Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஆகஸ்ட் 2017 (16:27 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஆகஸ்ட் 2017 (18:31 IST)


விவாதத்திற்கு வந்த அன்புமணி! சவால் விடுத்த செங்கோட்டையன் ஆப்செண்ட்!


விவாதத்திற்காக வைக்கப்பட்ட பேனர். இந்த பேனரை அகற்ற போலீசார் வந்ததால், அதனை அகற்றவிடாமல் பாதுகாத்துள்ளனர் பாமகவினர். 

பள்ளிக் கல்வித்துறையில் ஊழல் தொடங்கிவிட்டதாகவும், கலந்தாய்வு நடத்தாமல் பள்ளி ஆசிரியர்களை இடமாறுதல் செய்வது விதிமீறல் என்றும் பாமக இளைஞரணித் தலைவரும், தருமபுரி எம்பியுமான அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு, தம்முடன் பொது மேடையில் விவாதிக்க தயாரா என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். விவாதத்திற்கு மேடை அமைக்கப்பட்டு அதில் 2 நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. அதில் ஒரு நாற்காலியில் அமர்ந்த அன்புமணி, செங்கோட்டையனுக்காக காத்திருந்தார். 

செங்கோட்டையன் அறிவிப்பை அடுத்து அவருடன் விவாதிக்க தயார் என்று நேரமும் இடமும் அன்புமணி கூறியிருந்தார். சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை 'சென்னை ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ் பேரவைக்கு (எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி எதிரே) விவாதம் நடைபெறும் என்று செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். 

அதன்படி இந்த விவாதத்தில் பங்கேற்பதற்காக அன்புமணி ராமதாஸ் இன்று ராஜா அண்ணாமலைபுரத்துக்கு வருகை தந்தார். ஆனால் செங்கோட்டையன் வரவில்லை.


விவாதத்திற்கு வந்தது ஏன் என செய்தியாளர்களிடம் விளக்கும் அன்புமணி

அன்புமணி கூறியதாவது,  சென்னை ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ் பேரவை அரங்கை வாடகைக்கு எடுத்து நான் இங்கே இருப்பேன் 4மணிக்கு நீங்கள் வாருங்கள் நாம் இருவரும் விவாதம் செய்யலாம் என அறிக்கை வாயிலாக செங்கோட்டையனுக்கு கூறினேன். அவரிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை.

இந்த விவாதத்தின் நோக்கமே தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இந்த துறையின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது என்னுடைய நோக்கம். இந்த விவாதத்தின் நோக்கம் அது தான். இந்த விவாதத்தில் நான் பெரியவனா? இல்லை அவர் பெரியவரா என்பது நிச்சயம் கிடையாது. இது ஏதோ அன்புமணிக்கும் - செங்கோட்டையனுக்கும் ஒரு போட்டி அது உறுதியாக இல்லை. நல்ல எண்ணத்தில் தான் இந்த விவாதத்திற்கு அவரை அழைத்தேன். முதலில் அவர் தான் என்னை அழைத்தார் இந்த விவாதத்திற்கு.

இதற்கு முன் நான் திமுக செயல்தலைவரை பலதடவை அழைத்தேன். ஆனால் அவரிடம் ஒரு பதிலும் வரவில்லை. அதிலும் எனக்கும் ஸ்டாலினுக்கும் தனிப்பட்ட பிரச்சனை கிடையாது. ஸ்டாலினை நான் அழைத்ததின் நோக்கம் திமுகவினால் தமிழ்நாட்டுக்கு நடந்தது என்ன? நாளை என்ன நடக்கும்? என்று அவர் சொல்லட்டும். என்னுடைய கருத்தையும் நான் சொல்ல தயாராக இருக்கிறேன். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளால் என்ன பாதகங்கள்? இனியும் என்ன பிரச்சனை வரும் என்று நான் கூறுகிறேன். என்னுடைய நோக்கமே ஆக்கப்பூர்வமான விவதாங்கள் வேண்டும் என்று தெரிவி்த்தார்.

செய்தி, படங்கள்: அசோக்குமார்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : Thanikachalam, Karur. Country : United States Date :8/13/2017 6:50:07 AM
யோவ் அன்புமணி, சும்மா டயலாக் உட்டுக்கிட்டு திரியாதய்யா. செங்கோட்டையனுக்கு பல்லு சுளுக்கிக்கிச்சு அதனாலதான் அவரு வரல. பல்லு சுளுக்கிக்கிச்சுன்னா எப்படிய்யா பேசமுடியும்? அறிவிருக்கா?
Name : தம்பி Date :8/12/2017 8:55:46 PM
வலது பக்கம் உட்கார்ந்து விட்டார். அதனால் வாஸ்து ப்படி செங்கோட்டையன் வர வில்லை
Name : kumar Date :8/12/2017 7:14:07 PM
இவர் டாக்டரா? ஆக்டரா?
Name : wilson Country : India Date :8/12/2017 6:10:11 PM
உங்களால் தமிழ் நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என மக்கள் உங்களை ஸீரோ ஆக்கி விட்டதை மறந்து விட்டீர்களா. அவர் இப்போது தான் பால பாடம் படித்து கொண்டு இருக்கிறார். முதலில் சீமான் திருமாவளவனிடம் மோதி அடுத்த ரவுண்ட் வாருங்கள்.
Name : MUTHU Date :8/12/2017 5:43:53 PM
அவ்ளோ ஈஸியா வந்து சிக்கிடுவாரா?ஆஹ்ஹா