Add1
logo
ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம் || டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு || இன்றைய(19.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || ஐ.எஸ்.எல். கால்பந்து - சென்னை அணி தோல்வி || பேரறிவாளன் விடுதலையில் கே.டி.தாமஸ் வேண்டுகோளை சோனியாகாந்தி பரிசீலிக்க வேண்டும்:திருமாவளவன் || பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன் || தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார் || மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு! || தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா! ||
சிறப்பு செய்திகள்
மைசூர்பாகிற்கும் போட்டி போடும் கர்நாடகா!!!
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று...
 ................................................................
அரசியல் பின்னணி, சதி, வன்மம் இருக்கிறது:
 ................................................................
ஜெ. வீட்டில் ரெய்டு... செம்மலை கருத்து
 ................................................................
இவர்தான் நிஜ 'அறம்' நயன்தாரா?
 ................................................................
பீகார் பாணியில் இரட்டை இலையா?
 ................................................................
பத்திரிகை சுதந்திரமும் இந்தியாவும்
 ................................................................
எரிந்து சாகவா எம் இளம் பெண்கள்?
 ................................................................
எமெர்ஜென்சியை எதிர்கொண்ட திமுக!
 ................................................................
கமல் தான் ஸ்டாலினுக்கு போட்டி!
 ................................................................
கவர்னருடைய ஆய்வு என்பதே தவறு:
 ................................................................
GST வரி குறைப்பு
 ................................................................
தமிழகத்தில் பாஜக வாய்ப்புகளை ஆய்வு
 ................................................................
ஆட்டுக்குத் தாடியும் ஆளுநர் பதவியும்!
 ................................................................
சானியாவும் சர்ச்சைகளும்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 15, மே 2017 (13:1 IST)
மாற்றம் செய்த நாள் :15, மே 2017 (16:2 IST)


முக்கியமான  மூன்று குற்றச்சாட்டுகள்... ரசிகர் கோர்ட்டில்  ரஜினியின் வாக்குமூலம்  !!!

'நடக்குமா, நடக்காதா ? இப்போ நடக்குமா, எப்போ நடக்குமோ? எல்லாரையும் அனுமதிப்பார்களா... இல்லை, சிலரை அவமதிப்பார்களா? அரசியல் அறிவிப்பு இருக்குமா...அடுத்த படத்தைப் பற்றி மட்டும் தான் இருக்குமா?', என்ற பல கேள்விகளுக்கு விடையாக இன்று தன் ரசிகர்களை சந்தித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். முதல் நாளான இன்று கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை  சந்தித்து அவர்களுடன்  புகைப்படம்  எடுத்துக்கொண்டிருக்கிறார்.  விழாவின் துவக்கத்தில் பேசிய ரஜினிகாந்த், உரையின் நடுவே,  தன் மீது தொடர்ந்து வைக்கப்படும் மூன்று குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார்.



1. ரஜினிக்கு மன உறுதி கிடையாது, எந்த விஷயத்திலும் உறுதியான நிலைப்பாடு கிடையாது 

ரசிகர்களை சந்திப்பதாக அறிவித்து, பின்னர் அதைத் தள்ளிவைத்தது, இலங்கை செல்வதாக அறிவித்து, பின்னர் அப்பயணத்தை ரத்து செய்தது போன்ற இன்னும் பிற விஷயங்களினால், சில ஊடகங்கள் தனக்கு எதிலும் ஸ்திரமான நிலைப்பாடு கிடையாது, பயப்படுவார், தயங்குகிறார், முடிவை மாற்றிக்கொண்டே இருப்பார் என்று குற்றம் சாட்டுவதாகக் கூறிய ரஜினி, "நான் எதையும் யோசித்துத்தான் முடிவெடுப்பேன். அப்படி நன்கு யோசித்து முடிவெடுத்தும் சில விஷயங்கள் தவறாக நிகழ வாய்ப்புண்டு. முடிவெடுத்த பின்னர், அந்த விஷயத்தில் ஆபத்து இருப்பதாகத் தெரிந்தால், பின்வாங்குவேன். தண்ணீரில் கால் வைக்கிறோம், கால் வைத்த பின் அதில் முதலை இருப்பது தெரியவந்தால், காலை எடுப்பது தான் புத்திசாலித்தனம். வச்ச காலை நான் எடுக்கமாட்டேன் என்ற முரட்டுப்பிடிவாதம் எனக்குக் கிடையாது", என்று கூறினார்.

2. படம் ஓடத்தான் ரசிகர்களை சந்திக்கிறார் 

'ஒவ்வொரு முறையும் தன் படம் வெளிவரப்போகும்போது இதுபோல் ஸ்டண்ட் அடிப்பார் ரஜினி' என்ற கருத்தைத்  தன் பேச்சில்  குறிப்பிட்ட ரஜினி, "இறைவனின் ஆசியாலும் ரசிகர்களின் அன்பினாலும், மக்களின் ஆதரவினாலும் எனக்கு அந்த நிலை இல்லை. அப்படி நான் படத்தை ஓட வைக்க இதுபோல் செய்தாலும், தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். படம் நன்றாய் இருந்தால் மட்டும் தான் பார்ப்பார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் தான் தொடர்ந்து ஏமாறுகிறார்கள். மற்றபடி அவர்களை ஏமாற்ற முடியாது. என் இயக்குனர்கள் தொடர்ந்து நல்ல கதை, திரைக்கதை, பாடல்கள், கருத்துகளோடு   படங்கள் எடுத்க்கொடுத்ததனால்தான் நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன், விளம்பரத்தால் அல்ல", என்று கூறினார்.

3.  இவர் அரசியலுக்கு வரமாட்டார், தன் சினிமா ரசிகர்களைத் தக்கவைக்க இவர் செய்யும் மாயை தான் அரசியல் பேச்சு 

'ரஜினிக்கு அரசியலில் ஈடுபடும் தைரியமோ , ஆவலோ இல்லை, தன் ரசிகர்களைத் தக்கவைக்கவே அவ்வப்போது அரசியல் கருத்துகளையும், தேர்தலின் போது, தனது நிலைப்பாட்டையும் வெளியிடுகிறார்', என்ற கருத்தைக் குறிப்பிட்டுப்  பேசிய ரஜினி, "என் வாழ்க்கை ஆண்டவன் கையில தான் இருக்கு. இப்பவும் எப்பவும்.  1998ல்,  அன்று இருந்த சூழ்நிலையில், நான் ஒரு கூட்டணிக்கு என் ஆதரவைத் தெரிவித்தேன். என் வார்த்தைக்கு மக்கள் தந்த மதிப்பால் அந்தக் கூட்டணியும் வென்றது. அந்த சமயத்தில், என் ரசிகர்களில் சிலருக்கு ஏற்பட்ட அரசியல் சகவாசங்கள், அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ந்தது. சில ரசிகர்கள், அதனால் பண ஆதாயங்களையும் அனுபவித்தனர். ருசி கண்ட பூனைகளான அவர்கள், என்னை அரசியலில் ஈடுபடுமாறும், 'எத்தனை நாள் நாங்களும் இப்படியே இருப்பது? நமக்குப் பின் வந்தவங்களெல்லாம்  வெள்ளை சட்டை போட்டு இன்னோவால போறாங்க... நாங்களும் கவுன்சிலர், MLA னு ஆக வேணாமா?' என்றெல்லாம் கேட்டு கடிதங்களெல்லாம் கூட எழுதினார்கள். இதெல்லாம் பாத்து, கோபப்படுறதா, வெக்கப்படுறதானு தெரியல. பதவிக்கு வரணும்னு நினைக்கிறது தப்பில்ல. ஆனா, அதை வச்சு பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கிறது தப்பு.    ஆண்டவன் இப்போ, என்னை மக்களை சந்தோஷப்படுத்தற இந்த வேலையில வச்சிருக்கான். ஒரு வேளை, நாளை ஏதாவது ஒரு சூழ்நிலையில், அரசியலில் ஈடுபட வைத்தாலும், இது போன்ற ஆசை உள்ளவர்களை கிட்டேயே சேர்க்க மாட்டேன், நுழைய விடமாட்டேன். அவர்களெல்லாம் இப்போவே ஒதுங்கிடுங்க... ", என்று கூறினார்.    

ரஜினியின் இந்த உரையின் மூலம், அவரைப் பற்றி இப்போதைய இளைஞர்களின் கருத்தையும், மக்கள் மத்தியில் நிலவும் எண்ணத்தையும் அவர் நன்கு அறிந்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதே போல, 'வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பா வருவேன்', 'எல்லாம் ஆண்டவன் கையில்' என்ற அவரின் அரசியல் நிலைப்பாடும்  (?) மாறவில்லை என்றே தெரிகிறது.                                              

-வசந்த் பாலகிருஷ்ணன் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : arasar Country : India Date :5/17/2017 5:11:53 PM
இவர் தப்பி தவறி வந்து, மக்களுக்கான பிரச்சனைகளை கடவுள் நினைத்தால் நான் தீர்ப்பேன் என்றால் என்ன ஆகும் ?
Name : Elango Date :5/17/2017 2:43:01 AM
நீங்க வரவே வேண்டாம் . தமிழர்க்கு தெரியும் என்ன செய்யவேண்டும் என்று
Name : Raghumanhasan Date :5/16/2017 4:57:36 PM
Nadichoma sambarichoma ponoma nu iruga rajini TN ah kaapatha pala thalivargal irukkaga,vayasana kaalathula nega romba kastam padathiga rajini, dialogue pesi makkala seer adicha kaalam maari pochi,TN makkan inne yemara maattargal nu pesi yemaatria kaalamum maari pochi so nega TN ithana varusham ena pannigalo athayae continue pannuga...2.0 pola, 3.8 nu namithavo illa 18 vayasu chinna pullaiya vachi roba 3rd part edunga... naga irukkom