Add1
logo
“எங்க பரம்பரை சொத்துக்கு பிச்சைபோட அதிமுக அமைச்சர்களுக்கு தகுதி இல்லை” -கொந்தளித்த ஜெ. தீபா || பொறிகடலை தின்னமுடியாத பொக்கவாய்களைக் கொண்டு கூட்டம் நடத்தும் எடப்பாடி - நாஞ்சில் சம்பத் || நல்லவர் யார்? கெட்டவர் யார்? என மக்கள் தெரிந்துகொள்வார்கள்: தங்கதமிழ்ச்செல்வன் || நான் முட்டுக்கட்டையாக இல்லை: கே.பி.முனுசாமி || மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிக்கை || ஓரிரு தினங்களில் நல்ல முடிவு எட்டப்படும்: ஓ.பி.எஸ். பேட்டி || “கேன்சர் கட்டி” இந்த எடப்பாடி அரசு! வெட்டி எறிய வேண்டும் அதனை! வேல்முருகன் கடும் தாக்கு || ஜெ. இல்லம் நினைவிடமாக மாற்றும் பணிகள் தொடக்கம் || மைத்ரேயனுக்கு மக்களவை துணைத்தலைவர்? || சுப்பிரமணிய சாமியின் பகடைக்காய் யார்? || விசாரணை நடைபெற்றால்? || தாமிரபரணியில் தண்ணீர் மாஃபியாக்கள்! || உயிரை வதைக்கும் அயனாவரம் மனநல மருத்துவமனை! ||
முக்கிய செய்திகள்
“எங்க பரம்பரை சொத்துக்கு பிச்சைபோட அதிமுக அமைச்சர்களுக்கு தகுதி இல்லை” -கொந்தளித்த ஜெ. தீபா
 ................................................................
பொறிகடலை தின்னமுடியாத பொக்கவாய்களைக் கொண்டு கூட்டம் நடத்தும் எடப்பாடி - நாஞ்சில் சம்பத்
 ................................................................
ஓரிரு தினங்களில் நல்ல முடிவு எட்டப்படும்: ஓ.பி.எஸ். பேட்டி
 ................................................................
மைத்ரேயனுக்கு மக்களவை துணைத்தலைவர்?
 ................................................................
சுப்பிரமணிய சாமியின் பகடைக்காய் யார்?
 ................................................................
விசாரணை நடைபெற்றால்?
 ................................................................
தாமிரபரணியில் தண்ணீர் மாஃபியாக்கள்!
 ................................................................
உயிரை வதைக்கும் அயனாவரம் மனநல மருத்துவமனை!
 ................................................................
கோயில்களை சிதைக்கும் தமிழக அறநிலையத்துறை!
 ................................................................
ஒரே நாளில் 3 அணிகளும் ஏற்படுத்திய பரபரப்பு: டிவி, வாட்ஸ்அப்பை விட்டு நகராத மக்கள்
 ................................................................
ஒ,பி,எஸ் , எடப்பாடி அணி பேச்சுவார்த்தை நடக்கிறது; கடம்பூர் ராஜீவ் பேட்டி
 ................................................................
இணைவதில் இழுபறி - மீண்டும் பாஜகவிடம் சென்றுள்ள ஓ.பி.எஸ். தரப்பு
 ................................................................
எடப்பாடி நிபந்தனை: ஓபிஎஸ் அணியில் பலத்த விவாதம்!
 ................................................................
அதிமுக அணிகள் இணைப்பில் இழுபறி ஏன்?
 ................................................................
சசிகலாவின் சீராய்வு மனு ஆகஸ்ட்-22ல் விசாரணை
 ................................................................
நிச்சயம் ஆபரேஷன்களை பார்க்கலாம்: தினகரன் பேட்டி
 ................................................................
நீதி விசாரணை முறையாக நடைப்பெற்றால் எங்களது ஒத்துழைப்பு இருக்கும்: தினகரன் பேட்டி
 ................................................................
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அதிக நன்கொடை பெறும் பாஜக!
 ................................................................
மத்திய சட்டத்துறை அமைச்சருடன் தம்பிதுரை, விஜயபாஸ்கர் சந்திப்பு
 ................................................................
போலீசாரின் கட்டுப்பாட்டில் ஜெயலலிதாவின் வேதா இல்லம் (படங்கள்)
 ................................................................
வேதா நிலைய உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்: அமைச்சர் சி.வி.சண்முகம்
 ................................................................
அணிகள் இணைப்பு குறித்து மாலையில் முடிவு அறிவிப்போம்: ஓ.பி.எஸ்.
 ................................................................
வீடு எங்களுக்கே சொந்தம்: எடப்பாடி பழனிசாமிக்கு ஜெ. அண்ணன் மகன் கடிதம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (17:23 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (17:49 IST)


சிங்கிளாக சிங்கமாக வருவார் ரஜினி: புதிய எம்.பி.க்கள் உருவாகுவார்கள்: அர்ஜுன் சம்பத்



நடிகர் ரஜினிகாந்தை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன்சம்பத், பொதுச்செயலாளர் ராம ரவிக்குமார், இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் இன்று காலை 11 மணிக்கு சந்தித்து பேசினார்கள். சுமார் 45 நிமிடங்கள் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர் வெளியே வந்த அர்ஜுன் சம்பத் கூறியதாவது:-

ரஜினி மக்கள் சேவை செய்வதற்காக நிச்சயம் அரசியலுக்கு வருவார். அரசியலுக்கு வருவதற்கு அவர் முழுமையாக தயாராகி விட்டார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஜினியே வெளியிடுவார். ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு நாங்கள் துணை நிற்போம்.

அரசியலில் மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றத்தை ரஜினியால் ஏற்படுத்த முடியும். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் ரஜினி தமிழக மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார்.

1996-ம் ஆண்டு ‘ஆண்டவனே வந்தாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது’ என்று குரல் கொடுத்து புதிய கூட்டணி உருவாகி ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்தார். தேவையான போதெல்லாம் தமிழக மக்களுக்காக ரஜினி குரல் கொடுத்துள்ளார்.



ரஜினி அரசியலுக்கு வர வேண்டிய தருணம் வந்து விட்டது. ரஜினி அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சிதான் தொடங்குவார். அப்படி வந்தால்தான் அவரால் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். தேசிய நதிகள் பற்றி வற்புறுத்துவதற்காக ரஜினிக்கு எம்.பி.க்கள் ஆதரவு தேவை. அவர் அரசியல் கட்சி தொடங்கினால் அவரது கட்சி சார்பில் புதிய எம்.பி.க்கள் உருவாகுவார்கள்.

டிசம்பர் 12-ந்தேதி அவரது பிறந்த நாள் அன்று ரஜினி அரசியல் பிரவேசத்தை தொடங்குவதாகவும் தகவல் பரவி வருகிறது. இதுபற்றி நாங்கள் அவரிடம் கேட்டபோது, “அரசியலுக்கு வருவது பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறேன் என்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் ரஜினி கூறினார்.

நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே ரஜினியின் எண்ணம். தனிக்கட்சி தொடங்கி அவர் சிங்கிளாக சிங்கமாக வருவார். ரஜினியை பா.ஜனதா இயக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

படங்கள்: எஸ்.பி.சுந்தர்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : logu nathan Date :6/20/2017 8:31:41 PM
சினிமாவில் நடிக்கும்போதே அரசியல் பணியாற்றியவர் எம் ஜி ஆர் . அவர்கள் அதனால் சினிமாவில் நடிக்கும் ஒவ்வொரு ஹீரோ ம் நாட்டை ஆள தகுதியானவர்கள் அல்ல அரசியல் சாதுர்யம் இருக்க வேண்டும் தமிழ்நாடு மக்கள் பலபேர் இன்னும் சினிமா மோகத்தை விட்டு வெளியில் வரவேண்டும் ...இப்போதைக்கு தமிழ் நாட்டை நிர்வகிக்க திரு .ஸ்டாலின் அவர்கள் பெஸ்ட் . அவர் சென்னை மேயராக இருந்தபோது சென்னையில் பல நன்மைகள் செய்தார் யாரும் மறுக்க முடியுமா ...முதலில் சிந்தியுங்கள் பிறகு முடிவு செய்யுங்கள்
Name : Vijay Date :6/20/2017 11:57:02 AM
தலைவர் வராரு, வெற்றி அடையிறாரு. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு தமிழக மக்கள் சேவை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும்.
Name : ஜேம்ஸ் Date :6/20/2017 11:56:27 AM
ரஜினி ஆட்சி தான் இனி தமிழ்நாட்டில். சினிமாவிலும் அவர் தான் சூப்பர் ஸ்டார். அரசியலுக்கும் அவர் தான் சூப்பர் முதல்வர்.
Name : karikalan1 Date :6/20/2017 11:55:36 AM
ரஜினி அரசியலுக்கு வரலாமா என்று யோசிக்கும்போதே இங்க சில பல கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் வயிறு கலக்குது.. வந்தா எப்படி இருக்கும்!! வா ராஜா நீ வா ! கண்டிப்பாக இந்த திராவிட கட்சிகளைவிடவும் ரவுடி கட்சிகளான சீமான் மற்றும் தைலாபுர திண்ணை பேச்சாளரை விடவும் மோசமாக நீர் ஆட்சி செய்யப் போவதில்லை. கண்டிப்பாக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கமே போதும். நாங்கள் இருக்கிறோம், உம்மை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க. தைரியமாக வாருங்கள். வந்து இந்த பாழாய்ப்போன தமிழ்நாட்டு அரசியல்வியாதிகளிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள். காத்திருக்கிறோம்.
Name : அப்துல் அஜீஸ் Date :6/20/2017 11:54:22 AM
ஏழை மக்களின் கடவுள் எங்கள் ரஜினி. பாட்டாளிகளின் தெய்வம் எங்கள் ரஜினி. உழைப்பாளிகளின் தோழன் எங்கள். ரஜினி . மனித புனிதர் ரஜினி ஒருவரால் மட்டுமே சீர்கெட்டு போயிருக்கும் தமிழகத்தை தலை நிமிந்திட செய்ய முடியும். எங்கள் இறைவா வாருங்கள்.
Name : rama subramanian Country : India Date :6/20/2017 10:23:53 AM
நல்லது செய்யுங்க ரஜினிக்கு நல்லது பண்ணனும்னு நினைக்கிறாரு
Name : karikalan1 Country : United Kingdom Date :6/19/2017 6:03:33 PM
அவர் எப்படி வந்தாலும் மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்க போவதில்லை....நான் ரஜினி ரசிகன் ....அவர் படங்களை பார்த்து ரசித்தவன்.....அவருடைய திரையுலக சேவை முடிந்து விட்ட்து....புதிய படங்களை பார்ப்பதில்லை.....வேண்டுமானால் அவர் பெயரை வைத்து புதிய படங்களை ஓடிடலாம்...ஆனால் parka போவது வெறும் வேஸ்ட் .....தாராளமாக வேலை வெட்டி இல்லாதவர்கள் போய் பார்க்கலாம் ....அரசியலுக்கும் அவருக்கும் வெகு தூரம்....சும்மா இவங்க பேச்சை கேட்டு அவர் தன மதிப்பை வீணாக்க போகிறார்....