Add1
logo
ஸ்ரீஹரிகோட்டாவிற்கு ராட்சத பாய்லர்; மின் இணைப்பை நிறுத்தக்கோரி வழக்கு; டான்ஜன்கோ பதிலளிக்க உத்தரவு || நீதிமன்றம் உத்தரவிட்டும் மருத்துவ இடம் வழங்காத கல்லூரி- நீதிபதிகள் கண்டனம் || அண்ணா பல்கலைகழகத்தில் முறைகேடு நடந்தாக கூறி சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி || மக்களை போட்டுத் தாக்கும் எடப்பாடி அரசு! || பாக்கெட் தண்ணீர் வேண்டாம்! நெடுவாசலில் தண்ணீரைக் கொட்டி போராடிய மக்கள்! (படங்கள்) || அம்பேத்கரை தரக்குறைவாக விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிய என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகடாமி விஜயலையன்! || ஓ.பி.எஸ் நிலத்தில் வில்லங்கம் பார்க்க கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை! || ஊக்கத்தொகை கொடுக்காமல் மருத்துவக் குழுவைப் புலம்பவிடும் மாவட்ட நிர்வாகம்! || எப்போதும் உங்கள் விசுவாசி! எடப்பாடி தூது! || பான்பராக், குட்கா மொத்த விற்பனையைத் தடுக்க வேண்டும்: விக்கிரமராஜா மனு || மாணவி வளர்மதி பிரச்சனையில் அரசு இன்னும் சிந்தித்து முடிவு எடுத்திருக்கலாம்: ஓ.பி.எஸ் || தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதா எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை: நிர்மலா சீதாராமன் || திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் மாணவர்களும் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைப்பு! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (15:50 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (16:19 IST)


பசுவின் ‘பஞ்சகவ்ய’த்தை ஆய்வுசெய்ய ஆராய்ச்சிக்குழு!

‘பசு சேவகர்கள் எனச் சொல்லிக்கொண்டு அப்பாவிகளைத் தாக்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பிரதமர் மோடி வலியுறுத்தும் அளவிற்கு, நாட்டில் கடந்த சில மாதங்களாக பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல அப்பாவிகள் தாக்கப்பட்டு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் மாட்டின் ‘பஞ்சகவ்யம்’ குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.



பஞ்சகவ்யம் எனப்படுவது மாட்டின் சிறுநீர், சாணம், பால், பாலிலிருந்து பெறப்படும் நெய் மற்றும் தயிர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள். இந்த பஞ்சகவ்யம் விவசாயம், மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் இதர பயன்பாடுகளுக்கு உகந்தது என இந்து மதத்தினரால் பரவலாக நம்பப்படுகிறது. மாட்டின் பயன்கள் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் அதன் பஞ்சகவ்யத்தை ஆய்வு செய்ய இந்தக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

19 பேர் கொண்ட இந்தக்குழுவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளை அமைப்பான வி.எச்.பி அமைப்பைச் சேர்ந்த மூவர் இடம்பெற்றுள்ளனர். ‘நேசனல் ஸ்டீரிங் கமிட்டி’ எனப் பெயரிடப் பட்டிருக்கும் இந்தக்குழுவில் டெல்லி ஐஐடியைச் சேர்ந்த ராம்கோபல் ராவ், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் மன்ஷேல்கர், நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர் விஜய் பட்கர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக்குழுவிற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமை தாங்குவார்.

அடுத்த மாதம் இந்தக்குழுவிற்கான முதல் கூட்டம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக்குழுவின் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ச.ப.மதிவாணன்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :