Add1
logo
ஸ்ரீஹரிகோட்டாவிற்கு ராட்சத பாய்லர்; மின் இணைப்பை நிறுத்தக்கோரி வழக்கு; டான்ஜன்கோ பதிலளிக்க உத்தரவு || நீதிமன்றம் உத்தரவிட்டும் மருத்துவ இடம் வழங்காத கல்லூரி- நீதிபதிகள் கண்டனம் || அண்ணா பல்கலைகழகத்தில் முறைகேடு நடந்தாக கூறி சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி || மக்களை போட்டுத் தாக்கும் எடப்பாடி அரசு! || பாக்கெட் தண்ணீர் வேண்டாம்! நெடுவாசலில் தண்ணீரைக் கொட்டி போராடிய மக்கள்! (படங்கள்) || அம்பேத்கரை தரக்குறைவாக விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிய என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகடாமி விஜயலையன்! || ஓ.பி.எஸ் நிலத்தில் வில்லங்கம் பார்க்க கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை! || ஊக்கத்தொகை கொடுக்காமல் மருத்துவக் குழுவைப் புலம்பவிடும் மாவட்ட நிர்வாகம்! || எப்போதும் உங்கள் விசுவாசி! எடப்பாடி தூது! || பான்பராக், குட்கா மொத்த விற்பனையைத் தடுக்க வேண்டும்: விக்கிரமராஜா மனு || மாணவி வளர்மதி பிரச்சனையில் அரசு இன்னும் சிந்தித்து முடிவு எடுத்திருக்கலாம்: ஓ.பி.எஸ் || தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதா எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை: நிர்மலா சீதாராமன் || திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் மாணவர்களும் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைப்பு! ||
தமிழகம்
ஸ்ரீஹரிகோட்டாவிற்கு ராட்சத பாய்லர்; மின் இணைப்பை நிறுத்தக்கோரி வழக்கு; டான்ஜன்கோ பதிலளிக்க உத்தரவு
 ................................................................
நீதிமன்றம் உத்தரவிட்டும் மருத்துவ இடம் வழங்காத கல்லூரி- நீதிபதிகள் கண்டனம்
 ................................................................
அண்ணா பல்கலைகழகத்தில் முறைகேடு நடந்தாக கூறி சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
 ................................................................
பாக்கெட் தண்ணீர் வேண்டாம்! நெடுவாசலில் தண்ணீரைக் கொட்டி போராடிய மக்கள்! (படங்கள்)
 ................................................................
அம்பேத்கரை தரக்குறைவாக விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிய என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகடாமி விஜயலையன்!
 ................................................................
ஓ.பி.எஸ் நிலத்தில் வில்லங்கம் பார்க்க கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை!
 ................................................................
ஊக்கத்தொகை கொடுக்காமல் மருத்துவக் குழுவைப் புலம்பவிடும் மாவட்ட நிர்வாகம்!
 ................................................................
பான்பராக், குட்கா மொத்த விற்பனையைத் தடுக்க வேண்டும்: விக்கிரமராஜா மனு
 ................................................................
திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் மாணவர்களும் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைப்பு!
 ................................................................
பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு என்று மாநில உரிமையை அமைச்சரே விற்பதா? அன்புமணி கண்டனம்
 ................................................................
கட்சியினரின் காலை பிடிக்கும் அமைச்சர்!
 ................................................................
எம்.எல்.ஏ., பழனியப்பனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன்!
 ................................................................
மலேசியாவில் உலக தமிழ் இணைய மாநாடு
 ................................................................
ரசிகர்களுக்கு கமல் புதிய உத்தரவு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ஆகஸ்ட் 16ம் தேதி விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
ராம்நாத் கோவிந்துக்கு விஜயகாந்த் வாழ்த்து
 ................................................................
வியாசர்பாடி பெண்களிடம் 26 சவரன் நகை பறிப்பு
 ................................................................
குமரியில் 51 பேருக்கு டெங்கு காய்ச்சல்
 ................................................................
திமுகவுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை, கமல்ஹாசன் போன்றவர்களை யாராலும் இயக்க முடியாது - கனிமொழி
 ................................................................
செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தை மூடும் மத்திய அரசுக்கு த.மு.எ.க.ச. கண்டனம்
 ................................................................
167 வருட மருத்துவமனைக்கு பூட்டு? நாம் தமிழர் போராட்டம்
 ................................................................
நாளை திமுக விவசாய அணியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
 ................................................................
கீரமங்கலத்தில் பொதுமக்கள் திரண்டதால் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை!
 ................................................................
தோழியை கொலை செய்த பெண் போலீஸ் விசாரணையில் தற்கொலை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (18:40 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (18:40 IST)



மனிதக் கழிவுகள் மனிதர்களே அகற்றுவது மனித உரிமை மீறல்: 2 வாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு


மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது மனித உரிமை மீறல் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த சபாய் கர்மாச்சாரி அந்தோலன் அமைப்பு தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  "மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த தடை விதித்து 2013-ல் மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இச்சட்டத்தின் கீழ் மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சென்னை, திருவள்ளூர், கடலூர், மதுரை, திருச்சி, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் கழிவு நீர் தொட்டிகளில் இறங்கி கழிவுகளை அகற்றிய போது 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும் நகர்புறங்களில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் 363 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடைமுறை ஒழிக்கப்பட்டு விட்டதாக கூறுவது காகித அளவிலேயே இருக்கிறது. எனவே மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும். அந்த பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோர் மீது வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு முழு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு, மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது இந்திய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 21 படி  மனித உரிமை மீறல் என்று கருத்து தெரிவித்தது. மேலும்  இதற்கு தடை விதித்து நிறைவேற்றப்பட்ட சட்டம் அமல்படுத்தப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும்  உத்தரவிட்டது.  இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் 2 வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.

- ஜீவாபாரதி

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :