Add1
logo
அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் || பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி || ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி || இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: எடப்பாடி மீது தினகரன் தாக்கு || பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! || ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம் || நொய்யல் கழிவுகள்: சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சரை நீக்குக! ராமதாஸ் வலியுறுத்தல் || வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளால் தான் ஆற்றில் நுரை வருகிறது: அமைச்சர் கே.சி.கருப்பணன்! || ரூ.50 லட்சம் பணத்தை வேறு ஒருவர் கணக்கில் வரவு வைத்த மெர்கண்டைல் வங்கி மேலாளர் கைது..! || அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை! || ஆதார் இணைப்பின் மூலம் அப்பாவிகளின் பணம் பறிக்கப்படுவதை அனுமதிக்கலாமா? ராமதாஸ் கேள்வி || 2 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்றவர் கைது! || ஜெ.,வை பார்த்ததாக, இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன் ||
முக்கிய செய்திகள்
ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி
 ................................................................
இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: எடப்பாடி மீது தினகரன் தாக்கு
 ................................................................
பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
 ................................................................
ஆதார் இணைப்பின் மூலம் அப்பாவிகளின் பணம் பறிக்கப்படுவதை அனுமதிக்கலாமா? ராமதாஸ் கேள்வி
 ................................................................
ஜெ.,வை பார்த்ததாக, இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்
 ................................................................
உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கான தடை நீக்கம்
 ................................................................
TOP 10 நிகழ்வுகள் - 22/09/17
 ................................................................
வைரலாக பரவும் விஜயகாந்த் செல்ஃபி
 ................................................................
700 ஆண்டுகளுக்கு முன் சீனா சென்ற மலையாளிகள்!
 ................................................................
திமுகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியை அழித்துவிடுவேன் என மிரட்டுகிறார் தினகரன்: வசந்தி முருகேசன்
 ................................................................
அழுவதா... சிரிப்பதா? என்பதே தெரியவில்லை: அன்புமணி
 ................................................................
நீட் தேர்வில் விலக்கு பெறும் வரை அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிபதி கிருபாகரன் அதிரடி
 ................................................................
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். விஜயபாஸ்கர்: ரூ.89 கோடி பணப்பட்டுவாடா: சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
 ................................................................
பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற சோனியா கோரிக்கை!
 ................................................................
டிடிவி தினகரனுக்கு ஆதரவான எம்பி பழனிசாமியுடன் சந்திப்பு
 ................................................................
பிரதமர் மோடியின் திட்டத்துக்கு ஆதரவு: ரஜினிகாந்த்
 ................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
 ................................................................
பாஜக அதிகாரத்தில் இருப்பதால் மாநில சுயாட்சிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது: பினராயி விஜயன்
 ................................................................
திருப்பூர்: கார் பள்ளத்தில் விழுந்ததில் 5 பேர் பலி!
 ................................................................
திருவேற்காட்டில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (18:36 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (18:36 IST)


விளையாட்டில் சேர மறுத்த மாணவியை
 தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியைகள்! 



திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளபட்டி மேட்டுப்பட்டியிலிருந்து செம்பட்டி செல்லும் சாலையில் உள்ளது தேவாங்கர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் செம்பட்டி அருகே உள்ள ஆத்துமேட்டை சேர்ந்த மூவேந்திரன் என்பவர் மகள் சுகன்யா 6ம் வகுப்பில் சேர்ந்து இன்று 9ம் வகுப்பு படித்து வருகிறார். வாலிபால் விளையாட்டு வீராங்கனையான இவர் கடந்த 2 மாதமாக சரிவர பயிற்சிக்கு வராமல் விளையாட்டில் ஆர்வம் இல்லாமலும் படிப்பின் மீது அக்கறையாகவும் இருந்துள்ளார். தேவாங்கர் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு ஆசிரியைகள் சசி, (கோகிலா), ரம்யா கோபமடைந்து மாணவி சுகன்யாவை திட்டியுள்ளனர். ஒருமாத காலமாக மாணவி சுகன்யாவை விளையாட்டு ஆசிரியைகள் தொடர்ந்து வாலிபால் விளையாட்டில் சேர்ந்து பள்ளிக்காக விளையாட வேண்டுமென கூறியுள்ளனர். மேலும் மாணவி சுகன்யாவை பள்ளி மாணவர்கள் மத்தியில் தகாத வார்த்தையாலும், உனக்கு என்னடி அவ்வளவு கொழுப்பா? விளையாட வரமாட்டேனு சொல்ற என்று திட்டியதோடு பள்ளி மாற்றுச்சான்றிதழ் (டி.சி). கொடுப்பதாகவும் மிரட்டியுள்ளனர்.



 இதனால் மனமுடைந்த மாணவி சுகன்யா தனது அம்மா மற்றும் அப்பாவிடமும் பள்ளியில் நடந்தவற்றையும், பள்ளி விளையாட்டு ஆசிரியைகள், வகுப்பு ஆசிரியை திட்டியதையும் கூறியுள்ளார். பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியரிடம் கேட்ட போது தலைமையாசிரியை வினாயகஜெயந்தி உங்கள் மகள் சுகன்யா கண்டிப்பாக விளையாட வேண்டும் இல்லை என்றால் 9ம் வகுப்பு தேர்வில் உங்கள் மகளை தேர்வில் தோழ்வி அடைய செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். அதற்கு சுகன்யாவின் பெற்றோர்கள் டி.சியை கொடுத்துவிடுங்கள் நான் எனது மகளை வேறு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறேன் என கண்ணீர் விட்டு கேட்டுள்ளார். 

பெற்றோர் முன்னிலையில் விளையாட்டு ஆசிரியை சசி கையில் வைத்திருந்த பிரம்பால் மாணவியை கையில் அடித்துள்ளார். அதன் பின்பு பள்ளி தலைமையாசிரியை மற்றும் மற்றொரு விளையாட்டு ஆசிரியையான ரம்யா மற்றும் வகுப்பு ஆசிரியையான பிரேமலதாவும் சேர்ந்து மாணவியை தகாத வார்த்தையால் ஒருமையில் திட்டியுள்ளனர். இதனால் மனம் நொந்த சுகன்யாவின் தகப்பனார் மூவேந்தரன் டி.சி.யை கொடுத்தால் கொடுங்கள் இல்லை என்றால் நாளை முதல் என் மகள் பள்ளிக்கு வரமாட்டார் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அதன் பின்பும் மாணவி சுகன்யா செய்த செய்முறைத்தேர்வை (பிராக்டிக்கல்) குறை சொல்லி மாணவர்கள் மத்தியில் அசிங்கமாக திட்டியுள்ளனர். மாணவி சுகன்யா தற்கொலை செய்யும் அளவிற்கு மாணவியின் மனநிலை பாதிக்கும் அளவிற்கு திட்டியுள்ளனர். 

இதனால் மாணவி அருகில் உள்ள பாழும் கிணற்றில் (பட்டிமன்ற பேச்சாளர் ஐ.லியோனிக்கு சொந்தமான கிணறு) குதித்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக மாணவி பிழைத்தாலும் இடது கால் எலும்பு முறிந்தும், வலது கை எலும்பு முறிந்தும் தண்டுவட எலும்பில் பாதிப்படைந்தவாறு கிணற்றில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிந்தவுடன் மாணவி சுகன்யாவை காப்பாற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில்தான் எலும்பு முறிவுக்கு பிளேட் பொறுத்த முடியும் என கூறி மாணவியை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர். இது குறித்து பத்திரிக்கையாளர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்த போது அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என கூறி முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல் மறைத்துள்ளனர்.

 கிராமத்தினர் ஒன்று திரண்டு போய் செம்பட்டி காவல்நிலையத்தை முற்றுகையிடவே உடனடியாக காவல்நிலைய சார்பு ஆய்வாளர் சுமதி மற்றும் காவலர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று மாணவி சுகன்யா கொடுத்த வாக்குமூலத்தை அவருடைய மாமா ஜோதிபாஸ் என்பவர் மூலம் புகாராக பெற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் பள்ளி தலைமையாசிரியை வினாயகஜெயந்தி, வகுப்பு ஆசிரியை பிரேமலதா, விளையாட்டு ஆசிரியைகள் சசி (கோகிலா), ரம்யா ஆகியோர் மீது 294பி, 323, 506(1), 109 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தவுடன் விளையாட்டு ஆசிரியைகள், தலைமையாசிரியை, வகுப்பு ஆசிரியை ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இது குறித்து நாம் பள்ளியில் விசாரிக்கையில் பள்ளி ஆசிரியைகளில் பலர் இம்மாதிரி மாணவிகளை பலமுறை திட்டியுள்ளனர்.



 கடந்த 2010ம் வருடம் இதே பள்ளியில் பள்ளி மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து அது மூடி மறைக்கப்பட்டுள்ளது. இம்முறை கூட மாணவி சுகன்யா உயிர் பிழைத்ததால்தான் பள்ளியில் நடக்கும் கொடூரம் வெளியில் வந்துள்ளது. மாணவிகள் சிலர் கூறுகையில் தலையை நன்றாக சீவி பள்ளிக்கு வந்தால் பள்ளியின் தலைமை ஆசிரியை உட்பட ஆசிரியைகள் நீ இந்த மாதிரி அலங்காரம் செய்து வந்து கர்பமாகிவிட்டால் நாங்கள்தான் உங்கள் பெற்றோருக்கு பதில் சொல்ல வேண்டும் என கூறி தலையை கலைத்துவிடுவார்களாம். இது தவிர செய்முறை தேர்வு மற்றும் சரியானபடி தேர்வு எழுதாவிட்டால் மண்டி போட்டு மன்னிப்பு கேட்க வைப்பது, வகுப்பறை வெளியே மன்டி போட வைப்பது போன்ற கொடூரமான தண்டனைகளை கொடுப்பார்களாம். 

பெண்களுக்கு எதாவது விபத்தோ, கொடூரமான சம்பவங்கள் நடந்தால் போட்டி போட்டுக்கொண்டு பேட்டி கொடுக்கும் மாதர் சங்கங்கள் இம்மாதிரி பள்ளி மாணவிகளுக்கு பள்ளியில் நடக்கும் கொடூரங்கள் குறித்து ஏன் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. விளையாட்டு விபரீதமானது போல விளையாடச்சொல்லி ஒரு மாணவியின் உயிரோடு விளையாடிய தேவாங்கர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியைகள் மீது உயர்ந்தபட்ச தண்டனை கொடுத்து மாணவிகளின் உயிர் நலம் காக்க வேண்டுமென பெற்றோர்கள் விரும்புகின்றனர். 

இது குறித்து மாணவி சுகன்யா நம்மிடம் கூறுகையில் எனக்கு ஏற்பட்டது போல் இனி அந்த பள்ளியில் எந்த ஒரு மாணவிக்கும் ஏற்பட கூடாது. தமிழக அரசும், கல்வித்துறை அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். உயிர் இருந்தும் உடல் அசைவு இல்லாமல் கிடக்கும் மாணவியின் புகார் குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது வழக்கம் போல் வாங்குவதை வாங்கிக்கொண்டு குற்றம் செய்த ஆசிரியைகளை காப்பாற்றுவார்களா?

-சக்தி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :