Add1
logo
பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு வேல்முருகன் வேண்டுகோள் || அமைச்சருக்கு ஆதரவாக மீனவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது!ராமதாஸ் || வேளாண்துறையையும் மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு போவதா?- கி.வீரமணி || விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் பிரிவினர்! || விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்? || மக்கள் மன்றத்தில் மோடி பதில் சொல்லியே ஆகவேண்டும்: விஷால் தரப்பு ஆவேசம் || விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நிறைவு || கண் முன்னே தீக்குளிக்க முயற்சி: எடப்பாடி, ஓ.பி.எஸ். அதிர்ச்சி || ஜெயகுமார் ஒரு சூப்பர் முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்: ஸ்டாலின் || நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை || விஜயின் கோபமே அவரது படங்களில் வெளிப்படுகிறது: விஜயின் தந்தை பேட்டி! || பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் || நடிகர் தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக புகார் ||
தமிழகம்
பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு வேல்முருகன் வேண்டுகோள்
 ................................................................
அமைச்சருக்கு ஆதரவாக மீனவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது!ராமதாஸ்
 ................................................................
வேளாண்துறையையும் மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு போவதா?- கி.வீரமணி
 ................................................................
மக்கள் மன்றத்தில் மோடி பதில் சொல்லியே ஆகவேண்டும்: விஷால் தரப்பு ஆவேசம்
 ................................................................
விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நிறைவு
 ................................................................
ஜெயகுமார் ஒரு சூப்பர் முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்: ஸ்டாலின்
 ................................................................
நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை
 ................................................................
பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
இரட்டை இலை யாருக்கு? விசாரணை தொடங்கியது
 ................................................................
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் பிரசவ கட்டிடத்தின் மேற்கூறை இடிந்ததால் பரபரப்பு!
 ................................................................
பேரறிவாளனுக்குப் பரோல் அனுமதியை மேலும் ஆறுமாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: விசிக கோரிக்கை
 ................................................................
ஆட்சியர் அலுவலகத்தில் 4 பேர் தீக்குளிப்பு: பினாமி அரசு வெட்கப்பட வேண்டும்! அன்புமணி
 ................................................................
பொறையார் போக்குவரத்து பணிமனை இடிந்து விழுந்த விபத்து: சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு!
 ................................................................
ரஜினி, கமல் மசியவில்லை என்ற நிலையில் விஜய்யை குறி வைக்கிறார்கள்: திருமாவளவன்
 ................................................................
நாகையில் காவல் ஆய்வாளருக்கு கத்திக்குத்து!
 ................................................................
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூட்டத்தில் கல்வீச்சு!
 ................................................................
நடிகர் தனுஷ் மீது போலீஸ் புகார்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
திருவெறும்பூர் பகுதியில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் - பொதுமக்கள் அதிர்ச்சி!
 ................................................................
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த பரிசோதனை நிலையத்தின் அலட்சியத்தினால் மக்கள் பீதி
 ................................................................
இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? தேர்தல் கமிஷன் இன்று இறுதி விசாரணை
 ................................................................
சென்னையில் காணமல் போன ஜெர்மன் தம்பதியின் நாய் கிடைத்தது
 ................................................................
மூன்று தலைமுறைக்கும் மேலாக சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து, நீண்ட ஆயுள் காலம் வாழும் கிராம மக்கள்
 ................................................................
மெர்சல் படக்குழுவினருக்கு டுவிட்டரில் பாராட்டுகளை தெரிவித்தார்: நடிகர் ரஜினிகாந்த்
 ................................................................
நாகையில் மூன்று நாட்களில் இரண்டு கொலைகள்: குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் தினறும் காக்கிகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஆகஸ்ட் 2017 (22:55 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஆகஸ்ட் 2017 (22:55 IST)

கீரமங்கலத்தில் மக்கள் போராட்டத்தையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது

கீரமங்கலத்தில் இயங்கி வந்த ஒரே டாஸ்மாக் கடையும் மக்கள் போராட்டத்தையடுத்து மூடப்பட்டது. அதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர்.டாஸ்மாக் கடை :

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் 4 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி 3 கடைகள் மூடப்பட்ட நிலையில் கடைவீதியில் இருந்த ஒரு டாஸ்மாக் கடை மட்டும் செயல்பட்டு வந்தது. அந்த டாஸ்மாக் கடையையும் அகற்ற வேண்டும் என்று பெண்கள்ரூபவ் பொதுமக்கள் போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 50 நாட்களுக்கு முன்பு ஆலங்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் 50 நாட்களுக்கு பிறகு கடையை மூடிக் கொள்வதாக அதிகாரிகள் உத்தரவாதம் எழுதிக் கொடுத்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

ஆனால் 50 நாட்கள் காலம் 10 ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில் 11ந் தேதியும் மீண்டும் கடை திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர்கள் டாஸ்மாக் கடைக்கு சென்று கடையை மூட முயன்றனர். அதன் பிறகு டாஸ்மாக் கடை நிர்வாகத்திற்ன சார்பில் மேலும் 15 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால் இளைஞர்கள் சம்மதிக்கவில்லை.

திரண்ட பெண்கள் :

இந்த நிலையில் அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தபடி 50 நாளில் மூட வேண்டிய கடை மீண்டும் திறப்பதை எதிர்த்தும் கடையை உடனே மூட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பெண்கள் பொதுமக்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் போலிசார் குவிக்கப்பட்டனர். கீரமங்கலம் போலிஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழியை அடைத்தனர்.

அதன் பிறகு திரண்டிருந்த பெண்கள் கடைக்கு பூட்டுப் போட அணிவகுத்து வந்தனர். தடுப்புகள் வைக்கப்பட்டிருந்ததால் அதே இடத்தில் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு அமலாக்க துறை) இளங்கோவன், ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் முத்தலிபு, வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன் ஆகியோர் மற்றும் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பெண்கள் கடையை மூடும் வரை போராட்டம் நடக்கும் என்றனர். அதன் பிறகு டாஸ்மாக் கடை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பெட்டிச் செய்திகள் :

குழந்தைகளை காப்பாற்ற வேண்டும்.. போராட்டத்தில் கை குழந்தையுடன் கலந்து கொண்ட சுமதி என்ற பெண்.. என் வீட்டில் இந்த மதுவால் தினமும் சண்டை நடக்கிறது குழந்தைகளை கவணிக்க முடியவில்லை. அனால் இந்த கடையை அகற்றினால் என்னைப் போன்ற பெண்கள் வாழ முடியும். டாஸ்மாக் கடை தான் வேண்டும் என்றால் எங்களுக்கு மண்எண்ணெய் கொடுங்கள் தீ குளிக்கிறோம் என்று கண்ணீர்விட்டு கதறி அழுதார்.

அதே போல சின்னப்பொண்ணு என்ற பெண்.. என் வீட்டில் 10 மா நிலம் இருந்தும் குடியால் அந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை என்றார். மற்றொரு பெண்.. இன்று காலை போராட்டத்திற்கு புறப்படும் போதே.. முடிஞ்சா டாஸ்மாக் கடையை மூடிப்பார் என்று என் கணவர் சவால் விடுகிறார் என்றார்.

கீரமங்கலத்தில் இனி டாஸ்மாக் கடைகள் இல்லை. கீரமங்கலத்தில் 4 டாஸ்மாக் கடைகள் இருந்த நிலையில் 3 கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டது. எஞ்சிய கடையும் மக்கள் போராட்டத்தால் மூடப்பட்டுவிட்டதால் இனி கீரமங்கலம் பேரூர் அராட்சியில் டாஸ்மாக் கடைகள் இல்லை. மாற்ற கடைகள் திறக்க இரண்டு முறை நடந்த முயற்சிகளும் மக்கள் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-இரா.பகத்சிங்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :