Add1
logo
சச்சின் சாதனையை சமன் செய்த இளம் வீரர்! || என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன் || ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த சென்னைப் பெண்! || காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் விளையாடாமல் தங்கம் வென்ற வீரர்! || மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய நிர்மலா சீதாராமன்: மு.க.ஸ்டாலின் வேதனை || ‘தோட்டாக்கள் எங்கிருந்து வந்தது என்றே தெரியாது!’ - நிர்மலா சீத்தாராமன் சர்ச்சை கருத்து || என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குத்தான் புரியும்: விஜயகாந்த் || சீனாவின் லட்சிய திட்டத்தை எதிர்க்கும் ஒரே தலைவர் மோடி? || மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் || காங்கிரஸ் உடன் சேர்ந்து இடதுசாரிகள் பா.ஜ.க.வை எதிர்க்கவேண்டும்! - மன்மோகன் சிங் || மூன்றாவது நாளிலும் முடியாத முதல் இன்னிங்க்ஸ் - மழை ஆடும் ஆட்டம்! || ஜெ. பெயரைக் கெடுக்க சசிகலா குடும்பத்தின் சதித்திட்டமே ரெய்டு!- தீபா ஆதங்கம் || போயஸ் கார்டனுக்கு களங்கம் விளைவிப்பது ஏற்புடையதல்ல: தம்பிதுரை ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (22:56 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (22:56 IST)


தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டண நிர்ணயம் 
செய்ய த.வாக. கோரிக்கை  

இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் (ஏ.ஜி.பத்மாவதி) மருத்துவமனையில் கடந்த 7 நாட்களுக்கு முன்பாக சிதம்பரத்தை சேர்ந்த 72 வயது மூதாட்டி தனலட்சுமி என்பவர் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரின் சிகிச்சைக்கு 7 நாட்களுக்கு கட்டணமாக ரூ.2 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் குணமாகாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உள்ள மருத்துவர்களால் நோயாளிக்கு புதுவையில் ஏ.ஜி.பத்மாவதி மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் உடல்நிலை மோசமாக உள்ளதாக அவரின் உறவினர்களிடம் கூறினார்கள். 

மேலும், விசாரித்ததில் அவருக்கு மயக்க நிபுணரால் கொடுக்கப்பட்ட சிகிச்சையில் மயக்க மருந்து அதிகளவில் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. நோயாளிக்கு கல்லீரலில் நீர் சேர்ந்துள்ளதாகவும், அதை வெளியேற்றினால் இரண்டொரு நாளில் நலமாக வீடு திரும்பலாம் எனவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக புதுச்சேரியில் ஒரு சில தனியார் மருத்துவமனைகள் வரும் நோயாளிகளிடமிருந்து நோயாளிகள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களை அனுமதித்துக் கொண்டு அவர்களின் பொருளாதாரத்தை எந்த அளவிற்கு சுரண்டமுடியுமோ அந்த அளவிற்கு பல லட்சங்கள் வரை பிடுங்கிக் கொண்டு அவர்களை குணமாக்காமல் அனுப்பி விடுகிறார்கள். 

மேலும், தமிழகத்தில் இருந்து புதுவைக்கு வரும் நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு வரப்படும் போது இங்குள்ள தனியார் மருத்துவமனைகள் ஒரு சில ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ஒரு தொகையை கமிஷனாக கொடுத்து நோயாளிகளை தங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப் படுகின்றனர். குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு இ.சி.ஆர். சாலையில் பிவெல் மருத்துவமனையில் ரமணா பட பாணியில் இறந்து போனவரை வைத்து பணம் பறித்த சம்பவம் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் வாயிலாக வெளியானது. 

இது சம்மந்தமாக தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டன போரட்டத்தையும் நடத்தியிருக்கிறது. தொடர்ச்சியாக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் நடத்தி வரும் கட்டணக் கொள்ளையை முறைப்படுத்த, தனியார் மருத்துவமனைகளுக்கு அரசே மருத்துவ சிகிச்கைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து காட்சிப்படுத்தவும் வலியுறுத்துகிறோம். மேலும், புதுச்சேரி சுகாதாரத்துறையும், புதுச்சேரி அரசும் உடனடியாக மருத்துவமனைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தகுதியற்ற மருத்துவமனைகளை கண்டறிந்து அவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

_ சுந்தரபாண்டியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : தமிழன் Country : Australia Date :5/19/2017 11:11:41 PM
தொழில் ரகசியம், தொழில் 'தர்மம்' என்றெல்லாம் தனியார் மருத்துவமனை நடத்துபவர்களுக்கு இருக்கிறது. இந்த மருத்துவர்கள் கிராமங்களில் பணி செய்ய மாட்டார்கள். நீட் தேர்வினால் இப்படிப்பட்ட மருத்துவர்கள்தான் பெருகுவார்கள்.