Add1
logo
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் || தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன் || தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி || மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம் || இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி! || சென்னை எனக்கு இரண்டாவது வீடு! - சி.எஸ்.கே. ரீஎண்ட்ரி உற்சாகத்தில் தோனி || தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி || தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ் || வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி || 41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்! || தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன் || வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான் || பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி ||
சிறப்பு செய்திகள்
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
நமக்குப் பொங்கல்... ஆந்திரா, கர்நாடகாவில் என்ன?
 ................................................................
பனியோ, புகையோ
 ................................................................
கண் கூசும் நெடுஞ்சாலைகள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 15, மே 2017 (12:47 IST)
மாற்றம் செய்த நாள் :16, மே 2017 (16:12 IST)


ப்படியே ஓடிப்போங்க, வராதீங்க, வந்தா எங்களுக்கு இன்னொரு முகம் இருக்கு”... என மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடுகின்றனர் பெண்கள். கடந்த மார்ச் 31 முதல் தமிழகத்தில் தினந்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் பங்கேற்கும் போராட்டம் இன்று வரை நீடிக்கிறது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை உடனே அகற்றவேண்டும் என தமிழக அரசுக்கு கடந்த மார்ச் 31–ம் தேதி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதன்படி, மதுக்கடைகளை மூடிய டாஸ்மாக் நிறுவனம், அந்தக் கடைகளை ஊருக்குள் திறக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. 

உச்சநீதிமன்றம்வரை சென்று 5 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்போராட்டம் நடத்தி, இந்திய அளவில் 90 ஆயிரம் மதுக்கடைகளையும், தமிழகத்தில் 3321 மதுக்கடைகளையும் மூடவைத்துள்ளது, பாமக. கூடவே, மதுவுக்கு எதிரான தன்னெழுச்சியான போராட்டம் தமிழகத்தில் வெடித்துள்ளது. 

இந்நிலையில் பாமக செய்தித்தொடர்பாளரும் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவருமான வழக்கறிஞர் கே.பாலுவுடன் ஒரு சிறிய உரையாடல்: பாமகவின் முயற்சியால் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட்டுள்ளன. பாமகவின் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதா? இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறதா?

பாமகவின் முயற்சி பல்வேறு காரணங்களால் உரியவகையில் பதிவு செய்யப்படவும் இல்லை, அதற்குரிய அங்கீகாரத்தையும் ஊடகங்கள் வழங்கவில்லை. சமூகநீதி என்பது பாமகவின் அடையாளம். இரண்டாவது அடையாளமாக பாமக முன்வைப்பது மது ஒழிப்பு. சாதாரண ஏழை,எளிய பாட்டாளி மக்களுடைய வாழ்வாதாரத்தை சிதைக்கக்கூடியது மது. அதனால் அரசியல் அதிகாரத்தின்மூலமாக மதுஒழிப்பைக் கொண்டுவர வேண்டும் என்பதை பாமக முன்வைத்தது. 

தேசிய அளவில் மக்களுக்கு எதிராக இருக்கக்கூடிய இரண்டு முக்கியமான பிரச்சினைகள் புகையிலை,மது.பொது இடங்களில் புகையிலைப் பிடிப்பது தவறு என்பதை சட்டப்பூர்வமாகக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தியுள்ளது.அதேபோல் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை வைக்கக்கூடாது என்பதை சட்டப் போராட்டத்தின்மூலமாக நடைமுறைப்படுத்தியுள்ளோம். தேசிய அளவில் கொள்கை முடிவு எடுக்கிற அளவுக்கு பாமக முயற்சிசெய்து வெற்றி பெற்றுள்ளது. 

இதனை அரசியல் அதிகாரத்தின்மூலமாகப் பெறவேண்டும் என்பது நோக்கமாக இருந்தாலும், எந்த வகையிலாவது அமல்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் பாமக இந்த வாய்ப்பை பயன்படுத்தியது.மத்திய அரசின் சுற்றறிக்கை தேசிய நெடுஞ்சாலைக்கு மட்டுந்தான். ஆனால், நாங்கள் மாநில நெடுஞ்சாலைகளுக்கும் என்று நாங்கள் இந்த வழக்கைக் கொண்டுபோன காரணத்தினால், இந்தியா முழுவதும் 90 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. ஒட்டுமொத்தமாக மதுவுக்கு எதிரான மனநிலையை மக்களிடையே உருவாக இது காரணமாக அமைந்திருக்கிறது. 


உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை வேறு இடத்திற்கு தமிழக அரசு மாற்றுகிறது. மேலும், மாநில நெடுஞ்சாலைகளின் பெயரை மாற்றவும் முயற்சியும் நடக்கிறது. இதனை எதிர்த்து நீங்கள் நீதிமன்றத்திற்குப் போனாலும், நீதிமன்றம் மென்மையான வகையில் அரசை கண்டிக்கிறதா, இல்லை கண்டிப்பான உத்தரவு என்று சொல்கிறதா?

படிப்படியாக மதுவைக் கட்டுப்படுத்துவது, படிப்படியாகப் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது என்பதைத்தான் தமிழக அரசின் கொள்கை நிலைப்பாடாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். தீர்ப்பு வந்தது 2013ஆம் ஆண்டு. அதிலிருந்து படிப்படியாக நடைமுறைப்படுத்தியிருந்தால் ஏறக்குறைய மூவாயிரம் கடைகளுக்குமேலாக நாம் மூடியிருக்க வேண்டும்.ஆனால், தமிழக அரசுதான் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டுக்கு எடுத்துச் சென்றது. காலதாமதத்திற்கும், தற்போது ஏற்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலைக்கும் காரணம் தமிழக அரசுதான். 

மூவாயிரம் கடைகளை மூடிய உடனேயே ஏதோ தங்களுடைய வீட்டிலிருந்த சொத்து, சுதந்திரம் பறிபோய்விட்டமாதிரி தவிக்கிறது தமிழக அரசு. இதற்காக அவர்கள் கையாண்டு வருகிற முறைகள்,காவல்துறை, வருவாய்த்துறை, டாஸ்மாக் நிறுவனத்தை அவர்கள் பயன்படுத்தும்விதம் மிகவும் வேதனை அளிக்கிறது. ஒரு அரசு என்பது மக்கள் நலன் சார்ந்த அரசாக இருக்க வேண்டும்.பொது சுகாதாரம்தான் அடிப்படையானது. அதைத்தான் அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. ஆனால், பொதுசுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடிய,குடும்பத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தக்கூடிய, சமூக சீர்கேடுகளுக்குக் காரணமாக இருக்கக்கூடிய மதுவை விற்பனை செய்ய தமிழக அரசு துடிக்கிறது. 

நீதிமன்றம் கடையை மூடச்சொல்கிறது. மத்திய அரசு நெடுஞ்சாலைகளில் கடையை வைக்கக் கூடாது என்று சொல்கிறது. ஆனால் தமிழக அரசு, “நாங்க மது விற்பனை செய்தே தீருவோம். நீங்கள் குடித்தே ஆகணும்” என்கிறது தமிழக அரசு. நெடுஞ்சாலைகளில் விற்பனை செய்தால்தான் தங்களுக்கு அதிக வியாபாரம் நடக்கும். அதனால்தான் மாநில நெடுஞ்சாலைகளை மாநகராட்சி சாலைகளாக மாற்ற முற்படுது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மதுவை விற்கிறார்கள்; மதுவிற்பனைக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். இது அரசியல் சாசனத்தினுடைய நோக்கத்திற்கு எதிரானது. 

மென்மையான நிலைப்பாட்டை நீதிமன்றம் எடுத்திருக்கிறது என்று சொல்கிறீர்கள். மது என்பது அரசின் கொள்கை முடிவு. அந்தக் கொள்கை முடிவையே நீதிமன்றத்தின்மூலமாக, சட்டத்தின் மூலமாக இந்தளவுக்கு இக்கட்டான நிலைக்குக் கொண்டு வந்ததே எங்களுக்கு சந்தோஷம். தேசிய நெடுஞ்சாலை மட்டுந்தான் மத்திய அரசு சொன்னது. நாங்கள் வழக்குப்போடும்போது மாநில நெடுஞ்சாலையையும் சேர்த்துக்கொண்டோம். இப்ப மாநில நெடுஞ்சாலைகளிலும் மதுக்கடை இருக்கக்கூடாது என்று உத்தரவு வந்துவிட்டது.தமிழக அரசாங்கமே வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடங்கள் அருகே மாநகராட்சி பகுதியாக இருந்தால்50 மீட்டர், கிராமப் பகுதியாக இருந்தால்100 மீட்டர் இடைவெளியில்தான் கடைகளை வைக்க வேண்டும் என்று விதியை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் நெடுஞ்சாலையிலிருந்து 500மீட்டர் தொலைவில்தான் கடையை வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் போராடிப் பெற்றிருக்கிறோம். இது நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்ட நிபந்தனை. அதேபோல நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகரச் சாலைகளுக்குள் வராது என்று தமிழக அரசு வாதாடியது. அதை ஏற்காமல் நகராட்சியாக இருந்தாலும், பேரூராட்சியாக இருந்தாலும் பொருந்தும் என்று  நீதிமன்றம் சொன்னது.

மதுக்கடைகளை மூடவேண்டும் என்றுதான் நாங்கள் வழக்குத் தொடர்ந்தோம். தமிழக அரசு அதை அப்படியே அமல்படுத்தியிருந்தால், வெறும் மதுக்கடைகள் மட்டும் தான் மூடப்பட்டிருக்கும். ஆனால் இப்போது கிளப், நட்சத்திர விடுதிகள் மூடப்பட்டிருக்கிறது. இதுவும் நீதிமன்றத்தால் கிடைக்கப் பெற்றதுதான். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால், அந்த ஊராட்சிக்குள் மதுக்கடை வைக்கக்கூடாது என்று அந்த மாநில அரசு சட்டம் இயற்றியுள்ளது. தமிழ்நாட்டில் அப்படி ஒரு சட்டம் இல்லை. ஆனால், ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினால் அந்தப் பகுதியில் மதுக்கடைகளை வைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மூலமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

ஒரு பகுதியில் மதுக்கடை  வேண்டாம் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினால் அந்தப் பகுதியில் மதுக்கடை வைக்கக்கூடாது என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி சமீபத்தில் நான் தொடர்ந்த வழக்கில், அதிகமான மதுக்கடைகளை திறப்பது வருத்தமளிக்கிறது. ஒரே நேரத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை மூடிய பின்னர், அதனை திறக்கக்கூடாது என்று தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக போராட்டம் எழுகிறபோது நாங்கள் கண்ணைமூடி வேடிக்கைப் பார்க்க முடியாது. எனவே, தமிழக அரசு வருவாயைக் கருத்தில் கொள்ளாமல் மக்கள் நலனையும், பொது சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு கடைகளைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் மது விற்பது தொடர்பான கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பை மதிக்கக்கூடிய, மக்கள் நலனை பார்க்கக்கூடிய எந்தவொரு அரசும் இதனை உடனடியாக செய்ய வேண்டும். இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தீர்கள். இந்த சந்திப்பு உங்கள் மதுவிலக்கு கொள்கைக்கு உதவியாக இருந்ததா? 

அரசியல்ரீதியான கொள்கைகளில் மாறுபட்டிருந்தாலும் கூட, மது தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டதன்பேரில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்தோம். அந்தவகையில் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம். எப்படி இந்த உத்தரவு கிடைக்கப் பெற்றது? இந்த உத்தரவால் என்ன பயன்? எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பதைச் சொன்னோம். அதன்பிறகு தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டார். அதெல்லாம் முன்னேற்றம்தான். எங்கள் வழக்கிற்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறோம். 

நெடுஞ்சாலைகளில் மூடிய கடைகளை ஊருக்குள் திறக்க முயல்கிறது அரசு. அதனை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர் பொதுமக்கள். குறிப்பாகப் பெண்கள். திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் நடந்த போராட்டத்தில் பொதுமக்கள்மீது தடியடி நடத்தினர். அதில், ஈஸ்வரி என்னும் பெண்ணைக் காவல்துறை அதிகாரி கன்னத்தில் அறைந்ததில் அவருடைய காது பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் அளவுக்குச் சென்றது. மக்களின் நியாயமான போராட்டத்திற்கு அரசின் அணுகுமுறை பற்றி...

ரொம்ப ரொம்ப வருத்தமளிக்கிறது. பெண்கள் வீதிக்கு வந்து கடைகளை அடித்து நொறுக்குகிறார்கள். மதுவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு விருது கொடுக்க வேண்டும். சமூக நலனுக்காக போராடக்கூடிய போர்வீரர்களாக, போராட்ட குணம் கொண்டவர்களாக அவர்களை அறிவிக்க வேண்டும். அவர்களை கைது செய்வது, அடிப்பது, வழக்கு போடுவது என்ற செயலை அரசும், காவல்துறையும் செய்கிறது. ஒரு நிமிடம் நாம் என்ன செய்கிறோம் என்பதை காவல்துறை திரும்பிப் பார்க்க வேண்டும். 

ஒரு டாஸ்மாக் மேனேஜர், டி.எஸ்.பி.க்கு கடிதம் எழுதுகிறார். அதில்,"நாங்கள் கடையை மாற்றி புதிதாகக் கடையைத் திறப்பதற்கும், கடையில் மதுவை வியாபாரம் செய்வதற்கும், தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று எழுதுகிறார். இதற்கெல்லாம் அரசும், காவல்துறையும் பதில் சொல்லும் நாள் வெகுவிரைவில் வரும். சாமளாபுரத்தில் ஈஸ்வரி என்னும் பெண்ணை தாக்கிய கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன்.நடவடிக்கை எடுப்பதாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

மக்கள் இந்த பிரச்சினையில் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்துகிறார்கள். மக்களை எந்தக் கட்சியினரும் தூண்டிவிடவில்லை. பாமகவும் சட்ட ரீதியாகத்தான் கடைகளை மூடவேண்டும் என்று முயற்சிக்கிறது. ஏன் மக்கள் போராடுகிறார்கள் என்றால், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை மூடிவிட்டதால், இருக்கிற கடைகளில் கூட்டம் கூடுகிறது. கடைகளுக்கு முன்பு வாகனங்கள் நிற்கிறது. அந்தப் பகுதி பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருக்கிறது. அந்த மக்களுக்கு இடையூறு ஏற்படும் அளவுக்குக் கூட்டமும்,விற்பனையும் இருக்கிறது. 

புதிதாகக் கடையைத் திறக்க அரசு இடம் தேடுகிறது. இடம் கிடைக்கவில்லை; திறந்தேதான் தீருவோம் என்று போலீஸ் உதவியுடன் அலைகிறது. தமிழக அரசின் பிடிவாதத்தால் தான், மக்களிடம் போராட்ட குணம் உருவாகியுள்ளது. 

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு இளைஞர்கள் கூடியது மகிழ்ச்சி; வரவேற்கத்தக்கது. இளம் தலைமுறை போராட்டக் களத்திற்கு வந்தது வரவேற்கத்தக்கது. அந்த போராட்டத்தினால் இந்த சமூகம் அடைந்த பயனைவிட, இந்த ஜல்லிக்கட்டு (மதுவுக்கு எதிரான) போராட்டத்தால் நடக்கிற பயன்தான் மிகமிக முக்கியம். உன்னதமானது. 

கள் போதைப்பொருள் அல்ல; உயிர்க்கொல்லியும் அல்ல என கள் இயக்கத்தினர் வலியுறுத்துவதையே முன்னுறுத்தி கள்ளுக்கு அனுமதி தரலாமா என்று அரசு யோசிக்கிறதாமே...

ஒரு இடத்திலிருந்து விலகி வருகிறோம். மீண்டும் அந்த இடத்திற்கு கொண்டுபோகத்தான் இதுவழி வகுக்கும். தென்னை, பனைகளிலிருந்து வரும் ‘நீரா’ போன்றவற்றை விற்பனை செய்யக்கூடியதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நீரா பானத்தால் எந்த பிரச்சினையும் இல்லை.கள் தேவையில்லை என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு. நீங்கள் விரும்பிய மதுவிலக்கைக் கொண்டுவந்தால், மது விற்பனைமூலம் வரும் வருவாயை எப்படி ஈடுகட்டுவது?

பலமுறை சொல்லியிருக்கிறோம் மணல், கிரானைட் வியாபாரத்தை அரசே நடத்துவது, தேவையற்ற இலவசங்களை ஒழுங்குபடுத்துவது ,கல்வி, சுகாதாரம், மருத்துவம், விவசாயத்திற்கு மட்டும் இலவசங்களைக் கொடுக்க வேண்டும். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் பீகார், குஜராத். அந்த மாநிலங்களில் ஒரு ரூபாய்கூட மது விற்பனையால் வளர்ச்சித் திட்டத்திற்கு எடுக்கவில்லை. 

உங்க கட்சி மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களில் உங்கள் தொண்டர்கள் சிலரே மது அருந்தி வருகிறார்கள் என விமர்சனம் வருகிறதே...

வருது... வருது... நாங்களெல்லாம் யோக்கியம், மத்தவங்களெல்லாம் கெட்டவங்க என்றோ, மத்தவங்க எல்லாரும் யோக்கியம், நாங்களெல்லாம் கெட்டவங்கன்னோ என்கிற போராட்டம் கிடையாது. மதுவால் பாதிக்கப்படுவது அரசியலைக் கடந்து எல்லாருமே. பாமகவும் உட்பட. விதி விலக்கல்ல. நாங்களே எங்கள் தொண்டர்களுக்கு குடிக்க வேண்டாம் என்று பயிற்சியளித்து வருகிறோம், வலியுறுத்தி வருகிறோம். அது எப்பக் குறையும் என்றால், மது கிடைப்பதற்கான வாய்ப்புக் குறைந்தால், மது அருந்துவதற்கான வாய்ப்பும் குறையும். அன்றைக்குச் சொன்னாங்க, நீங்க குடிக்காம இருந்தாக்க, நாங்க ஏன் கடையை வைக்றோமுன்னு. இன்றைக்கு மக்களே வேணாமுன்னு சொல்றப்ப, நீங்க ஏன் கடையை திறக்க வர்றீங்க? 

-வே.ராஜவேல்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : selvarajan Date :5/16/2017 11:18:13 PM
இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்கியதே சினிமாதான். இப்போது வரும் படங்களில் ஹீரோ தன் நண்பர்களுடன் குடித்து கும்மாளம் போடுவதை ஒரு கலாச்சாரமாகவே காட்டப்படுகிறது. பா ம க முதலில் இததகைய படங்களுக்கு எதிராக போராட்டம் செய்யட்டும். குடிப்பவர்களை தன் கட்சியிலிருந்து நீக்கட்டும்.