Add1
logo
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம் || 10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை... || ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்) || ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை! || ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்) || பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்! || சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா ||
சிறப்பு செய்திகள்
எலெக்ட்ரானிக் வடிவில் எமன்
 ................................................................
கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு பெயர் சூட்டிச்
 ................................................................
இறுதிச் சடங்கு உரிமைக்காக நீதிமன்றம் ஏறிய பார்சி பெண்!
 ................................................................
கல்வாரியின் அர்ப்பணிப்பும், சிறப்புகளும்
 ................................................................
பொடாவில் போட்டவரின் கையில் சுற்றிய பம்பரம்!
 ................................................................
பாட்டிலை திறப்பவர்கள் அனைவருமே எங்கள் உறுப்பினர்கள் தான்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது யார் குண்டு?
 ................................................................
அறிவிக்கும் இழப்பீடுகள் முறையாக சேர்கிறதா?
 ................................................................
ஐ.டி. ஊழியர்களைத் தாக்கும் திடீர் ஈட்டிகள்!
 ................................................................
மூக்கறுபட்ட முன்னோர்கள்!
 ................................................................
தமிழ் திரையுலகம் கொண்டாடும் அருவி!
 ................................................................
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 ................................................................
சோழர்கள் ஆட்சியில் உள்ளூர் நிர்வாகத்திடம் வரி வசூலிக்கும் - கல்வெட்டு கண்டுபிடிப்பு
 ................................................................
பெற்றோரை விட சங்கர் ஏன் முக்கியம்?
 ................................................................
ரஜினிக்கு மட்டுமே கிடைத்தவை...
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 10, ஆகஸ்ட் 2017 (15:49 IST)
மாற்றம் செய்த நாள் :10, ஆகஸ்ட் 2017 (16:12 IST)




இன்றைய இளைஞர்களும் அரசியலும்!

ரசியல் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? அரசியல் என்றால் என்ன?

  அரசியல் என்ற வார்த்தையின் ஆங்கில மூலம் பாலிடிக்ஸ் கிரேக்க வார்த்தையாகும். கிரேக்கத்திலும் அது பொலிடிகா என்றே இருந்தது. கிரேக்கப் பேரறிஞர் அரிஸ்டாட்டில் பொலிடிக்கா என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். பொலிடிகா என்றால் நகரங்களின் விவகாரங்களை கவனித்துக் கொள்வது என்று அர்த்தப்படும்.

  பாலிடிக்ஸ் என்றால் சுருக்கமாக ஓரிரு வரிகளில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு நாடு அல்லது ஒரு பகுதியின் நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகளை அரசியல் என்று சொல்லலாம். குறிப்பாக அதிகாரம் வைத்திருக்கிற குழுக்கள் இடையிலான விவாதங்களையும் அரசியல் எனலாம். ஒரு அமைப்புக்குள் ஒருவர் தன்னுடைய அந்தஸ்த்தையும் அதிகாரத்தையும் வளர்த்துக்கொள்ள மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் அரசியல் எனலாம்.

  இன்றைய இளைஞர்களில் ஒரு பகுதியினர் பேசும் அரசியல் சில ஆண்டுகளுக்கு முந்தைய அரசியலாக இருக்கிறது. பெரும்பாலும் திராவிட அரசியலை மட்டுமே இவர்கள் விமர்சிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே அரசியல் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. பொய்களும், புனைச்சுருட்டுகளும், துரோகங்களும், அரவணைப்புகளும், ஆள்கடத்தல்களும், போட்டிகளும், பொறாமைகளும், கொலைகளும், கொள்ளைகளும் நிறைந்ததாகவே அரசியல் தொடர்கிறது.

  நேர்மை, நீதி, தூய்மை என்பதெல்லாம் அரசியலில் சாத்தியமானதே இல்லை. தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யலாம் என்பதே உலக அரசியலின் அடிப்படையாகிவிட்டது.

  இதுகுறித்து ஒரு வரலாற்றுக் குறிப்புகளுடன் கூடிய விவரங்களை இன்றைய இளைஞர்களுக்கு தருவதே இந்த தொடரின் நோக்கம்...

  உலக அரசியல் இருக்கட்டும். முதலில் நமது தமிழ்நாடு அரசியலைப் பற்றி அறிந்துகொள்வோம் என்றால், எங்கிருந்து தொடங்குவது? என்ற குழப்பச் சுழலில் சிக்கி மூச்சுத் திணறி வெளியே வர சில நாட்கள் ஆகின. பிறகு தமிழ்நாடு என்றால் அதன் எல்லை என்பதை முடிவு செய்வதிலும் சிக்கல். அந்தச் சிக்கலில் சிக்கி அதில் இருந்து மீள தொல்காப்பிய பாயிரம் உதவியது.

  தமிழ்கூறும் நல்லுலகத்தின் எல்லையை அந்தப் பாயிரம் வரையறுத்திருந்தது. ஆனால், அந்த நூலில் குறிப்பிட்ட எல்லையை படித்தால், அது நிச்சயமாக தமிழ்கூறும் நல்லுலகமாக இருந்திருக்குமா? என்பதிலும் சந்தேகம் உருவானது.

 அந்த வரிகள் இவைதான்...

 வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து என்கிறார் பனம்பரனார். தொல்காப்பிய நூலுக்கு இவர் எழுதிய முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

  இந்த பாயிரத்தில் உள்ள வடவேங்கடம் என்பது விந்திய மலைகளைக் குறிப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், அதுவரையா தமிழ்கூறும் நல்லுலகம் விரிந்திருந்தது? என்பதுதான் முதல் சந்தேகம்.

எனினும் களப்பிரர்கள் காலத்தில் தமிழ்நாட்டின் வரைபடம் ஒன்று கிடைத்தது. அது கிட்டத்தட்ட இந்தச் சந்தேகத்தை தீர்ப்பதாக இருந்தது. அந்தக் குழப்பத்திலிருந்து முதலில் விடுபடுவோம். அரசியலுக்குள் நுழைவோம்...


 ன்னர்கள் காலத்திலும், மன்னர்களை அடிமைப்படுத்திய பிரிட்டிஷார் காலத்திலும் நிலவிய அரசியலை இன்றைய இளைஞர்கள் நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டும்.

  பிரிட்டிஷார் காலத்தில் அறிமுகப்படுத்திய நவீன அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரம் நடைமுறைக்கு வந்த காலத்திலும், விடுதலைக்கு பிந்தைய காலத்திலும் எத்தகைய அரசியல் இருந்தது என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும். அவற்றை அவர்கள் சுருக்கமாக அறிந்துகொண்டால் அவர்களுடைய அரசியல் பார்வை தெளிவு பெறும்.

  ஆனால்இவர்கள் அதைப்பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள விரும்புவதாகவே தெரியவில்லை. இன்றைய இளைஞர்கள் தமிழை முன்னிறுத்துகிறார்கள். ஆனால், தமிழை நன்றாக பேசவும் எழுதவும்கூட அக்கறை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

  இது தகவல் தொழில்நுட்ப உலகம். குறிப்பாக இன்று எத்தகைய நிகழ்வுகளும் 10 வினாடிகளுக்கு மேல் நிலைக்காது என்ற அளவுக்கு அடுத்தடுத்த நிகழ்வுகள் வரிசைகட்டி நிற்கின்றன. எவ்வளவு பரபரப்பான செய்தியும் 10 வினாடியில் மறந்து போய் அடுத்த பரபரப்புக்கு நம்மை தயாராக்கி விடுகின்றன.

  ஆனால், இன்றைய இளைஞர்களில் ஒரு பகுதியினர், நவீன தகவல் தொடர்பு கருவிகளை கையில் வைத்துக்கொண்டு பழைய காலத்திற்கு பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

  அத்தகைய இளைஞர்கள் தங்களை ஆண்ட பரம்பரை என்று பெருமை பேசுகிறார்கள். சாதிப்பெருமை பேசுகிறார்கள். அதேசமயம் உலகின் மூத்தகுடி தமிழ்குடி என்றும் பேசுகிறார்கள். கல்தோன்றி மண் தோன்றி முன் தோன்றாக் காலத்தே என்று பெருமைகளை நீட்டி முழக்குகிறார்கள்.

  அத்தகைய இளைஞர்களுடன் இந்த தொடர் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறது. இந்தத் தொடரில் வெளியாகும் வரலாற்றுக் குறிப்புகளில் அவர்கள் முரண்பட்டால் அவர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்து வாதாடலாம்.

  தமிழ்ச்சங்க காலத்திலிருந்தே தமிழ் நிலமோ, தமிழ் மன்னர்களோ ஒற்றுமையாக இருந்திருக்கிறதா என்பதிலிருந்தே இந்தத் தொடர் தொடங்குகிறது.

  மன்னர்கள் காலத்தில்கூட தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு தனியாக ஒரு மன்னர் இருந்ததாக குறிப்புகள் இல்லை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ் மன்னர்கள் என்று இலக்கியங்களில் ஒரு சில வரிகளில் தகவல்கள் வருகின்றன.

  கடல் கொண்ட தென் மதுரையைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட காய்சின் வழுதி என்ற பாண்டிய மன்னர் முதல் சங்கத்தை தொடங்கினார். அவர் தொடங்கி, கடுங்கோன் என்ற பாண்டிய மன்னர் முடிய 89 அரசர்கள் 4440 ஆண்டுகள் இந்தச் சங்கத்தை நடத்தியதாக இறையனார் களவியல் உரை என்ற நூல் கூறுகிறது.

  அதன்பிறகு கபாடபுரத்தை தலைநகராகக் கொண்டு வெண்தேர்ச் செழியன் என்ற பாண்டிய மன்னன் இடைச்சங்கத்தை தொடங்கினான். இந்தச் சங்கம் 3700 ஆண்டுகள் நடத்தப்பட்டது. முடத்திருமாறன் என்ற பாண்டிய மன்னனோடு மொத்தம் 59 மன்னர்கள் இந்தச் சங்க காலத்தில் ஆட்சி செய்தனர்.

  கபாடபுரமும் கடலால் அழிந்தது. அதன்பிறகு தற்போதுள்ள மதுரையில் கடைச்சங்கம் எனப்படும் மூன்றாம் சங்கம் தொடங்கப்பட்டது. கபாடபுரம் கடலால் அழிந்தபோது அங்கிருந்து உயிர்பிழைத்து வந்த கடைசி மன்னன் முடத்திருமாறன் இந்த சங்கத்தை தொடங்கினான்.

  இந்தச் சங்கம் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி முடிய 49 மன்னர்களால் 1850 ஆண்டுகள் நடத்தப்பட்டது. அதாவது கி.பி.2ம் நூற்றாண்டு வரை இந்தக் கடைச்சங்கம் நடைபெற்றிருக்கிறது.

  இந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மை? அதற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லை. கி.பி.8ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இறையனார் களவியல் உரை என்ற நூல்தான் இந்தத் தகவல்களை கூறுகிறது.

 இடைப்பட்ட காலத்தில் ஒரு அரசியல் நாடகம் அரங்கேறியதை இந்த நூல் சொல்லவில்லை.

 அது என்ன நாடகம் என்று அறிய விருப்பம் ஏற்படுகிறதா?

 (வரும் திங்கள்கிழமை வரை காத்திருங்கள்)

- ஆதனூர் சோழன் 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :