Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
முக்கிய செய்திகள்
வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து!
 ................................................................
இன்றைய(16.10.2017)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தீபாவளி கிப்ட் கேட்கும் அமைச்சர் - தவிக்கும் அதிகாரிகள்!
 ................................................................
கர்நாடகத்திலும் அனைத்து சாதியினரை அர்ச்சகராக்க முடிவு - திருமாவளவன் வாழ்த்து
 ................................................................
அமைச்சர் சீனிவாசன் பதவி விலகவேண்டும்! முன்னாள் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு!!
 ................................................................
பாஜக ஆணையை ஏற்று தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் எடப்பாடி அரசு: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
கொள்ளையடிக்க நிதி கேட்கும் தமிழக அரசு: விஜயகாந்த் குற்றச்சாட்டு!
 ................................................................
ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகராக தமிழக காவல்துறையினர் செயல்படுகின்றனர்: எடப்பாடி
 ................................................................
கர்நாடகத்திலும் தலித்துகளை அர்ச்சகர்களாக்க நடவடிக்கை! - சித்தராமைய்யா உறுதி
 ................................................................
‘பழனிசாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? குழந்தைகள் கூட சிரிக்கும்!’ - ராமதாஸ் அறிக்கை
 ................................................................
இரட்டை இலை' சின்னம் யாருக்கு? இன்று இறுதி விசாரணை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, செப்டம்பர் 2017 (19:6 IST)
மாற்றம் செய்த நாள் :21, செப்டம்பர் 2017 (19:6 IST)


நாட்டு மக்கள் வரிப்பணத்தில் மஞ்சள் குளிப்பது பாவம்: முதலமைச்சருக்கு நாஞ்சில் சம்பத் கண்டனம்

அதிமுக அம்மா அணியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் நக்கீரன் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி:-

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் விவகாரத்தில் கோர்ட்டின் தீர்ப்பு தர்மத்திற்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே?

தகுதி நீக்கத்தை உயர்நீதிமன்றம் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. அந்த தகுதி நீக்கத்தின் பெயரால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தடையும் போட்டியிருக்கிறது. அதேபோல திமுக தொடுத்த வழக்கிலும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவுபோடக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று அமைச்சர் ஜெயக்குமார் எப்படி சொல்கிறார். 

எங்களுக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றி. தமிழ்நாட்டு மக்கள் எதை எதிர்பார்த்தார்களோ அதை உயர்நீதிமன்றம் தீர்ப்பாக வழங்கியிருக்கிறது. ஆகவே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி 18 உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து, இன்னும் 6 மாதம் காலம் தள்ளலாம் என கணக்கு போட்டவர்களுடைய கணக்கு, நான் போட்ட கணக்கு ஒன்று, நீ போட்ட கணக்கு ஒன்று ரெண்டுமே பிழையானது என்று அவர்கள் பாடிக்கொண்டிருக்கின்ற வேலையில் இதை வெற்றி என்று கொண்டாடுவதற்கு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. 

மயிலாடுதுறையில் பாவங்களை போக்கும் மகா புஷ்கரத்தில் மூழ்கி எடப்பாடி பழனிசாமி குளித்து இருக்கிறார். அவர் செய்த துரோகத்துக்கு எத்தனை நதிகளில் நீராடினாலும் பாவம் போகாது. அவரும் அமைச்சர்களும் நீராடியதால் ஆற்றின் புனித தன்மை தான் கெடும் என டி.டி.வி.தினகரன் கூறியதற்கு, தினகரன் இந்து மதத்தை களங்கப்படுத்துகிறாரா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளாரே?

எந்த சுவரில் போய் முட்டுவது என்று விடைதெரியாமல் பிதுங்கிக்கிடக்கிறார்கள். எந்த கருத்து சொன்னாலும், எதிர் கருத்து சொல்ல வேண்டும் என்கின்ற வெறியும் வேகமும் அதிகாரம் இருப்பதால் அவர்களுக்கு இப்போது சாத்தியமாகியிருக்கிறது. ஒரு கருத்து சொன்னால் அதற்கு மதச்சாயம் பூசுவதும், ஒரு கருத்து சொன்னால் அதற்கு அரசியல் சாயம் பூசுவதும் தமிழ்நாட்டில் இப்போது பிள்ளை விளையாட்டாகிவிட்டது. அதற்கு பொறுப்புள்ள அமைச்சர்களே இப்படி இருப்பதுதான் தமிழ்நாட்டில் துரதிருஷ்டவசமான சம்பவம். இதை நான் அலட்சியப்படுத்துகிறேன்.அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களின் எண்ணம் பகல் கனவாக முடியும். இந்த ஆட்சியை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது என கட்சிக் கூட்டத்தில் பேசலாம். ஒரு அரசாங்கம் விழாவில் முதல் அமைச்சர் பேசுவதன் மூலம், முதல் அமைச்சர் அத்து மீறுகிறார். அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். நாட்டு மக்கள் வரிப்பணத்தில் மஞ்சள் குளிப்பது பாவம். இதற்கு எந்த காவிரியில் போய் மூழ்கப்போகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது என ஒரு அரசு விழாவில் முதலமைச்சர் பேசுவது தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ளக் கூடிய நடைமுறை அல்ல. இது ஒரு அரசியல் அநாகரிகம், இதனை தவிர்ப்பதற்கு இனி வரும் நாட்களிலாவது முதல் அமைச்சர் முன்வர வேண்டும். 

அதிமுகவுக்கு சம்மந்தமில்லாத ஒருவரின் கட்டுப்பாட்டில் 18 பேர் சென்றிருப்பது, பொதுக்குழுவை எதிர்த்து வழக்கு போடுவது, அதிமுகவில் இருந்து விலகி மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க விரும்புவது போன்ற செயல்களால் தகுதி நீக்கம் சரியானது என்று எதிரணியினர் கூறுகிறார்களே?

துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்று தலைமைக் கழகம் வந்தபோது இதனை சொல்லியிருக்க வேண்டும். ஆர்.கே.நகரில் அவரை வேட்பாளராக அறிவித்து முதலமைச்சர், அமைச்சர்கள் விழுந்து விழுந்து பிரச்சாரம் செய்தபோது இவர்கள் இதனை பேசியிருக்க வேண்டும். அப்போது பேச முடியாதவர்கள் இப்போது பேசுகிறார்கள் என்றால் இவர்களுக்கு ஏதோ ஆகிவிட்டது என்றுதான் பொருள். 

-வே.ராஜவேல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : jegan Date :9/22/2017 10:46:41 AM
நல்ல ஒரு பேச்சளார் நாஞ்சில் சம்பத் ஆனால் என்ன சேரக்கூடாது இடத்தில சேர்ந்து விட்டார் பாவம்
Name : rama subramanian Country : India Date :9/22/2017 9:54:41 AM
புதுச்சேரியிலும் கூர்கிலும் இருக்கவா வோட்டு போட்டோம் ? என்ன நியாயம் ?
Name : rajagopalan. Date :9/22/2017 8:13:34 AM
அதான்யா? அதே தான்யா? முதல் அமைச்சர் அத்து மீறி..., அதிகார துஷ்பிரயோகம் செய்து...,. நாட்டு மக்கள் வரிப்பணத்தில் மஞ்சள் குளிப்பது.... பாவம்...!! என்று யாரோ சொன்னதால் தான்... குளியல்??? 420 ன்னோ சொல்றீங்கோ??? பாவத்தை போக்கவும் விடமாட்டேங்குறீங்க......, என்னதான்டா..., செய்யச்சொல்றீங்க??? ''பாவம்'' இவரு?!?!?! ஜெயலலிதா மாதிரியே..... ஆக்ட்டிங் குடுக்குற இவருக்கு.... ஜெயலலிதாக்கு இருந்த மாதிரி ''உயிர்தோழன்'' ஒருவன் கூட இல்லை!!!
Name : subramanian Country : Indonesia Date :9/21/2017 7:35:50 PM
என்னது? எடப்பாடி மஞ்சள் குளிக்கிறாரா? சம்பத்து, என்ன சொல்ல வாரீங்க? வேண்டாம்ண்ணா? புரியாத புள்ளைங்க! விட்டுடுங்க! பாடியும் பனியனும் தான் பெரிசு. கேப் வெடிச்சாவே அழுதுருவானுக! நாஞ்சில் வெடிச்சா ஆட்டங்காலி! வேணாம்ண்ணே!
Name : subramanian Country : Indonesia Date :9/21/2017 7:28:48 PM
'ஆட்ட முடியாது, அசைக்க முடியாது' என்று எடப்பாடி பலமுறை பேசியிருக்கிறார். அவர் சொல்கிற அந்த இரண்டு நிகழ்வுகளும் அகமா? புறமா? எதனை ஆட்ட முடியாது? எதனை அசைக்க முடியாது? செயப்படுபொருள் 'அரசு' என்றால் இவற்றை எப்படி பொருத்திப் பார்ப்பது? இதனால் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் எடப்பாடி புரிய வைக்க நினைக்கும் புதிய கல்விக் கொள்கை என்ன? அடுத்த ஆண்டு நீட் தேர்வுக்கான வினாத்தாளில் எடப்பாடியின் இந்த கல்விக்கொள்கை கருத்திற் கொள்ளப்படுமா? இந்தத் தொடர்பற்றிய விளக்கத்தை கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் ஓரங்கட்டப் பட்டு சின்னம்மாவினால் கண்டெக்கப்பட்ட ஈரோட்டுச் சிங்கம் எழுச்சி நாயகன் சிந்தனைச் சிற்பி செங்கோட்டையன் அவர்களிடம் பெற்று அருள் கூர்ந்து நக்கீரன் பதிவு செய்வது அதற்கான கடமையாகும்.
Name : mani Date :9/21/2017 7:10:40 PM
இந்தியாவில வரிப்பணம்/அரசுசொத்து எல்லாம் ஆள்பவர்களுக்கு சொந்தமானது