Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
முக்கிய செய்திகள்
வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து!
 ................................................................
இன்றைய(16.10.2017)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தீபாவளி கிப்ட் கேட்கும் அமைச்சர் - தவிக்கும் அதிகாரிகள்!
 ................................................................
கர்நாடகத்திலும் அனைத்து சாதியினரை அர்ச்சகராக்க முடிவு - திருமாவளவன் வாழ்த்து
 ................................................................
அமைச்சர் சீனிவாசன் பதவி விலகவேண்டும்! முன்னாள் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு!!
 ................................................................
பாஜக ஆணையை ஏற்று தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் எடப்பாடி அரசு: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
கொள்ளையடிக்க நிதி கேட்கும் தமிழக அரசு: விஜயகாந்த் குற்றச்சாட்டு!
 ................................................................
ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகராக தமிழக காவல்துறையினர் செயல்படுகின்றனர்: எடப்பாடி
 ................................................................
கர்நாடகத்திலும் தலித்துகளை அர்ச்சகர்களாக்க நடவடிக்கை! - சித்தராமைய்யா உறுதி
 ................................................................
‘பழனிசாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? குழந்தைகள் கூட சிரிக்கும்!’ - ராமதாஸ் அறிக்கை
 ................................................................
இரட்டை இலை' சின்னம் யாருக்கு? இன்று இறுதி விசாரணை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, செப்டம்பர் 2017 (16:7 IST)
மாற்றம் செய்த நாள் :21, செப்டம்பர் 2017 (17:18 IST)


ஊழல், இனவாதத்திற்கு எதிரான சந்திப்பு! - கமல், கேஜ்ரிவால் பேச்சுபரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் கமலஹாசனை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சென்னை வந்து அவரது வீட்டில் சந்தித்து ஒருமணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள்,

கமலஹாசன்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் என்னை சந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதே மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். நாங்கள் சந்தித்து பேசிக்கொண்ட விஷயங்கள் என்னவாக இருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடியும். ஊழலை எதிர்க்கும் எவரும் எனக்கு உறவினர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பது உண்மை. அந்த வகையில் இந்த உறவு தொடர்கிறது. என் அப்பா காலத்தில் இது அரசியல் வீடாக இருந்தது. அதில் நான் மட்டும் தனித்திருந்தேன். இன்று ஒரு அரசியல் சந்திப்பில் நான் இருந்திருக்கிறேன். நாங்கள் சந்தித்திருப்பதன் நோக்கம் ஒன்றுதான். அரவிந்த் கேஜ்ரிவால் ஊழல் மற்றும் இனவாதத்திற்கு எதிராக போராடுவதில் தேசிய அடையாளம் கொண்டவர். அதேபோல், எனக்கும் அதில் கொஞ்சம் பங்கிருக்கிறது. அவர் என்ன காரணத்திற்காக வேண்டுமானாலும் இங்கு வந்திருக்கலாம். ஆனால், எனக்கு இது அரசியலைக் கற்பதற்கான வாய்ப்பு. நான் ஒரு கல்விச்சுற்றுலாவில் இருந்திருக்கிறேன். இவர்களைப் போன்றவர்களிடம் இனவாதம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடும் எனது முயற்சிகளுக்கான அறிவுரைகளைப் பெறுகிறேன் என்றார்.

அரவிந்த் கேஜ்ரிவால்

நடிகராகவும், தனிமனிதராகவும் சிறந்தவரான கமலஹாசனின் ரசிகன் நான். அவர் தைரியமானவரும், நேர்மையானவரும் கூட. இந்த நாடு ஊழல் மற்றும் இனவாதத்தால் மிகப்பெரிய தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் மக்கள் ஒன்றுகூடிப்பேசி அதைக் களைவதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும். நம் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் நாட்டை பாதித்துக்கொண்டிருக்கும் இனவாதத்திற்கும், இனவாதத் தாக்குதல்களுக்கும் எதிரான எண்ணங்களைக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவற்றிற்கு எதிராக அவர்கள் போராடத்தொடங்கியுள்ளனர். அவர்களில் கமலஹாசனும் ஒருவர். அவர் அரசியலுக்கு வரவேண்டும்; வருவார். இதுவொரு நல்ல சந்திப்பு. நாட்டிலும், தமிழகத்திலும் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும், எங்களது அரசியல் பார்வைகள் குறித்தும் எங்களுக்குள் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டோம். இதுபோல தொடர்ந்து எங்களுக்குள் சந்திப்புகள் நிகழும் என்று நம்புகிறேன் இவ்வாறு பேசியுள்ளார்.

படம் - ஸ்டாலின்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Superusa Country : United States Date :9/22/2017 3:31:09 AM
ஊழலுக்கு எதிரானவர்கள் தமிழர்களில் இல்லையய்யா இவனுக்கு. இவன் சமஸ்க்ரிதம். அவனுக்கு வடஇந்தியர்களைத்தான் புடிக்கும். என்றாவது தமிழர்கள் சட்டங்கள் இயற்ற, வடஇந்தியர்கள், பிற தென் இந்தியர்கள் அதை மதித்து பயந்து நடக்க வேண்டும். நாம் அவர்களை சுட்டு கொல்ல வேண்டும். ஐநாவில் அவன் ஓடிப்போய் நிற்க வேண்டும்! சே!
Name : rajan Date :9/22/2017 12:30:35 AM
ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் அவர்கள் கமலஹாசனை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தக்கூடும்