Add1
logo
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி || ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு! || திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு || தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல் || காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்! || முன் நிபந்தனைகள் இன்றி வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை? - அமெரிக்கா அறிவிப்பு || கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா! || ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு! || வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி! || சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி || முதல் முறையாக மாவட்ட ஆட்சியரை சொந்த கிராமத்தில் பார்த்த மக்கள் || மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தோனி ‘லைக்’ செய்த ட்வீட்டால் சர்ச்சை! || ஆளுநரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (0:22 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (0:22 IST)


14 போட்டியில் 17 விக்கெட் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் வீரர்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரஷித் கான். 18 வயதே ஆகும் இவர் ஆப்கானிஸ்தான் தேசிய அணிக்காக சிறந்த வகையில் பந்து வீசி வருகிறார். லெக் ஸ்பின்னராக இவர் கூக்ளி பந்து வீச்சில் வல்லவர். கூக்ளியால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறிடித்து விக்கெட்டுக்களை வீழ்த்தி வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் போருக்கிடையிலும் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டு சிறந்த வீரராக வளம் வந்த ரஷித் கான், முதன்முறையாக 2017 ஐ.பி.எல். தொடருக்கான ஏலத்தில் இடம்பிடித்தார். இவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது.

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் இடம்பிடித்தார். ராயல் சேலஞ்சஸ் அணி 172 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்த போட்டியில் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் சேஸிங் செய்யும்போது, தொடக்க வீரர் மந்தீப் சிங்கை 24 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டாக்கி தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார். அத்துடன் ட்ராவிஸ் ஹெட்டையும் வீழ்த்தி இந்த போட்டியில் நான்கு ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

2-வது போட்டியில் குஜராத் அணிக்கெதிராக மெக்கல்லம் (5), சுரேஷ் ரெய்னா (5), ஆரோன் பிஞ்ச் (3) ஆகிய விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார். 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார். அதன்பின் ஐதராபாத் அணியின் நம்பிக்கையை பெற்றார்.

தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் ரஷித் கான் இடம்பிடித்து நம்பிக்கை பந்து வீச்சாளராக உருவெடுத்தார். இவரது பந்தை எதிர்கொள்ள எதிரணி பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். நேற்றைய போட்டியுடன் 14 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 324 பந்தில் 358 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார் (ஒரு ஓவருக்கு சராசரியாக 6.62 ரன்கள்). இது மிகப்பெரிய பந்து வீச்சாகும். தற்போது சிறந்த பந்து வீச்சில் 5-வது இடத்தில் உள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :