Add1
logo
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம் || 10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை... || ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்) || ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை! || ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்) || பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்! || சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா ||
முக்கிய செய்திகள்
ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை
 ................................................................
எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு
 ................................................................
அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை
 ................................................................
சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா
 ................................................................
அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுகிறாரா சோனியா! - உண்மை என்ன?
 ................................................................
மக்களை பற்றி கவலைப்படாத அரசு அதிமுக: திருநாவுக்கரசர் பேட்டி
 ................................................................
ஆர்.கே.நகரில் வைத்திலிங்கத்துக்கு நேர்ந்த அவமானம்!
 ................................................................
பவுத்த சமண சமயங்களை அழித்தது யார்?
 ................................................................
பாமக ஊழல்புகாரில் எடப்பாடி மீது ஆளுநர் நடவடிக்கையா?
 ................................................................
எங்க கட்சியில கருத்து கூற யாரும் இல்ல... : ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு
 ................................................................
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார்
 ................................................................
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு!
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள்
 ................................................................
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்!
 ................................................................
கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஆகஸ்ட் 2017 (22:6 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஆகஸ்ட் 2017 (22:30 IST)மகிழ்ச்சி மாமழையில் நனைந்த பவள விழா:
ஸ்டாலின் நன்றி மடல்

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்:

என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் முரசொலி பவள விழா நன்றி மடல்.
 
முக்கால் நூற்றாண்டை நிறைவு செய்துள்ள முரசொலி ஏடு, தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளையாக அவர் கரங்களில் அன்று முதல் இன்று வரை தவழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த மூத்த பிள்ளையின் பவள விழாவை சீரோடும் சிறப்போடும் நடத்திட மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும், எதிர்பார்த்தபடியே நடந்தேறி, வெற்றி பெற்றிருப்பதில் மனம் மகிழ்ந்து, அதற்காக ஒத்துழைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்க வேண்டியக் கடமை உள்ளதை உணர்கிறேன். கழகத்தின் செயல் தலைவர் என்ற முறையிலும், முரசொலி அறக்கட்டளையின் சார்பிலும், தலைவர் கலைஞர் அவர்களின் மகன் என்ற முறையிலும் என்னுடைய நன்றியை அனைவருக்கும் உரித்தாக்குகிறேன்.
 
ஒவ்வொரு நாளும் முரசொலி ஏடு அச்சானதும் அதனை ஒரு குழந்தையைப் போல கையில் ஏந்தி மகிழ்பவர் தலைவர் கலைஞர். முரசொலி பவள விழா மலர் அச்சானதும் அதனை எடுத்துக்கொண்டு நேராகத் தலைவர் கலைஞர் அவர்களை சந்திக்கச் சென்றபோது, அந்த மலரைப் பார்த்ததும் அதைவிட அழகான மலராக அவர் முகம் மலர்ந்த அந்தத் தருணம் அப்படியே மனதில் பதிவாகிவிட்டது. ஒவ்வொரு பக்கமாக அவரிடம் புரட்டிக்காட்டியபோது, அவரது கண்களின் சுழற்சியும், முகத்தின் பிரதிபலிப்பும் அவர் மனதின் மகிழ்ச்சியை வெளிக்காட்டியது. தலைவரின் வார்த்தைகளுக்கு ஒலி இல்லாவிட்டாலும், அவரின் உதடுகளின் உச்சரிப்பில் இருந்த உவகையை கண்டபோது நான் சிலிர்த்துப் போனேன்.

நாளேடான முரசொலியின் வடிவமைப்பும் உள்ளடக்கமும் நாள்தோறும் சிறப்புற வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தும் அதன் ஆசிரியர் முரசொலி செல்வம் அவர்கள், பவள விழாவிற்கான ஒவ்வொரு முயற்சியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஆலோசனைகள் வழங்கியதை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். அதன் விளைவை, பவள விழா மலரைக் கண்டு தலைவர் முகம் மலர்ந்தபோது காண முடிந்தது. பவள விழா மலரை அரிய வரலாற்று ஆவணமாக வடிவமைக்க அல்லும் பகலும் அயராது பாடுபட்ட திராவிட இயக்க ஆய்வாளர் அண்ணன் திரு. க.திருநாவுக்கரசு அவர்களுக்கும் அவருக்கு ஒத்துழைப்பாக இருந்த முத்து வாவாசி,  எஸ்.ராமு, அரசு ஆர்ட்ஸ்  கோபி ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முரசொலி பவள விழாவின் முதல் நிகழ்வாக, ஆகஸ்ட் 10ம் தேதியன்று, காட்சி அரங்கத் திறப்புவிழா நடைபெற்றது. தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அய்யா  கி.வீரமணி அவர்கள் தலைமையில், இந்திய பத்திரிகையுலகில் தனக்கென தனி அடையாளத்துடன் விளங்கும் இந்து குழுமத்தின் தலைவர்  என்.ராம் அவர்கள் காட்சி அரங்கத்தைத் திறந்து வைத்து பார்வையிட்டார். முரசொலி வளாகத்தில் பழைய முரசொலி அலுவலகங்களின் முகப்புடன் அமைந்திருந்த காட்சி அரங்கத்தின் உள்ளும் புறமும் காட்சிப்படுத்தப் பட்டிருந்த வரலாற்று நிகழ்வுகளைக் கண்டு எல்லோருமே அதிசயித்துவிட்டனர். தலைவர் கலைஞர் அவர்கள் ‘சேரன்’ என்ற புனைப்பெயருடன் வெளியிட்ட 1942ஆம் ஆண்டின் முரசொலி இதழில் தொடங்கி, இன்றைய முரசொலி வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் வளர்ச்சியை விளக்கும் வகையில் பல புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அன்றைய அச்சு இயந்திரம், எழுத்து கோர்க்கும் மேசை இவற்றைப் பார்த்து ஆசிரியர் அய்யா  கி.வீரமணி அவர்களும், இந்து என்.ராம் அவர்களும் மகிழ்ந்து தங்கள் பத்திரிகை அனுபவத்தின் பழைய இனிய நினைவுகளில் மூழ்கினர்.
 
தலைவர் கலைஞர் அவர்களின் முரசொலி அலுவலக அறை அப்படியே வடிவமைக்கப்பட்டிருந்ததுடன், தலைவர் கலைஞர் அவர்கள் உட்கார்ந்திருப்பது போன்ற மெழுகு சிலையின் கலைநயம் கண்டு அனைவரும் உருகினர். நெருக்கடி நிலைக்கால இடர்பாடுகள், சட்டமன்றத்தில் முரசொலி மீதான உரிமை மீறலுக்காக அமைக்கப்பட்ட தனிக்கூண்டு உள்ளிட்ட அனைத்தும் காட்சி அரங்கத்தில் கண்முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த காட்சி அரங்கத் திறப்பிற்கு தலைமையேற்ற ஆசிரியர் அய்யா  கி.வீரமணி அவர்களுக்கும், திறந்து வைத்த இந்து என்.ராம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இரண்டு மாத காலத்திற்கு இந்தக் காட்சி அரங்கத்தை கழகத்தினரும் பொதுமக்களும் காண்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் அய்யா திரு. கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்ததுபோல, இதனை நிரந்தரக் காட்சி அரங்கமாக மாற்றும் வாய்ப்பும் ஆலோசிக்கப்படுகிறது. கடந்த காலத்தின் வரலாற்றை நிகழ்காலத்தில் கண்முன் நிகழ்த்தும் வகையில், இதனை வடிவமைப்பதில் முழு ஈடுபாட்டுடன் இரவு பகல் பாராது பணியாற்றிய கலை இலக்கியப் பகுத்தறிவு அணிச் செயலாளரும் காட்சி அரங்க ஒருங்கிணைப்பாளருமான  உமாபதி அவர்கள், அரங்க வடிவமைப்பாளர்  சிவா அவர்கள், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் அவர்கள், கலை இயக்குநர் செல்வம் அவர்கள் உள்ளிட்ட தோள் கொடுத்து உதவியவர்களுக்கும் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்த சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான  ஜெ.அன்பழகன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்துகிறேன்.
 
ஆகஸ்ட் 10ம் தேதி மாலையில் கலைவாணர் அரங்கில் நடந்த வாழ்த்தரங்கத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் - பத்திரிகை அதிபர்கள் - திரையுலகினர் பங்கேற்று முரசொலியின் இதழியல் பணியையும் அதனை சிறப்பாக மேற்கொண்ட மூத்த பத்திரிகையாளரான தலைவர் கலைஞர் அவர்களின் திறனையும் மனம் திறந்து பேசியது, ஒரு வரலாற்றின் மலரும் நினைவுகளாக அமைந்தது. இந்த வாழ்த்தரங்கத்தில் திராவிடம் என்பது வெறும் சொல் அல்ல, அது இந்திய ஒன்றியத்தின் தவிர்க்க முடியாத கோட்பாடு என்பதை மிகச் சிறப்பாக எடுத்துரைத்த கலைஞானி  கமல்ஹாசன், தனது தமிழ் ஆசான் கலைஞரின் முரசொலியின் வேர் எத்தனை வலிகளை எதிர்கொண்டு இந்த ஆலமரத்தை வளர்த்தது என்பதை எடுத்துரைத்த கவிப்பேரரசு திரு. வைரமுத்து ஆகிய இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. தன்னுடைய தொடர்ச்சியான படப்பிடிப்பு - திரைப்பணிகளுக்கிடையிலும் தலைவர் கலைஞர் மீதுள்ள மாறான அன்பினால் பவள விழாவுக்கு வருகை தந்து, இறுதிவரை நிகழ்ச்சிகளை ரசித்து தன் உணர்வுகளை வெளிப்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சிறப்பு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பத்திரிகையுலகைச் சேர்ந்த இந்து திரு. என்.ராம் அவர்கள், தினத்தந்தி  பாலசுப்ரமணியன் ஆதித்தன் அவர்களின் சார்பில் வருகை தந்த சி.ஜி.எம்  சந்திரன் அவர்கள், ஆனந்த விகடன் சீனிவாசன் அவர்கள், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் வருகை தந்த தினமணி ஆசிரியர்  வைத்தியநாதன் அவர்கள், தினமலர் இணை ஆசிரியர் ரமேஷ் அவர்கள், டெக்கான் கிரானிக்கள் ஆசிரியர்  பகவான் சிங் அவர்கள், டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஆசிரியர் அருண் ராம் அவர்கள், தினகரன் செய்தி ஆசிரியர் மனோஜ்குமார் அவர்கள்,  நக்கீரன் கோபால் அவர்கள் என அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நிகழ்ச்சியை அழகுத் தமிழால் தொகுத்து வழங்கிய கழக குடும்பத்தைச் சேர்ந்த திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கும், இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக முன்னின்று கவனித்து உபசரித்த சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. சேகர்பாபு அவர்களுக்கும், அவருடன் பணியாற்றிய ஒவியர் ஜெ.பி.கிருஷ்ணா, எலக்ட்ரிசன் விஜயகுமார், சினி ஆர்ட் டெக்கரேடர்  ஜி.ஆர்.குமார் உள்ளிட்டோருக்கும் நன்றியினை உரித்தாக்குகிறேன். தலைவர் கலைஞர் அவர்களின் முரசொலி ஏட்டின் பவள விழாவில் தங்கள் பங்கேற்பு இருக்க வேண்டும் எனக் கருதிய கழக தொண்டர்கள், வாசகர்கள், பொதுமக்கள் எல்லோரும் குவிந்ததால் கலைவாணர் அரங்கம் கடல்போல காட்சியளித்தது. இதன்காரணமாக ஏற்பட்ட இடமின்மைக்கும் இன்னும் சில இடர்பாடுகளுக்கும் முரசொலி அறங்காவலர் என்ற முறையில் என் வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டியது கடமையாகிறது.
 
முரசொலி பவள விழாவின் மூன்றாம் கட்ட நிகழ்வாக, தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் ஆகஸ்ட் 11ம் தேதி மாலையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, பவள விழா மலரை பொதுவாழ்வில் தொண்டுக்கு இலக்கணமாகத் திகழும் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் திரு. நல்லகண்ணு அவர்கள் வெளியிட்டார். அதனை முரசொலியின் முதல் மேலாளராக பணியாற்றிய திரு. சி.டி.தட்சிணாமூர்த்தி அவர்கள் பெற்றுக் கொண்டார். விளையாட்டு அரங்கத்தை நிறைத்திருந்த மக்களை போலவே, அந்த இனிய நேரத்தில், வானமும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மழையாகப் பொழிந்த காரணத்தால், விழாவினை முழுமையாகத் தொடர இயலாமற் போனது. பவள விழா இரண்டு நாட்களில் முடிவடையக்கூடாது மேலும் தொடர வேண்டும் என்கிற இயற்கையின் விருப்பத்திற்கேற்ப, பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
 
மழையையும் பொருட்படுத்தாது விழாவுக்கு வருகை தந்திருந்த அரசியல் கட்சித் தலைவர்கள், அவர்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுக்கூட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைத்த கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும் மா.சுப்ரமணியம் அவர்களுக்கும் அவருடன் இணைந்திருந்த கழக நிர்வாகிகள், தோழர்களுக்கும் நன்றி பாராட்டுகிறேன். விழாமேடையை எழிலார்ந்த முறையில் அமைத்திருந்த  போஸ் பழனியப்பன், கொடி கம்பங்களை அமைத்த இளைஞர் அணி தோழர் பாலா உள்ளிட்ட கழக உடன்பிறப்புகளுக்கும்  நன்றிகள்.
 
மகிழ்ச்சி மாமழையுடன் பவள விழா நடைபெற்றிருக்கிறது. ராபின்சன் பூங்காவில் தி.மு.கழகம் தொடங்கப்பட்டபோதே மழை வலுத்து வாழ்த்தியதால், தமிழகத்தில் அரசியல் - பண்பாட்டு மாற்றம் நிகழ்ந்தது. முரசொலி பவள விழாவிலும் அதே மழை பொழிந்து புதிய அத்தியாத்தைப் படைக்க நம்மை ஊக்கப்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் ஏரிகள் - குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை கழகத்தினர் தூர் வாரி வைத்த நிலையில், அந்த உழைப்புக்கும் தொண்டுக்கும் பரிசளிப்பது  போல பவள விழா நாளில் மாமழை பொழிந்து நீர் நிலைகள் நிறைந்திட உதவியுள்ளதே நமக்கு கிடைத்த வெற்றிதான்.
 
மகிழ்ச்சி மாமழையை நெஞ்சில் பொழிய வைத்த முரசொலி பவள விழா வெற்றிக்குத் துணைநின்ற கழகத்தின் ஆணிவேர்களாம் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு என்றென்றும் நன்றிக்குரியவனாவேன். ஒத்திவைக்கப்பட்ட பொதுக்கூட்டம் செப்டம்பர் 5ந் தேதி பல்வேறு கட்சிகளின் பங்கேற்புடன் கொட்டிவாக்கம் ராஜீவ் காந்தி சாலை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மிகச் சிறப்பாக நடைபெறும். நமது ஒற்றுமையும், வலிமையும் முரசொலித்து புதிய வரலாற்றைப் படைப்போம்!

அன்புடன்,
மு.க.ஸ்டாலின்.’’தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :