Add1
logo
மருத்துவமனையில் ஜெ.வை பார்த்தோம் –அமைச்சர் பேட்டியால் புதிய குழப்பம் || ஜெ.வை பார்த்ததாக பொய் கூறினோம் –மேடையில் மேலும் ஒரு அமைச்சர் தகவல் || ட்ராவல்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 12 ரவுடிகள் கைது || இலங்கை தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்: ம.தி.மு.க. அறிவிப்பு || வரிசை கட்டி விழுகிறது பேரிடி! அதில் முதல்வரின் செவிடே தவிடுபொடியானதுதான் மிச்சம்! வேல்முருகன் || ஹனிபிரீத் சிங்கை கைதுசெய்ய முடியாமல் திணறும் ஹரியானா போலீஸ்! || விவசாய நிலத்தில் பிடிப்பட்ட மலைப்பாம்பு || பேருந்து நிலையத்தில் அனாதையாக கிடந்த சிலைகள் || போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி வரும் சென்னை: ராமதாஸ் || ரூ.77 கோடி மின்கட்டணம் கேட்டு ரசீது - அதிர்ச்சியில் விவசாயி! || ஆறுமுகசாமியின் வாழ்க்கை குறிப்பு || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || 14ஆம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு கால வீரக்கல் ஒன்று கண்டெடுப்பு ||
முக்கிய செய்திகள்
மருத்துவமனையில் ஜெ.வை பார்த்தோம் –அமைச்சர் பேட்டியால் புதிய குழப்பம்
 ................................................................
ஜெ.வை பார்த்ததாக பொய் கூறினோம் –மேடையில் மேலும் ஒரு அமைச்சர் தகவல்
 ................................................................
வரிசை கட்டி விழுகிறது பேரிடி! அதில் முதல்வரின் செவிடே தவிடுபொடியானதுதான் மிச்சம்! வேல்முருகன்
 ................................................................
போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி வரும் சென்னை: ராமதாஸ்
 ................................................................
ஆறுமுகசாமியின் வாழ்க்கை குறிப்பு
 ................................................................
வைகோ மீதான தாக்குதல் முயற்சி கவலையளிக்கிறது: ஸ்டாலின்
 ................................................................
இன்றைய(25.9.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தகராறு செய்யும் சிங்களர்கள்! வைகோவின் பாதுகாப்பு குறித்து ஈழத்தமிழர்கள் கவலை!
 ................................................................
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் வைகோ ஆற்றிய இரண்டு உரைகள்!
 ................................................................
அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு! புதிய திட்டம் தொடக்கம்
 ................................................................
ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்களை நீக்க கோரி திமுக வழக்கு
 ................................................................
ஜெ. கைநாட்டு உண்மையா? அன்றே அலசிய நக்கீரன்!
 ................................................................
ஜெ., மரணம் - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்!
 ................................................................
தமிழர்களின் தன்மானத்தையே அடகு வைத்த OPS-EPS: பொதுமக்கள் கருத்து
 ................................................................
காவி மயமாக்குவதில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துக: கி.வீரமணி
 ................................................................
ஜெ., சிகிச்சையின் போது நைட்டி அணிந்திருந்ததால் வீடியோவை வெளியிடவில்லை: தினகரன்
 ................................................................
ஜெ., மரணம் குறித்த விசாரணைக்கு விரைவில் நீதிபதி நியமனம் செய்யப்படுவார்: ஜெயக்குமார்
 ................................................................
கீழடி அகழாய்வுப் பணிகளைச் சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகள்: ஸ்டாலின் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, செப்டம்பர் 2017 (12:40 IST)
மாற்றம் செய்த நாள் :14, செப்டம்பர் 2017 (15:48 IST)




"நான்தான் அடுத்த மதுரை ஆதீனம்' என கடந்த 2012ஆம் ஆண்டு சாமியார் நித்யானந்தா வருகை தந்ததையடுத்து இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட மதுரையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆதீனத்தையும் அதன் சொத்துகளையும் பறிக்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம்சாட்டி போராட்டத்தை மேற்கொண்டன.

இந்நிலையில், நமது நக்கீரனில் 2012 ஏப்ரல் 28 இதழில் ""மதுரை ஆதீனத்தின் புதிய நட்பு! சுழலும் விறுவிறு சர்ச்சைகள்'' என்ற தலைப்பில் உண்மை நிலையை விசாரித்து விரிவான செய்தி வெளியாகியிருந்தது.

நேரடியாக நக்கீரனிடம் மோத யோசித்த நித்தியின் ஆலோசனையின் பேரில் மதுரை ஆதீனம் தன்னைப் பற்றியும், மடத்தைப் பற்றியும் எதிர்காலத்தில் நக்கீரன் எந்த செய்தியையும் வெளியிடக்கூடாது என நிரந்தர உறுத்துக் கட்டளை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இடைக்காலத் தடையும் கோரியிருந்தார்.

மதுரை ஆதீனம் தாக்கல் செய்த வழக்கு நிலைக்கத்தக்கதல்ல, சட்டப்படி தவறானது. கீழ்க்குறிப்பிடும் காரணங்களின் அடிப்படையில் அந்த வழக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 227-ன் கீழ் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமென்று நக்கீரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு சிவில் ரிவிஷன் மனு தாக்கல் செய்தது.

1. பத்திரிகை செய்திகளுக்கு எதிராக ஒட்டுமொத்த தடை (Blanket Injunction) கோர முடியாது.

2. செய்தி அவதூறானது என்று விளம்புகை (Declaration) கோராமல் அவதூறு வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

3. பத்திரிகைக்கு எதிராக உறுத்துக் கட்டளையோ, நிரந்தர தடையோ கோருவது இந்திய அரசியலமைப்புப் பிரிவு 19(1)(a)ன் படி பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது.

4. மதுரை ஆதீனமும், மடமும் பொதுநபர்கள்(Public Figure). எனவே அவர்களுடைய நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் செய்தி வெளியிட பத்திரிகைகளுக்கு உரிமை உள்ளது.



இந்த வழக்கில் நக்கீரன் சார்பாக வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள், எல்.சிவகுமார், வி.வர்கீஸ் அமல்ராஜா ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இங்கிலாந்து நாட்டின் அவதூறு சட்டத்தையும் பல்வேறு உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி, ""அரசு அலுவல் தொடர்பான செய்திகளுக்கு அரசும், அரசு அதிகாரிகளும், அரசு நிறுவனங்களும் பத்திரிகைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர முடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.  அவதூறு வழக்கு தாக்கல் செய்யும் வாதிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பத்திரிகைகளுக்கும் பல எதிர்வாத உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. செய்தி அவதூறு என முடிவு செய்யும் முன்பு இவை அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, அவதூறு வழக்கு தாக்கல் செய்யும் வாதி அந்த வழக்கில் முதல் பரிகாரமாக "டிக்ளரேஷன்' (Declaration) கோர வேண்டும். அதுபோன்று சம்பந்தப்பட்ட செய்தி மறுபிரசுரம் செய்யக்கூடாது என இடைக்காலத்தடை கோர முடியுமே தவிர, தன்னைப் பற்றி எந்த செய்தியும் வெளியிடக்கூடாது என்று ஒட்டுமொத்த உறுத்துக் கட்டளை கோர முடியாது.

மதுரை ஆதீனம் தொடர்ந்த அவதூறு வழக்கில் "டிக்ளரேஷன்' (Declaration) கேட்கப்படாததாலும், ஒட்டுமொத்த (Blanket Injunction) நிரந்தர உறுத்துக் கட்டளை கேட்பதாலும் இந்த வழக்கு சட்டப்பூர்வமாக தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இந்த வழக்கு சட்டப்பூர்வமாக ஏற்கத்தக்கதல்ல. ஆகவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும்'' என்று அழுத்தமாக வாதிட்டனர்.

இந்த வழக்கில் 12-09-2017 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு எம்.வி.முரளிதரன்  மதுரை ஆதீனம் நக்கீரனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என்று அளித்த தீர்ப்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யும் போது முதல் பரிகாரமாக ""விளம்புகை'' கோர வேண்டும். அவ்வாறு டிக்ளரேஷன் கோராத வழக்குகள் நிலைக்கத்தக்கதல்ல என அவதூறு சட்டத்தின் மற்றொரு பரிமாணத்தையும் தீர்ப்பில் வழங்கியுள்ளார்.

இந்த தீர்ப்பின் மூலம் உண்மையான செய்திகளுக்குக் கூட பத்திரிகைக்கெதிராக தேவையின்றி வழக்குகள் தாக்கல் செய்வது இனிமேல் சாத்தியமல்ல. அதுபோன்று நிரந்தர ஒட்டுமொத்த தடை கோரி நீதிமன்ற மூலம் தன்னைப் பற்றி எந்த செய்தியும் வராதவாறு தடுத்து நிறுத்த முயல்வது இனிமேல் இயலாது. பத்திரிகை சுதந்திரத்தின் பாதுகாப்பு அரண் பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. நக்கீரனின் நீண்டகால சட்டக்கனவு நிறைவேறியுள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : subramanian Country : Indonesia Date :9/14/2017 2:50:13 PM
வாழ்த்துக்கள்! ஆனால் நக்கீரனின் போர்க்குணத்திற்கும், சமுதாய அக்கறைக்கும் அதன் நம்பகத்தன்மைக்கும் இதழியல் நெறிமுறைக்கும் இந்த வெற்றி மிகச் சாதாரணமானது. வழக்கறிஞர் அணிக்குப் பாராட்டுக்கள்..
Name : sundarapandian Country : United Arab Emirates Date :9/14/2017 1:14:29 PM
வாழ்த்துக்கள் சார்
Name : raja Date :9/14/2017 1:00:10 PM
வாழ்த்துக்கள் கோடி