Add1
logo
பொறையாறு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்! || 138-வது நாளை எட்டிய டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம்! || டெங்கு பாதிப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திருமா வலியுறுத்தல் || அரசின் மெத்தனப்போக்கே பொறையாறு விபத்திற்கு காரணம்! - வேல்முருகன் குற்றச்சாட்டு || டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் || காந்தி வன்முறையை ஆதரித்தாரா? புதிய புத்தகத்தில் சர்ச்சை! || தவறான கருத்துகளைப் பரப்பினால் தேசபக்தர்கள் மெர்சலாகி விடுவார்கள்! - இல.கணேசன் || தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு || 8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம் || நாடாளுமன்றத்தில் யாரும் பேச முன்வருவதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு || பொறையார் பணிமனை மேற்கூரை இடிந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பலி! || மான் வேட்டைக்கு சென்ற எட்டுபேர் கைது; நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்! || திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது! ||
தமிழகம்
பொறையாறு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்!
 ................................................................
138-வது நாளை எட்டிய டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம்!
 ................................................................
டெங்கு பாதிப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திருமா வலியுறுத்தல்
 ................................................................
அரசின் மெத்தனப்போக்கே பொறையாறு விபத்திற்கு காரணம்! - வேல்முருகன் குற்றச்சாட்டு
 ................................................................
தவறான கருத்துகளைப் பரப்பினால் தேசபக்தர்கள் மெர்சலாகி விடுவார்கள்! - இல.கணேசன்
 ................................................................
நாடாளுமன்றத்தில் யாரும் பேச முன்வருவதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
 ................................................................
பொறையார் பணிமனை மேற்கூரை இடிந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பலி!
 ................................................................
மான் வேட்டைக்கு சென்ற எட்டுபேர் கைது; நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்!
 ................................................................
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது!
 ................................................................
சேலம், நாமக்கல்லில் டெங்கு மரணங்கள்; தடுப்பு நடவடிக்கைக்கு சென்ற மருத்துவர்கள் சிறைபிடிப்பு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
விஜய் ரசிகர்கள் இருவர் கைது..!
 ................................................................
அரசு பேருந்து பணிமனை மேற்கூரை இடிந்து விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
 ................................................................
இந்த ஆண்டு பட்டாசு விற்பனை 60 சதவீதம் குறைவு: ஏ.எம்.விக்ரமராஜா
 ................................................................
நிலவேம்பு கசாயம் குடிக்கும் அளவை தெளிவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்
 ................................................................
மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுத்த ராசிபுரம் பள்ளிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
 ................................................................
ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை
 ................................................................
அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: தீபா
 ................................................................
கள்ளச்சாராயம் குடித்த இளைஞர் பலி
 ................................................................
காலி மனைகளில் குப்பைகள் கொட்டினால் அபராதம்: திருவள்ளூர் கலெக்டர்
 ................................................................
கொருக்குப்பேட்டையில் கஞ்சா கொடுக்க மறுத்த வாலிபர் குத்திக்கொலை
 ................................................................
இடையூறாக உள்ள காவல் நிலையத்தை அகற்ற உயர் நீதி மன்றம் உத்தரவு
 ................................................................
முரசொலி பவளவிழா கண்காட்சியை காணவந்தார் கலைஞர்(படங்கள்)
 ................................................................
சாதியற்றோருக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு- கேரள முதல்வருக்கு ஸ்டாலின் பாராட்டு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, செப்டம்பர் 2017 (11:26 IST)
மாற்றம் செய்த நாள் :21, செப்டம்பர் 2017 (11:26 IST)


விஷத்தைக் கக்கிய நடுவண் அரசு! வேல்முருகன் கண்டனம்

காவிரிப் பிரச்சனையிலும் விஷத்தைக் கக்கிய நடுவண் அரசு! நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை சாகடிப்பதற்காகவே செய்யும் விதண்டாவாதம்! உச்ச நீதிமன்றத்தையும் கீழ்ப்படுத்தப் பார்க்கும் மோடி அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையான கண்டனம் தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 2007ல் வெளியானது. ஆனால் ஆறாண்டுகளுக்குப் பின்னர் 2013ல்தான் அது நடுவண் அரசிதழில் வெளியிடப்பட்டது.

அரசிதழில் வெளியிடப்பட்டதென்றால் அதனை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் பொருள்; அதுதான் சட்டமும்.

ஆனால் அப்போதைய மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-2 அரசும் சரி; அதன்பின் 2014ல் வந்த மோடியின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் சரி; காவிரி இறுதித்தீர்ப்பை நிறைவேற்றவில்லை.

இறுதித் தீர்ப்பின் அடிப்படைக் கூறே, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர்ப்பகிர்வு ஒழுங்காற்றுக் குழு ஆகிய இரண்டையும் நடுவண் அரசு அமைக்க வேண்டும் என்பதுதான்.

இந்த இரண்டு அமைப்புகளையும் அமைக்காமல் இருப்பது நடுவண் அரசு செய்யும் சட்டத்துக்குப் புறம்பான குற்றமே ஆகும்.

இது ஒருபுறமிருக்க, காவிரி இறுதித் தீர்ப்பில் சம்பந்தப்பட்ட தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய நான்கு மாநிலங்கள் மேற்கொண்டு தெரிவிக்கும் முறையீடுகள் பற்றிய விசாரணையே உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

இந்த விசாரணை, காவிரி இறுதித் தீர்ப்பில் சொல்லப்பட்ட மேலாண்மை வாரியம் மற்றும் நீர்ப்பகிர்வு ஒழுங்காற்றுக் குழு அமைப்பதைக் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தக்கூடியதல்ல.

அப்படி இருந்தும், இந்த இரண்டு அமைப்புகளை அமைக்காமல் இருக்க அவற்றைத் தொடர்புபடுத்தி விஷமத்தனமாக வாதம் செய்கிறது நடுவண் அரசு.

இப்படி விதண்டாவாதம் செய்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடமாட்டோம் என்று சொல்லும் அளவுக்கு கர்நாடக அரசுக்குத் துணிச்சலைக் கொடுத்திருக்கிறது.

நடுவண் மோடி அரசின் சொலிசிட்டர் ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் வைத்த வாதத்தைப் பாருங்கள்:

“நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் குழப்பங்கள் உள்ளன. நடுவண் அரசுக்கு அதில் 12 ஐயப்பாடுகள் ஏற்பட்டிருக்கிறது. எனவே அது மறு ஆய்வுக்கு உட்பட்டதே. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதென்றால் அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.”

எப்படி விஷம் தோய்ந்து இருக்கிறது பார்த்தீர்களா மோடியின் எண்ணம்? அவரது சொலிசிட்டர் ஜெனரலின் வாதம், காவிரி இறுதித் தீர்ப்பையே முடக்கும் வாதமன்றி வேறென்ன?

அடுத்த ஆண்டின் முற்பகுதியில் வரவிருக்கும் கர்நாடகத் தேர்தலை மனதிற் கொண்டு, நீரில் நஞ்சு கலந்து சாகடிப்பதற்கு ஒப்பான ஒரு செயலையே தமிழகத்திற்குச் செய்கிறது மோடி அரசு.

இந்த விஷமத்தனமான செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், அதனைக் கைவிட்டு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர்ப்பகிர்வு ஒழுங்காற்றுக் குழுவை உடனடியாக அமைக்குமாறு வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :