Add1
logo
தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? || மெரினாவில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் அமைக்க பொன்ராஜ் வலியுறுத்தல் (படங்கள்) || இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை! சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டுவேன் - கருணாஸ் || பறக்கும் இரயில் தண்டவாளத்தில் சிக்கிய எருமைகளை மீட்டுக்கும் பணியில் 'புளு கிராஸ்' (படங்கள்) || தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படிப் பேசினேன்! - தினகரன் ஆதரவாளர் ராஜசேகர் விளக்கம் || ‘கை, கழுத்தில் சிவப்பு தடங்கள்’ - சரத்பிரபுவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்! || லஞ்சம் வாங்கிய தஞ்சை ஆணையர் கைது! - பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள் ||
சிறப்பு செய்திகள்
“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
 ................................................................
விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை!
 ................................................................
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
நமக்குப் பொங்கல்... ஆந்திரா, கர்நாடகாவில் என்ன?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, செப்டம்பர் 2017 (18:32 IST)
மாற்றம் செய்த நாள் :14, செப்டம்பர் 2017 (14:3 IST)
கடந்த ஆண்டு உயர்கல்வி நிலையங்களில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியும் அதற்கு ஆதரவாக மத்திய பாஜக அரசும் நடத்திய அட்டூழியத்திற்கு அந்த கல்வி நிலையங்களின் மாணவர்களே சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க பொறுப்புகள் அனைத்தையும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் கைப்பற்றி சாதனை நிகழ்த்தியுள்ளன.

தலைவராக கீதா குமாரி 464 வாக்குகள் வித்தியாசத்திலும், துணைத்தலைவராக சிமோன் ஸோயா கான் 848 வாக்குகள் வித்தியாசத்திலும், பொதுச்செயலாளராக துக்கிரலா ஸ்ரீகிருஷ்ணா 1107 வாக்குகள் வித்தியாசத்திலும், இணைச்செயலாளராக சுபான்ஷு சிங் 835 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதுபோலவே, டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தலில் கடந்த ஆண்டு நான்கு பொறுப்புகளையும் கைப்பற்றிய ஏபிவிபி இந்த ஆண்டு, தலைவர் மற்றும் துணைத்தலைவர் பொறுப்புகளை காங்கிரசிடம் இழந்திருக்கிறது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பாரம்பரியமான பெருமை மிக்கது. இடதுசாரி சிந்தனைகளின் அடித்தளமாக கருதப்பட்ட, மிகப்பெரிய கல்வியாளர்களை உருவாக்கியது இந்தப் பல்கலைக்கழகம்.

உயர்கல்விக்கு பெருமைமிகு மையமாக உலகளாவிய அங்கீகாரம் பெற்ற இந்த பல்கலைக்கழகத்துக்கு வரலாற்றில் துடிப்பான இடம் உண்டு. ஜேஎன்யு கலாச்சாரம் என்பது கல்வி நிலையங்களில் மதிப்பு மிக்கது. சுதந்திரமான விவாதங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் புகழ்பெற்றது.

இந்த பல்கலைக்கழகத்தின் தனித்தன்மையை மாற்றி, அதைக் கைப்பற்ற மோடி அரசு கடந்த ஆண்டு அவமானகரமான பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது.

மாணவர்களின் சுதந்திரமான நடவடிக்கைகளை பறிக்கும் வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய துணைவேந்தரை நியமித்தது. அதைத் தொடர்ந்து வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தேசவிரோத குற்றச்சாட்டில் மாணவர்சங்கத் தலைவரான கன்னையா குமார் கைது செய்யப்பட்டார். மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க கல்லூரி வளாகத்தில் பீரங்கி நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு 83 சதவீதம் அளவுக்கு எம்பில், பிஎச்டி மாணவர் சேர்க்கை குறைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு உதவியும் குறைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை அச்சுறுத்தி ஏபிவிபிக்கு ஆதரவாக திருப்பவே இந்த மிரட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், எல்லாவற்றையும் மீறி இடதுசாரி மாணவர்கள் அனைத்துப் பொறுப்புகளையும் கைப்பற்றியுள்ளனர்.

ஏபிவிபியை மூன்றாவது இடத்துக்கு தள்ளியிருக்க வேண்டிய வாய்ப்பு, பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஏற்படுத்தியுள்ள பிர்ஸா அம்பேத்கர் பூலே மாணவர் சங்கம் சார்பில் போட்டியிட்ட மாணவர்களும் நல்ல வாக்குகளை பெற்றுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் இடதுசாரி மாணவர்கள் தாழ்த்தப்பட்ட மாணவர் அமைப்புடன் இணக்கமாகி பல்கலைக்கழக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மார்க்ஸ், அம்பேத்கர் சிந்தனைகளுடன் காந்திய சிந்தனைகளையும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். அப்போதுதான் சாவர்க்கர்-கோல்வால்கரின் இந்துத்துவ சிந்தனையை முறியடிக்க முடியும் என்பதே உண்மை.

இதைத்தான் டெல்லி பல்கலைக்கழக தேர்தல் முடிவுகளும் எதிரொலிக்கின்றன. கடந்த ஆண்டு டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் அனைத்து பொறுப்புகளையும் கைப்பற்றிய ஏபிவிபி இந்த ஆண்டு இரண்டு முக்கிய பொறுப்புகளை பறிகொடுத்திருக்கிறது.உயர்கல்வி நிலையங்களில் தனது காவிக்கொள்கையை திணிக்க முயன்ற பாஜக அரசு படுமோசமாக தோல்வி அடைந்திருப்பது நல்ல அறிகுறி என்றே மதசார்பற்றோர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

-ஆதனூர் சோழன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : Kannan Country : India Date :9/15/2017 12:44:51 PM
இப்படி சின்ன சின்ன வெற்றிகளும் நமது போராளீசுகளுக்கு கிட்டவில்லையெனில், இங்கே பல பேருக்கும் நெஞ்சு வெடித்து விடும்..
Name : P. Ramesh Country : Australia Date :9/14/2017 12:24:03 PM
ஏவிபி எங்கு உள்ளதோ அங்கு கலகம் நடக்கும் .இந்த அமைப்பின் சமீபகால செயல்பாடுகள் சர்ச்சை உடையதாகவே உள்ளது. இவ்வமைப்பிற்கு தடை விதிப்பதின் மூலம் உயர்கல்வி நிறுவங்களின் கண்ணியம் காக்கபடும் இல்லையேல் காவி தீவிரவாதம் கல்வி நிறுவனங்களை அளிக்கும் ..
Name : subramanian Country : Indonesia Date :9/14/2017 10:24:40 AM
தொட்டதுக்கெல்லாம் சொல்றதுக்கெல்லாம் தகுதில்லையின்னா யாரு தகுதின்னு சொல்லுங்க நைனா! அவுங்களை விட்டு சொல்லுறோம். அவ்வளவுதானே!
Name : gowdam Date :9/13/2017 11:34:45 PM
மீட்டெடுத்த இடதுசாரிகளுக்கு வாழ்த்துக்கள்.
Name : S.Govinarajan Date :9/13/2017 8:02:24 PM
காவிக்கொள்கை மோசம் என்றால் காம்ரேடு கொள்கை உயர்ந்ததா?.ஒரு இனத்தின் பிரதிநிதியாக பேசும் ஆதனூறார் மத சார்பின்மை பற்றி வாய் கிழிய பேசுகிறார். கன்னையா குமார் ஒன்றும் தேச பக்தரல்ல மாணவர்கள் அரசியலில் ஈடுபட எந்த கல்வியாளர்கள் ஊக்கு வைக்கிறார்கள்? மாணவர்களை கலவரத்திற்கு தூண்டுவதே சிவப்பு சட்டைகள்தான். காவிகள் பற்றி பேச காலிகளுக்கு தகுதி இல்லை..