Add1
logo
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம் || 10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை... || ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்) || ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை! || ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்) || பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்! || சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா ||
சிறப்பு செய்திகள்
எலெக்ட்ரானிக் வடிவில் எமன்
 ................................................................
கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு பெயர் சூட்டிச்
 ................................................................
இறுதிச் சடங்கு உரிமைக்காக நீதிமன்றம் ஏறிய பார்சி பெண்!
 ................................................................
கல்வாரியின் அர்ப்பணிப்பும், சிறப்புகளும்
 ................................................................
பொடாவில் போட்டவரின் கையில் சுற்றிய பம்பரம்!
 ................................................................
பாட்டிலை திறப்பவர்கள் அனைவருமே எங்கள் உறுப்பினர்கள் தான்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது யார் குண்டு?
 ................................................................
அறிவிக்கும் இழப்பீடுகள் முறையாக சேர்கிறதா?
 ................................................................
ஐ.டி. ஊழியர்களைத் தாக்கும் திடீர் ஈட்டிகள்!
 ................................................................
மூக்கறுபட்ட முன்னோர்கள்!
 ................................................................
தமிழ் திரையுலகம் கொண்டாடும் அருவி!
 ................................................................
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 ................................................................
சோழர்கள் ஆட்சியில் உள்ளூர் நிர்வாகத்திடம் வரி வசூலிக்கும் - கல்வெட்டு கண்டுபிடிப்பு
 ................................................................
பெற்றோரை விட சங்கர் ஏன் முக்கியம்?
 ................................................................
ரஜினிக்கு மட்டுமே கிடைத்தவை...
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஆகஸ்ட் 2017 (16:48 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஆகஸ்ட் 2017 (19:57 IST)


பெண் ஓர் உடமை என்பது போல ஓர் மனப்போக்குதான்
இருந்து வருகிறது - நிர்மலா பெரியசாமி
..!ஹரியானா மாநிலம், சண்டிகரில் கடந்த 5ம் தேதி இரவு காரில் தனியாகச் சென்ற ஐஏஎஸ் அதிகாரியின் மகளான வர்னிகாவை, ஹரியானா மாநில பாஜக தலைவரின் மகன் விகாஸும், அவரது நண்பரும் காரில் துரத்திச் சென்றுள்ளார். மேலும் தங்கள் காரை வர்னிகாவின் கார்மீது இடிப்பது போல பலமுறை அச்சுறுத்தியுள்ளனர். தான் துரத்தப்படுவதை வர்னிகா போலீசாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை காப்பாற்றுமாறு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வர்னிகாவை காப்பாற்றியதுடன், சண்டிகர் மாநில பாஜக தலைவரின் மகன் மற்றும் அவரது நண்பரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் சற்று நேரத்தில் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

இவ்விவகாரம் தொடர்பாக, சண்டிகர் மாநில பாஜக துணைத் தலைவர் ராம்வீர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

இரவு நேரங்களில் பெண்கள் வெளியில் செல்வதால் இத்தகைய அசம்பாவிதங்கள் அதிகம் நேரிடும் சூழல் எழுந்துள்ளது. பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். பெண்கள் மாலைக்கு பிறகு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், இதனை பெண்பிள்ளைகளை பெற்றவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்துள்ளார்.

சண்டிகர் மாநில பாஜக துணைத் தலைவரின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அவருக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் நட்சத்திர பேச்சாளர் நிர்மலா பெரியசாமியிடம் நக்கீரன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது,மனித குளத்தில் நாகரிகம் வளர்ச்சியடைந்த வேத காலத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிரசக்தி பெற்று, ஆண்களினுடைய ஜீன்களிலேயே தொடர்ந்து வந்து கொண்டிருக்கக்கூடிய ஒர் எண்ணம், ஒர் உணர்வு. இங்கு எல்லாமே உடமைகளில் ஒன்று தான். மண், பொன், பெண். மண்ணும், பொன்னும் எப்படி ஒர் உடமையோ, அது போல் பெண்ணும் ஒர் உடமை என்பது போல ஒர் மனபோக்கு தான் இருந்து வருகிறது.

இது காலம், காலமாக இருந்து வருகிறது. அதை மாற்றுவதற்கு 100 ஆண்டுகாலத்திற்கு மேலாக உலகத்தின் பல பகுதிகளிலும் உள்ள பெண்கள் போராடி, போராடி எவ்வளவோ வெற்றிகளை, மாற்றங்களை நாம் இந்தியாவில் கூட சந்தித்து கொண்டிருந்தாலும். இன்னும் உள்ளுக்குள் இருக்கிற ஜீன் வேலை பார்க்குது சில பேருக்கு.

மிக பிரமாதமாக வளர்ந்து வரக்கூடிய பாரதிய ஜனதா கட்சி சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதிரி பேச்சுகளை பேசும் போது. பாரத பிரதமரை நம்பி நிறைய பேர் இருக்கும் இந்த காலகட்டத்தில், நாடு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் காலத்தில் இப்படியான ஒரு பிற்போக்கான கருத்துகள் அவர்களுக்கு மிக சங்கடத்தை உருவாக்கும். குறிப்பாக பா.ஜ.க வளரத் துடிக்கும் தமிழகம் மாதிரியான மாநிலத்தில் இந்த மாதிரியான பிற்போக்கான கருத்துகள் எதிர்விளைவுகளைத்தான் உருவாக்கும் என்பதில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இதை அவர்கள் எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குடிப்பது ஆண் செய்தால் தவறு, பெண் செய்தால் சரி என்று இல்லை. குற்றங்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் யார் செய்தாலும் தவறு தான். நீதியின் முன்னால் ஆணும், பெண்ணும் சமம் தான். பெண்கள் இவ்வளவு காலம் அதிகம் பன்னாத தவறுகள், பெண்கள் குடும்பம், குழந்தைகளை பார்த்துக்கொள்கிறவர்கள் என்பதால் அது நேரடியாக குடும்பத்தை பாதிக்கும் என்பதால் மிக கவனமாக இருக்க வேண்டும். மது அருந்துவதை பெண்களது உடல்கூறுகள் ஏற்றுக்கொள்ளாது. நம் தட்ப வெட்பநிலை அப்படி இல்லை. ஆணுக்கும் இதே விஷயங்கள் பொருந்தும். ஆண் குடித்தாலும் தவறு தான். பெண் குடித்தாலும் தவறு தான். இதில் என்ன பாலின வேறுபாடு. திருடினால்? இரு பாலினம் திருடினாலும் தப்பு தான். யார் செய்தாலும் தவறு தவறு தான்.

இது மாதிரி பிற்போக்கான கருத்துக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல், புறம் தள்ளிவிட்டு, எது சரியோ அதை செய்துவிட்டு செல்ல வேண்டும். இதற்கு கண்டிப்பாக நாம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. எல்லாத்துக்குமான நியாய தர்மங்கள் என்பது இருக்கு, அது ஆணுக்கும், பெண்ணுக்கும் சமம் தான். தர்மத்திற்கும், நியாயத்திற்கும் பாலின வேறுபாடுகள் கிடையாது. எல்லாருக்கும் பொதுவானது தான். இதற்கு கண்டிப்பாக நாம் முக்கியத்துவம் கொடுக்ககூடாது. இந்த மாதிரியான வார்த்தைகளுக்கு ஊடகங்களும் முக்கியத்துவம் அளிக்கக்கூடாது என்றார்.

- அருண்பாண்டியன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : anonymous Date :8/16/2017 3:35:02 PM
பெண்கள் தனியாகசெல்லகூடாது என்பது எக்காலத்திலும் பிற்போக்கான கருத்துஅல்ல,சர்சைக்குரியதும் அல்ல.நம் பெற்றோர், தாத்தா,பாட்டி எப்போதும்கூறும் அறிவுரைதான் அது. ஆனால் தவறுசெய்யும் தனதுகட்சிக்காரனை தப்புவிக்க சொல்லப்படும்போது அறிவுரை சர்சைக்குரியதாகிறது. Safari Park போகிறவர்கள், சுதந்திரமாகஇருக்கும் மிருகங்கள்போல் நாங்களும் சுதந்திரமாகதான் போவோம் என்று அடம்பிடித்து அசட்டுதுணிச்சல் காண்பித்தால் இழப்பு பெண்ணுக்கு(மட்டும்)தான். மக்களின்பாதுகாப்புக்கு முதலிடம் கொடுப்பதில் முதன்மையான நாடு சிங்கப்பூர்.அத்தனை பாதுகாப்புகள் இருந்தும்கூட தனியாகசெல்லும் பெண்கள் ஆபத்துகளில்சிக்கி உயிர்,மானத்தை பறிகொடுக்கும் சம்பவங்கள் அங்கேஉண்டு.மணமாகும்வரை பெண்குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்தான் உறுதி செய்யவேண்டும்.காரணம் நம்நாட்டின் காவல்/நீதித்துறை அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்டு இயங்கிவருவது. பறிகொடுத்தபின் திரும்பகிடைக்காதது ஒன்று உயிர் இன்னொன்று கற்பு. பந்தாவுக்காக ultra modern ஆக அலங்கரித்துகொண்டு கார்,டூவீலரில்போவதும் boyfriends உடன்சுற்றுவதும் முற்போக்கு பெண்மைஅல்ல. அகங்காரம், முட்டாள்தனம்.
Name : Superusa Country : United States Date :8/12/2017 10:05:07 PM
முதலில் ஆண்கள் பெண்கள் பற்றி கவிதை எழுதுவதை , கட்டடம் கட்டி வைப்பதை நிறுத்த வேண்டும். எல்லாம் சரியாகி விடும். பெண் குழந்தை என்றால் மனைவியை அபார்ஷன் செய்ய நிர்பந்திக்க வேண்டாம். காமத்து பாலை திருக்குறளில் இருந்து நீக்க வேண்டும்.நீங்கள் எங்களை போற்றவும் வேண்டாம், தூற்றவும் வேண்டாம். மதிக்கவும் வேண்டாம், அவமதிக்கவும் வேண்டாம். உங்களை அண்டி நாங்கள் இல்லை. இங்கே அமெரிக்காவில் இருக்கும் போலீஸ் போல தமிழ்நாட்டில் இருந்தால் போதுமானது. நீங்கள் ஆண் என்று விறைச்சு கொண்டு நிற்க வேண்டாம். மீசை வளர்த்து தடவவும் வேண்டாம். தமிழ் போலீஸ் சினிமாக்களை முதலில் தடை செய்ய வேண்டும். உங்களை பற்றி நாங்கள் எதுவும் எழுதி வைப்பது இல்லை. நீங்களும் மூடி கொண்டு இருக்கவும்.