Add1
logo
மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் ட்ரம்ப் மீதான பாலியல் புகார்கள்! || பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்! || தாய் கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: நீதிமன்றத்தில் தஷ்வந்த் || ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! || தனியார் பள்ளி பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து || தோனியிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்ற ஹர்தீக் பாண்டியா! || எங்களுக்கு மோடியும் வேண்டாம், ராகுல்காந்தியும் வேண்டாம்! - அன்னா ஹசாரே அதிரடி || விடிய விடிய ஊரை சுற்றி வனத்துறையினரை தினற வைத்த 3 யானைகள்! || ஜெ., மரணம்: விசாரணை ஆணையத்தில் தீபா ஆஜர்! || விவசாய நிலங்களை பறிக்க ஆட்களை வைத்து விவசாயிகளை தாக்கும் தனியார் நிறுவனம்! || ஆர்.கே.நகரில் பெண்களுக்கு குக்கர் சப்ளை - விரட்டியடித்த போலீஸ் (படங்கள்) || குஜராத்: முந்தைய வாக்குகளை நீக்காமலேயே நடைபெற்ற வாக்குப்பதிவு! || கோர்ட்டில் ஆஜராக வந்த தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல் ||
தமிழகம்
பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!
 ................................................................
ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
 ................................................................
தனியார் பள்ளி பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து
 ................................................................
விடிய விடிய ஊரை சுற்றி வனத்துறையினரை தினற வைத்த 3 யானைகள்!
 ................................................................
ஜெ., மரணம்: விசாரணை ஆணையத்தில் தீபா ஆஜர்!
 ................................................................
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
 ................................................................
பெரியார் பல்கலை. துணைவேந்தர் தேர்வில் முறைகேடுகள்: தேர்வுக் குழுவுக்கு அன்புமணி கண்டனம்
 ................................................................
மருத்துவ மாணவியுடன் தூக்கில் தொங்கிய காதலன் சாவு: மாணவிக்கு தீவிர சிகிச்சை
 ................................................................
திருச்சியில் திறந்து கிடக்கும் 137 கழிவறைகள் – தூய்மை நகரம்?
 ................................................................
காணாமல் போன நாகை மீனவர்கள் குறித்து நடவடிக்கை! குமரி கலெக்டர் அலுவலகத்தில் தமிமுன் அன்சாரி மனு!
 ................................................................
ராகுல் காந்திக்கு மனிதநேய ஜனநாயக கட்சி வாழ்த்து!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நீதிபதி வீட்டில் வேலை பார்த்த பெண் உதவியாளருக்கு தோசை கரண்டியால் சூடு!
 ................................................................
ஆணவக் கொலைக்கு முதல் முறையாக தூக்கு தண்டனை தீர்ப்பு! ஹரிபரந்தாமன் வியப்பு
 ................................................................
டி.டி.வி. தினகரனுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு!
 ................................................................
மெரினா! உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
எம்.ஜி.ஆர். காதல் டூயட்! ஆர்.கே.நகரில் அசத்தல்! (படங்கள்)
 ................................................................
ஆர்.கே.நகரில் பூத் சிலிப் வினியோகம்!
 ................................................................
தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
 ................................................................
மீனவர்கள் வாழ்வில் தொடரும் துயரங்கள்; 23 மீனவர்கள் 5 படகுகள் சிறைபிடிப்பு
 ................................................................
மணல் திருட்டை காட்டிக் கொடுத்ததால் இரட்டை கொலை; கொலையாளிகள் 4 பேருக்கு 2 ஆயுள்
 ................................................................
காட்டுமிராண்டி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி! தீர்ப்பளித்த நீதிபதியை பாராட்டுகிறோம்! திருமா
 ................................................................
ஆர்.கே.நகர் என்றதும் தலையில் அடித்துக்கொண்ட அழுக்கு சாமியார் சிதம்பரம்!
 ................................................................
ராகுல்காந்தி தலைவர் பொறுப்பேற்பதைப் பார்த்து பாஜக எந்த அளவுக்கு அச்சப்படுகிறது? திருமாவளவன்
 ................................................................
கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் கைது-கலால் உதவி ஆணையர் அதிரடி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஆகஸ்ட் 2017 (17:57 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஆகஸ்ட் 2017 (18:10 IST)

புதுக்கோட்டை அருகே 700 ஆண்டுகளுக்கு முந்தைய
கல்வெட்டு கண்டுபிடிப்பு..!புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் செல்லும் வழியில் அமைந்துள்ள எல்லைப்பட்டி பள்ளி வளாகத்தில் தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினரால் வழங்கப்பட்ட கல்வெட்டு மற்றும் தொன்மை பாதுகாப்பு பயிற்சியின் போது 700 ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டப்பட்ட தகவலடங்கிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரிரங்கன் பள்ளி வளாகத்திலேயே கிடந்த ஒரு துண்டு கல்வெட்டை அடையாளம் காட்டியதைத்தொடர்ந்து தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் தலைவர்  மேலப்பனையூர் ராஜேந்திரன், அமைப்பின்  நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் ,ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆகியோரால் படியெடுக்கப்பட்டது.

இக்கல்வெட்டு குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும், புதுக்கோட்டை தொன்மை பாதுகாப்பு மைய பொறுப்பாளருமான ஆசிரியர் மணிகண்டன் கூறியதாவது,

எல்லைப்பட்டி பள்ளி சுற்றுசுவரின் அருகிலேயே பழமையான நீர்வரத்து மற்றும்  வடிகால் அமைப்புடன் பழமையான குடிநீர்க்குளம் உள்ளது . இது 700 ஆண்டுகளுக்கு முன்பு தென்க வீர நாடன் என்பவரால் அமைக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்தும் வகையில் “ஷஸ்....ஸ்ரீ இக்குள(ம்).....(தெ)ன்க..வீர நாடன்”  என்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு  
எழுத்தமைதியின் அடிப்படையில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதை அறிய முடிகிறது. நீர் மேலாண்மையில் தமிழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் தமது செல்வத்தை ஆக்கப்பூர்வமாக செலவிட்டு மக்களின் குடிநீர் மற்றும் வேளாண் தேவைக்கென குளங்களையும், நீர்ப்பாசனக் கட்டமைப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதை இத்தகைய கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.

நமது ஏற்படுத்திய நீர்வரத்து மற்றும் பாசன வாய்க்கால்களையும், நீர் மேலாண்மை கட்டுமானங்களையும், சாராய போத்தல், பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டி  சிதைத்துவிடாமலும், ஆக்கிரமைப்புகளுக்கு உட்படுத்தாமலும் குறைந்தபட்ச சமூக அக்கறையோடு இருக்க வேண்டுமென்பதை  உணர்த்துவதோடு, நமது முன்னோர்கள் மேம்பட்ட பொதுநல சிந்தனையுள்ளவர்களாய் இருந்துள்ளனர் என்பதை எடுத்துக்காட்டும் சமூக வரலாற்று  ஆவணமாக இக்கல்வெட்டு உள்ளது என்றார்.

இத்தொன்மை பாதுகாப்பு மன்ற பயிற்சியில் அறிவியல் ஆசிரியை  வளர்மதி,  பள்ளியின் முன்னாள் மாணவர்கள்  வசந்த், ரகுபதி மற்றும் பள்ளி  தொன்மை பாதுகாப்பு மன்ற உறுப்பினர்கள் கோபிநாத்,அருண்குமார்,ஸ்வேதா, நிகல்யா உள்ளிட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

- இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :