பட்டவர் மணமேல்குடி கார்த்திகேயன். தற்போதைய தினகரன் அணி மா.செ. இவர் கலைஞரை எதிர்த்து திருவாரூரில் 2011-ல் போட்டியிட்ட குடவாசல் எம்.ராஜேந்திரனோட  மருமகன். அறந்தாங்கி அ.தி.மு.க ச.ம.உ. ரெத்தினசபாபதிக்கு தம்பி. அவர்தான் ஏற்பாடுகள் செய்திருக்கிறார்.

கார்த்திக் பிழைக்க வழி இருந்தால் நானே செலவு செய்றேன்னு அண்ணன் முன்வந்தார். ஆனால் மருத்துவர்கள் கைவிரித்த பிறகுதான் கார்த்திக்கின் குடும்பத்தாரிடம்  பேசி சம்மதம் வாங்கினார்.

மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகளை பிறருக்குப் பொருத்துவது என்றால் அந்த உறுப்புகளை மட்டும்தான் எடுத்துக்கொண்டு போவார்கள். ஆனால் கார்த்திக்கை மட்டும்தான் ஆளையே கொண்டுபோய் வைத்து உறுப்புகளை எடுத்துள்ளனர். இதற்கு  அரசு அனுமதியும் வேண்டும் என்பதால்தான் 3-ந் தேதி காலை தனது அண்ணன் ரெத்தினசபாபதி மற்றும் ர.ர.க்களுடன் மாவட்ட ஆட்சியர்  கணேசை நேரில் பார்த்து தகவல் சொல்லியிருக்கிறார் கார்த்திகேயன்'' என்றனர்.

மாவட்ட ஆட்சியர் கணேசை சந்தித்துவிட்டு வெளியே வந்த ரெத்தினசபாபதியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது... ""குடும்பத்தினர் சம்மதம் பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடக்கிறது'' என்றார். அப்போது இடைமறித்த கார்த்திகேயன்... ""ஆபரேசன் நல்லபடியா முடிந்தபிறகு எல்லாவற்றையும் நான் சொல்றேன்'' என்றார். ""நீங்கதான் ஏற்பாடு செய்ததாக சொல்கிறார்களே'' என்ற போது... ""அதை எல்லாம் ஆபரேசனுக்குப் பிறகு விரிவாக சொல்கிறேன்'' என்றார்.

இந்த நிலையில்தான் 3-ந் தேதி இரவு 10 மணிக்குப் பிறகு கார்த்திக்குக்கு அறுவை சிகிச்சை செய்து கல்லீரல், சிறுநீரகம் மற்றும் செயல்பாட்டில் உள்ள உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில், அதுவரை எமனின் பிடியில் துடிதுடித்து வந்த கார்த்திக்கின் மரணம் அறிவிக்கப்பட்டது. அறந்தாங்கி பகுதியே பரபரப்பாக இருக்கும் நிலையில்... மா.செ. கார்த்திகேயன் தரப்பு 5 ஆயிரம் பேர் திரண்டு உறுப்புதானம் செய்த கார்த்திக்குக்கு அஞ்சலி செலுத்தி, கிட்னி-கல்லீரல் பறிப்பை மறைக்கத்  தயாரானார்கள்.

-இரா.பகத்சிங்


தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையிலேயே மூளைச் சாவு அடைந்த கார்த்திக்கின் உடல் உறுப்புகள், தமிழ்நாடு அரசு உறுப்பு மாற்று கழகத்தின் பொறுப்பில், உறுப்பு தானம் கேட்டவர்களின்  சீனியாரிட்டிபடி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு கொடுக்க உறுதியானது.

இதைத் தெரிந்துகொண்ட நடராஜன் வகையறாக்கள், மியாட் மருத்துவமனையிடம் பேசியதில் பலன் கிடைக்கவில்லை. அதனால் சுகாதாரத்துறை மூலம் முயற்சித்தனர். கார்த்திக்கின் மூளைச்சாவை தஞ்சாவூர் மெடிக்கல் கல்லூரியிலேயே அறிவிக்கும் நடைமுறை தடுக்கப்பட்டது. கார்த்திக்கின் பெற்றோர் மூலம் மேல்சிகிச்சைக்காக சென்னை கொண்டு வரத் திட்டமிடப்பட்டது.

கோவையைச் சேர்ந்த கங்கா மருத்துவமனையின் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸை திருச்சிக்கு கொண்டுவந்து... கார்த்திக்கை தஞ்சை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த அரசு மயக்க மருந்து டாக்டர்  ஒருவர் உதவியுடன் திருச்சி ஏர்போர்ட்டுக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து ஹெலி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஏர்போர்ட்டுக்கு கொண்டு வந்தனர். அதன்பின் அங்கிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியுடன் குளோபல் மருத்துவமனைக்குள் நுழையும்வரை அரசின் சுகாதாரத்துறை உதவியது.

தஞ்சை மருத்துவக் கல்லூரியிலேயே அறிவித்திருக்க வேண்டிய கார்த்திக்கின் மூளைச் சாவு, குளோபல் மருத்துவமனையில் அறிவிக்க வைக்கப்பட்டதன் மூலம், சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு உறுப்புதானம் வழங்க முன்னுரிமை உண்டு என்ற அடிப்படையில், எம்.நடராஜனுக்கு கார்த்திக்கின் கல்லீரல் பொருத்தப்பட்டது.

மனித உடலில் இரண்டு கிட்னிகள் இருப்பதால் ஒரு கிட்னியை மூளைச்சாவை அறிவிக்கும் மருத்துவமனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் நடராஜனுக்குப் பொருத்தப்பட்டது.

கார்த்திக்கை ஏர்ஆம்புலன்சில் கொண்டுவருவதற்காக செலவான ஐந்துலட்ச ரூபாயை கார்த்திக் குடும்பத்தின் பெயரில் பில் போட்டுள்ளது கங்கா ஏர்ஆம்புலன்ஸ். கூலித்தொழிலாளியான கார்த்திக்கின் அப்பா எப்படிக் கட்டுவார். அதை மன்னார்குடி வகையறாக்கள் கட்டுகிறது.

மிகக் கச்சிதமாக காய் நகர்த்திய மன்னார்குடி தரப்பு, கார்த்திக் குடும்பத்திற்கு மொத்தமாக பத்துலட்ச ரூபாய் தரவும் முன்வந்துள்ளதாம்.

-தாமோதரன் பிரகாஷ்
சிகலா கணவர் நடராஜனுக்கு கிட்னி-கல்லீரல் பொருத்தப்பட்டதில் உள்ள உறுப்புதான சர்ச்சை குறித்து தமிழக அரசின் உறுப்புதானத் திட்டத்தின் (Member Secretary#Transplant Authority of Tamilnadu) உறுப்பினர் செயலரும் பேராசிரியருமான டாக்டர் பாலாஜி மற்றும் சீஃப் புரோகிராம் அலகேஷன் மேனேஜர் ஸ்ரீகுமார் ஆகியோரிடம் நாம் கேட்டபோது, ""காலை 10:38 மணிக்கு கார்த்திகேயன் என்கிற இளைஞர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் சம்மதித்துவிட்டதாகவும் கடந்த 3-ந்தேதி மதியம் 2:7 மணிக்கு சென்னை- குளோபல் மருத்துவமனையிலிருந்து எங்கள் துறைக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. ஒருவர், மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை "ஆப்னிகா' எனப்படும் 15 விதமான பரிசோதனைகள் மூலம் உறுதி செய்துவிட்டுத்தான் உறுப்புதானத் திட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் உட்பட 78 தனியார் மருத்துவமனைகளும் எங்களுக்கு தகவல் கொடுப்பது வழக்கம்.

அதற்குப்பிறகுதான், சுவாசக்கருவிகளை நிறுத்தி மூளைச்சாவு அடைந்தவரின் உடலிலுள்ள உறுப்புகளை எடுத்து தானமாக பிரித்தளிக்கப்படும். அதேபோல், எந்த மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தாலும் அந்த மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கு இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், தோல், எலும்பு உள்ளிட்ட உடலுறுப்புகள் பொருத்தப்படும். ஒருவேளை, அந்த மருத்துவமனையில் காத்திருப்போர் இல்லை என்றால்தான் மற்ற மருத்துவமனையில் பதிவுசெய்துவிட்டு காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு சீனியாரிட்டிப்படி பகிர்ந்தளிக்கப்படும். அதனால், இளைஞர் கார்த்திகேயனின் உறுப்புகளில் ஒரு சிறுநீரகம் மட்டும் விதிமுறை மற்றும் சீனியாரிட்டி பிரகாரம் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

எம்.நடராஜனுக்கு கடந்த ஏப்ரல் மாதமே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என டாக்டர்கள் அறிவித்திருந்த நிலையில்,  2017 ஏப்ரல் 14-ந்தேதியில் கல்லீரல் தானமாகக் கேட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. 7 மாதங்கள் கழித்துதான் சீனியாரிட்டி பிரகாரம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, தனி முன்னுரிமை கொடுத்து வழங்கப்படவில்லை. மேலும், செப்டம்பர் மாதம் சிறுநீரகம் செயலிழந்துவிட்டதால் "கம்பைன் ட்ரான்ஸ்ப்ளண்டேஷன்' அடிப்படையில் ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்ற சிறுநீரகம் தானமாக வழங்கப்பட்டு அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. எந்த மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த நோயாளியின் உடலுறுப்பு தானம் கிடைக்கிறதோ அதை 78 மருத்துவமனைகளுக்கு  "அலர்ட்' கொடுத்து சீனியாரிட்டி பிரகாரம் பிரித்துக்கொடுப்பதுதான் எங்கள் வேலை. இதில், நடராஜன் வி.ஐ.பி. என்பதால் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை''’’என்கிறார்கள் விளக்கமாக.

-மனோ சௌந்தர்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : sankaran Country : India Date :10/9/2017 10:13:35 PM
முதலில் அம்மா ஜெயலலிதா பிறகு இந்த இளைஞர் கார்த்திக் என்று தணியும் இந்த கொலை வெரி ? கடவுளை பிரார்த்திப்போம் " தயவு செயது இந்த அரக்கர்கள் இடமிருந்து தமிழ்நாட்டை கப்பாத்துங்கள் . " சின்னம்மா , சின்னம்மா , உங்களது தாலி பாக்கியம் முக்கியம் என்பதற்காக ஒரு ஏழை இளைஞைநை பாலி கடா ஆக்கி விட்டீர்களே ! என்ன துர் பாக்கியம் செய்தது தமிழ்நாடு ?
Name : sankaran Country : India Date :10/9/2017 10:11:37 PM
முதலில் அம்மா ஜெயலலிதா பிறகு இந்த இளைஞர் கார்த்திக் என்று தணியும் இந்த கொலை வெரி ? கடவுளை பிரார்த்திப்போம் " தயவு செயது இந்த அரக்கர்கள் இடமிருந்து தமிழ்நாட்டை கப்பாத்துங்கள் . சின்னம்மா , உங்களது தாலி பாக்கியம் முக்கியம் என்பதற்காக ஒரு ஏழை இளைஞைநை பாலி கடா ஆக்கி விட்டீர்களே ! என்ன துர் பாக்கியம் செய்தது தமிழ்நாடு ?
Name : baala Date :10/9/2017 5:49:04 PM
பாவிகளா உங்களை எல்லாம் அந்த கடவுள் இருந்தால் பார்த்து கொள்வான்
Name : rajan Country : Bahrain Date :10/9/2017 3:10:14 PM
டாக்டர் பாலாஜி சொல்வது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தவறுகள் நடந்துள்ளது என்று சந்தேகப்படும் இடங்களில் எல்லாம் இவர் பெயர் அடிபடுகிறது. இவர்தான் ஜெயலலிதாவின் கைரேகையை எடுத்தவர்.
Name : rajan Country : Bahrain Date :10/9/2017 3:06:52 PM
டாக்டர் பாலாஜி சொல்வது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இவர்தான் ஜெயலலிதாவின் கைரேகையை எடுத்தவர். ஜெயலலிதா நல்ல நிலையில்தான் இருந்தார் ஆனால் கை நடுங்குவதால்தான் இந்த கைரேகை என்றார். இப்போது மந்திரிகளோ ஜெயலலிதா கண் திறக்கவே இல்லை என்கின்றனர். இவருடைய வீட்டில் வருமான வரி சோதனை நடத்தினால்தான் இவரை பற்றிய முழு விபரங்களும் வெளியே வரும்