Add1
logo
மருத்துவமனையில் ஜெ.வை பார்த்தோம் –அமைச்சர் பேட்டியால் புதிய குழப்பம் || ஜெ.வை பார்த்ததாக பொய் கூறினோம் –மேடையில் மேலும் ஒரு அமைச்சர் தகவல் || ட்ராவல்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 12 ரவுடிகள் கைது || இலங்கை தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்: ம.தி.மு.க. அறிவிப்பு || வரிசை கட்டி விழுகிறது பேரிடி! அதில் முதல்வரின் செவிடே தவிடுபொடியானதுதான் மிச்சம்! வேல்முருகன் || ஹனிபிரீத் சிங்கை கைதுசெய்ய முடியாமல் திணறும் ஹரியானா போலீஸ்! || விவசாய நிலத்தில் பிடிப்பட்ட மலைப்பாம்பு || பேருந்து நிலையத்தில் அனாதையாக கிடந்த சிலைகள் || போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி வரும் சென்னை: ராமதாஸ் || ரூ.77 கோடி மின்கட்டணம் கேட்டு ரசீது - அதிர்ச்சியில் விவசாயி! || ஆறுமுகசாமியின் வாழ்க்கை குறிப்பு || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || 14ஆம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு கால வீரக்கல் ஒன்று கண்டெடுப்பு ||
முக்கிய செய்திகள்
மருத்துவமனையில் ஜெ.வை பார்த்தோம் –அமைச்சர் பேட்டியால் புதிய குழப்பம்
 ................................................................
ஜெ.வை பார்த்ததாக பொய் கூறினோம் –மேடையில் மேலும் ஒரு அமைச்சர் தகவல்
 ................................................................
வரிசை கட்டி விழுகிறது பேரிடி! அதில் முதல்வரின் செவிடே தவிடுபொடியானதுதான் மிச்சம்! வேல்முருகன்
 ................................................................
போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி வரும் சென்னை: ராமதாஸ்
 ................................................................
ஆறுமுகசாமியின் வாழ்க்கை குறிப்பு
 ................................................................
வைகோ மீதான தாக்குதல் முயற்சி கவலையளிக்கிறது: ஸ்டாலின்
 ................................................................
இன்றைய(25.9.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தகராறு செய்யும் சிங்களர்கள்! வைகோவின் பாதுகாப்பு குறித்து ஈழத்தமிழர்கள் கவலை!
 ................................................................
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் வைகோ ஆற்றிய இரண்டு உரைகள்!
 ................................................................
அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு! புதிய திட்டம் தொடக்கம்
 ................................................................
ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்களை நீக்க கோரி திமுக வழக்கு
 ................................................................
ஜெ. கைநாட்டு உண்மையா? அன்றே அலசிய நக்கீரன்!
 ................................................................
ஜெ., மரணம் - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்!
 ................................................................
தமிழர்களின் தன்மானத்தையே அடகு வைத்த OPS-EPS: பொதுமக்கள் கருத்து
 ................................................................
காவி மயமாக்குவதில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துக: கி.வீரமணி
 ................................................................
ஜெ., சிகிச்சையின் போது நைட்டி அணிந்திருந்ததால் வீடியோவை வெளியிடவில்லை: தினகரன்
 ................................................................
ஜெ., மரணம் குறித்த விசாரணைக்கு விரைவில் நீதிபதி நியமனம் செய்யப்படுவார்: ஜெயக்குமார்
 ................................................................
கீழடி அகழாய்வுப் பணிகளைச் சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகள்: ஸ்டாலின் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, செப்டம்பர் 2017 (13:51 IST)
மாற்றம் செய்த நாள் :14, செப்டம்பர் 2017 (13:52 IST)


உங்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவீர்களா? உயர்நீதிமன்றம் கேள்வி?

உங்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவீர்களா? என போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டத்தால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, இழப்பீடு வழங்க வேண்டியது வரும் என்றும், அதற்கு நிவாரணம் கேட்டு, நீதிமன்றத்திற்கு வர முடியாது என்றும் கண்டித்துள்ளது. மேலும், போராட்டம் தொடர்பாக, 12 கேள்விகள் எழுப்பி, அதற்கு விளக்கம் தரவும், அரசுக்கு உத்தரவிட்டது.

இதற்கு பள்ளி கல்வி இயக்குநரகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது. 33,487 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்த நாட்கள் அங்கீகரிக்கப்படாத விடுமுறை நாட்களாக கருதப்படும். 43,508 ஆசிரியர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டது.

இதன் பின்னர் நீதிபதி கிருபாகரன் கூறியதாவது:

உங்களது குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவீர்களா? அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு நீதிமன்றம் எதிரானது அல்ல. போராட்டம் சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் போராட்டத்தை தான் கவனத்தில் கொள்கிறேன். அரசு ஊழியர்கள் பற்றி நான் கேட்கவில்லை. ஆரம்பத்தில் அரசியல் ரீதியாக இருந்த போராட்டம், சமூக, மதம் மற்றும் மொழிவாரியாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : prema Country : Australia Date :9/14/2017 9:38:29 PM
ஐயா நீதிமான் கிருபாகரன் , உங்களுக்கு உங்கள் ஒய்வு காலத்திற்கு பிறகு பென்ஷன் இல்லை என்றால் என்ன செய்வீர்கள் ? (நேர்மையான நீதி பதியாக இருந்தால் உங்களுக்கு இந்த கஷ்டம் புரியும்). அதை விடுங்கள் புதிய ஒய்வு திட்டத்தில் எங்கள் உழைப்பு பணத்தை இந்த அரசு ஊதாரித்தனம் செய்வதை நீங்கள் கேட்கமாட்டிர்களா ? எத்தனை பேர் ஒய்வு பெற்ற பிறகு தங்கள் பணத்தை பெறமுடியாமல் தவிக்கிறார்கள் ? அரசாங்கம் எங்கள் பணத்தை ஏமாற்றினால் , நீங்கள் கேட்கமாட்டிர்களா? பணத்தை என்ன செய்தார்கள் என்பதை கூட வாய் திறக்காத இந்த அரசை நங்கள் எப்படித்தான் கேட்பது ? நீங்கள் உண்மையில் மனசாட்சியுள்ள நீதிபதிதான் என்பதை இந்த ஏமாற்று அரசாங்கத்தை கேள்வி கேளுங்கள்