Add1
logo
ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம் || டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு || இன்றைய(19.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || ஐ.எஸ்.எல். கால்பந்து - சென்னை அணி தோல்வி || பேரறிவாளன் விடுதலையில் கே.டி.தாமஸ் வேண்டுகோளை சோனியாகாந்தி பரிசீலிக்க வேண்டும்:திருமாவளவன் || பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன் || தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார் || மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு! || தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா! ||
சிறப்பு செய்திகள்
மைசூர்பாகிற்கும் போட்டி போடும் கர்நாடகா!!!
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று...
 ................................................................
அரசியல் பின்னணி, சதி, வன்மம் இருக்கிறது:
 ................................................................
ஜெ. வீட்டில் ரெய்டு... செம்மலை கருத்து
 ................................................................
இவர்தான் நிஜ 'அறம்' நயன்தாரா?
 ................................................................
பீகார் பாணியில் இரட்டை இலையா?
 ................................................................
பத்திரிகை சுதந்திரமும் இந்தியாவும்
 ................................................................
எரிந்து சாகவா எம் இளம் பெண்கள்?
 ................................................................
எமெர்ஜென்சியை எதிர்கொண்ட திமுக!
 ................................................................
கமல் தான் ஸ்டாலினுக்கு போட்டி!
 ................................................................
கவர்னருடைய ஆய்வு என்பதே தவறு:
 ................................................................
GST வரி குறைப்பு
 ................................................................
தமிழகத்தில் பாஜக வாய்ப்புகளை ஆய்வு
 ................................................................
ஆட்டுக்குத் தாடியும் ஆளுநர் பதவியும்!
 ................................................................
சானியாவும் சர்ச்சைகளும்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, மே 2017 (13:10 IST)
மாற்றம் செய்த நாள் :12, மே 2017 (13:10 IST)

கோரிக்கை வைத்த தி.மு.க. -வாக்குறுதி அளித்த அ.தி.மு.க.திமுகவினரை பார்த்தாலே கட்சியை விட்டு தூக்கிவிடுவார்கள் என்ற பயம் அதிமுகவினருக்கு உண்டு. ஆகையால் திமுகவினரை சட்டசபையில் திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள். தொகுதியில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் கூட அத்தொகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதியாக இருக்கும் திமுகவினரை அழைக்கமாட்டார்கள் அதிமுகவினர். அப்படி திமுகவினர் வருவதாக இருந்தால் முன்கூட்டியை பறந்துவிடுவார்கள். இந்தநிலையில் திருவண்ணைநல்லூர் அரசு கலைக்கல்லூரி திறப்பு விழாவில் திமுக அதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதும், திமுக எம்எல்ஏ கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக எம்எல்ஏ தெரிவித்ததும் நடந்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதியில் திருவண்ணைநல்லூர் அரசு கலைக்கல்லூரியை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ காண்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். 

விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும், உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான குமரகுரு இன்று அக்கல்லூரியில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தொகுதியின் திமுக எம்எல்ஏ பொன்முடியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, திருவண்ணைநல்லூரில் கல்லூரி கட்டடம் திறந்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் கடந்த ஆண்டு மூடப்பட்ட பெரியசேவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும். அந்த ஆலையின் புரணமைப்புக்கு அரசு பணம் ஒதுக்கவில்லை. விவசாயிகளுக்கு கரும்பு பணமும் இரண்டு ஆண்டுகளாக பாக்கி உள்ளது. ஆலை மூடப்பட்டதால் தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை. ஆலை ஓடவில்லை என்றால் தொழிலாளர்களுக்கு ஊதியம் இருக்காது. இதனை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். புதிதாக திறக்கப்பட்ட இந்த கல்லூரியில் அதிகம் பயிலப்போவது விவசாயிகள் வீட்டு பிள்ளைகள்தான். அவர்களுக்கு கல்விக்கட்டணம் பெரும் சுமையாக இருக்கக் கூடாது. அதனால் கரும்பு பணம் பாக்கியை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலையை உடனே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்றார்.பொன்முடியின் பேச்சை பலத்த கைத்தட்டல், விசில் அடித்து வரவேற்றனர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். 

சர்க்கரை ஆலையைப் பற்றி பொன்முடி பேச ஆரம்பித்ததும், குமரகுருவுக்கு முகம் வாடியது. கடந்த 6 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியே இருப்பதால், அதிமுக ஆட்சியில் இந்த ஆலை மூடியிருப்பதை பொன்முடி சுட்டிக்காட்டியதால் குமரகுரு ஒருவித டென்ஷனாகவே இருந்தார். ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இந்த ஆலைக்கு பணம் ஒதுக்கி புரணமைப்பு பணிகள் நடைபெறும் என்றார். அவர் அறிவித்த எந்த பணிகளும் நடக்கவில்லை. இந்த ஆலைக்கு மட்டும் பணம் வரவாப்போகிறது என்று பேசிக்கொண்டனர் நிகழ்ச்சி வந்தவர்கள்.

பின்னர் மைக் பிடித்த குமரகுரு, சர்க்கரை ஆலை தொழிலாளர்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் முதல்வர் அவர்கள் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்றார். இவரது பேச்சுக்கும் ஒரு சிலர் கைத்தட்டினர். 

எஸ்.பி.சேகர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :