Add1
logo
கலைஞரை தமிழ் ஆசான் என கூறியதற்கு எம்.ஜி.ஆர். எனக்கு வாழ்த்து தெரிவித்தார்: கமல் புகழாரம் || சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு: இன்று வெளியாகிறது || சச்சின் படத்திற்கு மத்திய பிரதேச அரசு வரிவிலக்கு || தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான்களில் ஒருவர் கலைஞர்: கமல் புகழாரம் || தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு || பி.எஃப். பங்களிப்பு குறைக்கும் யோசனையை நிராகரிக்க முடிவு || காப்பகத்திலிருந்து தப்பிய 5 சிறுவர்களை - சிறார் குழுமத்தில் ஒப்படைப்பு || டாஸ்மாக் கடைக்கு தீவைத்த பொதுமக்கள் || துாத்துக்குடியில் 4 வாரம் மின் உற்பத்தி நிறுத்தம் || ரமலான் நோன்பு தொடங்கிய முதல் நாள் கார் குண்டு வெடிப்பில் 18 பேர் பலி || நின்று கொண்டிருந்த கார் மர்மமான முறையில் தீ பற்றி எரிந்ததில் காருக்குள் சிக்கி கொண்ட 3 பேர் பலி || கைதான 18 இந்திய தேசிய லீக் கட்சியினரும் புழல் சிறையில் அடைப்பு || பிரபாகரன் மரணத்திற்கு தமிழக தலைவர்கள் தான் காரணம் பா.ஜ.க மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் குற்றச்சாட்டு ||
தமிழகம்
தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான்களில் ஒருவர் கலைஞர்: கமல் புகழாரம்
 ................................................................
காப்பகத்திலிருந்து தப்பிய 5 சிறுவர்களை - சிறார் குழுமத்தில் ஒப்படைப்பு
 ................................................................
டாஸ்மாக் கடைக்கு தீவைத்த பொதுமக்கள்
 ................................................................
துாத்துக்குடியில் 4 வாரம் மின் உற்பத்தி நிறுத்தம்
 ................................................................
நின்று கொண்டிருந்த கார் மர்மமான முறையில் தீ பற்றி எரிந்ததில் காருக்குள் சிக்கி கொண்ட 3 பேர் பலி
 ................................................................
கைதான 18 இந்திய தேசிய லீக் கட்சியினரும் புழல் சிறையில் அடைப்பு
 ................................................................
பிரபாகரன் மரணத்திற்கு தமிழக தலைவர்கள் தான் காரணம் பா.ஜ.க மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் குற்றச்சாட்டு
 ................................................................
உடுமலை அருகே திருமூர்த்தி அணைக்கு சுற்றுலா சென்ற 2 கல்லூரி மாணவிகள் சேற்றில் சிக்கி உயிரிழப்பு
 ................................................................
பாலத்தின் மீது கார் மோதி விபத்த 4 பேர் பலி
 ................................................................
மாட்டுக் கறிக்கு தடைவிதித்துள்ள மோடி அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது
 ................................................................
ஈ.வி.கே.எஸ் இளங்கோவுக்கு - ஜெ.தீபா கண்டனம்
 ................................................................
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியீடு
 ................................................................
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 4.5 பணம் மற்றும் விலை உயர்ந்த மதுபான பாட்டில்கள் கொள்ளை
 ................................................................
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு ஆர்.எம்.லோதா தலைமையில் குழு
 ................................................................
என்.பெரியசாமி உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் - தொழிலதிபர்கள் அஞ்சலி ( படங்கள்
 ................................................................
மாட்டுக் கறிக்கு தடைவிதித்துள்ள மோடி அரசுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம்
 ................................................................
மாடுகளை விற்க மத்திய அரசு தடை! தனிமனித உரிமைக்கு எதிரானது என எஸ்.டி.பி.ஐ. குற்றச்சாட்டு
 ................................................................
தமிழ்நாடு முழுவதும் ஜூன் 2-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு
 ................................................................
இடிதாக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் நிதி
 ................................................................
கீழடியில் 3-ம் கட்ட அகழ்வராய்ச்சி தொடக்கம்
 ................................................................
பால்தாக்கரே போன்று ரஜினி தனி இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் : அர்ஜூன் சம்பத்
 ................................................................
அக்னி நட்சத்திரம் நாளை முடிகிறது
 ................................................................
விவசாய சங்கங்கள் ஒன்றாக இணைய வேண்டும் - நெடுவாசலில் நடிகர் ஆரி (படம்)
 ................................................................
இறைச்சி விற்பனைக்கு தடை: மத்திய அரசுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம்
 ................................................................
டாக்டர், பொறியாளர் ஆவதைவிட விவசாயி ஆவோம் - நெடுவாசலில் சிறுவர்கள் உறுதி மொழி (படம்)
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (22:40 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (22:40 IST)


ரவுடி காரில் கடத்திக் கொலை
தி.மு.க. பிரமுகர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு

தூத்துக்குடி செயிண்ட் பீட்டர் கோவில் தெருவைச் சேர்ந்த சகாய ராஜாவின் மகன் சச்சின். பெற்றோரை இழந்த சச்சின் தனது பெரியம்மா கேத்லின் பராமரிப்பில் உள்ளவன். வெட்டியாய்த்திரிந்த இவன் பல குற்றங்களில் ஈடுபட்டவன். இவன் மீது சிப்காட், மத்திய பாகம், மற்றும் வட பாகம் காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட சில வழக்குகள் பதிவாகி நிலுவையில் உள்ளன. ரவுடி என்றும் காவல் நிலையக் குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளவன் என்கிறது காவல்துறை தரப்புகள்.



இதனிடையே நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி ஜோதி நகர் பகுதியில் சரமாரியான கத்திக் குத்து மற்றும் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு அலங்கோலமாகக் கிடந்த சச்சினின் உடலை மீட்ட வடபாகம் காவல் ஆய்வாளர் பார்த்திபன் கொலை தொடர்பாக விசாரணை நடத்தினார். அது தொடர்பாக 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுவது. சின்னக்கடை தெருவைச் சேர்ந்த பில்லா ஜெகன் தி.மு.க. பிரமுகர் முன்னாள் இளைஞரணி து.செ. நடிகர் விஜய் மன்றத் தலைவராகவும் உள்ளார். இவரது மகள் நெல்லையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருபவர். தினம் தோறும் அவள் பேருந்தில் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் இவர் கல்லூரிக்குச் செல்லும் போதும், வரும் போதும் பின் தொடர்ந்து செல்லும் சச்சின், அவளைக் கேலியும் கிண்டலும் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். டார்ச்சர் செய்திருக்கிறார். அவனது டார்ச்சர் காரணமாக அந்தப் பெண் மிரண்டு போனதுடன் பீதியில் உறைந்திருக்கிறார். 

ஒரு கட்டத்தில் அவனைக் கண்டித்திருக்கிறாள். சர்ச் ஒன்றில் ஒருவன், ஆசிரியைப் படுகொலை செய்தது போல் உன் தந்தையை வெட்டிக் கொலை செய்து விட்டுக் கூட உன்னைத் தூக்கிக் கொண்டு போய் விடுவேன் என்றும் சச்சின் மிரட்டியிருக்கிறானாம். இதனால் அதிர்ச்சியாகிப் போன அவள் நடந்தவைகளைத் தன் தந்தை ஜெகனிடம் சொல்லிக் கதறியிருக்கிறாள்.

இதையடுத்த கடந்த இரு தினங்களுக்கு முன்பு மட்டக் கடை ஏரியாவில் நின்று கொண்டிருந்த சச்சினை அழைத்த ஜெகன், அவனைக் கண்டித்திருக்கிறார். இதில் வாக்குவாதம் ஏற்படவே ஜெகனை சச்சின் மிரட்டியிருக்கிறான். ஜெகனைக் கத்தியால் குத்த முயன்றிருக்கிறான். அப்போது அந்தப் பகுதியில் கூட்டம் கூட, சச்சின் அங்கிருந்து தப்பி ஒடியிருக்கிறார். இது தொடர்பாக ஜெகன் கொடுத்த புகாரின் மீது வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வடபாகம் காவல் நிலைய லிமிட்டிற்குட்பட்ட 2ம் கேட் பகுதியின் முத்தமாள் காலனியின் 8ம் தெருவில் சச்சின் நடந்து சென்று கொண்டிருந்த போது காரில் வந்த ஜெகனின் தம்பிகளான சுமன், சிம்சன், திருச்சிற்றம்பலம், பாலா கார்த்திக் உள்ளிட்ட 8 பேரும் சச்சினை அடித்து உதைத்திருக்கிறார்கள். பின்னர் அவனைக் காரில் கடத்திக் கொண்டு ஜோதி நகர் விலக்கு அருகே சாலையில் வைத்துக் கத்தியால் குத்தியுள்ளனராம். 

பின்னர் அப்பகுதியில் போட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளது தெரிய வந்தது. உயிர் பிரிந்து சடலமாகச் சச்சின் கிடந்த இடம் சிப்காட் போலீஸ் எல்லைக்கு உட்பட்டதால், சச்சின் தொடர்பான வழக்குகள் வடபாகம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

வடபாகம் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் பார்த்திபன் இது தொடர்பாக விசாரணை நடத்தி ஜெகன் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தவர் நேற்றிரவு ஜெகன் அவருடைய தம்பி சிம்சன், திருச்சிற்றம்பலம், பாலா கார்த்திக் சின்னத்துரை உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்தார். ஜெகனின் மற்றொரு தம்பியான சுமனைப் போலீசார் தேடி வருகின்றனர் என்கிறார்கள் விசாரணை தரப்பினர்.

இது குறித்து தனிப்பிரிவு இன்ஸ்பெக்டரான சேவியரிடம் நாம் பேசிய போது, சச்சின் மீது வழக்குகள் உள்ளன. அவர் கல்லூரி சென்ற பெண்னை தொடர்ந்து கிண்டலடித்து இம்சை செய்தது தொடர்பாக நடந்த கொலையில் ஜெகன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. அதன் பின் முறைப்படி அவர்களனைவரும் ரிமாண்ட் செய்யப்படுவார்கள் என்றார். இந்தக் கொலையால் தூத்துக்குடி பரபரப்பாகியுள்ளது.
 
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :