Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || மக்கள் மனநிலை புரிந்து ஆட்சி நடத்த வேண்டும் - தமிமுன் அன்சாரி || சேலம் அருகே போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறை || சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் பேராசிரியர் மீது கல்வீச்சு || மணலியில் திமுக எம்.எல்.ஏ ஆய்வு || நமது பாரம்பரியத்தை பாதுகாப்பது வேண்டும்: துணை ஜனாதிபதி || 50 லட்சம் மதிப்புள்ள டிவிடிக்கள் பறிமுதல் || மொபைல் போன் இணைப்பிற்கான கட்டணம் குறைப்பு: டிராய் || இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம்: யுனிசெப் தகவல் || பத்து நிமிடத்தில் ஆய்வு கூட்டம் நடத்திய ஒபிஎஸ் ! || 2 வழக்குகள்:அறை 23- ல் நீதிபதி துரைசாமி விசாரிக்கிறார் || அவசியம் ஏற்பட்டால் வட கொரியாவை அழிக்க அமெரிக்கா தயங்காது: டிரம்ப் எச்சரிக்கை || யுவராஜ் சிங் போன்று சிறந்த ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்வார் - விராட் கோலி ||
சிறப்பு செய்திகள்
யூ-ட்யூபை கலக்கும் ஸ்ருதிஹாசன் குறும்படம் !!!
 ................................................................
நேரு துவங்கினார்... மோடி திறந்தார்...
 ................................................................
அரசாங்க குளறுபடியும் ரேசன் அட்டை காமெடிகளும்!
 ................................................................
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்!
 ................................................................
இன்றும் ட்ரெண்டில் பெரியார் !!!
 ................................................................
இதய நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி...
 ................................................................
என்னது... இவரு என்ஜினியரா???
 ................................................................
அரசு பள்ளி மாணவன் கண்டெடுத்த ‘துட்டு’ (படங்கள்)
 ................................................................
ஆதார் வாங்கவே ஆதார் கார்டு கேப்பாங்களோ?
 ................................................................
இன்ஜெக்டபிள் கருத்தடை முறை வரமா - சாபமா?
 ................................................................
"சிறையில் பெண்களுக்கு நாப்கின்கள் கூட கொடுப்பதில்லை" - கொந்தளிக்கும் வளர்மதி!
 ................................................................
ஜெயேந்திரர் ஒப்புதல் வாக்குமூலம்!
 ................................................................
நீதிக்கட்சி அரசின் சாதனைகளும், பூசல்களும்!
 ................................................................
கல்வி நிலையத்தில் காவிகள் படுதோல்வி!
 ................................................................
தினமும் 3 பக்கம் எழுதினால் மருத்துவ செலவு மிச்சம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, மே 2017 (17:41 IST)
மாற்றம் செய்த நாள் :14, மே 2017 (8:33 IST)


பிற மாவட்டங்களுக்கு பெருமை சேர்த்து பழி சுமக்கும் கடலூர் மாவட்டம்!

ப்ளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடமும், கடலூர் மாவட்டம் கடைசி இடமும் பெற்றுள்ளது. இந்த அரசு தேர்வுத்துறையின் மதிப்பீடே தவறு என்கிறார்கள் கல்வியாளர்கள். 

தேர்வு முடிவில், அரசுப் பள்ளிகள்86.87 சதவீதம், தனியார் பள்ளிகள் 97.77 சதவீதம், மாநகராட்சிப் பள்ளிகள் 90.06 சதவீதம், நகராட்சிப் பள்ளிகள் 87.20 சதவீதம், ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகள் 96.06 சதவீதம், பழங்குடியினப் பள்ளிகள் 86.65 சதவீதம், சுயநிதிப் பள்ளிகள் 97.77 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மொத்தத்தில் 92.01 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.கடந்த ஆண்டைவிட 0.7 சதவீதம் தேர்ச்சி கூடுதல் என்கிறது பள்ளிக் கல்வித்துறை. 


படம் மாடலே

இதில் 97.85 சதவீதம் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்திலும், 84.36 சதவீதம் தேர்ச்சி பெற்று கடலூர் மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளது என்று கல்வி தேர்வுத்துறை முடிவு வெளியிட்டது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகளை கண்டபடி விமர்சனம்செய்து சமூக வலைத்தளங்களில் எள்ளி நகையாடுகிறார்கள். 

ஆனால் இந்தக் கண்ணோட்டம் தவறு என்கிறார்கள் கல்வியாளர்கள். அவர்களின் கருத்து என்ன?

கல்வியாளரும், பிரபல விருத்தாசலம் கண் மருத்துவருமான வள்ளுவன்:- 'புள்ளி விவரம் சரி.அதிலுள்ள உள் விஷயங்களைப் பற்றி அலசி ஆராய வேண்டும். தமிழகத்தில் எல்லா விதத்திலும் விழிப்புணர்வுபெற்ற மாவட்டம் கல்வியில் கடைசியா? இல்லவே இல்லை. காரணம், இதே எங்கள் மாவட்ட நடுத்தர, உயர்தர குடும்பத்துப் பிள்ளைகள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 5ஆம் வகுப்புமேல், பலர்8ஆம் வகுப்புக்குமேல் பல மாவட்டங்களுக்குப் படிக்கச் செல்கிறார்கள். 

குறிப்பாக சேலம்,நாமக்கல்,ஈரோடு,பெரம்பலூர்,திருச்சி,ராசிபுரம் போன்ற இடங்களுக்குச் சென்று சேர்ந்து படித்து,நல்ல மதிப்பெண்கள் எடுத்து அந்த மாவட்டங்களின் புள்ளி விவரப் பட்டியலுக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.அந்தக் கணக்கை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டாமா? மேலும் எங்கள் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் குறைவு.தரமான கல்வி என்ற பெயரில் வீடு, நிலத்தை எல்லாம் விற்று லட்சக்கணக்கில் பல மாவட்டப் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து அதிக மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெறுபவர்களை அந்த மாவட்டப் புள்ளி விவரத்தில் சேர்ப்பதால் கடலூர் மாவட்டம் கடைசி இடத்தில் வருகிறது. 

உண்மையிலேயே பார்த்தால் எங்கள் மாவட்டத்தில் 84.36 சதவீதம் பெற்றுள்ளதை பாராட்ட வேண்டும்.ஏன் தெரியுமா?நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்கள் வெளி மாவட்டப் பள்ளிகளுக்கு போய்விட்ட நிலையில் உள்ளுரிலேயே ஏழை, நடுத்தரக் குடும்பத்துப் பிள்ளைகள் சுமாராகப் படிப்பவர்கள், மோசமாகப் படிப்பவர்களைக்கூட கஷ்டப்பட்டுப் படிக்க வைத்துதான் 84சதவீத தேர்ச்சி கிடைத்துள்ளது. 

இதற்காக உழைத்த ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகளை பாராட்ட வேண்டும். மற்ற மாவட்டங்களில் சேர்ந்து படித்துள்ள எங்கள் மாவட்டப் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை கணினி மூலமே கண்டுபிடித்து கணக்கு செய்யட்டும்.நான் சொல்வது 100 சதவீதம் உண்மை என்பது உலகுக்குப் புரியும்.எனவே,கல்வியில் கடைசி மாவட்டம் என்று எள்ளி நகையாட வேண்டாம்' என்கிறார் டாக்டர் வள்ளுவன்.

மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியராக பணி செய்து ஓய்வு பெற்ற பெண்ணாடத்தைச் சேர்ந்த தங்க.வீரப்பன்:- 'அரசு அதிகாரிகள்,கல்வியாளர்கள் வெறும் ஓட்டுக் கணக்காக்கிப் புள்ளி விவரத்தை மட்டும் பார்க்கக்கூடாது.நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்கள் எல்லாம் பல மாவட்டங்களில் சிதறிப்போய் படித்து அங்குள்ள பள்ளிகளுக்கும், அந்த மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கிறார்கள் என்ற கணக்கைப் பார்க்க வேண்டும். 

மேலும், அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு,+2 படிக்கும் மாணவர்கள் தேர்வில் தோல்வியுற்று, மறுதேர்வு எழுதி பலமுறை பல பாடங்களுக்குத் தேர்வு எழுதியவர்கள் எல்லாம் அரசுப் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். அந்த மாணவ, மாணவிகளை எந்த தனியார் பள்ளியும் சேர்ப்பதில்லை. அப்படிப்பட்டப் பிள்ளைகள் மிகவும் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்துத் தேர்வில் வெற்றிபெற வைக்கிறோம். 

கடலூர் மாவட்டம்,கடைசி இடம் என்று எள்ளி நகையாடுகிறார்கள்.இது மிகமிகத் தவறு.  அரசுப் பள்ளியில் சரியாகப் படிக்காத மாணவ -மாணவிகளை கண்டிக்க முடியவில்லை. சிறிய அளவில்கூட தண்டிக்க முடியவில்லை. அப்படி ஏதாவது கண்டித்தால் பெற்றோர் போராட்டம்,அதிகாரிகள்,ஆசிரியர்கள்மீது நடவடிக்கை  பாய்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இந்த அளவு தேர்ச்சியை உயர்த்தியுள்ளதற்குப் பாராட்ட வேண்டும். 

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களைக் கொண்டு இந்த அளவு தேர்ச்சி விகிதம் வந்தது பெரிய விஷயமாக கருத வேண்டும். சில பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்களே இல்லை. மாணவர்களே ஆர்வமுடன் படித்ததும் உண்டு. 

ஓட்டப் பந்தயத்தில் ஆரோக்கிய உடலுடன் ஓடி வெற்றி பெறுவதற்கும், நோயாளியை மருத்துவம் பார்த்து ஓடவைத்து வெற்றி பெறுவதற்கும் வித்தியாசம் உண்டு இல்லையா? அதுபோல அரசுப் பள்ளிகள்  கல்வியில் கடைசி என்ற கருத்து தவறு என்பதை எல்லாரும் உணர வேண்டும்' என்கிறார் ஆசிரியர் தங்க வீரப்பன். 

எஸ்.பி.சேகர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : arasar Country : India Date :5/17/2017 4:01:38 PM
கூறப்பட்டுள்ள காரணங்கள் ஏற்க கூடியவைகளே ! இவைகளுக்கும் மேலே மனசாட்சியோடு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. ஜாதி வெறி கலந்த போராட்டங்கள் மாணவர்களை துளிகூட ஆர்வமில்லாதவர்களாக்குகின்றது. கல்வி அதிகாரிகளை வசப் படுத்தும் ஜாதி வெறி, அரசியல் அதிகாரங்கள், லஞ்ச லாவண்யம் ஒழிக்கப் பட வேண்டும். இந்த மாற்றங்கள் ஏற்படவில்லைஎன்றால் இன்னும் மோசமான நிலை தான் உருவாகும். மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகும். உடனடியாக, கடுமையான நடவடிக்கை தேவை !