Add1
logo
அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் || பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி || ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி || இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: எடப்பாடி மீது தினகரன் தாக்கு || பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! || ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம் || நொய்யல் கழிவுகள்: சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சரை நீக்குக! ராமதாஸ் வலியுறுத்தல் || வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளால் தான் ஆற்றில் நுரை வருகிறது: அமைச்சர் கே.சி.கருப்பணன்! || ரூ.50 லட்சம் பணத்தை வேறு ஒருவர் கணக்கில் வரவு வைத்த மெர்கண்டைல் வங்கி மேலாளர் கைது..! || அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை! || ஆதார் இணைப்பின் மூலம் அப்பாவிகளின் பணம் பறிக்கப்படுவதை அனுமதிக்கலாமா? ராமதாஸ் கேள்வி || 2 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்றவர் கைது! || ஜெ.,வை பார்த்ததாக, இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன் ||
முக்கிய செய்திகள்
ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி
 ................................................................
இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: எடப்பாடி மீது தினகரன் தாக்கு
 ................................................................
பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
 ................................................................
ஆதார் இணைப்பின் மூலம் அப்பாவிகளின் பணம் பறிக்கப்படுவதை அனுமதிக்கலாமா? ராமதாஸ் கேள்வி
 ................................................................
ஜெ.,வை பார்த்ததாக, இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்
 ................................................................
உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கான தடை நீக்கம்
 ................................................................
TOP 10 நிகழ்வுகள் - 22/09/17
 ................................................................
வைரலாக பரவும் விஜயகாந்த் செல்ஃபி
 ................................................................
700 ஆண்டுகளுக்கு முன் சீனா சென்ற மலையாளிகள்!
 ................................................................
திமுகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியை அழித்துவிடுவேன் என மிரட்டுகிறார் தினகரன்: வசந்தி முருகேசன்
 ................................................................
அழுவதா... சிரிப்பதா? என்பதே தெரியவில்லை: அன்புமணி
 ................................................................
நீட் தேர்வில் விலக்கு பெறும் வரை அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிபதி கிருபாகரன் அதிரடி
 ................................................................
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். விஜயபாஸ்கர்: ரூ.89 கோடி பணப்பட்டுவாடா: சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
 ................................................................
பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற சோனியா கோரிக்கை!
 ................................................................
டிடிவி தினகரனுக்கு ஆதரவான எம்பி பழனிசாமியுடன் சந்திப்பு
 ................................................................
பிரதமர் மோடியின் திட்டத்துக்கு ஆதரவு: ரஜினிகாந்த்
 ................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
 ................................................................
பாஜக அதிகாரத்தில் இருப்பதால் மாநில சுயாட்சிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது: பினராயி விஜயன்
 ................................................................
திருப்பூர்: கார் பள்ளத்தில் விழுந்ததில் 5 பேர் பலி!
 ................................................................
திருவேற்காட்டில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (15:7 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (15:7 IST)



எங்கள் போராட்டம் விளம்பரமா? அமைச்சர் செல்லூர் ராஜூக்கு நெடுவாசல் மக்கள் கண்டனம்!



புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இரண்டாம் கட்டமாக 97வது நாளாக தொடர் நூதனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி போராட்டத்தை விரிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று 97வது நாள் போராட்டத்தில் தே.மு.தி.க மாநில துணைச் செயலாளர் புதுக்கோட்டை ஜாகிர், மா,செ. ராமசாமி, ஒ.செ. ராஜகுமாரன் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



விஜயகாந்த் வருகை:


நெடுவாசல் போராட்டத்திற்கு முதல் முறையாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் 23ந் தேதி வர உள்ளார். அதற்காக பொதுக் கூட்டம் நடத்த இடம் பார்க்க வந்த மாநில துணைச் செயலாளர் ஜாகிர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. தமிழகத்தில் மக்களை பாதிக்கும் எந்த பிரச்சனைக்கும் மக்கள் பக்கம் தலைவர் விஜயகாந்த் நிற்பார். அந்த அடிப்படையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் விவசாயம், குடிதண்ணீர் பாதிப்புகளும் நோய் பாதிப்புகளும் வரும் என்று மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 23ந் தேதி விஜயகாந்த் நெடுவாசல் வருகிறார். அன்றே நெடுவாசலில் பிரமாண்ட பொதுக் கூட்டமும் நடக்க உள்ளது. மத்திய மாநில அரசுகள் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.

அமைச்சருக்கு கண்டனம்:
     
நெடுவாசல் போராட்டக் களத்தில் இருந்து தொடர்ந்து போராடி வரும் பெண் விவசாயி மலர்மணி செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது,
           
எங்கள் போராட்டம் வாழ்வாதார போராட்டம் எங்கள் மண்ணையும் விவசாயத்தையும் காக்க வேண்டும் என்பதால் தான் எங்கள் வேலைகளைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் எங்கள் போராட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பேஷன் போராட்டம் என்றார். அதற்கு அப்போதே கண்டனம் தரிவித்தோம் ஆனால் நேற்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராசுவும் எங்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியுள்ளது வேதனை அளிக்கிறது. அவருக்கு கடும் கண்டனத்தை சொல்லிக்கிறோம்.

அமைச்சரே.. நீங்க அணைக்கு தெர்மோகோல் போட்டு மூடினதை பார்த்து உலகமே  சிரிச்சது. அப்படியான நீங்க எங்கள் போராட்டத்துக்கு ஊடகங்கள் 10 வரலன்னா போராட்டமே முடிஞ்சுடும் என்றும் போராடுறவங்க விளம்பரத்துக்காக போராடுறாங்கன்னும் சொல்றீங்களே உங்களுக்கே வெட்கமா இல்லையா?
 
போராட்டக்களத்துக்கு வந்து பாருங்க எங்க மக்கள் படும் வேதனையை.. மூச்சுக்கு மூச்சு அம்மாவின் ஆட்சி அம்மாவின் ஆட்சின்னு சொல்றீங்களே அதை சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கு.. மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீங்க அமைச்சரே.. என்று கண்டனத்தை பதிவு செய்தார். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பேச்சால் நெடுவாசல் போராட்டக்களம் மேலும் சூடுபிடிக்கிறது.

- இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : MUTHU Date :7/17/2017 5:55:59 PM
இப்டியே போனால் மக்கள் புரட்ச்சி வெடிக்கும்