Add1
logo
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் || தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன் || தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி || மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம் || இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி! || சென்னை எனக்கு இரண்டாவது வீடு! - சி.எஸ்.கே. ரீஎண்ட்ரி உற்சாகத்தில் தோனி || தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி || தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ் || வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி || 41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்! || தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன் || வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான் || பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி ||
சிறப்பு செய்திகள்
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
நமக்குப் பொங்கல்... ஆந்திரா, கர்நாடகாவில் என்ன?
 ................................................................
பனியோ, புகையோ
 ................................................................
கண் கூசும் நெடுஞ்சாலைகள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, மே 2017 (15:24 IST)
மாற்றம் செய்த நாள் :11, மே 2017 (15:24 IST)
ன் சகோதரர் ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 6-6-2016 அன்று ஓ.பி.எஸ். திருப்பதிக்கு சென்று மொட்டை அடித்து வெளியான படத்தில் கூடவே திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினர் மற்றும் தமிழக அரசின் பொதுப்பணித் துறை காண்ட்ராக்டர் சேகர் ரெட்டியும் நெருங்கி நின்றிருந்தார். சேகர் ரெட்டி பற்றிய ஆர்வத்தைக் கிளறியது அந்தப் படம்.
இந்த நிலையில் ஜெ. மறைவிற்கு பிறகு புதிய அமைச்சரவை அமைத்த இரண்டாவது நாளில் டிசம்பர் 8-ம் தேதியன்று வருவாய்த் துறை அதிகாரிகள் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் நுழைந்தனர். மூன்று நாட்கள் நடந்த இடைவிடாத ரெய்டில்... 47 கோடி ரூபாய் பணமும், 178 கிலோ தங்கமும் பறிமுதல்செய்யப்பட்டன. அதில், 10 கோடி ரூபாய்க்கும் மேல் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் பிடிபட்டன. அப்போது கைதாகி புழல் சிறைக்குச் சென்ற சேகர் ரெட்டி இன்று வரை.. உள்ளே இருந்தாலும், சிறைக்குள் ராஜாவாக வலம் வருகிறார்.

புழல் சிறைக்குள் சேகர்ரெட்டியைக் கொண்டுவரும்போதே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தரப்பு, தங்கள் குடும்பத்திற்கு பெண் கொடுத்த வகையில் சம்பந்தி என்கிற அரசியல் அதிகாரத்தோடு புழல் ஜெயிலர் ஜெயராமனிடம், ""சேகர்ரெட்டி நம்ம கட்சிக்காரர்;…அவரு என்ன கேக்குறாரோ அத்தனையும் செய்து குடுங்க.… அவரை கஷ்டப்படுத்தினா நம்ம கட்சியை கஷ்டப்படுத்திடுவாரு… கவனமா நடந்துக்கோங்க'' என்று சொல்லியிருக்கிறது. அதனால் கெடுபிடிகள் ஏதுமின்றி ராஜ வாழ்க்கை நடத்துகிறார்கள் சேகர் ரெட்டியும், கூட்டாளிகளும்.

சேகர் ரெட்டியின் 34 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம் என்கிற செய்தி வெளியான   போது… புழல் சிறையில்  உயர் பாதுகாப்பு தொகுதியில் விலையுயர்ந்த சேர்களில் சேகர் ரெட்டி, சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம்குமார்... இவர்களோடு காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் தம்பி செந்தில் ஆகியோர் உட்கார்ந்து கேரம்போர்டு விளையாடிக்கொண்டிருக்க... அவர்களைச் சுற்றி அல்மோட்ரா என்கிற இராட்சஸ மின்விசிறி சுழன்றுகொண்டிருந்தது. (இவர்கள் சொந்த காசில் வாங்கி வந்தது) அப்போதுதான் தன் கையில் இருந்த டச் ஸ்கிரீன் மொபைலில் 34 கோடி சொத்து முடக்கம் என்கிற தகவல் வந்து விழுந்தது. உடனே மற்ற மூன்று பேரும் அங்கே இருந்த மோட்டார் அறைக்குச் சென்று அங்கே குவிந்திருந்த மணலை கலைத்து, உள்ளே பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைத்திருந்த செல்போன்களை எடுத்து வந்து ஜியோ நெட் ஒர்க் மூலம் செல்போனில் தொலைக்காட்சி செய்திகளை நேரலையில் பார்க்கிறார்கள். அதன்பிறகு, தொடர்ச்சியாக நியூஸ் பார்ப்பதற்காக, ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணராஜ் அறையில் சில நாட்கள் இருந்த 40 இஞ்ச் எல்.ஈ.டி. டி.வி. சேகர்ரெட்டி டீமுக்கு பயன்பட்டு வருகிறது. காலையில் 9.00-10.00, மாலை 3.00-4.00 இவர்கள் சர்வசாதரணமாக செல்போனில் பேசிக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். காஞ்சிபுரம் ரவுடி வைரத்தின் அடியாள் அருண்தான் இவர்களுக்கு தலைமை சமையல்காரர். இவர் சிக்கன், மட்டன், மீன், பிரான் (இறால்) உள்ளிட்ட அசைவம் சமைப்பதில் கில்லி. அதே போல கிச்சனில் ராஜா, வடநாட்டை சேர்ந்த 2 கைதிகள் ஆகியோரும் சேகர் ரெட்டி டீமுக்கு உதவுகிறார்கள். கிச்சனில் பிரத்யேகமாக கேஸ் கனெக்ஷனுடன் கூடிய… புதிய கேஸ் அடுப்பு  வைக்கப்பட்டு அவர்கள் நினைக்கும் சமையலை செய்து கொடுக்கிறார்கள். 

இட்லி, வெங்காய தோசை, கிச்சடி, கோதுமை ரவா, ஊத்தாப்பம், வடை இவைதான் தினமும் காலையில் சாப்பிடும் ஐட்டங்கள். வியாழன், மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீதர் தம்பி செந்திலுக்கு நாட்டுக்கோழிக் குழம்பு, வறுவல் வேண்டும். சேகர் ரெட்டி குரூப்பிற்கு வெளிநாட்டு மீன்கள் டின்களில் கொண்டுவரப்படுகிறது.

புழலை அடுத்துள்ள காவாங்கரையில் சிறைக்கு வேண்டிய இறைச்சி வாங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் அனைத்துக் கைதிகளுக்கும் சிக்கன் கொடுப்பார்கள். ஏ கிளாஸ் கைதிகளுக்கு மட்டும் கூடுதலாக  வியாழனும் சிக்கன் உண்டு. கறி வாங்குவதற்கு பெரிய அண்டாவைக் கொண்டுபோவார்கள். அங்கே காரில் தயாராக சேகர் ரெட்டியின் ஆட்கள் வெளிநாட்டு சிக்கன், மீன், இறால் பார்சல் வைத்திருப்பார்கள். சிறை அதிகாரி முன்னிலையிலேயே அது அண்டாவுக்கு வந்துவிடும். அதன் பிறகு மற்ற கைதிகளுக்கான சிக்கனை மேலே கொட்டி பரப்பி எடுத்துச் செல்வார்கள். 2500 சிறைவாசிகளுக்கு சிக்கன் வாங்கிக்கொண்டு வரும்போது, ரெட்டி குரூப்புக்கான அயிட்டங்கள் வெளியே தெரியாது. பரிசோதனை செய்வதும் கிடையாது. முன்பொருமுறை அண்டாவில் நாட்டுக் கோழியை கண்டுபிடித்த ஜான்சன் என்கிற முதல் தலைமைக் காவலர், ராஜ்குமார் என்கிற ஏட்டு இருவரும் இடம் மாற்றம் செய்யப்பட்டதால், யாரும் சோதிப்பதில்லை.

சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருட்களும் சேகர் ரெட்டி டீமுக்கு ஸ்பெஷலாக வாங்கப்படுகின்றன. சிறையில் திங்கள், புதன், வெள்ளி மட்டுமே பார்வையாளர்களை சந்திக்க முடியும். ஆனால் சேகர் ரெட்டி குரூப்பிற்கு இந்த விதிமுறை எதுவும் கிடையாது. சனி, ஞாயிறு உள்பட எல்லா நாட்களும் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

துணை சூப்ரெண்ட் கிருஷ்ணராஜ் அறை, ஜெயிலர் ஜெயராம் அறை, டெப்டி சூப்ரெண்ட் உதயகுமார் அறை என ஏ.சி. அறைகளில் சுழற்சி முறையில் உட்கார வைத்து உறவினர்களை சந்திக்க வைக்கிறார்கள். அசைவ அயிட்டங்கள் நிறைந்த மதிய உணவும் அங்கேயே பரிமாறப்படுவது உண்டு. "கண்காணிப்புக்காக எங்கள் முன்னிலையில் பேச வைக்கிறோம்' என்று சமாளிக்கிறது சிறை அதிகாரிகள் தரப்பு.

சிறை வசதிகளுக்காக மாதம் 7 லட்ச ரூபாய் செலவிடுகிறது சேகர் ரெட்டி தரப்பு. இதனால் இரவில் கூட சேகர் ரெட்டியின் செல் கதவுகள் பல நேரங்களில் பூட்டப்படுவதில்லை என்று சொல்கிறது சிறைத் தரப்பு. இரவில் தூங்குவதற்கு கூடாரம் போன்று இருக்கும் விலையுயர்ந்த கொசுவலை, பட்டு போன்ற காஸ்ட்லி மெத்தை, இரண்டு பேர் படுக்கும் அளவிற்கு விலையுயர்ந்த கட்டில் (கைதிகளுக்கு தேங்காய் நார் மெத்தைதான் கொடுக்க வேண்டும்) என சிறையில் ராஜாவாக வாழ்கிறார் சேகர் ரெட்டி.

பிளாஸ்டிக் பையில் வெள்ளை பேப்பர் சுற்றி சோப்பு, மளிகை சாமான்கள் கொண்டு வருவது போன்று சேகர் ரெட்டி தரப்பின் அன்பளிப்பு பணத்தை உள்ளே கொண்டுவருகிறார்கள். மது விருந்து மஜாவும் உண்டு.

சேகர் ரெட்டி எப்போதாவது ஆசைப்பட்டால் மட்டும் கொஞ்சம் குடிப்பாராம். மற்றவர்கள் விரும்புகிற பல வகையான மதுபானங்கள், எண்ணெய் பாக்கெட்டுகள் வடிவில் கொண்டுவரப்படுகிறது.

சேகர் ரெட்டி குரூப் சிறை அறை பக்கம் லோக்கல் சிறைக்காவலர்கள் யாரும் கிடையாது. வெளியூரில் இருந்து வருபவர்களை மட்டும்தான் டூட்டி போடுவார்கள். அந்த நபர்களும் அவர்கள் அறைபக்கம் போவதே கிடையாது.

சிறையில் டாக்டர் கார்த்திகேயன் என்பவர் ஒரு நாள் ரெகுலர் செக்கப் பண்ணுவதற்காக சேகர் ரெட்டியை பரிசோதனை செய்ய போயிருக்கிறார். அப்போது டாக்டர் கார்த்திகேயன், "நீங்கதான் பண மோசடியில் உள்ள வந்தவரா?' என கேட்டபடி பரிசோதனை செய்ய, அந்த டாக்டர் குன்னூருக்கு மாற்றப்பட்டு தற்போது பழவேற்காட்டில் இருக்கிறார்.

சேகர் ரெட்டியிடம் 2 லட்சம் லஞ்சம் வாங்கிய ஏ.டி.எஸ்.பி. ஒருவர் கூடுதல் தொகை கேட்டு கடுமை காட்ட, மறுநாளே இடமாற்றம் செய்யப்பட்டு விட்டார். மணல் வருமானத்தில் மந்திரிகளுக்கு கொடுத்ததை டைரியில் குறித்தது போல, சிறைச் செலவுகளையும் துண்டுச் சீட்டுகளில் எழுதியுள்ளாராம் சேகர் ரெட்டி.

சிறையில் நடக்கும் ராஜ உபசாரம் குறித்து புழல் ஜெயிலர் ஜெயராமனிடம் நாம் கேட்டபோது, ""இப்போ நான் உங்ககிட்ட பேசுறதைக் கூட கண்காணிக்கிற அளவுக்கு ஏடி.ஜி.பி. அலுவலகத்தில் வழி உள்ளது. தமிழக முதலமைச்சரை தெரியுதோ இல்லையோ, சேகர் ரெட்டியை எல்லோருக்கும் தெரியும். ஏ கிளாஸ் சிறை விதிப்படி சலுகைகளைத் தருகிறோம்.

ஜெயில் வார்டன்கள் ஆறுமுகசாமி, மந்திரகண்ணன், மனோஜ், பிரகாஷ், பிரசாத் ஆகியோர் கைதிகளுக்கு செல்போன் கொடுத்ததா சஸ்பெண்ட்ல இருக்காங்க. அவங்கதான் காழ்ப்புணர்வில் என் மீது புகார் சொல்றாங்க'' என்றார்.

வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு என வரிசையாக நடவடிக்கை எடுத்தாலும் கவலைப்படாமல் சிறையிலும் பரிவாரங்களுடன் ராஜ்ஜியம் நடத்துகிறார் சேகர் ரெட்டி.

-ஜெ.டி.ஆர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : trvramani Date :5/12/2017 3:21:05 PM
சேகர் ரெட்டிக்கே ராஜ உபச்சாரம் என்றால் சசிகலா,தினகரனை புழல் சிறைக்கு மாற்றினால் அங்கு அவர்கள் பினாமி தான் இருப்பார்கள். மூலவர்கள் போயஸ் தோட்டத்தில் ஆனந்தமாக இருப்பார்கள். நக்கீரன் செய்தி போட்டால் தான் தெரியும்
Name : pathman Country : Canada Date :5/12/2017 11:01:24 AM
தமிழக காவல்துறையில் உள்ள சில கோடரிகளால் நேர்மையான அதிகாரிகளுக்கும் கெட்ட பெயர்.ஏழை ராம்குமாரை மிசார கம்பியை கடிக்க வைத்து படுகொலை செய்தார்கள்.சேகர் ரெட்டியின் பணத்துக்கு சேவகம் செய்கின்றார்கள்.