Add1
logo
கலைஞரை தமிழ் ஆசான் என கூறியதற்கு எம்.ஜி.ஆர். எனக்கு வாழ்த்து தெரிவித்தார்: கமல் புகழாரம் || சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு: இன்று வெளியாகிறது || சச்சின் படத்திற்கு மத்திய பிரதேச அரசு வரிவிலக்கு || தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான்களில் ஒருவர் கலைஞர்: கமல் புகழாரம் || தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு || பி.எஃப். பங்களிப்பு குறைக்கும் யோசனையை நிராகரிக்க முடிவு || காப்பகத்திலிருந்து தப்பிய 5 சிறுவர்களை - சிறார் குழுமத்தில் ஒப்படைப்பு || டாஸ்மாக் கடைக்கு தீவைத்த பொதுமக்கள் || துாத்துக்குடியில் 4 வாரம் மின் உற்பத்தி நிறுத்தம் || ரமலான் நோன்பு தொடங்கிய முதல் நாள் கார் குண்டு வெடிப்பில் 18 பேர் பலி || நின்று கொண்டிருந்த கார் மர்மமான முறையில் தீ பற்றி எரிந்ததில் காருக்குள் சிக்கி கொண்ட 3 பேர் பலி || கைதான 18 இந்திய தேசிய லீக் கட்சியினரும் புழல் சிறையில் அடைப்பு || பிரபாகரன் மரணத்திற்கு தமிழக தலைவர்கள் தான் காரணம் பா.ஜ.க மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் குற்றச்சாட்டு ||
சிறப்பு கட்டுரை
விவசாயத்திற்காக மாடுகள் காக்கப்பட வேண்டும்: விவசாயிகள் செத்தா நமக்கென்ன?
 ................................................................
வெறும் வெற்று விளம்பரங்கள்! 3 ஆண்டுகளில் என்ன சாதனை நிகழ்த்தினார் மோடி?
 ................................................................
கடனும் ஊழலும்! ஓராண்டு "சாதனை'!
 ................................................................
காலா - நிற அரசியலை பேசுகிறதா?
 ................................................................
வழி விடாமல், வலி தந்து போன ஜெயலலிதா!
 ................................................................
அஜித் - அத்தனை நடிகர்களும் உச்சரிக்க காரணம் என்ன?
 ................................................................
ஸ்மார்ட் க்ளாஸ்... மாணவர்கள் கையில் டேப்லட்... ஆஹா... அரசுப் பள்ளியா இது..?
 ................................................................
சட்ட மாணவியின் ‘நறுக்’ தண்டனை: படத்தில் நடந்தது நிஜத்தில்!
 ................................................................
ரேன்சம்வேரா... உலகப்போரா??? வெளியே வந்த அமெரிக்க வைரஸ் பூதம்!
 ................................................................
ஒருத்தி! இன்னொருத்தி! வேறொருத்தி! பாலு மகேந்திரா ஒரு படிப்பினை!
 ................................................................
மே 21 இராஜிவ்காந்தி படுகொலை நாள்!
 ................................................................
தோண்டியெடுக்கப்பட்ட தமிழனின் பெருமை..!
 ................................................................
கழுகைப் பார்! உன்னை மாற்று! உருமாறு! -மாணவர்களுக்கான பொன்ராஜ் உரை!
 ................................................................
சென்னையில் உச்சகட்ட வெயில்! வெதர்மேன் விடும் அலர்ட்
 ................................................................
கச்சிதமாகப் பொருந்திய ‘கள்ளபார்ட்’ வேடம்! நடிக்கும் போதே உயிரை விட்ட நடராஜன்!
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, மே 2017 (19:23 IST)
மாற்றம் செய்த நாள் :12, மே 2017 (20:12 IST)


வர்லாம்... வர்லாம்... வா! 
+2 ரிசல்ட்டுக்கு வரவேற்பு!

ந்த ஆரவாரமும், பரபரப்பும் இல்லாமல் வெளியாகி உள்ளது 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதிய ப்ளஸ் 2 ரிசல்ட். எந்தவித கொண்டாட்டமும் இல்லையென்றாலும், மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது ரிசல்ட் வெளியான விதம்.

இதுவரை மாணவர்களின் ‘‘ரேங்க்’’ பட்டியல் வெளியிடப்பட்டு வந்தது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், மாநில அளவில் முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்படும். மேலும் பாட வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்றவர்களின் பெயர் விவரங்களும் அறிவிக்கப்படும். அந்த மாணவர்களுக்கு இனிப்புகள் ஊட்டுவது, வாழ்த்து சொல்வது, நாளிதழ்களிலும், டிவிக்களிலும் புகைப்படம் வெளியிட்டு, அவர்களது எதிர்கால ஆசை, நோக்கம் என்ன என்று பேட்டி எடுப்பது என்று பரபரப்பாக நகரும் இந்தநாள். ஆனால் இந்த ஆண்டு ரேங்க் பட்டியல் வெளியிடப்படவில்லை.

இதுபற்றி +2 மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஈரோடு சி.எஸ்.ஐ. மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து 924 மதிப்பெண்கள் பெற்றிருக்கும் மாணவி வனிதா இதுகுறித்து கூறும்போது, ‘என்னைப்போன்ற ஏழை மாணவ மாணவிகள் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில்தான் படிக்க முடிகிறது. நாங்கள் மார்க் அடிப்படையில் கொஞ்சம் பின்தங்கித்தான் வருவோம். ஒவ்வொரு வருடமும் ரிசல்ட் வரும்போது பெரும்பாலும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், மாநில அளவில் முதலிடம் பிடித்தார்கள் என்று அவர்கள் பெற்ற மார்க்கையும் போட்டு, கல்வி அதிகாரிகள்  பள்ளி நிர்வாகிகள் அமைச்சர்கள் எல்லோரும் வாழ்த்து கூறுவது போல் புகைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பேட்டிகள் வரும். மேலும் மாவட்டத்தில் முதலிடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என்றும் மாணவர்களை விளம்பரப்படுத்துவார்கள். ஆனால் சில மார்க்குகள் பின்தங்கியிருந்தாலும், அந்த முதல் மூன்று இடங்களையும் பிடிக்க முடியாமல் நாங்கள் ஊடக வெளிச்சத்திற்கு முன் வராமல் போய்விடுவோம். இப்போது அப்படியில்லை.  பெரும்பாலான மாணவிகளுக்கு இது ஊக்கம் கொடுப்பதுபோல் இருக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒன்று’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார். திண்டுக்கல்லில் உள்ள எஸ்.எம்.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் யோககிருஷ்ணன் 1186 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றுள்ளார். ‘மாவட்ட அளவில் முதல் மாணவனாக வரணும் என்ற வைராக்கியத்துடன் படித்து வந்தேன். டியூசன் போகவில்லை. வீட்டிலேயேதான் படித்தேன். படித்தக் காலங்களில் இரவில் கண் விழித்து படிப்பேன். எங்க வகுப்பு அமுதவள்ளி டீச்சர் எந்த சந்தேகம் என்றாலும் நிவர்த்தி செய்வார். கடந்த ஆண்டு மாவட்ட அளவில் எங்கள் பள்ளியைச் சேர்ந்த நிஷிதா என்ற மாணவி முதல் மதிப்பெண் பெற்றார். அவரைப் பார்த்து நானும் முதலிடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். இருந்தாலும் போன முறை முதலிடம் பிடித்தவர்கள் பெயர், படம் வெளியானது. பள்ளியின் பெயரும் வந்தது. இந்த வருடம் ரேங்க் பட்டியல் வெளியிடாததால் எனது படமும், பள்ளியின் பெயரும் வெளியே தெரியவில்லை. இது ஒருபுறம் வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் நான் நினைத்த மாதிரி மாவட்ட அளவில் முதல் மாணவமான வருவேன் என்று சொன்னதை நிருபித்துவிட்டேன். சாதித்துள்ளேன். அரசு ரேங்க் கிரேடு முறையில் கொண்டாந்தது நல்லதுதான்’ என்றார். திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் கோமதியம்மாள் மெட்ரிக் பள்ளியின் +2 மாணவன் பிரபாகரன் 1165 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி  பெற்றுள்ளார். ‘முதல் மதிப்பெண் எடுக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் என டிவியில் பேட்டி கொடுத்தால், அடுத்த ஆண்டு +2 படிக்கும் மாணவர்களுக்கு ஒரு க்ளு கிடைக்கும். ஆனால் ஒரு மார்க், இரண்டு மார்க்கில் முதல் 3 இடங்களை தவரவிட்டவர்களுக்கு மனசு வலிக்கும். அரசு இந்த வருடம் எடுத்த முடிவு எல்லாம் நன்மைக்குத்தான். அரசு ரேங்க் பட்டியல் வெளியிடாமல், தரவரிசை அடிப்படையில் வெளியிட்டது நல்லதுதான். எப்படியிருந்தாலும் கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில்தான் மேற்படிப்புக்கு செல்ல வேண்டும். என்ன கடந்த ஆண்டைப்போல முடிவு வெளியிட்டிருந்தால் பெரிய பெரிய சேனல்கள் வந்து என்னை படம் பிடித்திருப்பார்கள். இப்போது ஒரே ஒரு லோக்கல் சேனல் மட்டும் வந்து என்னை படம் பிடித்துச் சென்றனர்’ என்கிறார் பிரபாகரன்.

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மன உளைச்சலுக்கு மாணவர்கள் ஆளாவார்கள் என்று இந்த வருடம் ரேங்க் பட்டியலை வெளியிடப்படவில்லை. சில மாணவர்களுக்கு அந்த பாதிப்பு இருக்கலாம். ஆனால் ரேங்க் பட்டியல் வெளியிட்டால் பல மாணவர்களுக்கு நாமும் அந்த மாதிரி படித்து வர வேண்டும் என்ற ஆர்வம் வரும். கல்விமுறை எப்படியிருந்தாலும் அதன்மூலம் நம் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். கல்வி தரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும். தாழ்வு மனப்பாண்மையை வளர்த்துக்கொள்ளக் கூடாது என மாணவனுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும்’ என்றார்.இந்த வருட ப்ளஸ் 2 ரிசல்ட் வெளியான விதம் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், ‘கடந்த முறை தேர்வு முடிவுகள் வெளியிட்ட விதம், ஒரு கல்விமுறைக்கு உதகந்தது அல்ல. மாநிலத்தில் முதலிடம், மாநிலத்தில் இரண்டாவது இடம் என்று அறிவிக்கும்போது சக மாணவனை ஒரு கொரூரமான, போட்டியாளனாக பார்க்கக் கூடிய ஒரு மனப்பான்மை உருவாகிறது. ஒரு கற்றல் செயல்பாட்டுக்கு அது உகந்தது அல்ல. சக மாணவனை சகோதரனாகவும், சகோதரியாகவும் பார்க்க வேண்டும். ஒரு தோழமை உணர்வு இருக்கணும். உதவி செய்கிற பக்குவம் வேண்டும். அதுதான் கல்வியின் நோக்கம். மாநிலத்தில் முதல் மதிப்பெண், மாவட்டத்தில் முதல் மதிப்பெண், பள்ளியில் முதல் மதிப்பெண் என்று அறிவிக்கும்போது, அவர் ஒருத்தர்தான் வெற்றிப் பெற்றதாகவும், மற்றவர்கள் தோல்வி அடைந்ததாகவும் ஒரு எண்ணத்தை நாம் உருவாக்குகிறோம். எனவே அந்த மாதிரியான ஒரு மனநிலையில் இருந்து இன்று விடுபட்டுள்ளோம். இன்னும் பல மாற்றங்களை எதிர்பாக்கிறோம். பல மாற்றங்களுக்கான தொடக்கப் புள்ளியாக இதனை நாம் பார்க்கிறோம். வணிக ரீதியாக இயங்கக் கூடியவர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுக்கும். மற்றப்படி கல்வியியல் செயல்பாட்டில் இருப்பவர்களுக்கு இது மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது’ என்றார் புண்ணையோடு. 

ஜீவா தங்கவேல், சி.என்.ராமகிருஷ்ணன், சக்திவேல், எஸ்.பி.சேகர், 
படங்கள்: ராம்குமார், அசோக்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : DHANUSKODI Country : Indonesia Date :5/14/2017 6:23:33 AM
நல்ல நடைமுறை மாற்றத்திற்கு வாழ்த்துகள்