Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
தமிழகம்
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான்
 ................................................................
வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்!
 ................................................................
அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
 ................................................................
தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..!
 ................................................................
அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள்
 ................................................................
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!
 ................................................................
கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை
 ................................................................
தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..!
 ................................................................
கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு
 ................................................................
நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார்
 ................................................................
துறைமுகத்தில் 3.2 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
 ................................................................
கோயம்பேடு பேருந்துநிலையத்தில் காவல் ஆணையர் ஆய்வு
 ................................................................
தீபாவளியை முன்னிட்டு 5 நாட்களுக்கு மீன்பிடி நிறுத்தம்
 ................................................................
டெங்கு பாதிப்பு குறித்த மத்திய குழு ஆய்வு நிறைவு: இன்று மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
சென்னையில் இன்று பரவலாக பெய்த மழை(படங்கள்)
 ................................................................
மதுரையில் அழகிரியை மையப்படுத்தி தொண்டர்கள் ஒட்டிய போஸ்ட்டர்
 ................................................................
சோளார் பவர் ப்ளாண்ட் பற்றி புத்தகம் வெளியீடு(படங்கள்)
 ................................................................
வழக்கில் நாங்கள் தான் வெற்றிப்பெறுவோம் - தம்பிதுரை நம்பிக்கை
 ................................................................
சீர்காழியில் தீ விபத்து - 8 வீடுகள் எரிந்து சேதம்
 ................................................................
நக்கல்பட்டியில் கிரானைட் லாரி கவிழ்ந்து இரண்டு சிறுவர்கள் பலி
 ................................................................
கறுப்புக்கொடி ஏற்றி கண்ணீர் தீபாவளியாக கடை பிடிக்கப் போவதாக விவசாயிகள் தீர்மானம்
 ................................................................
டெங்குவவை தொடர்ந்து பன்றி காய்ச்சல் -ஒருவர் பலி
 ................................................................
கிருஷ்ணகிரியில் தொடரும் டெங்கு மரணங்கள்
 ................................................................
புதுக்கோட்டைக்கு வந்தும் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு குறித்து பேசாத முதல்வர் ?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, செப்டம்பர் 2017 (11:29 IST)
மாற்றம் செய்த நாள் :23, செப்டம்பர் 2017 (11:29 IST)

அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை!

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் நேற்று காலை கோவை வந்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் பள்ளி, கல்லூரிகளில் இடஒதுக்கீடு, பஞ்சமி நிலம் மீட்பு, துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் அவரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். சில அமைப்புகள் சார்பில் கோவை மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சிகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு போதிய உபகரணங்களை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் வாங்கிக் கொடுக்கவேண்டும்.

அவ்வாறு செய்யவில்லை என்றால் பயனாளிகள் உடனடியாக எங்களுக்கு புகார் செய்யலாம். தமிழகத்தில் பெரும்பாலான உள்ளாட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில்தான் துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு மாதந்தோறும் 10–ந் தேதிக்குள் சம்பளம் வழங்கிவிட வேண்டும். அதை ஒப்பந்த நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அனைவருக்கும் கண்டிப்புடன் உத்தரவிடவேண்டும். அப்படி வழங்கவில்லை என்றால் அந்த நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி சரியான நேரத்தில் சம்பளம் வழங்கவில்லை என்றால் அந்தந்த உள்ளாட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாவட்ட மாணவி அனிதாவுக்கு கால்நடைத்துறையில் டாக்டருக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுபோன்று வேளாண் கல்லூரியில் பி.டெக் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அத்துடன் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிக்கவும் இடம் கிடைத்தது. ஆனால் அவர் தற்கொலை செய்து உள்ளார். வெளியில் இருந்து பலர் அழுத்தம் கொடுத்ததால்தான் அவர் தற்கொலை செய்து உள்ளார் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது.

அதன் அடிப்படையிலும் நாங்கள் அரியலூருக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினோம். அவருக்கு வெளிஅழுத்தம் கொடுத்து தற்கொலை செய்ய தூண்டியது யார்...? என்பது குறித்து விசாரணை நடத்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்கவேண்டும். மாணவி அனிதாவை இழந்து வாடும் அவரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்...” என அவர் கூறினார்.

- சிவசுப்பிரமணியம்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : ராஜகோபாலன். Date :9/23/2017 6:04:57 PM
கால்நடைத்துறையில் டாக்டருக்கு படிக்க...., வாய்ப்பு..., கொடுத்தாக.....! வேளாண் கல்லூரியில் பி.டெக் படிக்கும்..., வாய்ப்பு..., கொடுத்தாக.....! ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிக்க...., வாய்ப்பு..., கொடுத்தாக.....! என்று சகட்டு மேனிக்கு சினிமா பாணியில்... தகவலை கூறாமல்... உருப்படியாக ஏதேனும் கூறும்??? சாவுக்கு வா என்றால்.... கருமாதிக்கு கூட வராத... தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய..., துணைத்தலைவரை! பாராட்ட... வார்த்தைகள் இல்லை??? தமிழகத்தில் அதிமுகவின் மைனாரிட்டி அரசால்..... எல்லா செயல்களும் தலை கீழாக இருப்பது..., ஆணையத்திற்கு தெரியாதா??? அதிமுகவின் அன்றைய, முதல்வரும் அவரை அணைந்தவர்களும் கம்பி எண்ணியது.... கம்பிக்குள் இருப்பது தெரியாதா??? தேசிங்கு ராஜா என்ற படத்தில், ரவி மரியா அவர்கள்... ''சூரியை பார்த்து.... அப்ப உனக்கு எதுவுமே தெரியாதா'' என அடிக்கடி..., கேட்பார்??? அரசு..., தனக்கு பிடித்த, விளையாட்டு வீரர்களுக்கு, கோடி கோடியாக கொட்டி கொடுக்க... அதனை சிலர் 'அடையார் கேட்டில்' கொட்டுகிறார்கள்!!! அடிப்படை வசதி ஏதும் இல்லாமல்.... மாநில அளவில் 1176 /1200 வாங்கிய வீர மாணவிக்கு வெறும் 15 லட்சமா...???