Add1
logo
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு! || கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் || இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல் || கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்! || வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்! || பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் || விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின் || பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு || ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்! || கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்! || மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன் || அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்? ||
சிறப்பு செய்திகள்
பேங்கிலிருந்து ஃபோனா?
 ................................................................
நேதாஜிக்கும், காந்திஜிக்கும் என்னதான் பிரச்சனை?
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு, சாமானியனுக்கு சறுக்கல் - கதறும் தமிழகம்
 ................................................................
பெண்கள் சக்தியை புறக்கணிக்கிறதா திமுக?
 ................................................................
அனுமன் பாலம் கட்டுவதை நம்புவோம்!
 ................................................................
பாஜகவுக்கு ஆதரவான பிரகாஷ்காரத் தீர்மானம்?
 ................................................................
"கீழடி நம் தாய்மடி" -சு.வெங்கடேசன்
 ................................................................
அவதூறு பரப்பக் கூடாது:
 ................................................................
42 பேர் கண்தானம், 35 பேர் உடல் உறுப்புதானம்!
 ................................................................
பஸ் கட்டண உயர்வா, கொள்ளையா?
 ................................................................
“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
 ................................................................
விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை!
 ................................................................
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, செப்டம்பர் 2017 (15:29 IST)
மாற்றம் செய்த நாள் :14, செப்டம்பர் 2017 (17:19 IST)பார்ப்பனரல்லாதோர் மத்தியில் நீதிக்கட்சி பிரபலமானால் பார்ப்பனர்கள் எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்? 

நீதிக்கட்சியின் வளர்ச்சி மட்டும் பார்ப்பனர்களை பதற்றப்படுத்தவில்லை. மாண்டேகு செம்ஸ்போர்டு கமிஷன் அறிக்கையும் அவர்களை பாடாய் படுத்தியது. ஆம், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டு இந்தியர்களும் ஆட்சி நடத்தும் வகையில் டொமினியன் சர்க்கார் எனப்படும் இரட்டை ஆட்சிமுறையை அமல்படுத்த அந்த அறிக்கை வகை செய்தது. 

முதல் உலகப்போரில் பிரிட்டனுக்கு இந்திய ராணுவ வீரர்கள் ஒத்துழைப்பு அளி்த்தால் சுயாட்சி உரிமை குறி்தது பரிசீலிக்கப்படும் என்று பிரிட்டன் வாக்குறுதி அளித்திருந்தது. அதன் அடிப்படையிலேயே மாண்டேகு செம்ஸ்போர்டு கமிஷன் உருவாக்கப்பட்டது. அந்தக்குழு அனைத்துத் தரப்பு இந்தியர்களிடமும் கருத்துக்களைக் கேட்டு பெற்றபிறகு இரட்டை ஆட்சி முறைக்கு ஒப்புதல் அளித்தது. 

ஆனால், அந்த அறிக்கையை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை. அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டில் காந்தி காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்றார். அவர் இந்தியர்களுக்கு சுயாட்சி உரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எனவே இரட்டை ஆட்சிமுறை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அறிவித்தார். 


இரட்டை ஆட்சிமுறை அறிவிக்கப்பட்ட அதே 1919 ஆம் ஆண்டுதான் தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதற்காக அதுவரை தான் வகித்த ஈரோடு நகராட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட அனைத்து பொதுப்பதவிகளையும் தூக்கி எறிந்துவிட்டு தன்னை முழுமையாக காங்கிரஸ் கட்சிக்கு ஒப்படைத்தார். 

காங்கிரஸ் அறிவித்த போராட்டங்களில் முழுமையாக பங்கேற்றார். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காங்கிரசுக்குள் வலியுறுத்தி வந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த ராஜாஜி உள்ளிட்ட பார்ப்பனர்கள் இந்தக் கோரிக்கையை அவ்வப்போது ஒதுக்கி வைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். 

இந்தச் சூழ்நிலையில்தான் 1920 ஆம் இரட்டை ஆட்சிமுறை அமலுக்கு வந்து முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

இரட்டை ஆட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டிருந்தன. சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரிட்டிஷ் ஆளுனரின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். 

இந்த ஆட்சி முறை அமல்படுத்தப்படுவதற்கு முன் ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக்கூடிய சட்டமன்றம்தான் இருந்தது. இரட்டை ஆட்சிமுறையில் அது விரிவுபடுத்த்தப்பட்டு சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டது. 

புதிய இரட்டை ஆட்சிமுறை அரசுக்கான தேர்தல் மதராஸ் பிரசிடென்சியில் 1920 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நீதிக்கட்சி போட்டியிட்டது. அன்னிபெசன்டின் ஹோம்ரூல் இயக்கமும் போட்டியிட்டது. 

தேர்தல் நடைபெற்ற 1920 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த மதராஸ் பிரசிடென்சி அல்லது சென்னை மாகாணம், தற்போதுள்ள தமிழ் நாடு, தெலங்கானா தவிர்த்த ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகத்தின் தெற்கு கனரா மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பாக இருந்தது. 


பிரிட்டிஷ் இந்திய அரசாங்கச் சட்டம், 1919 இன் படி, சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் ஒரு அவை மட்டும் இருந்தது. கவுன்சில் என்றழைக்கப்பட்ட அந்த அவையில் மொத்தம் 127 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள் தவிர ஆளுனரின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாகவே கருதப்பட்டனர். 127 உறுப்பினர்களில் 98 பேர் 61 தொகுதிகளில் இருந்து மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அதாவது, சில தொகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

இந்த 61 தொகுதிகளுக்குள் பிராமணர்கள், பிரமாணரல்லாத இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்த்தவர், ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், நிலப்பிரபுக்கள், பண்ணையார்கள், வர்த்தக குழுமங்கள் என பல்வேறு பிரிவினருக்கு வகுப்புவாரியாக இட ஒதுக்கீடு இருந்தது. அதாவது தேர்ந்தெடுக்கப்படும் 98 பேரில் இவர்கள் அனைவருக்கும் இடம் இருந்தது. 

127 இடங்களில் மீதமுள்ள 29 உறுப்பினர்கள் ஆளுனரால் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுள் 19 பேர் அரசாங்க ஊழியர்களாகவும், 5 பேர் தலித்துகளாகவும் இருந்தனர்வயது வந்தோர் அனைவரும் வாக்குரிமை என்ற நடைமுறை இல்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவர் கட்டியுள்ள சொத்து வரியைப் பொறுத்தே வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதாவது பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். 

இரட்டை ஆட்சி முறையின் கீழ் முதல் தேர்தல் நவம்பர் 1920 ஆம் ஆண்டு நடத்தப் பட்டது. நான்கு கோடி மக்கள்தொகை கொண்ட சென்னை மாகாணத்தில் 12 லட்சத்து 48 ஆயிரத்து 156 பேர் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தனர். அவர்களில் 3,03,558 பேர் முதல் தேர்தலில் வாக்களித்தனர். 

மாகாணம் முழுவதும் சராசரியாக 24.9% வாக்குகள் பதிவாகின. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 52% வாக்குகள் பதிவாகின. இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்த நிலையில் காங்கிரஸ் தேர்தலில் பங்கேற்கவில்லை. எனவே, நீதிக்கட்சி 63 இடங்களுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சுயேச்சைகள் 18 பேர் வெற்றி பெற்றனர். அரசு எதிர்ப்பாளர்களாக 17 பேர் தேர்வு பெற்றனர். பிரிட்டிஷ் கவர்னரால் நியமிக்கப்பட்டவர்கள் 29 பேர். நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் 18 பேர் நீதிக்கட்சிக்கு ஆதரவளித்தனர். எனவே நீதிக்கட்சியின் பலம் 81 ஆகியது. 

இதையடுத்து, நீதிக்கட்சியின் தலைவர் தியாகராயரை அரசு அமைக்கும்படி பிரிட்டிஷ் கவர்னர் வெல்லிங்டன் பிரபு அழைப்பு விடுத்தார். அவரோ, தனக்குப் பதிலாக .சுப்பராயலு ரெட்டியாரை முதல்வராக நியமிக்கும்படி பரிந்துரை செய்தார். அவரிடமே கல்வி பொதுப்பணிகள், சுங்கவரி, பதிவு ஆகிய துறைகளையும் ஏற்றுக்கொண்டார். 

பனகல் அரசர் ராமராய நிங்கருக்கு சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித் துறைகளும், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவுக்கு வளர்ச்சித்துறையும் ஒதுக்கப்பட்டது. புதிய அமைச்சரவை 1920 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி பதவியேற்றது. பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி சட்டமன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். எட்வின் பெரியநாயகம், ஆற்காடு ராமசாமி முதலியார், பி. சுப்பராயன் ஆகியோர் பேரவைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். 


பதவியேற்ற சிறிது காலத்திற்குள் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் முதல்வர் சுப்பராயலு ரெட்டியார் பதவி விலகினார். அவருக்கு பதிலாக 1921 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி பனகல் அரசர் முதல்வரானார். ஒரிசாவைச் சேர்ந்த . பி. பாட்ரோவுக்கு கல்வித்துறை வழங்கப்பட்டது. 

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்களுக்கு முதன்முறையாக பெருமளவு அதிகாரம் வழங்கப்பட்டது. 1916 ஆம் ஆண்டு பிராமணரல்லாதோர் நலனுக்காக தொடங்கப்பட்ட நீதிக்கட்சி 1920 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது 

ஆட்சிக்கு வந்த சமயத்திலேயே சென்னையில் மில் தொழிலாளர் போராட்டம் தீவிரமடைந்து நீடித்தது. இந்த போராட்டத்தை ஒடுக்க வெலிங்டன் பிரபு கடுமையான நடவடிக்கை எடுத்தார். இந்த போராட்டம் காரணமாக 6 ஏழைத்தொழிலாளர் உயிர் துறந்தனர். இதையடுத்து, தொழிலாளர் இயக்கத்தை தொடக்கத்திலேயே ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதன் தலைவர்களான திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், பி.பி.வாடியா, வி.சக்கரைச் செட்டியார், .எல்.அய்யர், கோடம்பாக்கம் நடேச நாயக்கர் ஆகிய ஐவரை நாடுகடத்த உத்தரவிட்டார். 


இந்த உத்தரவால் தொழிலாளர் கிளர்ச்சி அதிகமாகியது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கண்டனக் குரல் எழும்பியது. கவர்னரின் செயல் தியாகராயரை ஆத்திரமூட்டியது. நீதிக்கட்சி அமைச்சரவையைக் கூட்டி, தலைவர்களின் நாடுகடத்தல் உத்தரவை திரும்பப் பெறத் தவறினால் அமைச்சரவை ராஜினாமா செய்வதோடு அரசாங்கத்தோடு ஒத்துழைப்பதில்லை என்ற முடிவை அறிவித்தார்.

- ஆதனூர் சோழன் 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Natarajan Country : Australia Date :9/20/2017 7:52:45 AM
சுதந்திரம் ஏன் வேண்டாம் ? நாடு குள்ளநரி தந்திரர்களிடம் போய் சேரும் ஆங்கிலேயர்களை விட மோசமாகி விடும் என்ற எண்ணத்தினால் தான்
Name : Deepak Date :9/15/2017 2:06:30 AM
Such a wonderfull article. THANKS FOR YOUR relentless work.please continue the article after 1947 india
Name : S.Govinarajan Date :9/14/2017 8:36:18 PM
இவர் சரித்திர புத்தகமா எழுதுகிறார்?.சுதந்திரத்திற்குப் பாடுபட்ட காந்தி, ராஜாஜியை விட சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னவர்களுக்கு வக்காலத்து வாங்க ஒரு தொடர் கட்டுரை..