Add1
logo
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்) || தினகரன் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு || நாளை ஆளுநரை சந்தித்து முறையிடுகிறோம்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் || தியானத்தில் ஈடுபட்டுள்ள 18 எம்.எல்.ஏக்கள்! || தினகரனுக்கு காய்ச்சல்! || ஜெ. நினைவிடத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தியானம்! || ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ்!(படங்கள்) || ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் தினகரன் || பதவியேற்ற அன்றே கோட்டையில் ஓபிஎஸ் வாரிசுகள்! || கீரமங்கலம் பகுதியில் காய்ச்சல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதி || பொது இடத்தில் தனது காலை பிடித்துவிட கூறிய விருத்தாசலம் எம்.எல்.ஏ. || அதிமுக அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கு ஆபத்தானது: பிரகாஷ் காரத் பேட்டி || கமல் கருத்து : திருமா ஆதரவு ||
சிறப்பு செய்திகள்
காட்டிக்கொடுக்கும் அரசியல்!
 ................................................................
சென்னை டி.நகர் உஸ்மான் சாலையின் கதை!
 ................................................................
ஒரு ஜி.பியின் உண்மை மதிப்பு???
 ................................................................
உலகின் முதல் குடியாட்சித் தலைவர்கள்!
 ................................................................
'டன்கிர்க்' பேசிய உண்மைகள்!!!
 ................................................................
இந்தியப் பிரிவினை வலிகள்... ஒரு ஃப்ளாஷ்பேக்!
 ................................................................
தமிழ்ச் சங்கம் டூ காவிச் சங்கம் - பகுதி 2
 ................................................................
அன்புத் தம்பியின் அந்திம நாட்கள்!!
 ................................................................
மர்ம மாத்திரை! சோதனை எலிகளான பெண்கள்..!
 ................................................................
கண்முன்னே இறந்த குழந்தைகள்: கடைசி வரை போராடிய மருத்துவர்!
 ................................................................
ஏம்மா, இதெல்லாம் ஒரு வேலையாமா...???
 ................................................................
பெண் ஓர் உடமை என்பது போல ஓர் மனப்போக்கு தான் இருந்து வருகிறது - நிர்மலா பெரியசாமி..!
 ................................................................
அணுகுண்டு சொம்புடன் அமெரிக்க நாட்டாமை ட்ரம்ப்!
 ................................................................
தனிப்பிரிவல்ல.. ஆணவக்கொலைகளைத் தடுக்கும் சிறப்பு சட்டமே தீர்வு!
 ................................................................
106 ஆண்டுகள் பழமையான பழ கேக் உண்ணும் நிலையில் கண்டுபிடிப்பு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 9, ஆகஸ்ட் 2017 (17:3 IST)
மாற்றம் செய்த நாள் :9, ஆகஸ்ட் 2017 (17:25 IST)


"இரவு நேரத்தில் பெண் தனியே போகக்கூடாது என்றால், ஆண்கள் போகலாமா?" பாஜகவுக்கு சவுக்கடி கேள்வி"ராத்திரி நேரத்தில் அந்த பொண்ணு ஏன் தனியே காரில் போச்சு?"

ஹரியானா மாநில பாஜக துணைத்தலைவர் இப்படிக் கேட்கிறார்.

"என்னைக் கேட்கிறாரே, அந்த ராத்திரியில் பாஜக தலைவரின் பையன் ஏன் காரில் போனார்? ஒருபக்கம் பெண்களுக்கு அதிகாரத்தை பிரித்துக் கொடுக்கனும்னு பேசுறது, மறுபக்கம் இப்படி பெண்களை கேவலப்படுத்துவது சரியா?"

என்று கேட்கிறார் வர்னிகா. ஹரியானா ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மகளான 29 வயது வர்னிகா தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நியாயம் கேட்டு பகிரங்கமாக களம் இறங்கியிருக்கிறார்.

ஹரியானா பாஜக மட்டும் அல்லாமல், அகில இந்திய அளவிலும் பாஜகவின் முகத்திரையை கிழிக்கும் வகையில் இந்த வழக்கு வேகம் பிடித்திருக்கிறது.

ஆகஸ்ட் 4ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 29 வயது வர்னிகா தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, அவருடைய காரை ஒட்டி ஹரியானா பாஜக தலைவர் சுபாஷ் பராலா என்பவரின் மகன் 23 வயது விகாஷும் அவருடைய நண்பர் ஆசிஷ்சும் தங்கள் காரில் வந்தனர்.

அவர்கள் இருவரும் தங்கள் காரை வர்னிகாவின் கார்மீது இடிப்பது போல பலமுறை அச்சுறுத்தி கடந்தனர். 

ஒருமுறை அவர்கள் வர்னிகாவின் காருக்குள் தாவப்போவது போலவும், அவரை இழுத்து வெளியே போடப்போவது போலவும் பயங்காட்டினார்கள்.

குறுகலான ரோடுகளில் நுழையும்படி வர்னிகாவின் காரை திசைதிருப்பினர்.

இந்த சேசிங் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம்வரை நீடித்தது. வர்னிகாவின் போனைத் தொடர்ந்து வந்த போலீஸ் அவர்களை இடை மறித்தது. அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் வெளியே விட்டனர்.

இதையடுத்து, தனக்கு நேர்ந்தது தொடர்பாக வர்னிகா தனது முகநூலில் ஒரு பதிவிட்டார்.

இவருடைய தந்தை ஐஏஎஸ் அதிகாரி என்பதால் அந்த பதிவு வைரலாக பரவியது. அரசியல் கட்சிகளின் கவனத்தையும், மகளிர் அமைப்புகளின் கவனத்தையும் கவர்ந்தது.

பாஜக தலைவரின் மகன் என்பதால் போலீஸ் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

உடனே, தமிழகத்தில் சொல்வதைப் போல, சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என்று போலீ்ஸ் கூறியது.

ஆனால், சிசிடிவி பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாக அதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, வர்னிகா தனது மகளைப் போன்றவர் என்று பாஜக தலைவர் சுபாஷ் பாசத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், பாஜக துணைத்தலைவரோ, அந்த இரவு நேரத்தில் அந்தப் பெண் ஏன் வெளியில் காரில் தனியாகப் போனார் என்று கேட்டார்.

அவர் அப்படி கேட்டது பெரிய சர்ச்சையை உருவாக்கியது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும்போது, பெண்கள் மீதே தவறு சொல்வது பாஜக தலைவர்களுக்கு வழக்கமாகிவிட்டது என்று அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், காங்கிரஸ் மகளிர் சங்கம் உள்ளிட்டவையும் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. 

இதையடுத்து சிசிடிவி காட்சிகள் கிடைத்திருப்பதாகவும், நேரில் பார்த்த போலீஸ் சாட்சிகள் இருப்பதாகவும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று விகாஷுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த சம்மன்களை அவருடைய வீட்டில் யாரும் வாங்கவில்லை. இதையடுத்து சம்மன்களை வீட்டுச் சுவற்றில் ஓட்டி வந்தனர்.

இந்நிலையில், விகாஷின் நண்பர் விசாரணைக்கு வருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதனிடையே, இந்த வழக்கில் வெளிப்படையாக பங்கேற்பது ஏன் என்று வர்னிகாவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது...

முதலில் இந்த தகவலை நான் எனது முகநூலில் போட்டேன். உடனே பாதிக்கப்பட்டது நான்தான் என்று எனது நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். அதற்குள் அந்தப் பதிவு வைரலாகிவிட்டது. இதற்கு பின்னரும் நான் என்னை ஒளித்துக் கொள்ள விரும்பவில்லை. நல்லவேளை நான் ஒரு அதிகாரியின் மகளாக இருந்தேன். இதுவே ஒரு சாமானிய பெண்ணாக இருந்தால் இந்த வழக்கு இப்படி சூடு பிடித்திருக்குமா என்பது சந்தேகம்தான். நல்லதொரு முடிவு கிடைக்கும்வரை நான் ஒளிய மாட்டேன் என்றார்.

துணிச்சலான பெண்தான்.

இந்தக் கட்டுரை எழுதி முடிக்கப்பட்ட சமயத்தில் விகாஷை அரியானா போலீஸ் கைது செய்தது.

-ஆதனூர் சோழன்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : arabuthamilan Country : Bahrain Date :8/13/2017 12:21:47 PM
பெண் என்பவள் பெண்ணாகத்தான் இருக்கவேண்டுமே ஒழிய ஆண்களைப்போல ஜீன்ஸ் போட்டால் ஆண்களைப்போல மாறமுடியாது. எவ்வளவுதான் பெண்ணுரிமை கிடைத்தாலும் தான் தோன்றித்தனமாக நடக்கக் கூடாது. பாஜக துணைத்தலைவர் கேட்டதில் தவறேதுமில்லை. எதற்கு ஆண் துணை இல்லாமல் அந்த பெண் வெளியே சென்றாள் . அதுவும் ராத்திரியில்? ஆணுக்காக படைக்கப் பட்டவள்தான் பெண். பெண்ணுக்காக படைக்கப்பட்டவன் ஆணல்ல என்பதை பெண் சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும். மேலை நாட்டு பெண்கள் மாதிரி திறந்த மேளமாக ஒரு பெண் திரியக் கூடாது. நமக்கென்று ஒரு கலாச்சாரம், பண்பாடு உள்ளது அதன்பாடு நடந்து கொண்டால் யாருக்கும் பாதிப்பு இல்லை. . ஆண்கள் மட்டும் வெளியே போகலாமா என்று குதர்க்கமாக பேசக்கூடாது. மாலை சாய்ந்ததும் தனியே ஒரு பெண் வெளியே போய்விட்டு வந்து விட்டு குத்துதே குடையுதே என்று கத்துவது ஏன்.
Name : Superusa Country : United States Date :8/13/2017 10:28:49 AM
முதலில் ஆண்கள் மூலம் வரும் சாதியை இல்லாமல் செய்ய வேண்டும். அப்படியே சாதி வேண்டும் என்றால் தாய் மூலம் பிள்ளைகளை அடையாள படுத்த வேண்டும். சினிமாவில் வீரன், சூரன் என்று பீல்ட் ஆப் செய்வதை ஆதிக்க சாதி, ஆதிக்க சாதி என்று ஒழித்துக்கட்டுவதை போல ஆண் ஆதிக்க சக்தியை ஒழித்து கட்டவேண்டும். கோயில்களில் லிங்கத்தை பிடுங்கி எறிய வேண்டும். தேவதாசி முறையை ஒழித்துக்கட்டியது போல அவர்கள் ஆடிய சதிர் ஆட்டம் இன்று வஞ்சகமாக பெயர் மாற்றம் செய்து இருக்கும் பரதநாட்டியம், மோஹினி ஆட்டம், குச்சுப்பிடி , ஒடிசி நடனங்களை தடை செய்ய வேண்டும். வேசிகள் அங்கே பாடும் கர்நாடக இசை தடை செய்ய வேண்டும். கோனார்க் கோயில், கஜுராஹோ கோயில், லிங்கம் இருக்கும், அத்தனை கோயிலும் குழந்தைகள் போக கூடாத இடமாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் பெண்களை சரியாக நடத்துவது எப்படி என்று ஆண்களுக்கு சொல்லி தர முடியும். ஊரு, நாகரீகம், மறைகள் அனைத்தும் பெண்களை கேவலப்படுத்தி கொண்டு இருக்கும்போது, அங்கே இருக்கும் ஆண்கள் எப்படி நல்லவனாக இருப்பானுங்க?
Name : தான்தோன்றிபுலவர் Country : Taiwan, Province of China Date :8/10/2017 10:21:30 AM
"ஒருவன் எவ்வளவு பெரிய அகசாயச் சூரனாக இருந்தாலும் (மறந்தும் பிறன்கேடு சூழற்க என்றதுபோல்) கதம்ப வண்டு கூட்டில் மறந்தும் கைவைக்கக் கூடாது என்பது மட்டுமல்ல, ஒரு தனி கதம்ப வண்டைக்கூட காரிருளிலும் காரினுள்ளிருந்தும்கூட விரட்டிச் செல்லக்கூடாது!" என்பதே மேற்கண்ட கதை (செய்தி) கூறும் உண்மையாகும்!