Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
தமிழகம்
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்!
 ................................................................
வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா!
 ................................................................
66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்!
 ................................................................
டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்!
 ................................................................
தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா
 ................................................................
தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி!
 ................................................................
முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!
 ................................................................
மெரினாவில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் அமைக்க பொன்ராஜ் வலியுறுத்தல் (படங்கள்)
 ................................................................
பறக்கும் இரயில் தண்டவாளத்தில் சிக்கிய எருமைகளை மீட்டுக்கும் பணியில் 'புளு கிராஸ்' (படங்கள்)
 ................................................................
லஞ்சம் வாங்கிய தஞ்சை ஆணையர் கைது! - பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்
 ................................................................
கடும் வாக்குவாதம் - கூட்டத்தின் பாதியிலேயே சென்ற கலெக்டர்
 ................................................................
சாப்பாட்டுக்காக கேட் ஏறி குதிக்கும் அவலம்
 ................................................................
காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
வைரமுத்து கருத்து சர்ச்சை போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் துணைபோகிறதா? பி.ஆர்.பாண்டியன்
 ................................................................
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (14:17 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (14:17 IST)



சி.பி.எஸ்.இ உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்குக: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


தமிழ் மொழி கற்கும் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி சி.பி.எஸ்.இ. - ஐ.சி.எஸ்.இ. உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளுக்கு இடமளித்து, இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மன்றம் தீர்மானிக்கிறது” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் அமைந்த முதல் திராவிட முன்னேற்றக் கழக அரசு 23.1.1968 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பொன்விழா ஆண்டில் நாம் இன்றைக்குப் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.

மொழிப் போராட்டத்தில் மாணவர்களின் எழுச்சிக்குப் பிறகு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வித்திட்ட மிக முக்கியமான நடவடிக்கை என்று இன்றைக்கும் போற்றப்படுகிறது. அந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் வழிவந்து, சட்டமன்ற வைரவிழா காணும் தலைவர் கலைஞர் அவர்கள் “முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடம்” என்ற “தமிழ் மொழி கற்கும் சட்டத்தை” 13.6.2006 அன்று இயற்றி தமிழ் மொழி வரலாற்றில் மிக முக்கியமான சாதனையை நிகழ்த்தினார்.

இந்தச் சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் டி. முருகேசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தை தன் ஆளுமையை வளர்த்துக் கொள்ள தாய் மொழி மிக அவசியம்” என்றும், “அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை” என்றும் கூறி “தமிழ் மொழி கற்கும் சட்டம் 2006” செல்லும் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றபோது, அங்கும் இந்தச் சட்டம் செல்லும் என்று கூறப்பட்டு, கழகம் ஆட்சியிலிருந்த வரை இச்சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டது. தமிழ் ஆசிரியர்கள் 525 பேர் நியமிக்கப்பட்டு, தமிழ் மொழி கட்டாயமாக கற்பதில் எந்தத் தொய்வும் இல்லாமல் தலைவர் கலைஞர் அவர்கள் பார்த்துக் கொண்டார்.

தி.மு.க. அரசு கொண்டுவந்த தமிழ் கற்கும் சட்டத்தின் அடிப்படையில்  அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை “தமிழ் மொழி கட்டாயம்” என்று 18.9.2014 அன்று அதிமுக அரசுக்கு பெயரளவிற்கு ஆணை வெளியிட்டாலும், இன்றுவரை அந்த அரசு ஆணை முறைப்படி செயல்படுத்தப்படவில்லை. ஆசிரியர்கள் நியமனம், பள்ளிகளில் உட்கட்டமைப்புகள், அதற்கேற்ற விதிமுறைகள் போன்றவற்றை ஏற்படுத்தாமல் அதிமுக அரசு தொடர்ந்து தாமதம் செய்து வருவதால் தமிழ் அல்லாத மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் பொதுத்தேர்வு எழுத, தொடர்ந்து விலக்கு பெற்று வருகிறார்கள்.

தமிழை மத்திய ஆட்சி மொழியாக்குவது, தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்குவது போன்றவற்றில் மத்திய அரசை உறுதியாக வலியுறுத்தாமல் அலட்சியம் காட்டி வரும் அதிமுக அரசு செம்மொழிப் பூங்கா, செம்மொழி நூலகம் போன்றவற்றை சீர்குலைத்தது. அதேபோல், இப்போது தமிழ் மொழி கற்கும் சட்டத்தின் நோக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது.

மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு கண்ணை மூடிக்கொண்டு இந்தித் திணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நேரத்தில் அன்னைத் தமிழ் மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகிறது. ஆனால், தமிழ் மொழி பற்றிய சிந்தனையை வருங்கால தலைமுறையிடம் முழுவதுமாக மறக்கடித்து விட வேண்டும் என்று திட்டம்போட்டு மத்திய அரசு செயல்படுவது போல், அதிமுக அரசும் செயல்படுவது கவலையளிப்பது மட்டுமின்றி, தமிழ் மொழியின் மீது மாணவ, மாணவியருக்கு இருக்கும் பற்று மற்றும் பாசத்தை பட்டுப்போகச் செய்யும் ஆபத்தான முயற்சியாக அமைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும். அரசுப் பள்ளிகளிலும் போதிய தமிழாசிரியர்களை நியமித்து, தமிழ் மொழி கற்கும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்கவேண்டும் என்று அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன். மேலும், தமிழ் மொழியின் தொன்மையையும், வளத்தையும் இளைய சமுதாயத்தினர் அறிந்துகொள்ளும் விதத்தில், ஆக்கபூர்வமான முயற்சிகளில் அதிமுக அரசு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : தமிழன் Country : Australia Date :5/19/2017 4:12:03 PM
இனிமேல் ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதியின் பிள்ளைகளும் தமிழ்மொழியில் படிக்கவேண்டும். ஒவ்வொரு இளைஞனும் ஆர்யக்கலப்பற்ற பழந்தமிழ் இலக்கியங்களை தொலைதூரக் கல்வி வழியாக கூடுதலாகக்கற்க வேண்டும். மாலைநேர சிறப்புத் தமிழ் நிகழ்ச்சிகள் பட்டிமன்றங்கள் , பேச்சுபோட்டி, கட்டுரைப்போட்டி ஆகியவைகள் பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் தமிழறிஞர்கள் எழுதிய புத்தகங்களில் இருந்து நடத்தி பணமுடிச்சுப் பரிசுகள் கொடுக்கவேண்டும். இப்போதைய அரசை நம்பி வீணாக இருக்க வேண்டாம் . இளைஞர்களே செயலில் இறங்க வேண்டும்.