Add1
logo
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு! || கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் || இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல் || கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்! || வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்! || பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் || விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின் || பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு || ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்! || கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்! || மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன் || அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்? ||
சிறப்பு செய்திகள்
பேங்கிலிருந்து ஃபோனா?
 ................................................................
நேதாஜிக்கும், காந்திஜிக்கும் என்னதான் பிரச்சனை?
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு, சாமானியனுக்கு சறுக்கல் - கதறும் தமிழகம்
 ................................................................
பெண்கள் சக்தியை புறக்கணிக்கிறதா திமுக?
 ................................................................
அனுமன் பாலம் கட்டுவதை நம்புவோம்!
 ................................................................
பாஜகவுக்கு ஆதரவான பிரகாஷ்காரத் தீர்மானம்?
 ................................................................
"கீழடி நம் தாய்மடி" -சு.வெங்கடேசன்
 ................................................................
அவதூறு பரப்பக் கூடாது:
 ................................................................
42 பேர் கண்தானம், 35 பேர் உடல் உறுப்புதானம்!
 ................................................................
பஸ் கட்டண உயர்வா, கொள்ளையா?
 ................................................................
“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
 ................................................................
விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை!
 ................................................................
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 15, ஜூலை 2017 (17:46 IST)
மாற்றம் செய்த நாள் :15, ஜூலை 2017 (17:55 IST)


உண்மையாக நடப்பதா, முன்பே  எழுதப்பட்டதா... கமல் பேசியது சரியா இல்லையா... கலாச்சார சீர்கேடா, மக்களை முட்டாளாக்கும் செயலா... பரணி நல்லவரா, காயத்ரி கெட்டவரா...   இப்படி, கேள்விகளும் எதிர்ப்புகளும் சேர்ந்து 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கான கவனிப்பை அதிகரித்து வருகின்றன. ஒரு புறம் நிகழ்ச்சியின் உண்மைத்தன்மை, கலாச்சார பாதிப்பு போன்றவற்றைப்  பற்றிய பேச்சுகள் பரபரப்பாக இருக்க, மறுபுறம் இது போன்ற 'ரியாலிட்டி ஷோ'க்கள் தொடர்ந்து பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தும் அகமாற்றங்களும் கவலைக்குரியவையே... முக்கியமாக, குழந்தைள் மனதிலும் அறிவிலும்  இது போன்ற நிகழ்ச்சிகள் விட்டுச்செல்லும் எண்ணங்கள், விளைவுகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள புகழ்பெற்ற மனநல நிபுணரும் மிகுந்த சமூக அக்கறை உடையவருமாகிய  டாக்டர் ஷாலினி அவர்களை அணுகினோம். ஏற்கனவே ஐரோப்பா, லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வுகள், இதுபோன்ற நிகழ்ச்சிகள் குழந்தைகளை சோம்பேறிகளாகவும், நிதர்சனங்களைப் புரிந்துகொள்ளாதவர்களாகவும் மாற்றுவதாக தெரிவித்தன.  இந்நிலையில் இதைப்பற்றிய  டாக்டர் ஷாலினியின் கருத்துகள்   'பிக்பாஸ்'  பார்ப்பவர்களை மட்டுமல்லாமல் பங்குபெறுபவர்களையும் எச்சரிப்பதாக இருக்கின்றன.   


இன்று, மக்களின் பொழுதுபோக்குகளில் 'ரியாலிட்டி ஷோ'க்களுக்கு முக்கிய இடம் இருக்கிறது. மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும்,  இந்த வகை நிகழ்ச்சிகளும்  ஏற்படுத்தும் தாக்கத்தில்  வித்தியாசம் இருக்கிறதா?          

கண்டிப்பாக... மற்ற நிகழ்ச்சிகளுக்கும் 'ரியாலிட்டி ஷோ'க்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம், இவை உண்மையாக நடப்பதாக நம்பவைக்கப்படுவதே. ஒரு நாள் பார்க்காவிட்டாலும்  முக்கியமான ஒன்றைத் தவறவிட்ட உணர்வு ஏற்படுமாறு, தினமும் ஏதாவது ஒன்றை வைத்து, பார்ப்பவர்களை அடிமையாக்குவார்கள். தொலைக்காட்சியில் தவறவிட்டால் யூட்யூபிலோ, மறு ஒளிபரப்பிலோ பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அலுவலகங்களில் கூட  தங்கள் வீட்டில் நடந்ததைப் பற்றி பேசுவது போல சீரியஸாக பேசிக்கொள்கிறார்கள். இப்படி அடிமையாகியிருப்பதே தெரியாமல் அடிமையாகுவதுதான் மிக ஆபத்தானது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிக மிக அவசியமானது.
உங்களிடம் ஆலோசனைக்கு வருபவர்களிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பாதிப்பு இருக்கிறதா?

முழுமையாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் மட்டுமே மனம் பாதிக்கப்பட்டது என்று யாருமில்லை. ஆனால், ஆலோசனைக்கு வருபவர்கள், பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இவர் இப்படி பேசினார், இது என்னை பாதித்தது என்று கூறுகிறார்கள். இப்படியான பாதிப்பைத்தான் நிகழ்ச்சிகளை நடத்தும் முதலாளிகள் விரும்புகிறார்கள். அதுதான் அவர்களுக்கு லாபமென்பதால் நிகழ்ச்சிகளை அப்படித்தான் வடிவமைக்கிறார்கள். இதை உணர்ந்து விலகிச் செல்வதுதான் நமக்கு நல்லது. ஆனால் பலரும் தெரிந்தே அதில் விழுவது சோகமான விஷயம்.     
பிக்பாஸ் - இப்பொழுது அதிகமான கவனத்தை ஈர்த்திருக்கும் நிகழ்ச்சி. பிரபலமானவர்களின்  தனிப்பட்ட வாழ்க்கையை காட்டுகிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த நிகழ்ச்சி, போட்டியாளர்களை தனிமைப்படுத்தி உறவினர்களைப் பார்க்கவிடாமல் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகத்தான் பார்க்கிறேன். ரெண்டாவதாக அங்கு இருப்பவர்கள், இத்தனை கேமரா இருக்கும்பொழுது, என்ன பேசவேண்டும், பேசக்கூடாது என்ற விவஸ்தையில்லாமல் பேசுவதால் வெளியில் பல விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இவ்வளவு கவனம் இந்த நிகழ்ச்சிக்கு தேவையேயில்லை. இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் ஒரு விஷயம் தெரிகிறது. ஏழ்மையிலிருந்து வந்தவர்கள் சற்று அடக்கிவாசித்தும் அடங்கிப்போவதுமாய் இருக்கிறார்கள். பெரிய பணக்காரர்கள் இல்லையென்றாலும், போன தலைமுறையில் சம்பாதித்தவர்கள் அல்லது ஏதோ ஒரு வகையில் அந்தஸ்து உள்ளவர்கள், தங்களுக்கு பெரிய அதிகாரம் இருப்பது போல் நடந்துகொள்வது மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. பிறரை இழிவாகப் பேசுகிறார்கள். இது மனித நாகரீகத்துக்கே எதிரானது. நம் வீட்டில் குழந்தைகள் இப்படி பேசினாலே கண்டிக்கவேண்டும். அப்படியிருக்க, உலகமே பார்க்கும் என தெரிந்தும் இப்படி பேசுவது, அவர்களுக்கு விவரம் பத்தவில்லையா இல்லை, அந்த அளவுக்கு ஆதிக்க எண்ணம் உடையவர்களா என்ற விவாதத்துக்கு உள்ளாகிறது. இன்னொரு கோணத்தில் பார்த்தால், இவர்களெல்லாம் இப்படி பேசக்கூடியவர்கள் என்பதே இந்த நிகழ்ச்சி மூலம்தான் தெரிய வந்திருக்கிறது. பெரியார் போன்றவர்கள் ஏற்படுத்த நினைத்த சமூக மாற்றம் முழுதாய் நிகழவில்லை  என்பதையே இது காட்டுகிறது. இன்னும் சமூகமாற்றத்துக்கு உழைக்க வேண்டியிருக்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.இதெல்லாம் ஆரோக்கியமான பொழுதுபோக்குதானா ?

இப்போ எல்லாருமே பொதுவாகவே, 'நாம ரொம்ப டயர்டா இருக்கோம், ஸ்ட்ரெஸ்ஸா இருக்கோம். இந்த மாதிரி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பாத்தா ரிலாக்ஸ் ஆகிவிடுவோம்' என்று நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. ஏற்கனவே நம்ம சமூகம் மிகவும் சோம்பேறியாக இருக்கு. உலகத்திலேயே இந்தியர்கள் தான் சோம்பேறிகள்னு ஆராய்ச்சிகள் சொல்லுது. அதிகம் படிக்காமல், கேள்வி ஞானம் இல்லாமல்,  எதையும்  புதிதாக அறிந்துகொள்ள ஆர்வம் காட்டாத ஒரு தலைமுறையாக உருவாகியுள்ளோம்.  இப்படி இருக்கும்போது, ஒரு பதினைஞ்சு பேர் சும்மா வெட்டியா உக்காந்துகிட்டு, என்ன சாப்பிடறாங்க, பேசுறாங்க, விளையாடுறாங்கனு தெரிந்துகொள்ள நாம் தினமும் தொலைக்காட்சி பார்ப்பது நம்  மனவளத்துக்கு ஏற்பட்ட சீர்கேடுதான்.  இந்த நிகழ்ச்சியை கலாச்சார சீர்கேடுனு சொன்னா, நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். இது நம் மனவளத்துக்கு ஏற்பட்ட சீர்கேடு. இது போன்ற நிகழ்ச்சிகளை பெரியவர்களோ சிரியவர்களோ  பார்ப்பதென்பது, வாழ்க்கை என்பது என்ன, எத்தனை போராட்டங்களும் செயல்பாடுகளும் தேவை, எழுந்து, நடந்து, ஓட வேண்டியதன் அவசியத்தையெல்லாம் உணராமல் வீணாக கழிப்பதென்றே அர்த்தம்.


ஐரோப்பாவிலும் லண்டனிலும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளால், குழந்தைகளின் எண்ண ஓட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டதாக ஆராய்ச்சிகள் கூறியிருக்கின்றன. நம் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட பாதிப்புகள் வரக்கூடுமா?

ஏற்கனவே வரத் தொடங்கிவிட்டது. குழந்தைகள் 'பிக்பாஸ்' என்ற வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். பெரியவர்கள் கூட, 'உன்னை  பிக்பாஸ் மாதிரி கண்காணிக்கணும்' என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி, இந்த ஒரு மாசத்திலேயே விளைவுகள் நடக்க ஆரம்பிச்சிருச்சு. மற்ற நாடுகளில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு, குழந்தைகள் பார்க்கக்கூடியது எது, பெரியவர்கள் துணையுடன் பார்க்கவேண்டியது எது என  கோட்பாடு உண்டு. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்பொழுதே ஓரத்தில் அந்த குறிப்பு இருக்கும். நம்ம நாட்டுல பெற்றோர்கள் கண்டிக்காத எல்லாத்தையும் குழந்தைகள் பார்க்கலாம் என்பது போலத்தான் இருக்கு. பெற்றோர் தான் ஒரே கட்டுப்பாடு. இது போன்ற நிகழ்ச்சிகளை முன்வைத்தாவது அது போன்ற கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும். இந்த  நிகழ்ச்சிகள் மோசமானவை தான் என்றாலும், அவற்றை இந்த விதத்திலாவது நாம் பயன்படுத்திக்கொள்ள  வேண்டும்.    

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருமே ஒருவரை ஒருவர் புறம் பேசுகிறார்கள்... மனிதர்களின் அடிப்படை  பொதுக்குணம்  இதுதானா?

பொதுவாக மனிதர்களின் தன்மை என்பது,  நிறைய பேர் இருக்கும்பொழுது எதையும் பொருட்படுத்தாமல்,  'நமக்கான சுதந்திரமும், இடமும் இருந்தால் போதும்' என்று இருப்பதாகும். அதுவே குறைவான ஆட்களுடன் இருக்கும்பொழுது, 'நமக்கு பொறுப்பு இருக்கிறது, இங்கு எடுத்து செய்ய ஆளில்லை' என்று நினைப்போம். இது இரண்டுக்கும் இடைப்பட்டு, பதினைந்து பேருடன் இருக்கும்பொழுது, அங்கு 'நான் தான் அதிக வல்லமை படைத்தவன் என்று நிரூபிக்கும் எண்ணம் ஏற்படும். மேலும், அங்கு நூறு நாட்கள் இருப்பவருக்குதான் வெற்றி, அதிக பணம் என்ற நிலையில் மற்றவர்களை எப்படியாவது வெளியேற்றுவது தான் ஒவ்வொருத்தருக்கும் 'மாஸ்டர் பிளானாக' இருக்கும். அந்த போட்டி உணர்வு தான் புறம் பேசவைக்கிறது.இந்த நிகழ்ச்சி உண்மையென்றால், உள்ளே இருப்பவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? வெளியே அவர்களைப் பற்றி என்ன காண்பிக்கப்படுகிறது என்று தெரியாமல் இத்தனை நாட்கள் இருந்துவிட்டு வெளியே வரும்பொழுது எப்படியிருக்கும் அவர்களுக்கு?

அதுவும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை. நூறு நாட்களும் இருப்பவருக்கு  பெரிய பிரச்சனை இருக்காது. ஏனெனில், அவர் தான் வெற்றிபெற்றவர் என்பதால், வெற்றியும் பரிசும் ஆறுதல் தரும். ஆனால், இடையிலேயே தோற்று வெளியே வரும்பொழுது, வெளியே நடக்கும் மீம்ஸ், ட்ரோல், கேலிகள், கிண்டல்கள்  அனைத்தையும் பார்த்து தாங்கிக்கொள்ள சாதாரண மனவலிமை உள்ளவரால் முடியாது. இயல்பான மனிதர்களுக்கு இது மனமுறிவு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அங்குள்ள மற்ற போட்டியாளர்கள் நட்பாக நடந்துகொண்டால் கூட பரவாயில்லை. ஆனால், அங்கு நடப்பதைப் பார்க்கும்போது, டீம் டீமாய் பிரிந்துகொள்வது , ஒருவரை அத்தனை பேரும் குறிவைத்துப் பேசுவது எல்லாம்  நடக்கிறது. இதையெல்லாம் தாண்டி வெளியேற்றப்படுபவர் வெளியே எதிர்கொள்ளும் கேலிகளும் கேள்விகளும் அவரை கண்டிப்பாக பாதிக்கும். அப்படி ஏற்படும் மன உளைச்சலுக்கு யார் பொறுப்பு? தற்சமயம் வெற்றிகரமாக இருக்கும் யாரும் இத்தகைய சவாலை ஏற்கவில்லை. வாய்ப்புகள் இல்லாதவர்களே இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைத்து இந்த ரிஸ்க்கை எடுத்திருக்கிறார்கள்.

 - ஃபெலிக்ஸ் இன்பஒளி 
 - வசந்த் பாலகிருஷ்ணன்  

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : pathman Country : United States Date :7/17/2017 7:58:07 PM
தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் ரியாலிட்டி ஷோ களை விடவா இந்த நிகழ்ச்சி பாதிப்பை ஏற்றப்படுத்தும்.இதெல்லாம் பொறாமை.இந்த டாக்ரர் எதற்று இந்த ஷோ வை பாற்கணும்.வாங்கிய பணத்துக்காக பேசுறா.
Name : anonymous Date :7/17/2017 12:20:21 PM
குழந்தைகளுக்கு பெயின்டிங். மியூசிக் , டான்ஸ், outdoor games இவைதான் ஆரோக்கியமான பொழுதுபோக்குகள். எப்போதாவது கார்ட்டூன்கள் தரமான சினிமாக்கள் அனுமதிக்கலாம். அதிகமாக டிவி பார்ப்பது குழந்தைகளின் thinking skills ஐ பாதிக்கிறது. நிறைய பெற்றோர்கள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு டிவி இணைப்பையே வீட்டில் தவிர்த்து விடுகிறார்கள். பிக்பாஸ் பற்றி பத்திரிகைகளில் படிக்கும் போதும் பார்க்கும் ஆவலை ஏற்படுத்தவில்லை. டிவி சீரியல்கள் போல் இதுவும் ஒன்று. அவ்வளவுதான். நடிப்பவர்களுக்கு அது தொழில். சம்பளம் வாங்குகிறார்கள். நடிக்கிறார்கள்.ஆனால் குழந்தைகளை மனநிலை பாதிக்கும் படியான வயதுக்கு மீறிய நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதிப்பது பெற்றோரின் தவறு. பெற்றோர் பொறுப்பில்லாமல் ignorant ஆக இருப்பார்கள் என்பதால் தான் வெளிநாடுகளில் அரசாங்கமே கோட்பாடுகளை ஏற்படுத்தி கொடுக்கும்.மக்கள் அதை follow பண்ணினால் மட்டுமே போதுமானது. நம் நாட்டில் அதெல்லாம் இல்லை. யாராவது பொறுப்புள்ளவர்கள் அறிவுரை கூறினால் கூட பல திசைகளில் இருந்தும் அவருக்கு எதிரான கண்டன குரல்கள் வரும். சொன்னவர் மன்னிப்பு கேட்டு தன் கருத்தை வாபஸ் வாங்கும் வரை.
Name : Rangarajsubbanaidu Country : United States Date :7/17/2017 2:30:52 AM
மொத்தத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இதெல்லாம் நமக்கு தேவையா நம்ம முதுகிலே இருக்கிற பரத்தேயே ஏறக்கமுடியாமே இருக்கிறோம் 15 மொக்கைகளோட சமாச்சாரம் நமக்கெதுக்கு Vijay டிவி. தான் குறை சொல்லணும் புதுசு புதுசுன்னு கண்ட காசுமாலங்களையெல்லாம் காட்ட ஆரம்பிச்சுட்டாங்க
Name : anand Country : United States Date :7/15/2017 10:24:59 PM
I don't know why Shalini is going to Vijay TV programs if she thinks the same. I am getting mentally affected when I hear these kind of doctors. What to do? Which doctor should I approach. Just make the money and go. Don't talk about moral values as if you are the sinless and absolute form of purity without any bias.