Add1
logo
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் || தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன் || தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி || மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம் || இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி! || சென்னை எனக்கு இரண்டாவது வீடு! - சி.எஸ்.கே. ரீஎண்ட்ரி உற்சாகத்தில் தோனி || தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி || தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ் || வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி || 41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்! || தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன் || வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான் || பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி ||
சிறப்பு செய்திகள்
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
நமக்குப் பொங்கல்... ஆந்திரா, கர்நாடகாவில் என்ன?
 ................................................................
பனியோ, புகையோ
 ................................................................
கண் கூசும் நெடுஞ்சாலைகள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, மே 2017 (19:14 IST)
மாற்றம் செய்த நாள் :14, மே 2017 (19:14 IST)


வாழ்வைத் தொலைத்த சுமைதாங்கிகள்!

மரம் வானளாவ ஓங்கி உயர்ந்து நிற்பதற்குக் காரணமே மண்ணுக்கடியில் போராடும் ஆணிவேர்களும், சல்லி வேர்களும் தான். சுமைதாங்கியைப் போன்று தங்களை உருக்கிக் கொள்ளும் அவைகள் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. அதேபோன்று தான் சமூகத்தில் பாரத்தைச் சுமக்கிற சுமைதாங்கிகள். அப்படிப்பட்ட சுய நலமற்ற தியாகிகளை வெளிக்கொண்டு வருவது தான் இந்தக் கட்டுரையின் அடி நாதமே. உலகம் எத்தகையது என்பதை உணர்த்துகிறது இது.கிடைத்த தகவலைக் கொண்டு நெல்லை மாவட்டத்தின் திருவேங்கடம் தாலுகாவின் சங்குபட்டி நக்கலமுத்தன்பட்டிக் கிராமங்களில் அதனை உறுதிப்படுத்த நமது ஸோர்சுகளைத் தேடியலைந்த போது தான் நினைத்துப் பார்க்க முடியாத அந்தத் தகவல் நம்மை உலுக்கி விட்டது. இடுப்பில் கசங்கிய வேட்டி. வெற்று மார்பில் கையடக்க ஒற்றைத் துண்டு. கொளுத்துகிற வெயிலில் பெருமூச்சோடு வந்தவரை நம்மிடம் அறிமுகப் படுத்தினார்கள். வயதான அந்தப் பெரியவரிடம் நாம் பாந்தமாகப் பெயரைக் கேட்டதும் நாராயணசாமி என்று சொன்னவர், “சாமி பேர வைச்சிறுக்காக என்னயப் பெத்தவுக. பேரு பெத்த பேரு. ஆனா தாகத்துக்கு குடிக்கத் தான் தண்ணி கெடையாதுய்யா”, வெறுப்பும் வேதனையுமாய் வெளிப்பட்டது அவரது உதட்டோரச்சிரிப்பு.மைப்பாறை கிராமத்தின் சாதாரண விவசாய கூலிப் பெற்றோர்களின் மூத்த மகன் தான் நாராயணசாமி. அவருக்குப் பின்னால் வரிசையாக நான்கு பெண்கள். இவா்கள் கையை ஊன்றி கரணம் போடுவதற்கு முன்பே தாயும் தந்தையும் உலகத்தை விட்டுப் போய் விட்டார்கள். மொத்தப் பேர்களும், துணையின்றி இடிந்தே போனார்கள். குடும்பத்தின் ஒட்டுமொத்தச் சுமையும் நரயாணசாமியின் தலையில். விவரமறியா உடன் பிறந்த பெண்களை வளர்த்து ஒருவனின் கைபிடித்து கொடுக்க வேண்டி கட்டாயம் அவருக்கு. மனிதருக்கு வேறு வழி தெரியவில்லை. பெற்றோர்கள் விட்டு வைத்துப் போன சுண்டக்காய் நிலத்தில் பாடுபட்டு உழைத்தவர், அல்லும் பகலும், விவசாயிக் கூலி வேலையும் பார்த்தார். ஆனாலும் தன் மனதிலுள்ள வீம்பை விட்டு விடாமல் சகோதரிகளின் வாழ்க்கையே முக்கியம் என்ற வைராக்கியத்தோடு பாடுபட்டவருக்குக் காலமும் ஒரு வகையில் கை கொடுத்தது. தன் உடன் பிறந்த நான்கு சகோதரிகளையும் கரையேற்றியவர் அவர்களனைவருக்கும் திருமணம் செய்து முடித்த போது நாரயணசாமிக்கு வயது 45 கடந்துவிட்டது.

அவர்களை கரையேற்றிய பிறகே தனக்குத் திருமணம் என்ற மன உறுதியிலிருந்து பிறழாத நாராயணசாமி, தனக்காகப் பெண் தேடிய போது, கிடைத்த அனுபவமும், கேட்ட அக்னி வார்த்தைகளுமே அவரைப் பொசுக்கி விட்டன. சமூகத்தில் பிடிப்பில்லாமல் ஒண்டிக் கட்டையாகிப் போன அவரே சொல்கிறார். “இப்ப எனக்கு வயசு 73 ஆனாலும், எந்தாய், தகப்பன் இறந்தப்ப எனக்குப் பிராய வயசு தான். உறவுன்னு சொன்னா எங்கூடப் பொறந்த நாலு பொம்பளப் புள்ளைகதான். அதுகள வளத்து ஆளாக்கி, வம்மை வளமை செஞ்சு, ஒருத்தங் கையில புடுச்சிக்குடுக்கிறதுக்குத் தலை கீழ நிண்ணு தண்ணி குடிக்க வேண்டியதாப் போச்சு. அதுக்குப் பொறவு நான் கல்யாணம் பண்ணிக்க எனக்குப் பெண் தேடுறப்ப முத்திப் போன காயி, அரைக் கெழடுக்கு யார் பொண்ணு குடுப்பான்னு வெளிப்படையாப் பேசுனதைக் கேட்டு திருமணமே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.

உடம்புல தெம்பு கொறைஞ்சு போனாலும், வயிறுன்னு ஒன்னு இருக்கே; அப்படியும் இப்படியுமா நிரந்தரமில்லாம வயித்துப்பாடு கழியுதுங்க. கூடப் பிறந்த பொம்புளப் புள்ளைக கிட்ட வயித்துச் சோறுன்னு போனாலும், நான் போனா அவுகளுக்குச் சங்கடமாகுமேன்ற நெனைப்புல போவல. அவுகளும் கவனிக்கல நாம எப்படியானா என்ன? கூடப் பொறந்த பொறப்புகளத் தவிக்கவுடாம அவுகளுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு குடுத்த திருப்தி ஒன்னே எனக்குப் போதும். கரடு முரடான வீடு, கட்டாந்தரைன்னு எனக்கு கடைசி வாழ்க்கையாப் போச்சு. உதவின்னு யாருமில்லாத அனாதை. செத்தா யாராவது புண்ணியவாம்ங்க அடக்கம் பண்ணிருவாகல்ல” வார்த்தைகள் சலிப்புடன் வெளிப்பட்டன அவரிடமிருந்து.

அதே கிராமத்தின் 68 வயது கடந்த லட்சுமி அம்மாள். பிராயத்தில் உழைப்புக்குச் சலிப்பில்லாதவர். இப்போது நொந்து நொறுங்கிப் போயிருக்கிறார். விதி, இந்தம்மாவின் வாழ்க்கையில் இஷ்டம் போல் விளையாடியிருக்கிறது. மூத்தவரான இவரோடு சேர்த்து பிறந்த 4 பேரும் பெண்கள். பெற்றோர்களிருக்கிறார்கள் என்று ஆறுதலடைந்த லெட்சுமி அம்மாளுக்கு அடுத்து மரண அடி; தாயும் தந்தையும் கண்ணை மூடியது தான்.பெண்களுக்கே உரித்தான இழகிய மனம் கொண்ட லெட்சுமி அம்மாள், மாங்கு மாங்குகென்று உழைத்தார். சகோதரிகளும் ஓரளவுக்கு ஒத்தாசையாக இருந்தனர். கடுமையான பிரயாசை. ஒரு வழியாக தன் மூன்று சகோதரிகளையும் கரை சேர்த்தவரின் வாழ்க்கை உருப்படியாய் அமைந்ததா? என்றால் விட்டேத்தியாய் உதட்டைப் பிதுக்கினார்.

“கூடப்பிறந்த தங்கச்சிகளுக்கு ஒரு நல்ல வழிய அமைச்சுக்குடுத்தப்புறம் தான் நம்ம வாழ்க்கையத் தேடனும்ற நெனைப்பு எனக்குள்ள. அதுக ஒண்டியா சங்கடப்பட்டா ஊரு உலகம் என்னயத் தாளிச்சிறும். மன வைராக்கியத்த உடல உருக்கி முடிச்சேன். ஆனா எனக்கு வயசு ஏறிப் போனதால ஏதோ, கணவன்ற பேருக்கு ஆம்பள. வேலைக்குப் போனா சம்பளத்த வீட்டுக்கு கொண்டவர மாட்டாரு. ஜீவன் போன இந்த வயசுல உழைக்கத் தெம்பில்லைய்யா. கூடப் பிறந்தாளுகளும் கவனிக்கல. உலகம் எப்புடிப்பட்டதுன்னு இப்பத்தான் மண்டைக்கி உரைக்கி. அரை குறை வவுத்தோட காலம் கழியுது. என்னத்தச் சொல்ல?” வழிந்த கண்ணீரைச் சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டார் லெட்சுமி அம்மாள்.

உடன் பிறந்தவர்களுக்காகப் பாரம்சுமப்பதில் ஊசி முனையளவு கூடக் குறை வைக்காதவர் சங்குபட்டிக் கிராமத்தின் மீனாட்சி அம்மாள். எலும்பும் தோலுமாயிருப்பவருக்கு 73 வயது கடந்து விட்டது. பிராயகாலத்தில் காடு மேடுகளில் சலிக்காமல் உழைத்த உழைப்பே இன்று வரை அவரை நடமாட வைத்திருக்கிறது.“ஊக்கமெல்லாம் போச்சுய்யா. ஆனா, அதுக்கு நா கவலப்படல. எம் உடம் பிறந்தாக்களக் கட்டிக் குடுத்துட்டு எனக்குன்னு வாழ்க்கை அமைஞ்சாலும், கடைசிக் காலம் பெத்த புள்ளைகளும் கவனிக்கலை. கரையேத்த உதவுனவன்ற நெனைப்பேயில்லாமப் போன உடம்பிறந்தா கூட சோறு தண்ணி தரல. அதுக்காக நா வருத்தப்படல. வெந்ததத் தின்னா, விதி வந்தப் போயிறுவோம்ற நெனைப்புல நடமாடிட்டிருக்கேஞ்சாமி. இந்தக் கொடுமயப் பாக்கச் சகிக்காமத்தான் கட்டுனவுரு இருவது வருஷத்துக்கு முன்னமயே கண்ண மூடிட்டாரு போல” என்ற போது மீனாட்சி அம்மாளின் உடம்பு பெரு மூச்சு வாங்கியது.

இரண்டு ஆண், ஒரு பெண் மூவருக்கும் மூத்தவராய் பிறந்த சங்குபட்டிக் கிராமத்தின் சின்னச்சாமிக்கு 68 வயசு போய் விட்டது. பிறர் பாரத்தைச் சுமப்பதற்கென்றே நேர்ந்து விட்டவர் போலக்காணப்பட்டார். நம்மளப் பெத்தவங்க போயிட்டாக. நாமளும் கல்யாணம் பண்ணிட்டு போனா கூடப் பிறந்தவுக அனாதையாயிறுவாகளேன்ற கலக்கத்தில், அதுவரை கல்யாணம்னு வேண்டாம் என்ற உறுதியில் உடன் பிறந்தவர்களுக்கு உழைப்பின் மூலம் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து ஒண்டியாய்ப் போனவரை இன்று, உடன் பிறப்புகளே கைவிட்டுவிட்டன. பரிதாபம் மனிதா், கிடைத்தைச் சாப்பிட்டு விட்டு ஊர் மடத்தில் உறங்கிக் கொண்டு தன் வாழ்நாளைக் கழிப்பதாகச் சொல்லும்போது கண்களில் உதிரம் கிளம்புகிறது.இதுபோன்று குடும்பத்தில் மூத்தவராய்ப் பிறந்த ஆணோ, பெண்ணோ உடன் பிறந்தவா்களை அனாதையாக்காமல், அவா்கள் உயா்வதற்கு ஏணியாய் இருந்து விட்டு, வயதும் போய் அரை அங்குல இதயத்தை வைத்துக்கொண்டு அரை அடி வயிற்றை வளா்க்க அரும்பாடுபடுவா்கள் திருவேங்கடம் தாலுாகாவின் ஒவ்வொரு கிராமத்திலும், இருபத்துக்கும் மேற்பட்டவர்களிருக்கிறார்கள் என்கிற புள்ளி விபரத்தையும் குறிப்பிடுகிறார்கள். மூத்தவர்களான இவர்கள், தங்களையும் வளர்த்து ஆளாக்கியவா்கள் என்ற அடிப்படை நன்றி கூட இல்லாமல், வாழ்நாளின் அந்திமக் காலத்தில் உணவுக்கே கஷ்டப்படும் இவர்களைத் திரும்பிப் பார்க்காமல் நிர்கதியாய் விட்டதோடு, தங்கள் வீடுகளின் திருமணம் உள்ளிட்ட மங்கல காரியங்களுக்குக் கூட முறைப்படி அவர்களை அழைக்காமல், அமங்கலம் எனக்கருதி உடன் பிறந்தவர்களே ஒதுக்கி வைத்திருப்பது கொடுமையிலும் கொடுமை.

நடைப்பிணமாகவே மாறிவிட்ட இந்தச் சுமைதாங்கிகளுக்கு ஜீவனமாய் இருப்பது கலைஞர் அரசு கொடுத்த இலவச அரிசியும், முதியோர் பென்ஷனுமே. ஆனால், பின்னர் வந்த அ.திமு.க அரசோ அவா்களின் முதியோர் பென்சனையும் பறித்துக் கொண்டு அவர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டது. தாங்கள் உயா்வதற்குப் படிக்கட்டாய் இருந்தவர்களை ஒதுக்கித் தள்ளியவா்களுக்கு ஒரு குறள்.

எந் நன்றி கொன்றாற்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு.
 
-பரமசிவன்
படத்தொகுப்பு : ப.இராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :