Add1
logo
அம்மா இருசக்கர வாகனம் - 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் || தலைமுறை மறந்த வாழ்த்து அட்டைகள் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள் || நீதிமன்ற புறக்கணிப்பு எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது: உயர்நீதிமன்ற நீதிபதி || ஆண்களைக் காப்பாற்றும் ஆபத்து விளக்குகள்! - பெண்களிடம் பரவிவரும் புதிய ட்ரெண்ட் || மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்! || பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி! || எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி || கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையை காட்டுகின்றது: செந்தில் பாலாஜி || கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் - பேருந்துக் கட்டண உயர்வு! வேல்முருகன் கண்டனம்! || கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்! || மாவட்டத்துக்கு 7 லட்சம் உறுப்பினர்கள்.. ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் பேட்டி || மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!! || சென்னையில் ரூ.50 ஒருநாள் பாஸ் விநியோகம் நிறுத்தம்! ||
தமிழகம்
அம்மா இருசக்கர வாகனம் - 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
 ................................................................
தலைமுறை மறந்த வாழ்த்து அட்டைகள் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள்
 ................................................................
நீதிமன்ற புறக்கணிப்பு எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது: உயர்நீதிமன்ற நீதிபதி
 ................................................................
ஆண்களைக் காப்பாற்றும் ஆபத்து விளக்குகள்! - பெண்களிடம் பரவிவரும் புதிய ட்ரெண்ட்
 ................................................................
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி!
 ................................................................
கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையை காட்டுகின்றது: செந்தில் பாலாஜி
 ................................................................
கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் - பேருந்துக் கட்டண உயர்வு! வேல்முருகன் கண்டனம்!
 ................................................................
மாவட்டத்துக்கு 7 லட்சம் உறுப்பினர்கள்.. ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் பேட்டி
 ................................................................
சென்னையில் ரூ.50 ஒருநாள் பாஸ் விநியோகம் நிறுத்தம்!
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி 11வது நாள்!
 ................................................................
பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்!
 ................................................................
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்!
 ................................................................
வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா!
 ................................................................
66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்!
 ................................................................
டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்!
 ................................................................
தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா
 ................................................................
தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி!
 ................................................................
முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!
 ................................................................
மெரினாவில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் அமைக்க பொன்ராஜ் வலியுறுத்தல் (படங்கள்)
 ................................................................
பறக்கும் இரயில் தண்டவாளத்தில் சிக்கிய எருமைகளை மீட்டுக்கும் பணியில் 'புளு கிராஸ்' (படங்கள்)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (18:54 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (18:54 IST)


கமலஹாசனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படும்:DYFI

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விடுத்துள்ள அறிக்கை:

’’கடந்த 12 ஜூலை 2017 அன்று நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக தமிழகத்தின்  எல்லா துறையிலும் ஊழல் மற்றும் லஞ்சம் நிலவுகிறது என தெரிவித்தார்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஓட்டுபோட்டுதான் அரசாங்கத்தை தேர்வு செய்கின்றனர். ஆக ஓட்டுபோட்ட குடிமகன் என்ற உரிமையில் அரசாங்கத்தை பற்றி விமர்சனம் செய்வதற்கு கமல் உட்பட அனைத்து குடிமகனுக்கும் உரிமை உண்டு. மக்கள் அரசாங்கத்தின் மீது குற்றசாட்டை கூறினால் அதை சரிசெய்வதுதான் ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமையாக இருக்க முடியும். 

அதைவிடுத்து இந்திய சினிமாவின் மிக சிறந்த கலைஞர்களில் ஒருவரான கமலை ஒருமையில் பேசுவது, கைது செய்வேன் என மிரட்டுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது மட்டுமல்லாமல் ஏதேச்சதிகாரமானது. 

தமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள குட்கா விற்பனை செய்வதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டு உள்ளது, 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக அமைச்சர் சரோஜா மீது குற்றச்சாட்டு உள்ளது, ஆர்.கே.நகர் தேர்தலில் பணம் கொடுத்த குற்றச்சாட்டில் முதல் அமைச்சர் உட்பட பல அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. இன்னும் கிரானைட், தாது மணல் என கமல் குறிப்பிட்டது போல என அனைத்து மட்டதிலும் ஊழல் நிலவுவது உண்மையே.

இந்த ஊழல் குறித்தான குற்றச்சாட்டை நியாயமாக விசாரித்து குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் அரசாங்கத்தின் மீது விமர்சனம் செய்பவர்களை மிரட்டுவதை அதிமுக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும், இல்லை எனில் தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக கமலஹாசனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துகொள்கிறோம்.’’


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :