Add1
logo
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி || ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு! || திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு || தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல் || காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்! || முன் நிபந்தனைகள் இன்றி வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை? - அமெரிக்கா அறிவிப்பு || கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா! || ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு! || வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி! || சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி || முதல் முறையாக மாவட்ட ஆட்சியரை சொந்த கிராமத்தில் பார்த்த மக்கள் || மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தோனி ‘லைக்’ செய்த ட்வீட்டால் சர்ச்சை! || ஆளுநரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, செப்டம்பர் 2017 (13:33 IST)
மாற்றம் செய்த நாள் :20, செப்டம்பர் 2017 (13:35 IST)


குஜராத்தில் பாஜகவை கலாய்த்து ட்ரெண்டான ‘வேடிக்கையான வளர்ச்சி’!

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், ஆளும் பாஜக அரசு மேற்கொண்டிருக்கும் ‘வேடிக்கையான வளர்ச்சி’ திட்டங்களை சமூக வலைதளங்களில் கலாய்க்கும் பதிவுகள் ட்ரெண்டாகியுள்ளன.குஜராத்தின் வளர்ச்சியை உற்றுநோக்கியபோது..!

குஜராத் மாடல் என்ற பெயருடன் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து பிரதமர் பதவியிலும் அமர்ந்தவர் மோடி. இந்த குஜராத் மாடல் என்ற விளம்பரம் கேலிக்கூத்தாகியிருப்பதாக நாடுமுழுவதும் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. குஜராத் சட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், ஆளும் பாஜக அரசு மேற்கொண்டிருக்கும் ‘வேடிக்கையான வளர்ச்சி’ திட்டங்களை சமூக வலைதளங்களில் கலாய்க்கும் பதிவுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

கடந்த இரண்டு வாரங்களாக ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பிரபலமான சமூக வலைதளங்களில் #vikas_gando_thayo_chhe - வேடிக்கையாகிப்போன வளர்ச்சி ஹேஸ்டேக் தாங்கிய பதிவுகள் ட்ரெண்டாகியுள்ளன. இந்தப்பதிவுகளில் கனமழையில் பள்ளமாகிப்போன சாலைகள், உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் பொய்யாகிப்போனது, நூறாண்டுகளைக் கடந்த பேருந்துகள், குப்பை குவியல்களாகக் கிடக்கும் மாநிலத்தின் முக்கிய வீதிகள், வெள்ளம் பாதித்த தெருக்கள் மற்றும் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தவர் போன்றவற்றின் புகைப்படங்களும், வீடியோக்களும் இடம்பெற்றிருந்தன. அத்தனையும் விகாஸ் - மேம்பாடு என்ற பெயருடன் பதிவிடப்பட்டவை.

இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் தரப்பு ஐடி விங்க், தொடர்ந்து இதுகுறித்த பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறது. இதுகுறித்து காங்கிரஸைச் சேர்ந்த சரல் பட்டேல், இது மிகப்பெரிய வெற்றிபெற்றிருக்கிறது. பாஜக ஆதரவாளர்களும் இதனை பகிர்வதுதான் வேடிக்கையான விஷயம் என தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், பெரும்பான்மையான இளைஞர்களை எளிதில் அடைந்துவிடும் இதுமாதிரியான பதிவுகளைக் கண்டு பாஜக தரப்பு கலங்கிப்போயுள்ளது.

- ச.ப.மதிவாணன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : rajan Country : Bahrain Date :9/20/2017 3:44:05 PM
பாஜகவை ஆளும் மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் விரட்ட வேண்டும். எதற்கெடுத்தாலும் அது காங்கிரஸ் கொண்டு வந்தது என்று கூறிக்கொண்டு அதன் பின்புறம் ஒளிந்துகொண்டு குளிர்காயும் பாஜக இந்த நாட்டிற்கு தேவையில்லை.