Add1
logo
ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம் || டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு || இன்றைய(19.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || ஐ.எஸ்.எல். கால்பந்து - சென்னை அணி தோல்வி || பேரறிவாளன் விடுதலையில் கே.டி.தாமஸ் வேண்டுகோளை சோனியாகாந்தி பரிசீலிக்க வேண்டும்:திருமாவளவன் || பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன் || தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார் || மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு! || தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா! ||
தமிழகம்
கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம்
 ................................................................
டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன்
 ................................................................
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார்
 ................................................................
மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு!
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!
 ................................................................
நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன்
 ................................................................
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, செப்டம்பர் 2017 (16:25 IST)
மாற்றம் செய்த நாள் :13, செப்டம்பர் 2017 (16:26 IST)

கோவை: பயிற்சி பெற்று வந்த ஹரியானா சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை

கோவை துடியலூரை அடுத்த குருடம்பாளையம் பகுதியில் உள்ள செயல்பட்டு வரும் சி.ஆர்.பி.எப். பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்த ஹரியான மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் என்ற வீரர் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை, படிக்க முடியவில்லை என கடிதம் எழுதி வைத்துக் விட்டு அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூரை அடுத்த குருடம்பாளையம் பகுதியில் உள்ளது சி.ஆர்.பி.எப். எனும் மத்திய ரிசர்வ் போலிஸ் படையின் பயிற்சி மையம். இங்கு நாடு முழுவதிலும் இருந்து சி.ஆர்.பி.எப். படைப்பிரிவில் பல்வேறு பணிகளுக்கு தேர்தெடுக்கப்படும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு துப்பாக்கி சுடுதல், தற்காப்பு பயிற்சி, போர்க்கால பயிற்சி, பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பாதுகாப்பு பணிகளுக்கு பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இன்று அதிகாலை வழக்கம்போல் பயிற்சிக்காக அனைத்து வீர்ர்களுக்கு மைதானத்திற்கு வந்தபோது கடந்த ஒரு ஆண்டாக 32 பெட்டாலியன் படைப்பிரிவில் எஸ்.ஐ. ரேங்கில் பயிற்சி மேற்கொண்டு வந்த ஹரியான மாநிலம் ரீவாரி மாவட்ட்த்தைச் சேர்ந்த சந்தீப் என்ற வீரர் வரவில்லை. இதையடுத்து  பயிற்சி மையத்தில் பல்வேறு இடங்களில் தேடியபோது சமையல் அறையின் அருகில் இருந்த ஒரு மரத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது அறையில் சோதனையிட்டபோது அங்கு கைப்பற்றப்பட்ட டைரியில் தன்னால் இங்கு வழங்கப்படும் பயிற்சியை செய்யமுடியவில்லை எனவும், படிப்பது மனதில் ஏறுவதில்லை எனவும், பார்வை குறைபாடு உள்ளதாகவும், மிகவும் கடினமாக இருப்பதால் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக எழுதி வைத்துள்ளார். 

இதையடுத்து துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சந்தீப்பின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வருகின்ற 26 ஆம் தேதி பயிற்சி முடித்து பணியில் சேர இருந்த நிலையில் சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருள்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :