Add1
logo
மோசடி வழக்கில் - மதன் மீண்டும் கைது || அதிமுக ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும் - மு.க.ஸ்டாலின் || அரசாணைக்கு தொழில் கல்வி ஆசிரியர்கள் வரவேற்பு || ஆதித்தனார் நினைவு நாள் இன்று - உருவச்சிலைக்கு சீமான் மாலை அணிவிக்கிறார் || தமிழக மீனவர்கள் 6 பேரை - இலங்கை கடற்படை கைது செய்தது || தமிழகத்தில் மோடிக்குக் கிடைத்த 2 அடிமைகள் - துரைமுருகன் பேச்சு || இந்திய போர் விமானம் விபத்துக்குள்ளானது உறுதி || கொரிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு! || ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார் || சிதம்பரத்தில் தனியார் பள்ளிகளின் கட்டாய கல்வி கட்டணத்தை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் || காக்களூர் பால்பண்ணையில் புதிய கட்டிடத்தை திறந்துவைத்த ராஜேந்திரபாலாஜி ( படங்கள் || பைக் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி || தமிழக கல்வி முறைக்குள் சிபிஎஸ்சியை கொண்டுவருவது மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகாது -கனிமொழி பேட்டி ||
தமிழகம்
மோசடி வழக்கில் - மதன் மீண்டும் கைது
.............................................
அரசாணைக்கு தொழில் கல்வி ஆசிரியர்கள் வரவேற்பு
.............................................
ஆதித்தனார் நினைவு நாள் இன்று - உருவச்சிலைக்கு சீமான் மாலை அணிவிக்கிறார்
.............................................
பெரம்பூரில் டாஸ்மாக் கடையை மூட மக்கள் முற்றுகை
.............................................
தமிழக மீனவர்கள் 6 பேரை - இலங்கை கடற்படை கைது செய்தது
.............................................
தமிழகத்தில் மோடிக்குக் கிடைத்த 2 அடிமைகள் - துரைமுருகன் பேச்சு
.............................................
கொரிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு!
.............................................
ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார்
.............................................
சிதம்பரத்தில் தனியார் பள்ளிகளின் கட்டாய கல்வி கட்டணத்தை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
.............................................
காக்களூர் பால்பண்ணையில் புதிய கட்டிடத்தை திறந்துவைத்த ராஜேந்திரபாலாஜி ( படங்கள்
.............................................
பைக் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி
.............................................
தமிழக கல்வி முறைக்குள் சிபிஎஸ்சியை கொண்டுவருவது மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகாது -கனிமொழி பேட்டி
.............................................
நாகூர் அருகே கிருஸ்தவ ஆலயத்தின் மீது தொடர் தாக்குதல் பொதுமக்கள் சாலை மறியல்
.............................................
வேந்தர் மூவிஸ் மதனுக்கு ஜூன் 6-வரை நீதிமன்றக்காவல்
.............................................
ஒதுக்குப்புறமான இடங்களில் உள்ள மது விற்பனையையும் ஒழிக்க பெண்கள் முடிவு
.............................................
குளமங்கலம் மாரியம்மன் கோயில்கள் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது
.............................................
காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்து பெண் தற்கொலை
.............................................
கடலூர் மாவட்டத்தில் புதிய தாலுகா - ’திருமுட்டம்’ உதயம்!
.............................................
ரஜினியை முன்னிறுத்தி பா.ஜ.க குறுக்கு வழி தேடுகிறது : வேல்முருகன்
.............................................
திமுக வர்த்தக அணி ஆலோசனை கூட்டம் - 23 தீர்மானங்கள் நிறைவேற்றம் ( படங்கள்
.............................................
நீதிமன்ற கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டிகள் மாயம்
.............................................
டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி ( படங்கள்
.............................................
பொதுமக்கள் முற்றுகை: டாஸ்மாக் கடையை மாற்றுவதாக போலீசார் வாக்குறுதி
.............................................
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்
.............................................
தம்பிதுரை தலைமையில் ஆலோசனை : அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
.............................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (13:28 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (13:28 IST)


கங்கையைச் சுத்தப்படுத்த மக்கள் பணத்தை மத்திய அரசு கோடிக் கோடியாகக் கொட்டி அழலாமா? கி.வீரமணி 

குளிப்பதற்கும் பாதுகாப்பற்றது கங்கை நீர் என்று பசுமைத் தீர்ப்பாயம் திட்டவட்டமாகக் கூறிவிட்டதே! இதற்குப் பின்னும் கங்கையைச் சுத்தப்படுத்த மக்கள் பணத்தை மத்திய அரசு கோடிக் கோடியாகக் கொட்டி அழலாமா? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:-

பிரதமர் மோடி பதவியேற்று, மூன்றாண்டுகள் ஆகின்றன. பிரதமரின் நாடாளுமன்றத் தொகுதி புனித கங்கை ஓடும் வாரணாசி தொகுதியாகும். அதன் முக்கியத்துவமே காசி - கங்கைதான்!  பாவங்களை ... கரைக்கும் புனித கங்கையை, சுத்தப்படுத்துவதே தனது அரசின் முன்னுரிமைப் பணி என்று கூறி, அதற்கென ஒரு தனி அமைச்சரையே - செல்வி உமாபாரதி அமர்த்தப்பட்டுள்ளார் - (நீர் வளத்துறை) இரண்டு ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை - கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணியின் வெற்றியைக் காட்டுவோம் என்றார்! ஏற்கெனவே, Ganga Action Plan (GAP) என்ற கங்கை செயலாற்றும் திட்டம் என்ற திட்டத்திற்குக் கடந்த 30 ஆண்டுகளில் 1800 கோடி ரூபாய் முந்தைய பா.ஜ.க., அய்க்கிய முன்னணி ஆட்சிகளின்போதே கூட செலவழிக்கப்பட்டும் பயன் ஏற்படவில்லை.

அன்று பிரான்சு எதிர்ப்பு

பிரான்சின் தலைநகர் பாரீசில் உள்ள செயின்  நதியில், இந்தியா - பிரெஞ்சு கலாச்சார உறவினைப் பலப்படுத்தும் அடையாளமாக, இந்தியாவின் கங்கை நதிநீரை அந்த நதியில் ஊற்றும் ஒரு முயற்சியை அறிவித்தபோது, (இந்திய கலாச்சார அமைப்பு - மத்திய அரசு - இராஜீவ் அப்போது பிரதமர்) பிரெஞ்சு மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கங்கை தூய்மையற்ற மாசுபட்ட நீர் உடைய நதி, அதனை செயின்  நதியில் கொண்டு வந்து கலக்கவிட்டால், தொற்றுநோய் பரவக்கூடும் என்று கூறி, அதனை நிறுத்தி விட்டனர்; அதன் பிறகே கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டம் வேகப்படுத்தப்பட்டது; என்றாலும், பயனில்லை.

பிரதமர் மோடி அத்தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், தனது ஹிந்துத்துவா கொள்கைக்கும், அந்த நதிகளைக் கடவுளாக்கிப் பார்க்கும் தெய்வீகப் பிரச்சாரத்திற்கும் உதவும் என்பதால், சுற்றுச்சூழல் - மாசுபடுதலை நீக்கி தூய்மைத் திட்டத்தில் வெற்றி கண்ட சாதனையைக் காட்டிட விழைந்து, மோடி அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கி அப்பணியை மேற்கொண்டு மூன்றாண்டுகளில் கண்ட பலன் என்ன?

குளிப்பதற்கும் பாதுகாப்பற்றது கங்கை!

இதோ இன்றைய தினமலர் ஏட்டில் 12 ஆம் பக்கத்தில் உள்ள செய்தியை அப்படியே தருகிறோம் படியுங்கள்!
குளிப்பதற்கும் பாதுகாப்பற்றது கங்கை நீர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
டேராடூன், மே 19 ஹரித்துவாரில் ஓடும் கங்கை நதி, குளிப்பதற்கு கூட லாயக்கில்லாத அளவு மாசடைந்து உள்ளது என, தகவலறியும் உரிமை சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு தேவப்பிரயாகையில் உற்பத்தியாகும் கங்கை நதி, ஹரித்துவார் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக ஓடுகிறது.கங்கையில் குளித்தால்பாவங்கள் அகலும் என்பதால், லட்சக் கணக்கானோர், கங்கையில்புனித நீராடுகின்றனர். ஹரித்துவார் மாவட்டத்தில், தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித் துள்ளது. முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படாததால், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு, கங்கையில் கலக்கி றது. 

இதனால், கங்கைநதி மாசடைந்து உள்ளது. இந்நிலையில், தகவல்அறியும் உரிமைசட்டத்தின் கீழ், கங்கை நதி நீரின் மாசுத் தன்மை குறித்து கேட் கப்பட்டகேள்விக்கு, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம்அளித்துள்ள பதில்:
உத்தரகண்டில், கங்கோத்ரி முதல், ஹரித்துவார் வரை, 11 இடங்களில் கங்கை நதிநீர் மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன. தண்ணீரின் வெப்ப நிலை,

ஆக்சிஜனின் அளவு மற்றும் பாக்டீரியாக்கள் ஆகியவற்றை வைத்து, சோதனை நடத்தப்பட்டது. இதில், கங்கை நதிநீர், குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பாதுகாப்பற்றது என்பது தெரிய வந்துள்ளது.
- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது!

(டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடும் இன்று தலையங்கமே தீட்டியுள்ளது இதுபற்றி!).
இதில் மிதக்கும் பிணங்களும், மற்ற கழிவு நீரும் ஏராளம். இதனைப் புனிதம் என்று கூறுவதைவிட இமாலயப் புரட்டு, வெட்கக்கேடு வேறு ஏதாவது உண்டா?

இதற்குப் பிறகும் கோடிக் கோடியாக மக்கள் பணத்தை கங்கையைப் புனிதப்படுத்த கொட்டியழலாமா?
புனித கங்கா ஜலம் - கோவில் கும்பாபிஷேகம் முதல் வீட்டு சடங்குகள்வரை - பார்ப்பனர் கங்கா ஜலம் என்று கூறுவது; தீபாவளி நேரத்தில் கங்கா ஸ்நானம் ஆச்சோ என்று அர்த்தமில்லாமல் கேட்பது பக்தி வியாபாரத்திற்கு மூலப்பொருள்; மற்றபடி வெட்கக்கேடான விஷயங்கள் அல்லவா?

இம்மாதிரிப் புராணப் புளுகளுக்கு தெய்வீகத்தை எப்படி பரப்பி மூடநம்பிக்கையை, பக்தி போதை மாத்திரைகளால் பரப்புகின்றனர். இன்றும் அந்தப் புராணங்கள் எல்லாம் ஏதோ விஞ்ஞான உண்மைகள்போல ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்ற சில மூடநம்பிக்கை முகவர்கள் செய்து வருவது எவ்வளவு கேலிக்கூத்து! ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன!
பரமசிவன் தலையில் கங்கை இருக்கிறாள் என்று நதியைப் பெண்ணாக உருவகப்படுத்திக் கூறி, தொடர் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர் - இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் செவ்வாய்க் கோளில் இடம் தேடும் காலத்திலும்!
கங்கா மகாத்மியம் என்ற தலைப்பில் அபிதான சிந்தாமணி பக்கம் 379 இல் - புராணங்கள் கூறுகிறபடி -
இது பூமிக்கு மத்தியில் செல்வதால் பூமியைச் சுத்தப்படுவது. ஆயிரம் சந்திராயண விரதஞ்செய்த பலன் இதனிடம் உள்ள ஜலத்தைப் பானஞ் செய்வதற்கு உண்டாம். ஒரு மாதம் கங்கா தீரத்தில் ஒருவன் வசிப்பானேல் அவன் சர்வயஞ்ஞபலத்தையும் அடைவான். இதில் எவ்வளவு காலம் ஒருவனுடைய அஸ்தி விழுந்து கிடக்கிறதோ அவ்வளவு காலம் அவன் சுவர்க்கத்தில் இருப்பன். இதில் உள்ள மண் சோகம் முதலியவற்றை நீக்கும். இதை தரிசனஞ்செய்வதாலும், பரிசிப்பதாலும், பானஞ் செய்வதாலும் எல்லாப் பாவங்களும் நீங்கும். - இதுதான் புராண அளப்பு!
எப்படிப்பட்ட புரட்டு பார்த்தீர்களா?

விவசாயிகள் தற்கொலைப்பற்றி சிறிதும் கவலைப்படாது,  கடன் தள்ளுபடிபற்றி யோசிக்காது, இந்த நதியைத் தூய்மைப்படுத்த 20 ஆயிரம் கோடி ரூபாய், இன்னும் இது எத்தனை ஆயிரம் கோடி விழுங்குமோ! எத்தனை லட்சம் கோடி ரூபாய் செலவழித்தாலும் இவர்களால் சாதிக்க முடியுமா? என்றால், முடியாது.
ஓராண்டுக்கு முன்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகளே இந்தக் கேள்வியைக் கேட்டனர், அதன்பிறகுமா இந்தக் கூத்துகள்?
பக்தி வந்தால் புத்தி போகும்!  பெரியார் கூற்று உண்மைதானே!

பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்ற தந்தை பெரியாரின் அறிவுரைக்குத்தான் எத்தனை மதிப்புப் பார்த்தீர்களா?
மூடத்தனத்தினை இப்படி புனித கங்கை - புனிதப் பசு என்று பரப்பி, மனிதர்கள் வாழ்வை - வறுமையும், நோயும் வாட்டும் வாழ்வாக உருக்குலைக்கும் வகையில் - தற்கொலைகள் பரவும் கொடுமையை வளர விடலாமா?
இதுதான் நமது புராதன பாரதக் கலாச்சார பெருமை என்று அறிந்தால், பகுத்தறிவுள்ள எவர் ஒப்புவர்?


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : தமிழன் Country : Australia Date :5/19/2017 2:23:16 PM
கங்கை நீர் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் லாயக்கற்றது என்றாலும், விவசாயத்திற்கும்,நிலத்தடிநீரை இந்தியாவின் பெரும்பகுதியில் உயரச்செய்வதற்கும் கங்கை நீரைப் பயன்படுத்தலாம். கங்கை நதியை அது உற்பத்தியாகும் சில மைல் தூரத்திலிருந்தே மற்ற நதிகளுடன் இணைத்துவிட்டால், மற்ற நதிகள் ஓடும் பகுதிகளில் தூய்மைக்கேடு பரவாது. அதேசமயம் கங்கை நதியை முழுவதும் சுத்தப்படுத்தும் முயற்சி, செலவு குறைந்ததாகவும் அமையும். பொறியாளர்களும் , சமூக நலனில் ஆர்வம் உள்ளவர்களும் மாத்திரம் இந்த முயற்சியில் ஈடுபடவேண்டும். (சுப்பிரமணி சாமியின் காதில் விழாமல் இதைச்செய்து முடிக்க வேண்டும்..இந்த செய்தி அவர் காதில் விழுந்தால் எல்லாம் குட்டிச்சுவர்தான். உதாரணம். சேதுசமுத்திரத்திட்டம்.)
Name : Narasimhan Country : Iraq Date :5/19/2017 1:34:58 PM
Neengal thamizhagathai patri kavalaipadungal. 60 varudamaa manal kollai seidhu thannnere illaamal seidargalai patri ungaluku kavalai illai