Add1
logo
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம் || 10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை... || ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்) || ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை! || ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்) || பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்! || சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா ||
சிறப்பு செய்திகள்
எலெக்ட்ரானிக் வடிவில் எமன்
 ................................................................
கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு பெயர் சூட்டிச்
 ................................................................
இறுதிச் சடங்கு உரிமைக்காக நீதிமன்றம் ஏறிய பார்சி பெண்!
 ................................................................
கல்வாரியின் அர்ப்பணிப்பும், சிறப்புகளும்
 ................................................................
பொடாவில் போட்டவரின் கையில் சுற்றிய பம்பரம்!
 ................................................................
பாட்டிலை திறப்பவர்கள் அனைவருமே எங்கள் உறுப்பினர்கள் தான்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது யார் குண்டு?
 ................................................................
அறிவிக்கும் இழப்பீடுகள் முறையாக சேர்கிறதா?
 ................................................................
ஐ.டி. ஊழியர்களைத் தாக்கும் திடீர் ஈட்டிகள்!
 ................................................................
மூக்கறுபட்ட முன்னோர்கள்!
 ................................................................
தமிழ் திரையுலகம் கொண்டாடும் அருவி!
 ................................................................
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 ................................................................
சோழர்கள் ஆட்சியில் உள்ளூர் நிர்வாகத்திடம் வரி வசூலிக்கும் - கல்வெட்டு கண்டுபிடிப்பு
 ................................................................
பெற்றோரை விட சங்கர் ஏன் முக்கியம்?
 ................................................................
ரஜினிக்கு மட்டுமே கிடைத்தவை...
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஆகஸ்ட் 2017 (20:54 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஆகஸ்ட் 2017 (20:54 IST)


தனிப்பிரிவல்ல.. ஆணவக்கொலைகளைத் தடுக்கும் சிறப்பு சட்டமே தீர்வு!

தமிழகத்தில் சேலம் மாவட்டம் மற்றும் மதுரை நகரில் கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தத் தனிப்பிரிவு அமைக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தது கடந்த 2014 ஆகஸ்ட் 1-ஆம் தேதி சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட விமலாதேவி என்னும் இளம்பெண், சாதி ஆதிக்கவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட வழக்குதான். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்றம், சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிப்பிரிவு அமைக்கக்கோரி தமிழக அரசுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியது. இது ஓரளவிற்கேனும் நிறைவேற ஒன்றரை ஆண்டுகள் பிடித்திருக்கின்றன.

சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் உருவாக்கக்கோரி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் 400 கிமீ தூரம் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், முதல்வரிடமும் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்து பயணிக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், ‘சாதிமறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு மாநிலம் முழுவதும் தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என்பதுதான் நம் கோரிக்கை. மதுரை மற்றும் சேலத்தில் மட்டும்தான் இது அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமே தீர்வா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும். அவர்கள் இந்த தனிப்பிரிவின் இலவச சேவை எண்ணிற்கு அழைப்பதன் மூலம், அதுவும் புகாராக பதிவாகும். ஒருவேளை இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், இந்தத் தகவல்களின் மூலம் வழக்காக முன்னெடுத்துச் செல்வதற்கும் இது வாய்ப்பு தரும். உடுமலைப்பேட்டை சங்கர் விவகாரத்தில் புகார் கொடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை இந்த இடத்தில் பொருத்திக்கொள்ளுங்கள். இது ஒரு உதாரணம் மட்டுமே. இந்தத் தனிப்படை அமைக்ககும் பரிந்துரை வழங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பின்புதான் அவசர அவசரமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வகையில் தேவையான முன்னெடுப்பு என்றாலும், இதையும் தாண்டி அரசு சாதி ஒழிப்பிற்கான பல முயற்சிகளை எடுக்கவேண்டும். பாடப்புத்தகங்களில் சாதி ஒழிப்பு குறித்த பாடங்கள் இடம்பெற வேண்டும். பெரியார் சாதி ஒழிப்புப் பிரச்சாரங்கள் மேற்கொண்டதைப் போல, தற்போதுள்ள அரசியல் இயக்கத் தலைவர்கள் எதிர்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும். சாதிமறுப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுக்கிறார். 

இதுகுறித்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் போராடிவரும் எவிடென்ஸ் கதிர், ‘இந்தத் தனிப்பிரிவு அவசரகதியில் நிறுவப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. ஆபத்தென்று வரும் தம்பதியினரை எங்கு தங்க வைப்பார்கள்? துணை ஆணையாளர், ஆதிதிராவிட நலத்துறை செயலாளர், சமூக நலத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் கண்காணிப்பின் கீழ் இந்தத் தனிப்பிரிவு இயங்கும் என மாநகர காவல்துறை ஆணையாளர் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஆலோசனைக்குழுவோ, நிதிக்குழுவோ, உட்கட்டமைப்போ இதில் கிடையாது. மேலும் விசாரணை அதிகாரியோ, பாதுகாப்பு அதிகாரியோ நியமிக்கப்படவில்லை.

ஏற்கனவே சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எஸ்.சி/எஸ்.டி வழக்குகளைச் சரிபார்க்கும் கமிட்டி, கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்புக் கமிட்டி, இளம் சிறார் நீதிக்குழுமம் தொடர்பான கமிட்டி உள்ளிட்டவையே ஒழுங்காக செயல்படாதபோது, நீதிமன்ற உத்தரவில் உருவாக்கப்பட்ட இந்தத் தனிப்பிரிவு சரியாக இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கான சிறப்பு சட்டம் இயற்றப்படுவதே இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும். 2011-ஆம் ஆண்டு தேசிய சட்ட ஆணையம் இது தொடர்பான தனி வரைவை மத்திய அரசிடம் கொடுத்தது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆணவக்கொலை தொடர்பான நிலை அறிக்கையை சமர்ப்பிக்கச் சொன்னபோது, 22 மாநிலங்கள் கொடுத்துவிட்ட நிலையிலும் தமிழக அரசு இன்னமும் கொடுக்கவில்லை. 2014 ஜூலை முதல் 2017 ஜூன் வரை 118 சாதிரீதியிலான ஆணவக்கொலைகள் நடந்துள்ளன. இவை வெளியில் தெரிந்தது மட்டுமே.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 7,000 பெண்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதில் 17% காதல் விவகாரத்தால் ஆனவை. இவை ஆணவத் தற்கொலையாக இருக்கும் வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு கிட்டத்தட்ட 1,200 தற்கொலைகள் காதல் விவகாரத்தால் நடக்கின்றன. ஓராண்டில் கொலை செய்யப்படும்  800 பெண்களில் 13% பேர் காதல் விவகாரத்தால் கொல்லப்பட்டவர்கள். இந்தப் பெண்களின் சடலங்களை குடும்பக்காரணங்களைச் சொல்லி எரித்துவிடுகின்றனர். இந்தக் குற்றத்திற்கு சந்தேக மரணம் அல்லது காவல்துறைக்கு தெரிவிக்காமல் சடலத்தை எரித்தல் போன்ற காரணங்களுக்கான அரசியலமைப்புச் சட்டம் 174-ன் கீழ் வழக்கு பதியப்படும். இவை சாதாரண குற்றங்களில் சேரும். 

தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகளில் கொல்லப்படுபவர்களில் 80% பேர் பெண்கள். கடந்த 20 ஆண்டுகளில் தன் சொந்தங்களாலேயே ஆணவப்படுகொலை செய்யப்பட்ட பெண்களின் வழக்குகளில், ஒருவருக்குக் கூட தண்டனை கொடுக்கப்படவில்லை. எல்லா வழக்குகளும் தள்ளுபடி ஆகிவிட்டன. வழக்கும், விசாரணையும் பலவீனமாக இருப்பதையே இது காட்டுகிறது. மேலும், கொலை செய்தவன் ஏதோ ஒருவகையில் அந்தப்பெண்ணின் ரத்த சொந்தமாக இருக்கிறான். இதனால், அரசு அந்த வழக்கை நடத்துகிறது. அரசை சுலபமாக விலைபேசி இந்த வழக்கை சாதகமாக முடித்து விடுகிறார்கள். பல சிக்கல்கள் இதில் இருக்கின்றன’ என்கிறார் ஆதங்கமாக.‘சாதியை உடைப்பதற்கு உண்மையான தீர்வு கலப்பு மணமே. வேறு எதுவும் சாதியைக் கரைக்க முடியாது’ என சாதியை ஒழிக்கும் வழி என்ற புத்தகத்தில் அம்பேத்கர் சொல்கிறார். இதை வலியுறுத்தி பெரியார் பல அறப்போராட்டங்களை நடத்திக் காட்டினார். ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச்சட்டம் இயற்றப்பட்டு, சாதி மறுப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட்டால் மட்டுமே, சமூகத்தில் இதுமாதிரியான குற்றங்களில் இருந்து முழுமையான தீர்வு கிடைக்கும். 

- ச.ப.மதிவாணன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : RAMAN Country : Australia Date :8/18/2017 4:47:19 PM
நாம் தமிழர் என்று சொல்வதைவிட நான் இந்த ஜாதியை சேர்த்தவன் என்று சொல்வதைத்தான் மானக்கேட்ட தமிழன் விரும்புகிறான் உனக்கு ஹார்ட் ஆபரேஷன் என்று வருகிறபோது உன் ஜாதி ரத்தம்மா உன்னை கப்பார்த்துகிறது அப்போது மட்டும் a குரூப் ரத்தம் அல்லது பி குரூப் அல்லது எந்த ஜாதிக்காரன் ரத்தம் கிடைத்தால் போதும் என்று உயிர் பிட்சை கேட்கிறாய் வெட்கம் கெட்ட தமிழனே
Name : Superusa Country : United States Date :8/13/2017 3:35:54 AM
இல்லை, மேலும் மோசம் ஆகும். கொலை வேண்டாம் என்றால், குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும். எப்படி மேல் சாதியில் பெண் பிடித்து விட வேண்டும் என்று அலைகிறார்களோ அதுபோல ஒருவருக்கு பிடிக்கவில்லை என்பதற்கும் உரிமை உண்டு. அப்போ வேற்று மொழி பெண்களை பெருவாரியாக தமிழர்கள் மணக்க வேண்டும் என்று ஊக்குவிக்க சட்டம் போட்டு , தமிழர் என்ற அடையாளமே இல்லாமல் செய்துவிட்டால்!? நாம் தமிழர் என்பதே இல்லாமல் போகுமே. அவரவர் குடும்ப பெண்கள் அவரவர் குடும்பத்து பெற்றோர் முடிவு செய்தால்தான் அந்த இனம் இருக்கும். தமிழ் ஆண்கள் யாருமே கருப்பு பொண்ணு பிடிக்காது. வெள்ளை தோலுக்கு தான் அலைவார்கள், காதல் வரும். அதற்க்கு சட்ட துணை சாதி என்று கூறி வேண்டும். ஏன் தன் சாதி கருப்பு பொண்ணுங்களை காதலிப்பவர்களுக்கு தான் சட்டம் துணை நிற்கும் என்று அந்த தாழ்ந்த சாதி பொண்ணுங்க போராடினால்? அப்போ அவர்கள் சாதி ஆண்களுக்கே பிடிக்காத அந்த பொண்ணுங்களை யார் திருமணம் செய்வது? எல்லாம் சுயநல இச்சை!
Name : S.Govindarajan Country : Australia Date :8/12/2017 11:50:14 AM
பெற்றவர்களுக்குத் தெரியும் பிள்ளையின் அருமை. எவனோ பெற்ற பெண்ணை எவனோ ஆசை காட்டி இழுத்து கொண்டு ஓடுவதும், பின் பேரம் பேசுவதும் சரியோ? ஆணவ கொலை பற்றி பேசுபவர்கள் தங்கள் இனத்தை சேர்ந்த ஒருவன் ஸ்வாதியை கொன்ற போது வாய் திறக்கவில்லையே. பெற்றோருக்குத் தெரியாமல் இழுத்துக்கொண்டு ஓடுவது எப்படி சரியாகும்?