Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
சிறப்பு செய்திகள்
ரஜினி, சொல்லும்போது சொல்லிட்டு இப்போ முழிக்கிறாரு!!!
 ................................................................
சென்னையை சுத்தம்செய்ய கிளம்பிய மாணவிகள்!
 ................................................................
திமுக உதயமானபோது கலைஞரின் பங்கு!
 ................................................................
கலாம் கீதம்!
 ................................................................
காலத்தின் குரலாக ஒலிக்கும் அண்ணாவின் தன்னாட்சி!-தணிகைச் செல்வன்
 ................................................................
ஆளப்போகிறதா 'ஆக்குலஸ் கோ'?
 ................................................................
குஜராத் தேர்தல் அறிவிப்பு தள்ளிவைப்பு மோடிக்காகவா? காங்., பாஜக கருத்து!
 ................................................................
ஜப்பான் தமிழன்!!!
 ................................................................
வாக்கி-டாக்கி ஊழல் பின்னணி!
 ................................................................
குஜராத்தில் பாஜகவுக்கு தோ்தல் தோல்வி பயம்?
 ................................................................
பெண்ணியவாதிகளாக வளரும் என் பிள்ளைகள்!
 ................................................................
தினகரனை சசிகலா சந்திக்காதது ஏன்?
 ................................................................
திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது!
 ................................................................
உலகிலேயே மிக அதிகம் படித்தவர் இந்த சிங்!
 ................................................................
'புர்கா' அணியத் தடை !
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, செப்டம்பர் 2017 (13:54 IST)
மாற்றம் செய்த நாள் :20, செப்டம்பர் 2017 (13:55 IST)இந்தியாவில் விவசாயப் பணிகளுக்கான 'டிராக்டர்' தயாரிப்பில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்று 'மகிந்திரா & மகிந்திரா'. இந்நிறுவனத்தின் புதிய வடிவமைப்பான 'ஓட்டுனரில்லா டிராக்டரை' நேற்று அறிமுகப்படுத்தியது. ஓட்டுனர் தேவைப்படாத இந்த டிராக்டரை 'ரிமோட் கண்ட்ரோலா'க செயல்படும் 'டாப்லெட்' மூலம் கட்டுப்படுத்தலாம்.  நிலத்தை உழ வேண்டிய அன்று காலையில், உழ வேண்டிய நிலப்பரப்பு, தூரம், நேரம் ஆகியவற்றை   'டாப்லெட்'டில் பதிவு செய்துவிட்டால் 'டிராக்டர்' செயல்பட்டு வேலையை முடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.     

 'மகிந்திரா & மகிந்திரா'வின் சென்னை ஆராய்ச்சி மையத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிராக்டர், 2018 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வருகிறது. இதன் 'ஸ்டேரிங்' ( Steering) ஜிபிஎஸ் மூலம் நேர்கோட்டில் இயங்கும், நாம் குறிப்பிடும் தூரம் வந்ததும், அடுத்த கோட்டுக்கு வளைந்து மாறி உழவு செய்யும். பின்னால் உள்ள, இரும்புக் கலப்பைகளும் தானியங்கி முறையில் செயல்படும். வழியில் ஏதேனும் தடைகள் இருந்தால், தானே கண்டறிந்து வளையும். அவசரத்தின் பொழுது, டாப்லெட் மூலம் உடனே நிறுத்தி, என்ஜினை அமர்த்த முடியும். "விவசாயிகள் எளிதில் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இது, இந்திய விவசாயத்தில் ஒரு புரட்சியாக இருக்கும்", என்று பெருமிதம்  தெரிவித்த  'மகிந்திரா & மகிந்திரா'  நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பவன் கோயங்கா, இந்த டிராக்டர்களை அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய இருப்பதாகத் தெரிவித்தார். 

இந்தியாவில் விவசாயிகளுக்கு மிகப்பெரும் சவாலாகவும் சோதனையாகவும் இருப்பது நீரும், விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்காமலும், ஊதியம் அதிகரித்திருப்பதுமாகும். இருக்கும் அரசுகளுக்கு இதுகுறித்து சிந்திக்க நேரமில்லாததால்,  இந்த சவால்களை சந்திக்க மாற்று விவசாய முறைகளைப் பலரும் பரிந்துரைத்தும், பரிசோதித்தும் வருகின்றனர். மறுபுறம், மனம் துவளும் விவசாயிகள் மரணத்தையும் தழுவுகின்றனர். இந்த நிலையில், பல்வேறு நிறுவனங்களும் விவசாயத்தை, தானியங்கி மயமாக்கி எளிதாக்க பல புதிய உபகரணங்களை அறிமுகப்படுத்துகின்றன. 'கோல்ட்மேன் சாக்ஸ்' (Goldman  Sachs) என்ற வியாபார ஆலோசனை நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வரும்காலத்தில்   உலக அளவில்   விவசாய உபகரணங்களின்  சந்தை மதிப்பு 240 பில்லியன் டாலர்கள் (பதினைந்து லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்) இருக்கும் என்று கணித்தது. நிறுவனங்கள் விவசாயத்தையும் வியாபாராமாகத்தான் பார்ப்பார்கள். அரசாங்கங்களும் அந்த பார்வைக்கு செல்லாதவரை நாட்டிற்கு நல்லது.    

வசந்த்     

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :