Add1
logo
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் || தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன் || தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி || மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம் || இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி! || சென்னை எனக்கு இரண்டாவது வீடு! - சி.எஸ்.கே. ரீஎண்ட்ரி உற்சாகத்தில் தோனி || தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி || தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ் || வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி || 41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்! || தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன் || வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான் || பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி ||
சிறப்பு செய்திகள்
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
நமக்குப் பொங்கல்... ஆந்திரா, கர்நாடகாவில் என்ன?
 ................................................................
பனியோ, புகையோ
 ................................................................
கண் கூசும் நெடுஞ்சாலைகள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, மே 2017 (13:37 IST)
மாற்றம் செய்த நாள் :13, மே 2017 (14:10 IST)

இந்தி படிக்கக்கூடாது என்று சொல்லி தமிழர்களின் வளர்ச்சியை திராவிட இயக்கம் தடுத்துவிட்டதா?
இந்தி படிக்கக்கூடாது என்று திராவிட இயக்கம் சொல்லவில்லை. இந்தி படித்தே ஆக வேண்டும் என்று தமிழர்களின் தலையில் அந்த மொழியைத் திணிக்கக்கூடாது என்றுதான் திராவிட இயக்கமும் தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 
இரு மொழிக்கொள்கையின் வாயிலாகத் தமிழுடன் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளும்போது இந்தியை மட்டும் எதிர்ப்பது ஏன்?
இந்தி படித்தால்தான் வேலை என்றும், இந்தி மட்டும்தான் இந்தியாவின் ஆட்சி மொழி என்றும் 1965-ல் மத்திய அரசு இந்தியைத் திணித்தபோது, அதனை எதிர்த்துதான், பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான தி.மு.க அரசு இரு மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் நிறைவேற்றியது. தாய்மொழியான தமிழுக்கு முதன்மை இடமும், தொடர்பு மொழியாக ஆங்கிலமும் இருக்கும் என்றும், ஆதிக்கம் செய்ய நினைக்கும் இந்திக்கு அறவே இடமில்லை என்றும் தமிழகம் முடிவெடுத்தது.

வெள்ளைக்காரனின் ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ளும்போது இந்தியாவில் உள்ள ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளக் கூடாதா?

வெள்ளைக்காரன் இப்போது நம்மை ஆட்சி செய்யவில்லை. அவர்கள் வெளியேறி 70 ஆண்டுகளாகிவிட்டன. அதனால் ஆங்கிலத்தை வைத்து அவர்களால் இனி நம்மை அடக்கவோ, ஆதிக்கம் செலுத்தவோ முடியாது. எனவே, உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ளும்போது ஆதிக்கம் ஏதுமின்றி, அறிவியல் வளர்ச்சிக்கேற்ற வகையில் கற்க முடியும். ஆனால், இந்தியாவில் இந்தி பேசுகிறவர்கள் அதிகம் என்று சொல்லி, அதை மற்ற மொழிக்காரர்களும் கற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று நிர்பந்திப்பது ஒரே நாட்டில் வாழும் மக்களை வெவ்வேறு அளவுகோல்களில் தரம் பிரிப்பதாக அமைந்துவிடும். தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கிவிடும்.
தேசிய மொழியான இந்தியைப் படிக்காமல் இருக்கும் தமிழர்கள் தேசபக்தர்களா? என்று வடஇந்திய நண்பர்களும் பா.ஜ.க போன்ற தேசிய கட்சியினரும் கேட்கிறார்களே?

இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று யாராவது உங்களிடம் சொன்னால், “அப்படியென்றால் இதே இந்தியாவில் பேசப்படும் எங்கள் தமிழ் உள்ளிட்ட பிறமொழிகள் என்ன மொழி?” என்று அவர்களிடம் கேளுங்கள். “தமிழர்களும் மற்ற மொழியினரும் வெளிநாட்டுக்காரர்களா?” என்று கேளுங்கள். இந்திதான் தேசிய மொழி என்பது உண்மையல்ல. அது மத்திய அரசின் ஆட்சிமொழி. அத்துடன் ஆங்கிலமும் மத்திய அரசின் இணை ஆட்சிமொழியாக இருக்கிறது. எனவே, இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் (இவர்கள்தான் இந்தியாவில் அதிகம்) வசதிக்காக ஆங்கிலம் இணை ஆட்சிமொழியாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி, அதை நாங்கள் கற்றிருக்கிறோம் என்று சொல்லுங்கள்.
அப்படியென்றால் இந்தியாவின் தேசிய மொழி எது?


இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தும் தேசிய மொழிகள்தான். எளிதாக சொல்வதென்றால் ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள மொழிகளெல்லாம் தேசிய மொழிகள்தான். குறிப்பாகச் சொல்வதென்றால், இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இன்னும் சில மொழிகளும் இந்த அட்டவணையில் இடம்பெறக் காத்திருக்கின்றன. இவை அனைத்துமே தேசிய மொழிகள்தான். இந்தி என்பது  மத்திய அரசின் ஆட்சி மொழியாக இருப்பதுபோல, தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சிமொழியாக்குங்கள் என்பதுதான்  தமிழகக் கட்சிகளின் நெடுநாள் கோரிக்கை.

தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை மூலம் தாய்மொழி, ஆங்கிலம் இவற்றுடன் இந்தியும் கற்றுத்தரப்படுகிறதே, நாம் மட்டும் ஏன் இந்தியை எதிர்க்கவேண்டும்?
கேரளா போன்ற சிறிய மாநிலங்களைத் தவிர்த்துவிட்டு, இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களைக் கணக்கில் கொண்டு பார்த்தால் தமிழகம் கல்வியில் முன்னணியில் இருக்கும் மாநிலமாகும். மனித  வளத்திலும், மானுட மேம்பாட்டுக் குறியீட்டிலும் பல மாநிலங்களைவிட தமிழகம் முன்னணியில் இருக்கிறது. தமிழக மாணவர்கள் சர்வதேச அளவிலான மென்பொருள் நிறுவனங்கள் உள்பட பலவற்றிலும் அதிக அளவில் பணியாற்றுகின்றனர். எனவே, இருமொழிக் கொள்கையால் தமிழகம் எந்த விதத்திலும் பின்தங்கிவிடவில்லை. அதே நேரத்தில், மும்மொழிக் கொள்கையைக் கடைபிடிக்கும் மாநிலங்களில் பெரிய நகரங்களைத் தவிர, அந்தந்த மாநிலங்களின் நகராட்சி-ஊராட்சிப் பகுதிகளில் தமிழகத்தின் அளவிற்கு கல்வி வளர்ச்சி இல்லை. 

சர்வதேச அளவில் சாதித்த தமிழக மாணவர்கள்!

நம் தமிழக மாணவர்கள் அளவுக்கு அவர்களால் சர்வதேச அளவிலான நிறுவனங்களில் பணிவாய்ப்புகளைப் பெற முடியவில்லை. அதுமட்டுமின்றி, இந்தி ஆதிக்கத்தினால் வடமாநிலங்களில் பேசப்பட்டு வந்த போஜ்புரி, மைதிலி போன்ற மொழிகள் அழிவின் விளிம்பை நோக்கிச் சென்றன. அதனால், தற்போது பல மாநிலங்களில் தாய்மொழியைக் காப்பாற்றவேண்டும் என்ற அக்கறையும், தொடர்பு மொழியான ஆங்கிலப் பயிற்சி மேம்பட வேண்டும் என்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிற மாநிலங்கள் தாமதமாக உணர்ந்துவருவதை, 50 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுணர்ந்து மொழிக்கொள்கையில் தொலைநோக்குடன் செயல்பட்ட மாநிலம் தமிழகம். 
இந்தி தெரியாத நிலையில் டெல்லி, மும்பை போன்ற இடங்களுக்குச் சென்றால் சிரமப்படவேண்டியிருக்குமே?
உத்தரபிரதேசம், ஹரியானா, பீகார் போன்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் தொழிலாளர்கள் தமிழ் படித்துவிட்டுத்தான் இங்கே வருகிறார்களா? மொழி தெரியாத எந்த இடத்திற்குச் சென்றாலும் முதலில் சிரமமாகத்தான் இருக்கும். கொல்கத்தாவுக்குச் செல்லவேண்டியிருந்தால் வங்காள மொழி தெரிந்தால்தான் வசதி. ஆனால், இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் வங்கமொழி கற்றுத்தரப்படுகிறது? அதனால் யாரும் கொல்கத்தா செல்லாமல் இருக்கிறார்களா? வேலைக்காக எந்த இடத்திற்குச் சென்றாலும் சில நாட்களில் அந்த மொழியைப் பேசிவிடமுடியும். 

மொழியென்பது வெறும் கருவி மட்டுமே!

மும்பை தி.மு.கழகத்தில் உள்ள தமிழர்களில் பலர் தமிழகத்திலிருந்து மும்பை சென்றபோது இந்தி மொழி அறியாதவர்கள். ஆனால், இன்று அவர்கள் சரளமாக இந்தி பேசுகிறார்கள். அது பழக்கத்தின் விளைவு. அதுபோல, எல்லாரும் பேசக் கற்றுக்கொள்ளமுடியும். சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள், கால்டாக்சி டிரைவர்கள், ஓட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் பல மொழிகளைப் பேசக் கற்றிருப்பதைக் காண்கிறோம். அவர்களில் பலர் 10-ஆம் வகுப்புவரையே படித்தவர்கள். ஆங்கிலம்கூட சரியாக எழுதத் தெரியாதவர்கள். வேலை நிமித்தமாக அவர்களால் எப்படிப் பல மொழிகளைப் பேச முடிகிறதோ, அதுபோல தேவைப்படும்போது அந்த மொழியில் பேச முடியும். அதைக் கற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று நிர்பந்திப்பதுதான் ஆதிக்க மனோபாவம்.
இந்தி படித்தால் வேலைவாய்ப்பு அதிகம் என்பதை மறுக்க முடியுமா?
இன்று தமிழகத்தில் அதிகளவில் கட்டடத் தொழிலாளர்களாகவும், ஹோட்டல்களில் சப்ளையர்களாகவும் இருப்பவர்கள், இந்தி பேசும் குடும்பத்தில் பிறந்து, இந்தி மொழிப் பள்ளியில் படித்தவர்கள்தான். இந்தி படித்தால் வேலைவாய்ப்பு அதிகம் என்றால், அவர்கள் ஏன் தமிழகத்திற்கு வந்து இத்தகையப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்? எந்த ஒரு வேலைக்கும் அதற்கான கல்வித் தகுதிதான் அவசியமானது. மொழி என்பது அடுத்த கட்டம்தான். 
வேலைக்கான கல்வித்தகுதியுடன் இந்தி மொழியும் தெரிந்திருந்தால், கூடுதல் வாய்ப்புகள் கிடைக்குமே?

கூடுதல் தகுதிகள் என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும். இந்தி மொழி தெரிந்திருந்தால் கூடுதல் தகுதிதான். ஆனால், அது தெரியாவிட்டால் தகுதி குறைந்துவிடாது. இந்தி மொழி பேசும் வடநாட்டு இளைஞர்கள் தமிழே தெரியாமல் நம் மாநிலத்தில் வேலை பார்க்கிறார்களே, அந்த தன்னம்பிக்கைதான் எல்லாவற்றையும்விட கூடுதல் தகுதி. தமிழர்களுக்கு அந்தத் தன்னம்பிக்கை அதிகரிக்க வேண்டும். இந்தி பேசும் வடநாட்டுக்காரர்கள் இங்குள்ள ஓட்டல்களில் சப்ளையராக இருப்பதைப் பார்த்து, எங்கே சாப்பாட்டு ஆர்டர் மாறிப்போய்விடுமோ என்ற பயத்தில், “ஏக் தோசா.. தோ வடா” என்று நம் தமிழர்கள் திடீர் இந்திக்காரர்களாக மாறி ஆர்டர் செய்வதைப் பார்க்கிறோம். இந்த எண்ணம் மாறவேண்டும். இந்தி மட்டுமே தெரிந்துகொண்டு, தமிழகத்தில் வந்து வேலை பார்க்கும் வடஇந்திய இளைஞர்களுக்குள்ள தன்னம்பிக்கை, இந்தி படிக்காத தமிழர்களுக்கும் இருக்க வேண்டும். வட இந்திய இளைஞர்கள் எப்படி இங்கே ஒரு சில வாரங்களில் தமிழில் பேசப் பழகுகிறார்களோ, அதுபோல வடஇந்தியாவுக்குச் செல்லும் தமிழர்களும் பழகிக்கொள்ள முடியும்.
இந்தி படிக்காமல் இந்தியாவில் பெரிய பெரிய வேலைகளுக்கோ பதவிகளுக்கோ செல்ல முடியுமா?

சாதனைகளுக்கு மொழி முக்கியமல்ல!


விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையை உங்களுக்குத் தெரியும். அவர் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர். இந்தி படிக்காதவர். ஆனால், அவர் சந்திரனுக்கு செயற்கைக்கோள் அனுப்பும் சாதனையை நிகழ்த்திக் காட்டிய இந்திய விஞ்ஞானிகளில் முதன்மையானவர். தற்போது கேரள ஆளுநராக உள்ள உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் சதாசிவம் அவர்களும் தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர்தான். பள்ளியில் இந்தி படிக்காதவர். அவர் இந்த நாட்டின் உயர்ந்த நீதிமன்றத்தின் தலைமைப் பொறுப்பை வகித்திருக்கிறார். மாணவர்களின் மானசீக குருவாக விளங்குபவரும், கனவு காணுங்கள் என மாணவர்களை ஊக்கப்படுத்தியவருமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சாதாரண பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்தான். இந்தி படிக்காதவர். அவர்  நாடே புகழும் விஞ்ஞானியாகவும், இந்தியாவின் ஜனாதியாகவும் இருந்தவர். இந்தியாவில் ஜனாதிபதி பதவியைவிட பெரிய பதவி உள்ளதா? பல உயரங்களுக்குச் சென்றவர்கள் தமிழ்  மொழியில் படித்தவர்கள்தான். அவர்கள் பணியாற்றச் சென்ற இடங்களில்தான் இந்தி நண்பர்களுடன் உரையாடி அந்த மொழியைக் கற்றுக் கொண்டார்கள். 
வடநாட்டில் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புக்காக தமிழகத்தில் உள்ள மாணவர்கள் இந்தி கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லையா?

மகாத்மா காந்தி அவர்களால் தொடங்கப்பட்ட ‘இந்தி பிரச்சார சபா’ சென்னை தியாகராயநகர் பகுதியில் உள்ளது. அதன் கிளைகள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ளன. அதன் மூலமாக இந்தி கற்கலாம். பல இடங்களில் தனியார் நடத்தும் இந்தி வகுப்புகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் பலவற்றிலும் இந்தி வகுப்பு உண்டு. 

இந்தி பயில்வதற்குத் தனியார் பள்ளிகள் தரும் வாய்ப்பை தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் தர மறுப்பது ஏன்?
தனியார் பள்ளிகளுக்கு வியாபார நோக்கம் இருக்கிறது. அரசாங்கத்திற்குத் தனது குடிமக்களை ஆதிக்கத்திற்கு அடிமையாக்காமல் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. அனைத்துத் தரப்பினருக்கும் நெருக்கடியோ மனச்சுமையோ இல்லாத கல்வியை இலவசமாக வழங்கவேண்டிய கடமை உள்ளது. அதனால், இருமொழிக்கொள்கையைக் கடைபிடிக்கிறது. அத்துடன், தி.மு.கழக அரசு கொண்டு வந்த சமச்சீர்க் கல்வியின் காரணமாக, தனியார் பள்ளிகளிலும் இந்தி என்பது கட்டாயப்பாடமாக இல்லை. மாணவர்களுக்காகப் பணம் கட்டும் பெற்றோரின் மனதிருப்திக்காக பெயரளவுக்கு சொல்லித்தரப்படுகிறது.
தமிழர்களை இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டு, தி.மு.க., அ.தி.மு.க.  தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை இந்தி படிக்க வைத்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டப்படுகிறதே?

தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க எனப் பல தமிழகக் கட்சியினரின் குடும்பத்தினர் மீதும் இந்தக் குற்றச்சாட்டு உண்டு. தனியார் பள்ளிகளிலும் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத்தின்கீழ் உள்ள பள்ளிகளிலும் தலைவர்களின் பிள்ளைகள் சேர்க்கப்படுகிறார்கள். இன்றைக்குத் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. சாதாரணத் தொழிலாளர்கள்கூட தங்களால் முடிந்த அளவுக்கு ஒரு இங்கிலீஷ் மீடியம் பள்ளியில், தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்களே தவிர, அரசுப் பள்ளிக்கு அனுப்ப நினைப்பதில்லை. இது எல்லாத் தரப்பினரிடமும் நிறைந்துள்ளது. கட்சித் தலைமையில் உள்ளவர்கள் முன்னுதாரணங்களாக இருக்க வேண்டும். இங்கே அது இல்லை! 
விஞ்ஞானமும் தகவல் தெழில்நுட்பமும் வளர்ச்சி பெற்றிருக்கும் இன்றைய யுகத்தில், ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது தவறா? மொழி ஆதிக்கம் ஏற்பட வாய்ப்புண்டா?
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில், எந்தவொரு மொழியையும் கற்றுக்கொள்வது எளிது. இணையதள வசதியுடன் பிற மொழிகளின் சொற்களை எப்படி உச்சரிப்பது என்பது வரை ஒலி-ஒளி தொழில்நுட்பத்துடன் கற்றுக்கொள்ள முடியும். விருப்பமுள்ளவர்கள் கற்றுக்கொள்ளலாம் அதே நேரத்தில் வலியத்  திணிப்பதால், மொழி ஆதிக்கத்தின் காரணமாக நாட்டின் ஒற்றுமை சீர்குலையும் ஆபத்தும் உண்டு.
மொழித் திணிப்பால் நாடுகள் சிதைந்திருக்கின்றனவா?
ஒரு  காலத்தில் அமெரிக்க வல்லரசுக்கு சவால்விடும் வகையில் வலிமையுடன் இருந்த நாடு சோவியத் யூனியன். அந்தப் பொதுவுடைமை நாட்டில் தொழில், விவசாயம், விஞ்ஞானம், படைபலம்  எல்லாம் அதிகரித்திருந்தது. அதே நேரத்தில்,  அங்கு அதிகம் பேர் பேசக்கூடிய ரஷ்யமொழியை அந்த மொழி  பேசாத மற்ற பகுதி மக்களின் மேல் திணித்தனர். இது அதிருப்தியும் வெறுப்பையும் உண்டாக்கி வந்தது.  ஒரு கட்டத்தில் பொருளாதார காரணங்களுடன் இந்த மொழி ஆதிக்கப் பிரச்சினையும் சேர்ந்து சோவியத் யூனியனையே சிதறடித்தது. இன்று ரஷ்யா, ஜார்ஜியா, உக்ரைன், லித்வேனியா, உஸ்பெகிஸ்தான், லாட்வியா, அஜர்பைஜான் எனப் பல நாடுகளாக சோவியத் யூனியன் சிதறடித்துவிட்டது. இதில் லாட்வியா நாட்டு மக்கள் இன்னமும் ரஷ்ய மொழித் திணிப்பின் கோபத்திலிருந்து மீளவில்லை. தங்கள் நாட்டில் எந்த வகையிலும் ரஷ்ய மொழிக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது எனக் குரல் கொடுத்து வருகிறார்கள். வல்லரசான சோவியத் யூனியனே மொழி ஆதிக்கத்தால் இத்தகைய மோசமான விளைவுகளை சந்தித்திருக்கிறது. 

இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் ஆங்கிலத்தைத்தான் திராவிட இயக்க ஆட்சி வளர்த்தது என்றும், தமிழ் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறதே?

கணினி வழியில் தமிழ்ப்புரட்சி!

ஆங்கில மொழிப் பயிற்சியின் மூலம் உலகளாவிய வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கு உருவாக்கித் தந்த, அதே நேரத்தில், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கியது தி.மு.க ஆட்சி. இந்திய அளவில் தமிழுக்கு செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்ததிலும் திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானது. சமச்சீர்கல்வி மூலம், தமிழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் தமிழை ஒரு பாடமாக படித்தே ஆகவேண்டும் என்ற நிலையும் உருவாக்கப்பட்டது. காலத்திற்கேற்ற அறிவியல் வளர்ச்சிக்கேற்ப தமிழில் கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டன. கணினியிலும் தமிழ் சிறக்க வேண்டும் என்று 1999-ல் சென்னையில் உலக இணைய மாநாடு நடத்தப்பட்டது., 2010-ல் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டிலும் கணினித்தமிழ் மாநாடு தனிப்பிரிவாக நடைபெற்றது. யுனிகோடு முறை மூலம் இன்று அவரவரும் தங்கள் அலைபேசியிலேயே தமிழைத் தட்டச்சு செய்யும் வசதிகள் உருவானதன் பின்னணியில், இந்த மாநாடுகளின் பயன்பாடு உள்ளது. தமிழ் இணையப் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டு உலகளாவிய அளவில் தமிழை வளர்க்கும் முயற்சிகள் உருவாக்கப்பட்டன. 
தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை! 

தமிழறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் அரசின் சார்பில் விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்கிற தமிழ்ப் பண்பாட்டு மீட்டெடுப்புப் புரட்சியை செய்ததும் தி.மு.கழக அரசுதான். தமிழ் வளர்ச்சித் துறை என்ற தனி அமைச்சரவையே உருவாக்கப்பட்டு அனைத்து நிலைகளிலும் தமிழை நிலைநிறுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டது திராவிட ஆட்சியில்தான். ஆட்சியின் வாயிலாக இந்த சாதனைகளை செய்த அதே நேரத்தில், தி.மு.க.-அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்துமே ஆங்கிலத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தைத் தமிழுக்குக் கொடுக்கவில்லை என்பதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. 

- கோவி. லெனின் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : kannan Date :5/16/2017 12:23:28 PM
தமிழ் உலகின் முதல் மொழி தமிழ் கற்று ஆங்கிலம் அறிந்து இந்த உலகை வெல்லலாம். ஹிந்தி வேண்டாம்.
Name : kannan Date :5/16/2017 12:03:58 PM
தமிழ் உலகின் முதல் மொழி தமிழ் கற்று ஆங்கிலம் அறிந்து இந்த உலகை வெல்லலாம். ஹிந்தி வேண்டாம்.
Name : Pandiyan Country : Australia Date :5/13/2017 7:03:11 PM
தமிழ்நாட்டில் உயர்பதிவிகளில் தமிழனுக்கு வாய்ப்பில்லை... ‘ழ, ழா வரிசை எழுத்து உச்சரிக்கத் தெரியாதவந்தான் திராவிடன் அவன் தமிழன் என்று பிதற்றுகிறான் இந்தியை எதிர்க்கிறான்.... உருது படிக்கலாம், அரபி படிக்கலாம் ஆனால் இந்தியைப் படிக்க கூடாது என்பான்... உன்மைத்தமிழன் எதையும் படிப்பான்... தமிழை உயிரென நினைப்பான். இந்தியாவில் எங்கும் சென்று பனி செய்வான்...