Add1
logo
சென்னையில் தமிழர் உரிமை மாநாடு! (படங்கள்) || தமிழக காவல்துறைக்கு நிலையான தலைமை இயக்குனரை உடனே நியமிக்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல் || அரசியல் வியாபாரி - இன்னும் போஸ்டர் ஒட்டியாகவே இருக்கிறார்: முன்னாள்-இந்நாள் மந்திரிகள் மோதல் || பொதுச்செயலாளர் யார்? எடப்பாடி பழனிச்சாமி மனம் திறக்க வேண்டும்: தங்கத் தமிழ்செல்வன் பேட்டி || அதிமுகவில் இருந்து தினகரன் ஒதுங்கி இருக்க வேண்டும்: எம்.பி கோ.அரி வலியுறுத்தல் || தம்பிதுரை மூலமாக பிரதமர் மோடி சசிகலாவிடம் ஆதரவு கோரினார்: எம்.எல்.ஏ வெற்றிவேல் || கூவத்தூரில் 2 நாட்கள் சசிகலா இல்லையென்றால் இந்த ஆட்சியே இல்லை: டி.டி.வி தினகரன் தரப்பு எச்சரிக்கை! || ஜெ. வழியில் எடுக்கப்பட்ட முடிவு: ஓ.பி.எஸ் விளக்கம் || ரூ.30 கோடி பேரம் பேசினார்கள்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு || ஆக்கிரமிப்பில் இருந்த குளத்தை மீட்ட ஊர்ப்பொதுமக்கள், மக்களதிகாரம் அமைப்பினர்!(படங்கள்) || கருகலைப்பிற்கு அனுமதிக்கபட்ட பெண் உயிரிழப்பு: உறவினர்கள் மருத்துவமனை முற்றுகை! || போதைப் பொருள் விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: சென்னை கமிஷனர் விஸ்வநாதன் || சித்திரவதை தாங்காமல் திருநங்கைகள் தற்கொலை - போலீஸ் விசாரணை! ||
தமிழகம்
சென்னையில் தமிழர் உரிமை மாநாடு! (படங்கள்)
 ................................................................
தமிழக காவல்துறைக்கு நிலையான தலைமை இயக்குனரை உடனே நியமிக்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
அதிமுகவில் இருந்து தினகரன் ஒதுங்கி இருக்க வேண்டும்: எம்.பி கோ.அரி வலியுறுத்தல்
 ................................................................
ஜெ. வழியில் எடுக்கப்பட்ட முடிவு: ஓ.பி.எஸ் விளக்கம்
 ................................................................
ரூ.30 கோடி பேரம் பேசினார்கள்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
 ................................................................
ஆக்கிரமிப்பில் இருந்த குளத்தை மீட்ட ஊர்ப்பொதுமக்கள், மக்களதிகாரம் அமைப்பினர்!(படங்கள்)
 ................................................................
கருகலைப்பிற்கு அனுமதிக்கபட்ட பெண் உயிரிழப்பு: உறவினர்கள் மருத்துவமனை முற்றுகை!
 ................................................................
போதைப் பொருள் விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: சென்னை கமிஷனர் விஸ்வநாதன்
 ................................................................
சித்திரவதை தாங்காமல் திருநங்கைகள் தற்கொலை - போலீஸ் விசாரணை!
 ................................................................
சென்னையில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து!
 ................................................................
நீட் தேர்வு முடிவு அறிவிப்பு - தமிழ் நாட்டுக்குப் பேரிடி: கி.வீரமணி
 ................................................................
தொழில் வளர்ச்சியில் கடைசி இடம்: அதிமுக அரசின் அவல சாதனை: அன்புமணி ராமதாஸ் வேதனை!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ஆழ்கடலில் பலத்த காற்று: ராமேஸ்வரத்தில் 1000 படகுகள் நிறுத்தி வைப்பு!
 ................................................................
புதுக்கோட்டை அருகே ரவுடி வெட்டிக்கொலை!
 ................................................................
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
 ................................................................
3 நாள் சுற்றுப்பயணம்: மோடி இன்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து நெதர்லாந்து செல்கிறார்
 ................................................................
திருட்டுதனமாக மணல் ஏற்றிய 13 லாரிகள் சிறைபிடிப்பு! (படம்)
 ................................................................
ஜி.எஸ்.டி. கருத்தரங்கம் - நிர்மலா சீதாராமன் விளக்கம்! ( படங்கள்
 ................................................................
மதுரைக் குசும்பு! நம்பர் பிளேட்டிலிருந்து வால் போஸ்டர் வரை..
 ................................................................
காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது!
 ................................................................
ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக்கூட்டம் (படங்கள்)
 ................................................................
மூக்கம்பட்டி ஜல்லிகட்டு ( படங்கள்
 ................................................................
ஏரியில் குப்பைகளை அகற்றி தூர்வாரும் பணி
 ................................................................
கல்வி மந்திரி அறிவிப்பு கண் துடைப்பா? கொந்தளிப்பில் பகுதி நேர ஆசிரியர்கள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (20:2 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (20:2 IST)


இந்தித் திணிப்பை கைவிடுக!
மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

இந்தி மொழியை தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில், அம்மொழியைத் திணிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கான பரிந்துரைக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 

“இந்தி மொழியை தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்கள் மீது திணிப்பதற்கு மீண்டும் மீண்டும் பாசக அரசு முயற்சித்து வருகிறது. இப்பொழுது ‘சிபிஎஸ்இ’ பள்ளிகளிலும் ‘கேந்திர வித்தியாலய’ பள்ளிகளிலும் இந்தி படிப்பதை கட்டாயமாக்கவேண்டுமென்பதற்கு குடியரசுத் தலைவரே ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாசக அரசின் இந்தி திணிப்பு முயற்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது கூட்டாச்சி தத்துவத்திற்கு ஊறுவிளைக்கும் என்பதையும் மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம். 

அலுவல் மொழிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அளித்த பரிந்துரைகளுக்கு இப்போது குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்தியாவில், அமைச்சர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் அனைவரும் இந்தி மொழியில்தான் உரையாற்றவேண்டும்; விமானங்களிலும் புகைவண்டி நிலையங்களிலும் இந்தியைத்தான் பயன்படுத்தவேண்டும்; நீதி, நிர்வாகம் போன்றவற்றில் ஆங்கில பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து இந்தியை பயன்படுத்தவேண்டும் என்பவை உள்ளிட்ட பரிந்துரைகளை பாராளுமன்றக் குழு அளித்திருந்தது. பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கவேண்டும் என்பதும் அக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்றாகும். இப்போது குடியரசுத் தலைவர் இந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்திருப்பதால் மத்திய அரசு இவற்றை செயல்படுத்தக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் ஒப்புதல் இல்லாமல் இவற்றை நடைமுறைப்படுத்தக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். 

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கும் இந்த பரிந்துரைகளை மட்டுமின்றி உச்சநீதிமன்றத்தின் மூலமாகவும் இந்தியை திணிப்பதற்கு பாசக அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக வழக்கு ஒன்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை அண்ணா ஹஸாரே இயக்கத்தில் இருந்தவரும் தற்போது பாசகவின் செய்தித் தொடர்பாளராக இருப்பவருமான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அஷ்வின்குமார் உபாத்யாயா தாக்கல் செய்துள்ளார்.

ஆங்கிலம் படிப்பதைவிட இந்தி படிப்பது மனித மூளைக்கு நல்லது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்களென்றும். 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புவரை இந்தியா முழுவதும் இந்தியை கட்டாயம் ஆக்குவதுதான் சமத்துவம்  என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தி படிக்காததால் டீ கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் பொருட்கள் வாங்க கஷ்டப்படுகிறார்கள் எனவும் அந்த மனுவில் கூறியிருக்கிறார்கள். இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் யாவும் சேர்க்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு, குடியரசு தலைவரை பயன்படுத்தியும், உச்சநீதிமன்றத்தை பயன்படுத்தியும் இந்தியைத் திணிப்பதற்கு பாசக மேற்கொண்டுவரும் முயற்சி இந்திய ஒருமைப்பாட்டுக்கே உலைவைக்கக்கூடிய ஆபத்தான முயற்சியாகும். எனவே, இந்தி திணிப்புக் கொள்கையை கைவிடுமாறு பாசக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் கண்ட மொழிப்போர்க் களம் மீண்டும் உருவாகும் என்று எச்சரிக்கையோடு சுட்டிக்காட்டுகிறோம்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :