Add1
logo
இணையதளங்களில் படங்கள் வெளியாவதை தடுக்க வெங்கைய்ய நாயுடுவிடம் விஷால் கோரிக்கை || வனப்பகுதியில் கடும் வறட்சி, குடிநீர் கிடைக்காமல் வனவிலங்குகள் பரிதவிப்பு (படம்) || என் உயிரை கொடுத்தாவது மருத்துவகல்லூரி திட்டத்தை நிறைவேற்றுவேன்: செந்தில்பாலாஜி ஆவேசம் || குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த இரு பெண்கள் மூன்று குழந்தைகளுடன் கைது || எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிவோம்: நாராயணசாமி || போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு || பிளஸ்-1 மாணவியை கடத்திச் சென்ற இரு குழந்தைகளின் தந்தை கைது || சென்னை - ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பு || போராட்டத்தை கைவிட்டு, தமிழகம் திரும்ப வேண்டும்: முதல்வர் வேண்டுகோள் (படங்கள்) || நீட் தேர்வு - கனவுகளையும், வாய்ப்புகளையும் அடியோடு மறுக்கும் படுபாதகச் செயல்! சீமான் கண்டனம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || உ.பி.யில் கார் மீது ரெயில் மோதல் 5 பேர் பலி || நெடுவாசல் மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ||
தமிழகம்
இணையதளங்களில் படங்கள் வெளியாவதை தடுக்க வெங்கைய்ய நாயுடுவிடம் விஷால் கோரிக்கை
......................................
வனப்பகுதியில் கடும் வறட்சி, குடிநீர் கிடைக்காமல் வனவிலங்குகள் பரிதவிப்பு (படம்)
......................................
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த இரு பெண்கள் மூன்று குழந்தைகளுடன் கைது
......................................
போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு
......................................
பிளஸ்-1 மாணவியை கடத்திச் சென்ற இரு குழந்தைகளின் தந்தை கைது
......................................
சென்னை - ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பு
......................................
நீட் தேர்வு - கனவுகளையும், வாய்ப்புகளையும் அடியோடு மறுக்கும் படுபாதகச் செயல்! சீமான் கண்டனம்
......................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
......................................
நெடுவாசல் மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
......................................
சென்னைக்கு 40 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யும் அளவுக்கு தண்ணீர் உள்ளது
......................................
அம்பத்தூர் ஏரியில் 35டன் குப்பை அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது
......................................
தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் 5 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
......................................
ஒரே பகுதியில் 5 டாஸ்மாக் கடைகள்: அகற்ற கோரி மக்கள் மறியல் (படங்கள்)
......................................
கள்ளச்சாராயத்தை ஒழிக்க பொதுமக்கள் மனு (படங்கள்)
......................................
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளி தம்பதியினர் சிறைவைப்பு
......................................
முழு அடைப்பில் தமிழக அரசும் பங்கேற்க வேண்டும்! : திருநாவுக்கரசர்
......................................
25ம் தேதி லாரிகள் இயங்காது
......................................
25-ம் தேதி தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து
......................................
மோடி அரசு கங்காரு; அதிமுக அரசு குட்டி கங்காரு! சவுந்திரராஜன் பேச்சு
......................................
தமிழகத்தில் அதிமுக பெயரில் பாஜக ஆட்சி! : முத்தரசன் பேச்சு
......................................
மோடிக்கு வேப்பிலை அடித்து அழைக்கும் போராட்டம் (படம்
......................................
தமிழகத்தில் காலூன்ற எந்தக் கொம்பனாலும் முடியாது!: கீ.வீரமணி பேச்சு
......................................
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளி தம்பதியினர் அறையில் சிறைவைப்பு
......................................
அனைத்துக் கட்சி பொதுக்கூட்டத்தில் பாஜக-வை விளாசிய திருமா
......................................
திமுக சட்டமன்ற உறுப்பினருக்காக நீண்ட நேரம் காத்திருந்த அதிமுக அமைச்சர்! (படங்கள்)
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (17:43 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (17:43 IST)


பெரியார் திடலில் புத்தகக் காட்சியை 
கேப்டன் ஜே.சுரேஷ் திறந்து வைத்தார்

சென்னை புத்தக சங்கமத்தின் அய்ந்தாம் ஆண்டு சிறப்புப் புத்தகக் காட்சி தொடக்க விழா சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் இன்று (21.4.2017) காலை தொடங்கியது. அனைத்து புத்தகங்களும் 50% தள்ளுபடியில் விற்பனையாகும் இந்த சிறப்புப் புத்தகக் காட்சி இன்று (21.4.2017) முதல் 25.4.2017 முடிய ஐந்து நாள்கள் நடைபெறுகின்றது. 

தொடக்க விழா

சென்னை புத்தகச் சங்கமத்தின் சிறப்புப் புத்தகக் காட்சி தொடக்கவிழா வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம் தலைமையில் நடைபெற்றது. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில் இந்திய கடற்படை ஐ.என்.எஸ். அடையாறு தலைமை அதிகாரி கேப்டன் ஜே.சுரேஷ் சென்னை புத்தக சங்கமத்தை திறந்து வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன் புத்தக விற்பனையைத் தொடங்கி வைத்தார்.  விற்பனையில் முதல் புத்தகத்தை  பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.

தொடக்க விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களான கேப்டன் ஜே.சுரேஷ், வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், காந்தி கண்ணதாசன் ஆகியோருக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கினார்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் முற்றிலும் குளிர் சாதன வசதி கொண்ட தரைத்தளம், கீழ்த்தளத்தில் அமைக்கப்பெற்றுள்ள 49 அரங்குகளில் 60க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் புத்தகங்கள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆசிரியர் கி.வீரமணி, கேப்டன் ஜே.சுரேஷ், வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், இந்திய பாதுகாப்புத்துறையின் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி டி.சண்முகம், காந்தி கண்ணதாசன், கோ. ஒளிவண்ணன் துணைவேந்தர் பேராசிரியர் நல். இராமச்சந்திரன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் அனைத்து அரங்குகளுக்கும் சென்று பார்வையிட்டதுடன் அவரவர் விருப்பத்தேர்வின்படி புத்தகங்களை உரிய தொகை கொடுத்து பெற்றுக் கொண்டார்கள்.

தந்தைபெரியார், அண்ணல் அம்பேத்கர், கல்வி வள்ளல் காமராசர், அறிஞர் அண்ணா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன்,  கி.வீரமணி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் எழுதிய நூல்கள், சரித்திர நாவல்கள், பன்மொழி அகராதிகள்,  குழந்தைகளுக்கான புத்தகங்கள், தமிழ், ஆங்கில நாவல்கள், அறிவியல் புத்தகங்கள், உலக அறிஞர்களின் நூல்கள், வரலாற்று நூல்கள் என பல்வேறு வகைகளிலும் நூல்கள் பதிப்பகங்கள் வாரியாக அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து புத்தகங்களும் 50 விழுக்காடு தள்ளுபடி விலையில் அள்ளிச்செல்லும் வாய்ப்பு  சென்னை புத்தகச்சங்கமத்தின் ஐந்தாம் ஆண்டு சிறப்புப் புத்தகக் காட்சியில் பார்வையாளர்களுக்கு கிடைத்த அரும்பெரும் வாய்ப்பாக அமையப்பெற்றுள்ளது.



தொடக்கவிழாவில் வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், சென்னை புத்தக சங்கமம் மேலாளர் ப.சீதாராமன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், அச்சக மேலாளர் க.சரவணன், முத்துகிருஷ்ணன், விழிகள் பதிப்பகம் வேணுகோபால் மற்றும் பல்வேறு பதிப்பகங்களின் பதிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடையே  கேப்டன் சுரேஷ்  கூறியதாவது:

இப்போது புத்தகம் படிப்பதென்பது அரிதான ஒன்றாக இருக்கிறது. எப்படியாவது மக்களை மற்றும் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரேயொரு குறிக்கோளோடு, 50 விழுக்காடு தள்ளுபடி செய்து, ஒரு ஏசி அரங்கில் எல்லோரும் அவசியம் வந்து நேரத்தை ஒதுக்கி, புத்தகங்களை எப்படியாவது வாங்கி படிக்கவேண்டும் என்கிற ஒரேயொரு குறிக்கோளுடன் இந்த சென்னை புத்ததகச் சங்கமம் ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது ஒரு பெரிய விஷயம். கண்டிப்பாக எல்லோருமே உபயோகப்படுத்தி, இங்கே வந்து புத்தகங்களை வாங்கி அனுபவிக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :