Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || நித்தியானந்தாவுக்கு இடைக்கால தடை || இன்றைய(13.12.2017) டாப்-10 நிகழ்வுகள்! || விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக செந்தில்பாலாஜிக்கு உத்தரவு || நடிகை ராணி பத்மினி கொலை வழக்கு; காவலாளி லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்ய உத்தரவு || ராகுலுக்கு தேர்தல் ஆணையம் சம்மன் || இந்திய அணி அபார வெற்றி || மேளம் அடித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் மதுசூதனன் (படங்கள்) || ஆர்.கே.நகருக்கு புதிய இணையதளம் || திருவாரூரில் காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் || பணப்பட்டுவாடா: அதிமுக மந்திரி தங்கியிருந்த மண்டபத்தை முற்றுகையிட்ட திமுகவினர் (படங்கள்) || பாக். தூதரை 20 முறை ரகசியமாக சந்தித்தேன்! - அத்வானி || குரூப்-4 தேர்வு கட்டணம் செலுத்த 2 நாள் அவகாசம் ||
முக்கிய செய்திகள்
இன்றைய(13.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
பாக். தூதரை 20 முறை ரகசியமாக சந்தித்தேன்! - அத்வானி
 ................................................................
பள்ளிக்கு நிலத்தை தானம் வழங்கிய இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி (EXCLUSIVE)
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? பேராசிரியர் ராஜநாயகம் சர்வே முடிவுகள்!
 ................................................................
திருப்பதிக்கு திடீரென கிளம்பிய தினகரன்!
 ................................................................
தாய் கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: நீதிமன்றத்தில் தஷ்வந்த்
 ................................................................
எங்களுக்கு மோடியும் வேண்டாம், ராகுல்காந்தியும் வேண்டாம்! - அன்னா ஹசாரே அதிரடி
 ................................................................
விவசாய நிலங்களை பறிக்க ஆட்களை வைத்து விவசாயிகளை தாக்கும் தனியார் நிறுவனம்!
 ................................................................
ஆர்.கே.நகரில் பெண்களுக்கு குக்கர் சப்ளை - விரட்டியடித்த போலீஸ் (படங்கள்)
 ................................................................
கோர்ட்டில் ஆஜராக வந்த தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல்
 ................................................................
மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை வருமா?
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி நாளை குமரி வருகை!
 ................................................................
சமஸ்கிருத கல்லூரியில் ஒரே ஒரு மாணவனும், பிரின்சிபாலும்!
 ................................................................
சின்னம் பெற லஞ்சம்: டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
 ................................................................
ராஜஸ்தானில் சென்னை காவல் ஆய்வாளர் சுட்டுக்கொலை! தீரன் திரைப்பட பாணியில் கொள்ளையர்கள் அட்டூழியம்!
 ................................................................
இன்றைய(12.12.2017) டாப்-10 நிகழ்வுகள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஆகஸ்ட் 2017 (23:8 IST)
மாற்றம் செய்த நாள் :14, ஆகஸ்ட் 2017 (0:3 IST)

ஓஎன்ஜிசி வெளியேறாவிட்டால் எந்திரங்கள் அடித்து உடைக்கப்படும்: வைகோ எச்சரிக்கை..!
 
தமிழகத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேறாவிட்டால், அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான எந்திரங்களை அடித்து நொறுக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

கடந்த மாதம் இறுதியில் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தீ பிடித்தது. இதனால் பீதி அடைந்த கிராம மக்கள் ஓஎன்ஜிசியை வெளியேற்றக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 இந்த போராட்டத்தை ஒட்டி பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டு விட்டனர்.

இந்நிலையில் போராட்டத்தை யாரேனும் தூண்டிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.

மயிலாடுதுறை குத்தாலம் அருகே உள்ள மாதிரிமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் பொதித்திருந்த எண்ணெய் குழாய் 4வது முறையாக உடைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் கசிவை கண்ட மக்கள் பீதி அடைந்துள்ள நிலையில், அந்த பகுதியை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கதிராமங்கலம் மக்களை யாரோ தூண்டிவிடுவதாக ஓஎன்ஜிசி அதிகாரிகள் கூறுகின்றனர். ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலத்தில் போராடுமாறு பொதுமக்களை நான் தான் தூண்டிவிடுகிறேன். தொடர்ந்து ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்களையும், இளைஞர்களையும் தூண்டிவிட இருக்கிறேன். முடிந்தால் என் மீது ஓஎன்ஜிசி வழக்கு தொடரட்டும்.

கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப்பட்டது போல் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்குச் சொந்தமான இயந்திரங்களை அடித்து நொறுக்க இளைஞர்களை திரட்ட இருக்கிறேன்.

ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்களை திரட்டும் வரை அங்கேயே முகாமிடப் போகிறேன் என கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : arabuthamilan Country : Bahrain Date :8/14/2017 10:20:32 AM
எதையுமே சொல்லுவது எளிது. செயலில் காட்டுங்கள்.தலைவா.